திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 8 )
திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம் 7 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி ( பாகம் 8 ) புரியும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .
எம் குரு நாதர் இந்த மருந்தை முடித்து சாப்பிடும் காட்சியை பட ஒளிக்காட்சியாக கீழே கொடுத்துள்ளேன் .கண்டு இன்புறுங்கள்.
[tube]http://www.youtube.com/watch?v=cx38UcwCR04[/tube]
இந்த நவ லோக பூபதியை இஞ்சி சுரசத்தில் பயரளவு கொடுக்க சிவயநம என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொடுக்க வாதத்தினால் வந்த சுரம் சந்தி போகும்.
பித்த சுரம் , பித்த சந்தி இவைகளுக்கு பயரளவு தேனில் கொடுக்க சுரமும் அதனால் ஏற்பட்ட தோஷமும் போகும்.செத்த பிணமானாலும் எழுந்து உட்கார வைக்கும். முலைப்பாலில் பாசிப் பயரளவு கொடுக்க சிலேத்தும சந்தி , சிலேத்தும சுரம் , மேக சுரம் ஆகியவை போகும்.
திரிகடுகுச் சூரணத்தில் பாசிப்பயரளவு வைத்து இஞ்சி சுரசத்தில் ( இஞ்சியை தட்டிச் சாறெடுத்து அதில் உள்ள சுண்ணாம்பை தெளிய வைத்து சிறிது கை வைக்கும் அளவு மட்டும் மண் கலயத்தில் வைத்து சூடாக்கி அரை எலுமிச்சம் பழச்சார் விட்டு எடுத்து வைத்துக் கொள்வது இஞ்சி சுரசம் ) கொடுக்க விக்கல் , வாந்தி , அஷ்ட குன்மம் ( எட்டு வித தீராத வயிற்று வலி ) , பதினெட்டு வகையான சூலை ( மூட்டுகளில் கணுவுக்கு கணு வலிக்கும் வலி கணுச்சூலை , இது போன்ற சூலை பதினெட்டுக்கும் ) . பால் சேர்த்துக் கொள்ளலாம் . உடல் உறவு கூடாது . மீன் , அசைவ வகைகள் சேர்க்கக் கூடாது . இப்படி இருந்து மருந்துண்டால் மேற்கண்ட வியாதிகள் குணமாகும் .
இதற்கு மேலும் விளக்கங்களை அடுத்து திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் (9 ) ல் பார்க்கலாம்.
தாமதமாகத்தான் பார்த்தேன், படித்தேன். அய்யாவை நேரில் சென்று பார்த்தேன் அவரின் எளிமை, ஆண்டவனின் வலிமை அதுவென்றே அறிந்து வியந்தேன். நன்றி! . இந்தப்பதிவு முழுதும் இனிமையானவைகளை தரும் உங்களுக்கு வார்த்தைகளால் நன்றி சொல்லி தீராது ஐயா… சுய நலமில்லா உங்கள் (யாவருக்கும்) பணி (இறைப்பணி) என்றுமே தொடர வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க வளமுடன்…
என்றும் நட்புடன்…
தேவன் கேசவன்
அன்பு மிக்க திரு தேவன் கேசவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிகப் பெரிய இறைவன் நமக்கு இத்தனை விடயங்களை படைத்துள்ளான்.ஆனால் நாம்தான் அதையறியாமல் துன்பங்களில் உழல்கிறோம் . நாம் முக்கியம் என்று நினைக்கும் விடயங்கள் உண்மையில் அற்பமானவை .அதனால் இது போன்ற விடயங்கள் நம் கண்ணில் படுவதேயில்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி,
வணக்கம்
///மிகப் பெரிய இறைவன் நமக்கு இத்தனை விடயங்களை
படைத்துள்ளான்.ஆனால் நாம்தான் அதையறியாமல் துன்பங்களில்
உழல்கிறோம் . நாம் முக்கியம் என்று நினைக்கும் விடயங்கள்
உண்மையில் அற்பமானவை .அதனால் இது போன்ற விடயங்கள்
நம் கண்ணில் படுவதேயில்லை.///
அட்சர லக்ஷம் பெறும் என்பார்கள், உண்மையை இவ்வாறு எங்களை
ப்போன்ற சிறார்களுக்கும் புரியும் படி சுலபமாக சொல்ல உங்களால்
தான் முடியும் அய்யன்.
சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.கருத்துரைக்கு நன்றி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இன்னும் பல அற்புதமான விடயங்கள் நமது தளத்தில் வெளிவர இருக்கின்றன. அவற்றை கிடைத்தற்கரிய பொக்கிஷம் என படித்து பாது காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த சித்தர்கள் , முப்பு குரு சம்பந்தமான காணொளிக்காட்சிகளை கையாள்வதே சிரமமாக இருந்தது. அவை காப்பி ஆனது போல் காட்டும் ஆனால் ஆகாது .பல சமயம் இவை அப்படியே அழிந்து போகுமோ என்று கூட பயந்தோம்.அதற்காக பல இடங்களில் பிரதி எடுத்தும் வைத்திருந்தோம்.இவற்றை தரவேற்றம் செய்ய திரு நாகமணி , விண்மணி வேர்டுபிரஸ் அவர்களின் பங்களிப்பு மிகச் சிறந்தது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
உண்மைதான் அய்யா, அவர்கள் இறுதிவரை புரியாமலேயே போய்விடுகிறார்கள்.
அன்பு மிக்க திரு தேவன் கேசவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இறைவன் கண் திறக்க மாட்டானா என்று பலர் கேட்பதை கேட்டுள்ளோம் ,ஆனால் இறைவன் படைத்துள்ளதை மனிதன் கண் திறந்து பார்க்க மாட்டானா என்று எமக்கு இப்போது கேட்கத் தோன்றுகிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்