ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 6)}
ஒரு பழம் பெரும் புத்தகம் {கடுக்காய் பிரபாவ போதினி (பாகம் 6)}
இது ஒரு மீள்பதிவு .இந்தப் பதிவு ஏற்கெனவே மச்சமுனி வலைப்பூவில் வெளியான கட்டுரையே இது.
http://machamuni.blogspot.in/search/label/ஒரு{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20பழம்{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20பெரும்{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20புத்தகம்?updated-max=2011-06-05T21:40:00{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}2B05:30&max-results=20&start=3&by-date=false
நமது வலத் தள அன்பர்களின் வேண்டு கோளுக்கிணங்கி மீள்பதிவாக வெளியிடப்படுகிறது.நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எம்மை அங்கேயே தங்க நிர்பந்திப்பதாலும் , பத்தியத்துடன் கற்பங்கள் எடுப்பதால் உடலின் அசதி காரணமாகவும் , எமக்கு நேரமின்மை காரணமாகிறது . சரி அது இறை விருப்பம் என்றெண்ணி எழுதுவதைக் குறைத்துக் கொண்டோம் .பதிவுகளின் எண்ணிக்கையும் மிக குறைந்துவிட்டது .
ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 6)
ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.
சிகிச்சர்கள் அல்லது மருத்துவர்கள் இக்கால பேதத்தின் விகற்பத்தைக் கவனத்தில் வைத்து மற்ற வியாதிகளின் சிகிச்சைகளிலும், இவ்விதியை அனுசரித்து அவுடதப் (மருந்துகள் கொடுத்தல்) பிரயோகம் செய்வார்களாயின் கடவுளின் கிருபையால் எந்த வியாதியையும் சவுக்கியப்படுத்துவதில் சித்தி பெறுவார்களென்பதுநிச்சயம்.
இதனுடன் அவரவர்களின் தேகசுபாவ விகற்பங்களையும் ( வாத தேகம், பித்த தேகம், சிலேற்பன தேகம், வாத பித்த தேகம், பித்த வாத தேகம், பித்த சிலேற்பன தேகம், சிலேற்பன பித்த தேகம், வாதசிலேற்பன தேகம், சிலேற்பன வாத தேகம் ) கவனிக்க வேண்டுமென்பதும் அவசியமாகையால், அதனையும் கவனித்துச் சமயோசிதமாக அனுபானாதிகளை மாற்றியும் அதிகப்படுத்தியும் கொள்வது சிகிச்சர்களாகிய மருத்துவர்களின் கடமையாகும்.
இம் இவற்றை கருத்தில் கொண்டு உணவுகளில் தன்மையைப் பொறுத்து கால பேதங்களில் சரியாக உண்டு வந்தால் நோய் அணுகாது. இதையே வள்ளுவர் தன் குறளில் மருந்து என்ற தலைப்பில் ( மருந்து என்ற அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் எதிலும் மருந்து பற்றியே இராது ) வலியுறுத்தி உள்ளார். . இதை நோயில்லாத சாதாரண நபர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இதன் தொடர்ச்சி ”ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 7)” என்ற பதிவில் தொடரும்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தங்கள் பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். தங்கள் பணி சிறந்த முறையில் தொடர வாழ்த்துக்கள்.
ஐயா எனக்கு சில மருத்துவ விளக்கம் தேவைபடுகிறது. தங்கள் போன் நம்பர் தேவைபடுகிறது