திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 5 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம்  4 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி  ( பாகம் 5 ) புரியும் என்பதை  பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

 

மேற்கூறிய சொரூப சித்திக் குளிகையை பேய்ச்சுரைக் குடுக்கைக்குள் போட்டு அதை ஒரு மண்டலம் வைத்திருந்து பின் அதை சித்த வைத்தியம் நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளாய் வகுத்துள்ள  அத்தனை வியாதிகளுக்கும்  கீழ்க்கண்ட முறைப்படி கொடுக்க எல்லா வியாதிளும் தீரும்.

இப்போது இந்த பேய்ச்சுரைகாயைப் பற்றி சொல்லியே தீர வேண்டும்.அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த பேய்ச்சுரைக்காய்க் குடுக்கை  .

உலகத்திலேயே இந்தப் பேய்ச்சுரைக்காய் குடுக்கை  என்பதும், குதிரை வாலின் முடியும் மட்டும்தான் ஷண வேதி உதக நீரால் கல்லாக்காமல் இருக்கக் கூடிய பொருட்கள் ஆகும். ஷண வேதி உதகம் பற்றி போகர் மலை வாகடம் கூறும் விடயங்களும் ,கோரக்கர் மலை வாகடம் கூறும் விடயங்களை இங்கே தொகுத்தளித்திருக்கிறேன்.

பேய்ச்சுரைக்காய்க் குடுக்கை 

இந்தப் பேய்ச்சுரைக் குடுக்கையைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது.ஆம் பாம்பாட்டியின் கையிலிருக்கும் மகுடி ஞாபகம் வர வேண்டுமே!!!!பாம்பாட்டியின் கையில் இருக்கும் மகுடியின் இசைக்கோ மகுடி அசையும் விதத்திற்கோ பாம்பு ஆடுவதில்லை.

மகுடியின் முன் பகுதியில் வாய் வைத்து ஊதும் பகுதியில்  இருக்கும் இந்த பேய்ச்சுரைக்காயில் இருந்து வரும் காற்றினால் பாம்பின் விஷம் வீரியம் குறைந்து விட்டால் பாம்பின் வேகமும் குறைந்துவிடும். பாம்பு யாரையும் கொத்தி பாம்பின் விஷம் குறைந்துவிட்டால் அதன் ஓடும் வேகமும் குறைந்துவிடும். இப்படித்தான் பாம்பு இந்த பேய்ச்சுரையினால் செய்த மகுடிக்கு கட்டுப்படுகிறது.

இந்தப் பேய்ச்சுரைக்குடுக்கைக்குள் எந்த மருந்தையும் , கற்ப மருந்துகளையும் 48 நாட்கள் வைத்திருந்து சாப்பிட்டால் மருந்தில் ஏதாவது விஷ வேகம் , கெட்ட விடயங்கள் இருந்தாலும் அதைப் போக வைத்து மருந்தை அமுதமென ஆக்கிவிடும் தன்மை கொண்டது.நீதியரசர் பலராமையா இதனுள் கரிசலாங்கண்ணிப் பொடியை வைத்துச் சாப்பிட  எண்ணி வைத்தவர் , மறந்துவிட்டார் . பல வருடங்கள் கழித்து அதை எடுத்துப் பார்க்க புத்தம் புதியது போல மாறியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்.இதை அவர் அவரது உயிர் நீட்டும் மூலிகைகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புத்தகப் பக்கங்கள்  இதோ கீழே,

 

 

இன்னு ம் பல முக்கிய விடயங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

இதற்கு மேலும் விளக்கங்களை  அடுத்து  திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான்,  நவலோக பூபதி பாகம் (6 ) ல் பார்க்கலாம்.