ஒரு மஹா மூலிகை ( மார்ச்சால மூலி) பாகம் 3

மார்ச்சால மூலி பாகம் 2 ஐ படித்துவிட்டு அதன் பின் இந்த மார்ச்சால மூலி பாகம் 3 ஐ படிக்கவும் எனக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

பெண்களுக்கு மாதாந்திர விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலியை சூதக வலி என்று சொல்வார்கள். அதற்கு மார்ச்சால மூலியான குப்பைமேனியை எடுத்து  பாதி பங்கு சோற்று உப்புடன் சேர்த்து அரைத்து நிழலில் காய வைத்து தூளாக்கி எடுத்து வைத்துக் கொண்டு மாதாந்திர விலக்கின் போது சாதாரண சோடாத் தண்ணீரில்( CARBONATED WATER )  திரிகடிப் பிரமாணம் அந்த மாதாந்திர விலக்காகும் மூன்று நாட்களும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர ஆயுளுக்கும் சூதக வயிற்று வலி வராது.

பல் வலி பெரும் அவஸ்தை அனுபவப்பட்டவர்கள் சொல்வார்கள்.பல் வலியின் போது குப்பை மேனியிலையை உப்புடன் வைத்துக் கசக்கி எடுத்த சாற்றில் ஒரிரு சொட்டுக்கள் எந்தப்பக்கம் பல் வலி இருக்கிறதோ அந்தப் பக்கம் உள்ள காதில் விட உடனே பல் வலி குறையும்.இதே போல காது வலி உள்ளவர்களுக்கும் காதில் இதே மருந்தை விட வலி தீரும்.

எந்த வர்மம் தாக்கியிருந்தாலும் குப்பை மேனியிலையை, சின்ன வெங்காயம் , மற்றும் உப்புடன் வைத்துக் கசக்கி எடுத்த சாற்றில் ஒரிரு சொட்டுக்கள் மூக்கில்விட வர்ம பாதிப்புகள் அகன்று உடனே எழுந்திடுவார்கள்.இதே மருந்தை பாம்புக் கடியினால் பாதிக்கப்பட்டு பல் கிட்டியவர்களுக்கு மூக்கில் நான்கு சொட்டுக்கள் விட உடனே எழுந்திருப்பார்கள்.பின் வைத்திய மருந்துகளை வாய் வழியே கொடுக்க விடம் நீங்கும்.

ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்புக்கு குப்பை மேனி இலை , நொச்சி இலை ,  தை வேளை இலை மூன்றையும் வேப்ப எண்ணெயில் காய்ச்சி மூக்கில் ஒரிரு துளிகள் விட உட்னே மூச்சிறைப்பு நிற்கும்.

மேலும் இன்னும் விபரங்களுக்கு இன்னும் வரும் பதிவுகளில் மார்ச்சால மூலி பாகம் 4 ஐத் தொடரவும் .