இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு(கல்விக்கு ஒரு உதவி)பாகம் 2

எமது நண்பர் திரு ஜவஹர்லால் என்பவர் எம்முடன் பணி புரிந்து சென்ற மூன்று வருடங்களுக்கு முன்னால் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு செய்த மருத்துவச் செலவுக் கடன்களை அடைக்கவே அவரது இறுதிப் பணிக்கொடையும் , தொழிலாளர் சேம நலநிதி சேமிப்பும்  உதவின.

அவருடைய புதல்வர்களில் இருவர் தற்போது பள்ளிப் படிப்பில் உள்ளார்கள் .தற்போது அந்தப் பையன்களின் படிப்புக்கு பணம் கட்ட முடியாத,  வழியில்லாத  நிலையில் உள்ளார்கள். ’’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலின் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது என்பது  முன்னோர் வாக்கு.’’  அதற்கிணங்க பண உதவி புரிய எண்ணும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கு எண்ணுக்கு தங்களால் இயன்ற பணம் உதவி செய்யுமாறு  Aug 5, 2012 @ 17:55  அன்று வேண்டி கேட்டுக் கொண்டேன்.

பணம் கட்டாததால் பள்ளிக் கூடத்திற்கும் கல்லூரிக்கும் போகாமல் இருந்த இந்த காலத்தினால்  செய்த உதவி உலகத்தை விடப் பெரியது. நல்லோர் செல்வம் ஊருணி நீர் நிறைந்தது போல  அளவில் சிறுத்து இருந்தாலும் ஊர் மக்கள் அனைவருக்கும் குடிக்கும் படி பயனுடன் இருக்கும். ஆனால் ஈயார் செல்வம் கடல் தண்ணீரைப் போல அளவில்  பெரியதாக இருந்தாலும் ஊர் மக்கள் குடிக்கப் பயனற்றதாகவே இருக்கும்.

1 )திரு பரமசிவம் , சிங்கப்பூர் அவர்களும் ,

2 )திரு முத்துக் குமரன் , சென்னை  அவர்களும் ,

3 ) திரு சுரேஷ் , கும்ப கோணம் அவர்களும் ,

4 ) திரு மாரிச் செல்வம் , பெங்களூர் அவர்களும் ,

மேற்கண்ட சிறுவர்களின் படிப்புச் செலவுக்கு நிதியுதவி செய்துள்ளார்கள். இப்படி அவர்களால் இயன்ற அளவு உதவி செய்த அன்புள்ளங்களுக்கு என் அன்பார்ந்த , நெஞ்சார்ந்த நன்றிகள் பல  . இவர்களுக்கு என்னால் எப்போதெல்லாம் , ஏதாவது  மருத்துவ ரீதியிலான உதவிகளோ அல்லது ஞான ரீதியிலான உதவிகளோ ,வேறு எந்த மாதிரியிலான உதவிகள் என்னால்  ஆக வேண்டுமோ ,அப்போதெல்லாம் தடையில்லாமல் செய்யத் தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

அடுத்த பதிவான மார்ச்சால மூலி பாகம் இரண்டு நாளை ( 06-09-2012 )வெளி வரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.