ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் ( 5 )

இந்தப் பதிவைப் படிக்கும் முன்னர் ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 4 ஐ படித்துவிட்டுத் தொடர்ந்தால் நன்கு புரியும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணில் சேரும் மலம் பீழை எனப்படுகிறது,கண் என்பது ஒரு சிறப்பு உறுப்பு,காற்றிலுள்ள ஆக்சிஜனை தானே நேரடியாக காற்றிலிருந்து எடுக்கும் சக்தி பெற்ற உறுப்பு. மேலும் வயிற்றில் ஒரு ஆப்பரேஷன் பண்ணினால் கண்ணில் வயிறு உறுப்புக்கு என்று உள்ள பகுதியில் ஒரு கோடு விழுந்துவிடும் .அந்தளவுக்கு உடலில் உள்ள அனைத்து விடயங்களும் கண்ணில் அடக்கம்.கீழுள்ள எமது வலைப்பூவில் ஏற்கெனவே நான் விளக்கியுள்ள விடயங்களை இணைப்பில் பாருங்கள்.

http://machamuni.blogspot.in/2010/12/8.html

எனவே கண்ணில் உள்ள அழுக்குகளை களைவது முக்கியம். கண்ணில் உள்ள அழுக்குகளை களைந்தால் உடலில் உள்ள அனைத்து அழுக்குகளும் களையப்பட்டு உடல் சுத்தமாகும்.

கண்குவளையின் படம்

கீழே உள்ள அரவிந்த் ஹெர்பல் லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் ன் கண் குவளை உபயோகக் குறிப்பும் கிடைக்கும் இடம் முகவரியுடன் உள்ள ஒளி நகல் கொடுக்கப்பட்டுள்ளது.

 கண்ணை கழுவ படத்தில் கண்ட கண்குவளை என்பதில்  காய்ச்சி ஆறவைத்து தெளிய வைத்து வெறும் தண்ணீரை மண்பானையில் ஊற்றி  3 மணி நேரம் குளிர வைத்த தண்ணீரை ஊற்றி உபயோகித்தால் போதும் . இன்னும் மிக நன்றாக இருக்க வேண்டும் என்றால் IMP-COPS , ADYAR  அவர்களால் தயாரிக்கப்படும் ரோஜாத் தீ நீர் ( பன்னீர் ), சித்தா அல்லது யூனானியில் (இதன் பெயர் அர்க் எ குலாப் ) வாங்கி தண்ணீருக்கு பதில் உபயோகிக்கலாம்.

கண் குவளையில் மண்பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை நிரப்பி கண்ணைக் கழுவும் ஒளிப்படக் காட்சி.

  [tube]http://www.youtube.com/watch?v=Db4T-DIivn8[/tube]

கண் குவளையில் பன்னீரை  நிரப்பி கண்ணைக் கழுவும் ஒளிப்படக் காட்சி.

[tube]http://www.youtube.com/watch?v=PkgBeMFkbR0[/tube]

மேலும் இந்த ஐம்மலம்  நீக்குதல் எப்படி என்று அடுத்த ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? பாகம் 6 ல் பார்க்கலாம்.