முப்பூ குரு ( அண்டக்கல் ) பாகம் 1

அண்டக்கல் என்றால் அதில், முட்டை போல அதில் மஞ்சள் கருவும் ( நாதம் ) , வெள்ளைக் கருவும் ( விந்து ) உள்ளது.

நாதவிந்து கலாதி நமோ நம , வேத மந்திர சொரூபா நமோ , என்று நாதத்திற்கும் விந்துவுக்கும்தான் முதல் வணக்கம் சொல்கிறார் அருணகிரி நாதர்.அதன்பின் தான் வேத மந்திர சொரூபனுக்கே வணக்கம் சொல்கிறார்.

நாம் நாத விந்து மூலம் உற்பத்தி ஆனவர்கள் எனவே நமக்குள் இருக்கிற நாதம்தான் நம்மில் பெண் தன்மையை  உண்டாக்குகிறது. பெண் மேல் கவர்ச்சியை உண்டாக்குகிறது. அதனால் காமம் மேலோங்கி விந்து வீணாகி வீணில் இறந்து போகிறோம். சாதாரண இறப்பில் உடலில் உள்ள மலம் , விந்து , சிறு நீர் அனைத்தும் வெளியாகிவிடும்.

உடல் நலம் இல்லாமல் பல நாட்கள் இருந்து மற்றவருக்கும் தொல்லையாகி தானும் அவஸ்தைப்படுபவர்களை அக்காலத்திலும் கருணைக் கொலை புரிந்துவிடுவார்கள். அது அக்காலத்திலும் தவறானதாகக் கருதப்பட்டு அதைக் கண்டு பிடிக்க ஒரு பழக்க வழக்கத்தையும் வைத்திருந்தார்கள்.

இன்றும் தெற்கில் உடு மாத்துப் பார்ப்பது என்றொரு வழக்கம்.வண்ணான் வந்து இறந்தவரின் கடைசியாக போட்டிருந்த உள்ளாடைகள் மற்றும் வேஷ்டியை பரிசோதித்து அதில் அன்னாரது இறப்பில் உடலில் உள்ள மலம் , விந்து , சிறு நீர் அனைத்தும் வெளியாகி இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

அப்படி இருந்தால் இயற்கை மரணம் , அப்படி மலம் , விந்து , சிறு நீர் இல்லாவிட்டால் ,  தலையணையை வைத்து முகத்தை அழுத்தியோ கழுத்தில் அழுத்தியோ கொலை செய்திருக்கிறார்கள் என்று பொருள்.அப்படி செய்திருந்தால் வண்ணானுக்கு பஞ்சாயத்து கூட்டும் அதிகாரம் உண்டு.தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் அதிகாரமும் உண்டு.

இதன் பின்னர் வண்ணான் விரிக்கும் உடுமாத்து விரிப்பில் 16 அடி நடந்துதான் பிணம் செல்லும். அப்போது அந்த 16 அடியில் நெல்லைப் போட்டு வைப்பார்கள்.அந்த நெல்லை சுபமான இறப்பென்றால் வண்ணான் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.இல்லை என்றால் அந்த நெல்லை வீட்டுக்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள் . இப்படி நமது  சமுதாயத்தில் இருந்த பல அழகான அம்சங்கள் இப்போது தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன.

16 அடி என்பது 16 அங்குலம் ஓடக் கூடிய சந்திர கலை இவ்வளவு நாள் நெல் போன்ற சாப்பாட்டுப் பொருளால் காப்பாற்றி வைக்கப்பட்டது இப்போது நெல் கீழே கிடப்பது போல கிடக்கின்றது . இதை இறந்தபோது தப்பு அடிப்பார்கள்.அதாவது தப்பான வாழ்க்கை வாழ்ந்ததால் உயிர் உடலை விட்டு போய்விட்டது. எனவே  இவர் வாழ்ந்த வாழக்கை தப்பு என்பதால் தப்பு அடிக்கிறார்கள். சிலர் உறுமியும் வைத்து அடுப்பார்கள்.இந்த இசையில் ”உண்டுண்டு”  என்ற ஒலி வரும். அதாவது ”உண்டுண்டு உனக்கும் உண்டு  இது போன்ற சாவு உனக்கும் உண்டு ” என்று சொல்வது போல் சாவு இசையில் கூட அமைத்துள்ளார்கள்.இப்படி நமது  சமுதாயத்தில் இருந்த பல அழகான அம்சங்கள் இப்போது தொலைந்து போய்க் கொண்டிருக்கின்றன.

இப்போது அண்டக்கல் விடயத்திற்கு வருவோம்.இந்த அண்டக்கல்லில் உள்ள நாதவிந்துக்களை பிரித்து உடலில் சேர்த்தால் உடல் அழியாத நாதவிந்துத் தேகமாக மாறி ஒளியுடலாக மாறும். அந்த நாதவிந்துக்கள் கலந்துள்ள அண்டக்கல் பற்றி என் குருநாதர் விளக்கியுள்ள ஒளிப்படக்காட்சி.

[tube]http://www.youtube.com/watch?v=0HziBeQ9QHs[/tube]

கிருஸ்துவர்கள் பிதா ,சுதன் , பரிசுத்த ஆவி என்பார்கள்.நாம் உடல் , பொருள் ,ஆவி என்போம்.அது மூன்றும் மூன்று வடிவில் முப்பூவாக திகழ்கிறது.முப்பூவின் மூன்று வடிவங்களை கீழே விளக்குகிறார்.

பரிசுத்த ஆவி :-பச்சையாக இருக்கும் திரவம் = பச்சை சிங்கம் ,ஆல கால விஷம் ,கிருஸ்துமஸ் மரம் என்பதும் இதுதான் , பச்சை மாமலை போல் மேனி என்றழைக்கப்படும் திருமாலும் இதுதான் , திருவில்லிபுத்தூர் ஆண்டாளிடமும்  மதுரை  மீனாட்சியிடமும் உள்ள பச்சைக் கிளியும்  இதுதான், மகமதிய  அன்பர்கள் கொடியில் திகழும் பச்சை வண்ணமும் இதுதான் , ஆலகால விஷமும் இதுதான் ,பச்சை வண்ண  பார்வதி தேவியும் இதுதான்,நாத விந்து கலவையும் இதுதான் , பஞ்ச பூதங்கள் அடங்கியிருக்கும் கலவையும் இதுதான்,சதாசிவம் என்பதுவும் இதுதான் ,வாசி நீர் , ஊசி நீர் , மங்கையர் கருக்குட நீர்,என்றழைக்கப்படுவதும் இதுதான். பரிசுத்த ஆவியும் இதுதான்.பச்சை வண்ண பரிசுத்த ஆவி , எளிதில் ஆவியாகி ஓடக் கூடியது.இது கடும் விஷம்.வாதமான காற்றைப் பிடித்து வைத்து இருப்பதுதான் பரிசுத்த ஆவி.இதுவே பிடிவாதம்.இதுவே நாதம்.

ஆங்காரியென்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை

நீங்காத பச்சை நிறத்தை உடையவள்

ஆங்காரியாகியே ஐவரை பெற்றிட்டு

ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே !!!

என்று இதை திருமூலர் விளக்குகிறார்.

பொருள்:- நாத விந்து கலவையான ஆல கால விஷமான பச்சை சிங்கத்தை , உடலான  பொருளாக மாற்றினால் , அது எளிதில் ஆவியாகி ஓடாத பொருள் ஆகிறது.கடுங்காரத்தை பச்சை சிங்கத்துடன் சேர்க்க இது கிடைக்கும்.நிலையாக நிற்கும் பொருள் இது.கடுங்காரமாக இருக்கும் மகா முப்பு திராவகம் அமுத பானமான சாரமாக மாற்றப்படுவதே பொருள்.இது உள்ளே சாப்பிட உகந்தது.இதுவே விந்து.இது வெள்ளை நிறத்தில் உள்ளதால்தான் இது விந்து எனப்படுகிறது.இதன் நிறம் திருநீற்றின் வெள்ளை நிறத்தால் உணர்த்தப்படுகிறது.விந்து நாதத்தில் அடக்கம். 

உடல்:-நாத விந்து கலவையான சீனச் சுண்ணமே உடல். மும்மைத் தத்துவத்தில் இது  முக்கியமானது. மேலும் இது கடையில் கிடைக்கும் சீனம் என்ற படிகாரமல்ல .இது மேலான பொருள்.

இப்போது மேலே கண்டவைகள்தான் ஒரு பக்கம் தேவரும் ,மறு பக்கம் அசுரர்களும் மேரு மலையை மத்தாகவும் , வாசுகியைக் கயிராகவும் வைத்துக் கடைந்தபோது திருப்பாற்கடலில் தோன்றியதாகக் கூறப்படுவன. அப்போது திருப்பாற்கடல் எது என்று தெரிந்தாலல்லவோ நாமும் கடையலாம் அமுது எடுக்கலாம். ஞான யோக ரகசியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தப்படும்.

முப்பூ பற்றிய கேள்விகளுக்கும் ,முப்பூ என்றால் என்ன ,அது எந்த வடிவில் இருக்கும் என்பதையும் பற்றிய கேள்விகளுக்கு என் பெரு மதிப்பிற்குரிய குருநாதர் திரு வெங்கடாசலம் ஐயா கூறும் விளக்கங்கள் பற்றிய ஒளிப்படக்காட்சி இதோ!!!

[tube]http://www.youtube.com/watch?v=f_n8RKOT_5o[/tube]

ஒரு நல்ல மருந்து அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் என்றால் அது இந்த முப்பூதான்.இந்த முப்பு  சேர்ந்த மருந்துகள் அனைத்து வியாதிகளையும் ,கர்ம வியாதிகள் என்றழைக்கப்படும்  நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு நோய் ( AIDS ) , பால்வினை நோய்கள் )VENEREAL DISEASE , குஷ்டம் ( LEPROSY )  புற்று நோய்கள்  ( CANCER , BLOOD CANCER ) போன்ற ஆயுள் நிர்ணயம் செய்யப்பட்ட ( நாளை இறந்துவிடுவார்கள் என்று ஆயுள் நிர்ணயம் செய்யப்பட்ட நோயாளிகள் முதல் சாதாரணமாக மரணத்தால் இறக்கும் அனைவருக்கும் ) அனைத்து நோயாளர்களும்  ( மரணமும் ஒரு நோய்தான்  )  குணமாவார்கள் .

முப்பூ பாகம் இரண்டு என்ற பதிவில்  மற்ற முப்பூ பற்றிய ரகசியங்கள் தொடர்ந்து வெளிப்படும்.