திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 7 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம்  6 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி  ( பாகம் 7 ) புரியும் என்பதை  பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

இந்தப் பேய்ச்சுரைக் குடுக்கையை குதிரை வால் முடி கட்டி வைத்து , உதக நீரில் விட்டு ஷண வேதி உதகம் எடுத்து அதன் மூலம் செய்யும் காரியங்களை கீழே கோரக்கர் மலை வாகடத்தில் கூறியுள்ளதைக் காணுங்கள்.

மேலும் பலருக்கு அண்டக்கல் மற்றும் பல விடயங்களில் சந்தேகம் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் முகமாக கோரக்கர் மலைவாகடம்  முகவுரை , குறிப்புரை , மற்றும் முப்பு , பாறை உப்பு , உதக நீர் உப்பு ஆகிய பக்கங்களையும் சேர்த்துக் கொடுத்துள்ளோம்.மேலும் இந்தப் புத்தகத்தில் உள்ளது போல கற்பம் சாப்பிடுவது , மலையேறி மீண்டும் வந்த பின்னால் செயல்பட வேண்டிய விதம் ஆகியவை சற்று விளக்கமாக தற்போதுள்ள ( தாமரை நூலக ) பதிப்பில் இல்லை ஆதலால் சற்று விரிவாகவே விளக்கம் பெற மேலதிகப் பக்கங்களை வெளியிட்டுள்ளேன்.படித்துப் பார்த்து தெளிவு பெறுங்கள்.

 

உதக நீரினால் கல்லாக்கப்பட்ட வெள்ளைப் பூசணிக்காயை தேனில் குழைத்துச் சாப்பிட்டு ஆயுளை விருத்தியாக்கி வாழ்வாங்கு வாழுங்கள் என சித்தர் கோரக்கர் வாழ்த்துகிறார்.

இதற்கு மேலும் விளக்கங்களை  அடுத்து  திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான்,  நவலோக பூபதி பாகம் (8 ) ல் பார்க்கலாம்.