சித்தர்களின் சாகாக்கலை – மரணமில்லாப் பெருவாழ்வு

அன்பார்ந்த மெய்யன்பர்களுக்கு சித்தர்களின் சாகாக் கலை அல்லது மரணமில்லாப் பெருவாழ்வைப் பற்றி இப்போது காண்போம்.

 சாகாக்கால் ;  வேகாத்தலை; போகாப்புனல்

பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழுவினர் மட்டும் உபயோகிக்கும் ரகசிய வார்த்தைகளே. பொற் கொல்லர்கள்(தங்க ஆசாரிகள்) தங்கத்தை பறி என்பார்கள்.அவர்கள் பறிப்பதாலோ, வேறு யாரேனும் தங்கத்தை பறிப்பதாலோ தங்கத்திற்கு இந்தப் பெயர் பரிபாஷையில் இட்டார்களோ என்னமோ? சித்தர்களின் பரிபாஷையில் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய மேலே குறிப்பிடும் வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை சேர்த்துப் பாருங்கள்

சாவே போ

மேற்கூறிய வார்த்தைகளின் பொருள் புரிந்தால் சாவே போ என்றால் சாவு என்ற இறப்பு போய்விடும்.இவ்வளவு எளிமையாக இறப்பை போக வைக்க முடியுமா?
அப்படியானால் ஏன் யாரும் இதற்கு முயற்சிக்கவில்லை என்ற கேள்வி
உங்களுக்கு எழும் இல்லயா?

முயற்சிக்காமலா இத்தனை சித்தர்கள் நம் நாட்டில் தோன்றியுள்ளார்கள்!
அவர்கள் காட்டிய வழிகளை ரகசியமாக வாய்மொழியாக பல தலை முறையாக காப்பாற்றி வருகிறார்கள்.

எங்களது மச்ச முனிவரின் ஆசிரமத்தில் இது போன்ற சித்த ரகசியங்களை
மிக எளிதாக கற்றுத்தரக் காத்துக் கொண்டிருக்கிறார் நம் குரு நாதர்
மதிப்பிற்குரிய ஆன்மீக குரு ஆன்மீக வள்ளல் பார்த்தசாரதி ஐயா அவர்கள்.

திரைகடந்து திரைக்குமேற் பெரும்பாழ் தாண்டிச்   சிறந்தசாகாக் காலும்வேகாத் தலையுந் தாண்டிமறைபுகுந்து வோதுகின்ற வேதந் தாண்டி    மதனகலி யாணதிரு வல்லி மாதுவரையெழுந்த பதினெட்டாங் கோட்டின்மேலு    மாதளம்பூ வடிவமனோன் மணியைப் போற்றிகரை கடந்து பறையனென்று தள்ளி வைத்த  கருத்தையினிச் சொல்லுகிறே னாண்டே கேளே

சாகாக்கால் செத்துப்போக வேண்டும்?
வேகாக்கால் வெந்து போக வேண்டும்?
போகாப்புனல் வற்றி போக வேண்டும்?
(புனல் என்றால் தண்ணீர் என்று பொருள்)

மேலே கண்ட இரண்டாவது படம் லிங்கோத்பவர் என்பது ஒவ்வொரு சிவன் கோவிலிலும் கருவறைக்குப் பின்னால் இருக்கும்.இது மிக ரகசியப் பொருள் விளக்கம் என்பதால் கருவறைக்குப் பின் வைக்கப்பட்டுள்ளது. அது சிவனின் திருமால் பன்றி வடிவமாக(வராக அவதாரம்)அடியையும் (கால்),பிரம்மா அன்னப் பட்சி வடிவில் முடியையும் (தலையையும்) தேடியதையும் விவரிக்கும் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.(அடி முடி தேடிய படலமாக புராணங்களில் வருணிக்கப்படுகிறது). அதில் ஜோதி வடிவமாகவும் பொருள் வடிவமாகவும் இறைவனான சிவன் (ஜீவன்) இருப்பதைக் காணலாம்.

கால் என்பதை காற்று என்றும் ;மூக்கில் மேலும் கீழும் வாசித்துக் கொண்டிருக்கும் காற்று ,சிந்தைதனில் ஒத்து ஆடாது,ஓடாது நின்று போய்விட்டால் மரணமிலாப் பெருவாழ்வு’ என்று பொருள் கூறுவார்கள். அதையே அவ்வையார் ‘வாசி வாசி என்று வாசித்த சிவம் இன்று சிவா சிவா என சிந்தைதனில் நின்று’ என்று பாடினார் . சரிதான்.ஆனால் ‘வாசிக்குதிரையேறி (மூச்சு) ஞான வேட்டையாட வேண்டுமே தவிர குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது’.அதாவது குதிரையின் கடிவாளத்தைப் பற்றி குதிரையோட்ட வேண்டுமேயல்லாது குதிரை முன்னால் சென்று மறிக்கக் கூடாது. குதிரையின் கடிவாளம் எது ?

‘காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்திட்டால் கூற்றை உதைத்துக் குதித்தாட மாட்டேனோ? ‘ என்றொரு சித்தர் கூத்தாடுகின்றார்.

தொடர்ச்சி சித்தர்களின் சாகாக்கலை மரணமில்லாப் பெருவாழ்வு 2 ல் தொடரும்…