அற்புத மூலிகைகளின் செயல்பாட்டு வகைகள் – பாகம் 2

சித்த வைத்தியத்தில் பல அற்புத மூலிகைகள் உள்ளன.அவற்றின் செயல்பாடுகளை வைத்து பல வகைகளாகப் பிரித்துள்ளனர்.அந்த வகைகளின் பெயர்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கீழே விவரிக்கிறேன்.இவற்றை வைத்துத்தான் இன்ன மூலிகை இன்ன வியாதியை குணமாக்கும் என்று தெரிந்து தெளியலாம்.

கிருமி நாசினி:- வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளையும்,அமீபா,மற்றும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளையும் வெளியாக்கும் மருந்து ( கவனிக்கவும் கொல்லும் மருந்தல்ல வெளியாக்கும் மருந்து ) ( ANTHELMINTIVE ) .

அடுக்கிளநீர் , அம்மான் பச்சரிசி , அழிஞ்சில் மரம் ,அன்னாசியிலை , ஆடா தோடை யிலை , ஆடு தீண்டாப் பாளை , ஆற்றுத் தும்மட்டி , இளங் கொட்டைப் பாக்கு , ஊசித் தகரை , ஏழிலைப் பாலை , கருங்காலி வேர் , கருஞ்சீரகம் , கருஞ்செம்பையிலை ,  கறுப்பு அழிஞ்சில் மரம் , கலியாண முருக்கம் பட்டை , காக்கட்டான் ( வெண் சங்குப்பூ ) ,  காட்டாத்தி மரம் , காட்டுச் சீரகம் ( சன்னி நாயகம் ) ,     காய்ச்சுக் கட்டி ( கருங்காலிக் கட்டையின் சத்து ), கத்தக் காம்பு , கார்போக அரிசி , கிச்சிலிக்காய் , கொட்டைப் பாக்கு , சதாப்பு இலை ,  சரக்கொன்றைப்பூ , சீமைச் செவ்வந்திப்பூ ,சீமையகத்தி , சுண்டைக்காய் , சுண்டைக்காய் வற்றல் , சோரியிளநீர் , திக்காமல்லி , நல்வேளை வித்து ,  நாய்க்கடுகு , நாரத்தங்கச்சல் ( நாரத்தை வற்றல் ) , நொச்சி இலை , பச்சிள நீர் ( பச்சை நிறத்திலுள்ள இளநீர்க்காய் ) , பப்பாய்க் காய் , பலாக்கொட்டை , பாகற் பழம் , பாகல் இலை , பிரண்டை , பெருங்காயம் , மட்டிப்பால் , மணலிக்கீரை , மலை வேப்பிலை , மலை வேப்பம் பட்டை , மாங்கொட்டை , மாசிப்பத்திரி , மாதுள மரப்பட்டை , மிதிபாகற்காய் , மூங்கிலிலை , மூங்கில் வேர் , யானைத்திப்பிலி , வசம்பு , வாய்விளங்கம் , விஷ்ணு கிரந்தி , வெண் சிவதை வேர் , வேப்பம் பூ , வேப்பம் நெய் , வேப்பம் வித்து , வேப்ப இலை , குடசப்பாலை , அக்ரூட் மரத்தின் பட்டை.

விஷ நாசகாரி:- விஷத்தை முறிக்கும் மருந்து ( ANTIDOTE ).

அவுரியிலை , அவுரி வேர் , ஆற்றுத் தும்மட்டி இலை , வெட்டி வேர் , எருக்கிலை , கடப்பம் வித்து , சதுரக்கள்ளிப் பால் ,  சிவனார் வேம்பு , சிறியா நங்கை , சிறு குறிஞ்சான் இலை , சிறு குறிஞ்சாக் கொடி , சிறு குறிஞ்சான் வேர் , சிறு சின்னி , சிறு துத்தி , நாக தாளிக் கள்ளி , நிர் விஷம் , நின்றாற் சுருங்கி , பெருஞ்சின்னி , பேய்ச்சுரையிலை , பேய்ச் சுரை வேர் , பேய்ப் பீர்க்கு , பொற்சீந்திற் கிழங்கு , மகிழம் வித்து , மணிப் புங்கு மரம் , முசு முசுக்கை வேர் , முருங்கை மரப்பட்டை , முள்துளசி , வாழைப்பூ ,வெள்ளெருக்கம் பால் , வேப்பம் வித்து.