திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 9 )

திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் (  பாகம்  8    )ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி  ( பாகம் 9 ) புரியும் என்பதை  பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .

பறங்கிப் பட்டை , சித்தரத்தை ( சன்னராஷ்டம் ) , மிளகு , சுக்கு , இவற்றை சம எடையாய் எடுத்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு  பாசிப்பயறளவு நவலோக பூபதிக் குளிகையிட்டு தேனில் குழைத்துண்ண கீழ்க்கண்ட வியாதிகள் போகும். குலை நோய் , குமர கண்டன் , முசல் வலிப்பு ( சிறு காக்கை வலிப்பு ) ,  பதினெட்டு வகை குஷ்டம் , இவை அனைத்து வியாதிகளும் அம்பிகைப் பெண்ணின் அருளினால் தன் குடியோடே ஓடிப் போகும் . (அதாவது குணமாகும் ).பாடல்  1702.

பெருங்காயம் , திப்பிலி , சித்தரத்தை ( சன்னராஷ்டம் ) , சுக்கு , சித்திர மூல வேர்ப்பட்டை , இவற்றை சமமாக எடுத்து வறுத்து  பொடி செய்த சூரணத்தில் பாசிப்பயறளவு நவலோக பூபதிக் குளிகையிட்டு  சேர்த்துக் கொடுத்தால் வாயு , அஜீரணம் இவை போகும் .

மிளகருணை , சிறு திப்பிலி , லவங்கம் , மிளகு இவைகளைச் சமமாகச் சூரணம் செய்து இதனுடன்  பாசிப்பயறளவு  நவலோக பூபதிக் குளிகையிட்டு  பசு நெய்யிலிழைத்துக் கொடுத்து உடலுறவில்லாமல் இருந்து கொண்டு சாப்பிட்டால் ஷயம் , காசம் , தலைச்சுற்றல் இவைகள் நீங்கிப் போகும் .

 

கடுகு ரோகணி , மிளகு , சுக்கு , சுக்கு , கண்டு பாரங்கி , கடுக்காய் , கஸ்தூரி  மஞ்சள் , இவற்றை சரி சமமாய் எடுத்து சங்கஞ்சாற்றாலரைத்து புன்னைக்காயளவு எடுத்து அதில் மிளகருணை , சிறு திப்பிலி , லவங்கம் , மிளகு இவைகளைச் சமமாகச் சூரணம் செய்து இதனுடன் பாசிப்பயறளவு   நவலோக பூபதிக் குளிகையிட்டு  கொடுத்தால் விஷப்பாண்டு , விப்புருதி , சோகை இவைகள் போகும்.

திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான்,  நவலோக பூபதி இத்துடன் நிறைவு பெறுகிறது. இனி ஒரு சிறப்பான சித்தர்களின் விடயத்துடன் அடுத்த பதிவில் சந்திப்போம்.