திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 4 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் -3  ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி  ( பாகம் 4 ) புரியும் என்பதை  பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

நவலோக பூபதியை ஒரு வாரம் கார சார ஜெய நீரில் ஒரு வாரம்  வரை அரைத்து அதை பாசிப்பயரளவு  ( பச்சைப் பயறு )  மாத்திரைகளாய்ச் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.பாடல் 1595

மேக நிறமாகப் புகை சூழும் வண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இதுவே சொரூப சித்திக் குளிகையாகும் . இதை செம்புக்கு கொடுக்க பத்தரை மாற்றுப் பசும் பொன்னாகும். பாடல்1696.

பேய்ச் சுரை யென்பது சுரைக்காயிலேயே கசப்புச் சுவையுள்ளது. தொட்டு நாக்கில் வைத்தால் இது கசக்கும்.இது பாம்பேறிக்காய் ( பாம்பு எந்தக் காயில் ஏறியதோ அந்தக்காய் பாம்பின் விஷ வேகத்தால் கசப்புச் சுவை  பெற்றுவிடும் .அது அல்ல இது  )   அல்ல.இது போலவே பேய்ப் பீர்க்கு, பேய்ப் புடல் என வகைகள் உண்டு .இவையனைத்தும் சித்தர்களின் சித்தர் விஞ்ஞானத் தயாரிப்புக்கள்.

பேய்ப்பீர்க்கங்கூடு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . அதை உடலுக்கு தேய்த்து உபயோகிக்க தோல் நோய்கள் வராததோடு உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.இந்தப் பேய்ப்பீர்க்கன் விதையை கீழ்க்கண்ட முறையில் உபயோகிக்க   பைத்தியம் குணமாகும் .இது நீதியரசர் திரு பலராமையா அவர்கள் எழுதிய சித்தர் கைகண்ட மருந்து என்ற நூலில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

 பேய்ப்பீர்க்கங்கூடும் விதையும்

இதற்கு மேலும் விளக்கங்களை  அடுத்து  திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான்,  நவலோக பூபதி பாகம் (5 ) ல் பார்க்கலாம்.