திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 3 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம்  2 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி  ( பாகம் 3 ) புரியும் என்பதை  பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

கமலம் என்றால் தாமரை , தாமரை மலர் சட்டியைச் சூழ்ந்து இருப்பது போல் எரிப்பதற்கு கமலாக்கினி எரிப்பு என்று பெயர்.ஆனால் எடுத்த எடுப்பில் கமலாக்கினி எரிப்பு செய்யக் கூடாது. ஏனென்றால் இதில் சேர்ந்துள்ள கந்தகம் மனோசிலை ஆகிய பொருட்கள் வெடிக்கும் தன்மை  வாய்ந்தவை.

இந்த வெடிப்புத் தன்மையை கட்டுப்படுத்தி மருந்தாக்குவதிலேயேதான் இதன் வெற்றி இருக்கிறது. இதனாலேயே  இந்த சித்தர் ரசவாதத்தை செய்வதில் பலர் மருந்து வெடிப்பில் உயிர் இழந்திருக்கிறார்கள்.பாடல் 1689.

இதைச் சொன்னவர் யாருமில்லை.ஆனால் அகத்தியருடைய கருணா கடாட்சத்தினால் ஞான வெட்டியானாகிய நான் சொன்னேன் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.பாடல் 1690.

இந்த மாதிரியே ஒரு சாமம் ( நான்கு மணி நேரம் ) எரித்தெடுக்க அந்த மருந்து உருகும். சக்கரம் போல் கார சார ஜெய நீரினால் இந்த இருபது கார சார லவணங்கள் பக்குவமாய்க் கட்டிப் பார்க்க உருகும்.இதன் பின்னால் ஒரு நாள் வைத்திருந்து ஆறிய பின் பானையை பக்குவமாய் உடைத்து மருந்து சேதமாகாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அல்லிப் பூச் சாற்றில் ( இந்த அல்லிப் பூச்சாறு என்பது சந்திரனால் ஈர்க்கப்படும் அல்லி என்பதால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .சந்திரனுக்கு சோமன் என்று பெயர். சோம பானமான சந்திர பானத்தையே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ) சொரூப முப்பூ கழஞ்சி சேர்த்து ஒரு வாரம் அரைத்து எடுக்க சொரூப சித்திக் குளிகை ஆகும்.

 

இதற்கு மேலும் விளக்கங்களை  அடுத்து  திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான்,  நவலோக பூபதி பாகம் (4 ) ல் பார்க்கலாம்.