திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 6 )
திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம் 5 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி ( பாகம் 6 ) புரியும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .
இந்தப் பேய்ச்சுரைக் குடுக்கையை குதிரை வால் முடி கட்டி வைத்து , உதக நீரில் விட்டு ஷண வேதி உதகம் எடுத்து அதன் மூலம் செய்யும் காரியங்களை கீழே கெவுனக் குளிகை செய்யும் விதத்தை போகர் மலை வாகடம் விவரித்து கூறியுள்ளதைக் காணுங்கள்.
குதிரை வால் முடி
கெவுனம் என்றால் உலகத்தில் உள்ள அனைத்து துறை சம்பந்தமான விடயங்களையும் ஓதாமல் உணரலாம்.அதாவது ஏதும் கற்றுக்கொள்ளாமலேயே ,யாரும் சொல்லித் தராமலேயே உலகத்தில் உள்ள அனைத்து விடயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.உடல் ககன மார்க்கத்தில் பறக்கும் நிலையை அடையும்.
இதற்கு மேலும் விளக்கங்களை அடுத்து திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் (7 ) ல் பார்க்கலாம்.
இந்த நீர் எந்த பொருளையும் கல்லாக மாற்றிவிடுகிறது
குமுளிக்கு அருகில் உதகநீர் இருப்பதை
டிவி நிகழ்சிகளில் பார்த்தேன் ஜி
அன்பு மிக்க திரு ஷரீஃப் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உதக நீர் அதிகம் இருப்பதால்தான் உதக மண்டலம் என்று இப்போதுள்ள ஊட்டிக்குப் பெயர்.மற்றவை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
உதக நீர் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
உதகம் பற்றி தங்களின் சுய அனுபவங்களை எழுதுங்கள்.
அன்பு மிக்க திரு ஓம் போகர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
விரைவில் எனது அனுபவம் பற்றியும் மேலும் பல விடயங்கள் பற்றியும் வரும் பதிவுகளில் விளக்க இருக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ayya,enakku kannil sathai valarugirathu atharkku eerulliyum,kurinjavum sama edai eduthu idithu 3 naal kannli vida kan sathai valarchi kuraiyum enru sonargal ithil eerulli,kurinja enral enna matrum kan sathai valarchiyai thaduppatharkku veru vaithiya murai irukkiratha kooravum pls
அன்பு மிக்க திரு சிம்பு மதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
கண்ணோ பொன்னோ என்பார்கள் அதை அவ்வளவு பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும் .ஈருள்ளி என்பது சின்ன வெங்காயம்தான் .இதைக் கண்ணில் போடுவதால் எந்தப் பிழையும் இல்லை .ஆனால் குறிஞ்சாக் கீரை என்பது மது மேகத்துக்கு (சர்க்கரை வியாதிக்கு ) உள்ளுக்கு கொடுக்கும் மருந்து . அதை கண்ணில் போடலாமா என்பதை பல புத்தகங்களை நான் ஆராய்ந்துதான் சொல்ல முடியும் .அதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம்.உதகத்தை எடுக்கும் விதம் அறிந்துகொண்டோம். எங்கு கண்டு பிடிப்பது என்பது தான் தெரியவில்லை.
இது ஏரி,குளம், குட்டையாக தேங்கும் தண்ணீரா ?விளக்கம் அளித்தால் உதவியாக இருக்கும்.நன்றி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
தேடிப் பாருங்கள் கிடைக்கும்.இதையெல்லாம் கேட்கும் விதத்தில் பணிவிருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் சாமிஜி
உதகத்தின் அருமைகளையும் மற்ற பல்வேறு விஷயங்களையும் அனுபவம் உள்ள
தங்கள் மூலம் தெரிந்துகொள்ளும் போதுதான் நமக்கே reconfirmation ,அப்பொருளின்
மெய்பொருள் மற்றும் ஒரு தெளிவு (எனக்கு ) வருகிறது என்பதை தாழ்மையுடன்
தெரிவித்து கொள்கிறேன்.
சித்தர்கள் பகுத்த 4448 வியாதிகளுக்கும் ஒரு திருமருந்து இருப்பது தங்கள்
மூலம்தான் தெரியவந்தது. இன்றளவும் நவ பாஷாணம்,நவலோகங்கள் ,முப்பு
(எ)காரசாரம் மூலம் நவலோகபூபதியை செய்யமுடியும் என நிரூபித்து
காட்டிய குரு உண்மையில் ஒரு தலைசிறந்த வேதியியல் விற்பன்னர் ஆவார்.
நம் நாட்டு சித்தர்களின் பல்வேறு பரிமாணத்தில் சிறப்பாக விளங்கும் metallurgy
+chemistry+science மூன்றையும் வைத்து கலக்கியுள்ளார் பெருமதிப்பிற்குரிய
அய்யா அவர்கள்.
“அவனருளாலே அவன் தாள் வணங்கி “என்பதுபோல சித்தர்களின் ஞானம் பரிபூரணமாக அய்யாவின் விளக்கத்தில் தொனிக்கிறது. சித்தர்களின் ஆசி
பெற்றவர் என்று தோன்றுகிறது.
சித்தர்களின் வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபில் ஒருவரான அய்யா அவர்களுக்கும் அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் எனது மனமார்ந்த
வணக்கத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்களின் புகழ்ச்சி எங்களை சில்லிட வைக்கும் முயற்சி தெரிகிறது . உங்களின் புகழ்ச்சி அணுவளவும் எங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு
வணக்கம்.இது வெறும் புகழ்ச்சி இல்லை.தங்கள் தொடர்பில் நான் கற்றுகொண்டது
miga அதிகம்.தங்கள் குருநாதர் அவர்களின் காணொளி மூலம் பல விஷயங்களை
ஆதாரபூர்வமாக தெரிந்து கொண்டேன்.
எனது நண்பருக்கு நண்பரை பற்றி இங்கு குறிப்பிட நினைக்கிறேன்.சித்தா (Doctorate)பயின்று அரசு பணியில் இருக்கும் அவரிடம் சில சமயம் என்
சந்தேகங்களை கேட்பேன்.ஜோதி விருட்சம் -அது செடியா,மரமா-அப்படி
ஒரு பெயரையே நான் கேள்விப்பட்டதில்லை என்பார்.பூநீறு -அது எல்லாம்
எதுக்கு உபயோகம் என்பார்.அவரை குறை சொல்வதற்காக இங்கு குறிப்பிடவில்லை.
ஆனால் இதை குறிப்பிட்டால் தான் வெளியில் நான் பெற்ற அனுபவத்தை
இங்கு பகிர்ந்து கொள்ள முடியும்.
அவருக்கு உடம்பு முழுதும் புண்கள் நிறைய உள்ளது அதுவும் கை
காலில் மிக அதிகம்.செருப்பு போட மாட்டார் (soriyasis)என நினைக்கிறேன்.
மரியாதை நிமித்தம் அவரிடம் அதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.
அவரது குறைக்கே அவருக்கு மருந்து தெரியவில்லையே என நான் (ஏன்
பலரும் )நினைப்பதுண்டு .அவரது உடல்நலம் நன்கு சீராகவேண்டும் என்று
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
(சரியான முறையில் எனக்கு எதையும் கேட்க / சொல்ல வராததால்
அடிக்கடி கெட்ட பெயர் வாங்குகிறேன்- எனக்கு விதிக்கப்பட்ட விதி அப்படி என்று
எப்போதோ ஏற்றுக்கொண்டு விட்டேன் )
நன்றி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்களுக்கு கேள்வி கேட்கத் தெரியவில்லை என்று யார் சொன்னது . நீங்கள் கேட்கும் கேள்விகளால்தான் பல விடயங்கள் வெளிவருகின்றன. அவற்றுக்கு பலவற்றிற்கு நான் பதிலளிக்கத் தயங்கியதேயில்லை. கொஞ்சம் நாசூக்கு வேண்டும் .அதாவது உங்களுக்குத் தெரிந்த அத்தனை விடயங்களும் அனைவருக்கும் தெரியும் என்ற நோக்கில் உங்கள் கேள்விகள் அமைய வேண்டாம் என்றே கேட்டுக் கொண்டிருக்கிறேன் பதிவு சம்பந்தமாக கேள்விகள் கேட்டால் அனைவருக்கும் புரியும் என்றே கேட்டுக் கொள்கிறேன். வேறு ஏதும் தவறாக நினைக்க வேண்டாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
அவர்களுக்கு வணக்கம்.தங்களின் அறிவுரைப்படி நடக்கிறேன்.நன்றி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்,
////உதக நீர் அதிகம் இருப்பதால்தான் உதக மண்டலம் என்று இப்போதுள்ள ஊட்டிக்குப் பெயர்/// நல்ல தகவல்.
நன்றி அய்யா.
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி,
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் கல் மரங்களுக்கு கீழே உள்ளவாறு எழுதி வைத்துள்ளார்கள்.
“பல ஆயிரம்/ லட்சம் வருடங்கள் ஆன மரங்கள் கால மாற்றத்தால் கல்லாகிவிடும்” தாங்கள் சொல்வது தான் உண்மை.மிக்க நன்றி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பெருமதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.மிகவும் அருமையான பதிவு.மேலே தாங்கள் குறிப்பிட்ட கவுனமணி குளிகையும் ,போகமுனிவர் சப்தகாண்டத்தில் குறிப்பிட்ட வாயில் அடக்கினால் பறக்கும் தன்மைஉடைய கவுனமணி குளிகையும் ஒன்று தானா? ஐயா.
எமதுகுமரிமாவட்ட எல்லையை அடுத்த வள்ளியூர் அருகே மேற்கு மலைத்தொடரில் வேதிஉதகம் இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன்.
தங்கள் ஆசியுடன்
மு.ஃபைஸல் கான் (ksa)
அன்பு மிக்க திரு ஃபைஷல் கான் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஆம் . அந்த உதகம் ஷண வேதி உதகமாக இருக்க வேண்டும் .உதக நீரைப் பற்றி கேள்விப்பட்ட நீங்களே தேடி முயற்சித்து மேற்படி கவுன மணியைச் செய்யுங்கள் .நாங்கள் உதவுகிறோம் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிக்க நன்றி ஐயா!
தங்கள் தயைகூர்ந்த பார்வைக்காக இரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.
என்றும்அன்புடன்
மு.பைசல் கான்
அன்பு மிக்க திரு ஃபைஷல் கான் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இன்று அதிகாலை 12.30 மணி வரை உங்கள் மின்னஞ்சல் வரவில்லை.ஏனெனில் பொதுவாக நாம் பதில் கொடுப்பதில் எம் வேலைப் பழு காரணமாக தாமதம் நேரிட்டாலன்றி தாமதம் செய்வதில்லை .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்