திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் (2 )
திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி பாகம் ( பாகம் 1 ) ஐ படித்துவிட்டு வந்தால் இந்த திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் நவலோக பூபதி ( பாகம் 2 ) புரியும் என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன் .
திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியானில் குறிப்பிடப்பட்டுள்ள நவலோக பூபதி எப்படி செய்வது என்பதை இப்போது பார்ப்போம். முன் சொன்ன நவ லோகங்களையும் இங்கே சொல்லியுள்ள நவ பாஷாணங்களயும் சேர்த்து அத்துடன் கந்தகம் ( விந்து ) , சூதமான பாதரசம் ( நாதம் ) இரண்டும் சேர்த்து செய்யும் முறையைப் பார்ப்போம் .
நவ பாஷாணங்கள் படங்களை இதோ கீழே கொடுத்துள்ளேன் .
1 ) சங்குப் பாஷாணம்
2 ) கௌரி
3)மனோசிலை
4 ) தாரம் என்ற அரிதாரம் மால்தேவி
5 ) வீரம்
6)பூரம்
7) சாதிலிங்கம்
8)சிங்கி என்ற மிருதார்சிங்கி
9) காடிக் காரம்
திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியான் பக்கம் 549 பாடல் 1685 லில் கொடுக்கப்பட்டுள்ள நவ பாஷாணங்களான 1 ) சங்குப்பாஷாணம் , 2 ) கௌரி , 3) மனோசிலை 4 ) அரிதாரம் என்ற மால் தேவி ( திருமால் {அரி }மனைவி { தாரம் }) என்ற தாளகம் 5 ) வீரம் 6 ) பூரம் 7 ) சாதிலிங்கம் 8 ) மிருதார்சிங்கி 9 ) காடிக்காரம்
10 ) கந்தகம் என்ற கெந்தி என்ற விந்து
11 ) ரசம் என்ற பாதரசம் என்ற சூதம் என்ற நாதம்
மேற்கண்ட அனைத்து விடயங்களையும் பொடித்துப் போட்டு கார சார ஜெய நீரில் ( பச்சை சிங்கமான பிடித்த வாத நீரில் போட்டு ) வேகவிட்டு பின்னர் அடி பிடிக்காமல் கமலாக்கினியாக எரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் .இதை கீழே கொடுத்துள்ள காணொளிக் காட்சிகளின் மூலம் கண்டு தெளியுங்கள் .
[tube]http://www.youtube.com/watch?v=vFrK0OryiIY[/tube]
இதில் இருந்து வரும் புகை சிவனின் கூந்தல் போல செந்நிறத்தில் உள்ளதை கவனியுங்கள். சிவனுக்கு செஞ்சடையான் என்று பெயர் என்பதையும் கவனியுங்கள்.இது சிவ நர்த்தனம்.கண்டு களியுங்கள்.
[tube]http://www.youtube.com/watch?v=UusXrGWweos[/tube]
[tube]http://www.youtube.com/watch?v=Xrcse-quJt0[/tube]
[tube]http://www.youtube.com/watch?v=-ugd1IOH-xmc[/tube]
[tube]http://www.youtube.com/watch?v=-N2kpFKHxbpI[/tube]
இதற்கு மேலும் விளக்கங்களை அடுத்து திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் (3 ) ல் பார்க்கலாம்.
மிக பெரும் சித்த ரகசியங்களை,எளிமைப்படுத்தி கூறியுள்ளீர்கள்.
தாங்கள் இறை,மற்றும் சித்தர் பணி தொடர வாழ்த்துகள்.
நவபாஷண நாயகன் போகர் பற்றிய,
சூட்சும தகவல்களுக்கு.
ombhogar.blogspot.com
அன்பு மிக்க திரு ஓம் போகர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
அந்த இறைவனின் ஆட்டுவித்தலால் எல்லா விடயங்களும் நிகழ்கின்றன.அந்த ஒப்பற்ற இறையின் அருட் கருணை எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நள்ளுவாய் நவராச யோகமது சித்தி
நவபூபதி கற்பம் நல்லசித்தி யாமே
த.ஜாலசூத்திரதிரட்டு 105 பாடல் இதன் அருமை பற்றி கூறுகிறது
இதை விரித்து கூறியதற்கு நன்றி
அன்பு மிக்க திரு சங்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இன்னும் உள்ளது சொரூப சித்திக் குளிகையும் மற்ற விளக்கங்களும் காத்திருக்கின்றன.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அருமை அருமை அய்யா ..,!!!
நன்றிகள் பல கோடி நன்றிகள் தங்களுக்கும் . மச்சமுனி சபைக்கும் , தங்கள் குருநாதர் வேங்கடாசலபதி அவர்களுக்கும் ., கர்மவினை பலவும் தங்களின் இனையதளத்தை பார்த்தாலே கரைந்துவிடும் ..,
போகர் பெருமான் கூறியதை போல
நேரேதான் சாத்திரத்தை விட்டகற்றி
நேர்மையுடன் மதி ஊன்றிப் பாராமல்தான்
பூராயமானதொரு ரிஷிகள் நூலில்
புகன்றிட்ட மர்மமத்தை அறியாமல்தான்
சாராய மானதொரு வஸ்து தன்னை
சாங்கமுடன் கற்பமென்று கொண்டிட்டாரே
கொண்டாரே லாகிரிகள் அருந்தியல்லோ
………
வீண்காலம் போக்கியல்லோ மடிந்திட்டார்கள் !!!!!
பிறவிகள் பல உழன்று உழன்று உணற வேண்டிய ., எவ்வுளவு விஷியங்களை எளிமையாக உணர்த்தியுளீர்கள் ..,
புலிப்பாணி சித்தர் அடிமை ,
அன்பு மிக்க திரு புலிப்பாணி சித்தர் அடிமை அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வெகு நாட்களாக உங்கள் கருத்துரையையே படித்ததாக ஞாபகம் இல்லை.அடிக்கடி கருத்துரைகளை எழுதுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
வணக்கம். “நாதவிந்து கலாதி நமோ நம” என்று அருணகிரி நாதர் பாடலை படிக்கும் பொது “நாதவிந்து” ஆற்றல் தெரியவில்லை.
இந்தப் பதிவை பார்த்தபிறகு “நாதவிந்து நீரின்” பேராற்றலை உணரப்பெற்றேன். “நவலோக பூபதி” மருந்தை தயாரிப்பதற்கு “நாதவிந்து நீர்” தான் மூலப்பொருளாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், இது போன்ற சித்தர் விஷயங்களை காணவும், நடைமுறை வாழ்வியல் விடயங்களையும் கேட்டு தெளிவு பெறவும் முடியும் என்ற நம்பிக்கையே எனக்கு நிறைவைத் தருகின்றது. மன மகிழ்வைத் தருகின்றது. நன்றிகள் பல..!
மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முத்துக்குமரன்
அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நாமே நாதவிந்துக்களின் சேர்க்கைதான்.நாத விந்துக்களின் கலவையாக நாம் இருப்பதால்தான் காமம் நம்மிடமும் இருக்கிறது. நம்மிடமுள்ள நாதவிந்தை சித்தர்களின் உபதேசத்தால் கண்டு சக்தியெல்லாவற்றையும் கொண்டு சிவத்தைப் பெருக்கி உள்ளொளி பெருக்கி ஊனுடம்பை ஒளியுடம்பாக்கி, வெளியிலுள்ள நாதவிந்துச் சேர்க்க்கையினால் உடலை காய சித்தி ஆக்கி இறுதியில் இறைவனுடன் இரண்டறக் கலப்பதே வாழ்வின் இலட்சியமாக ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
வணக்கம். தயவு கூர்ந்து கீழே உள்ள பாடல்களுக்கு பொருள் விளக்கம் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
அஞ்செழுத்திலே பிறந்து அவ்வன்செழுதிலே வளர்ந்து,
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள்,
அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லரேல் ,
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அநாதியானது அஞ்சுமே,
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்கள் பிதற்றுவீர்,
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லீரேல்,
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியானதொன்றுமே…
– சிவவாக்கியர்
மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முத்துக்குமரன்
அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
அஞ்செழுத்தாகிய நமசிவய என்பது பஞ்ச பூதங்களைக் குறிப்பது. இதில் பிருதிவி ( மண் ) , அப்பு ( பிருதிவியில் அப்புவதால் தண்ணீருக்கு அப்பு என்ற இந்தப் பெயர் ) , தேயு ( எதையும் தேய்த்து அழித்து ஒழிப்பதால் நெருப்புக்கு தேயு என்று பெயர் ) , வாயு ( காற்று ) , ஆகாயம் ( எல்லாவற்றையும் தாங்கி உயிரோடு ஒன்றி நிற்பது ) .இந்த ஐந்தெழுத்துக்களான பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது இந்த உடம்பு.நாமும் இந்த ஐந்தெழுத்து மந்திரத்தையே ஓதுகின்றோம்.இந்த பஞ்ச பூதங்களாலேயே உடல் வளர்க்கப்படுகிறது. இதில் காற்று (மூச்சுக் காற்றாகிய பிராணன்) , நெருப்பு (நம் உடலில் உள்ள சூடு ) , ஆகாயம் இம்மூன்று பூதமும் நம் உயிர் உடலை விட்டு ஓடும் போது, ஓடிப் போய்விடும். மண்ணும் , நீரும் , மட்டும் பிணமாகக் கிடக்கும் . இந்த ஓடும் மூன்றில் அக்கினியான ( வன்னி ) , நெருப்பை நமச்சிவாயத்தில் உள்ள சிகாரம் குறிக்கிறது.இந்த சிகாரமான நெருப்பைப் பற்றிப் பிடித்தாலேயே நாம் எமனை வெல்ல முடியும். இதையே திருமூலர் நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார்.நாயை எப்படி ஓட்டுகிறோம் “சி “ என்று .எனவே அந்தச் சிகாரமான நெருப்பு நம் உடலில் ஒரு இடத்தில் இருந்து கொண்டு உடலெங்கும் பரவி உடலை இயக்குகிறது.அந்த நெருப்பை கண்டு கொண்டு அந்த நெருப்பை வளர்க்க வேண்டும்.பெருங்காற்றில் சிறு நெருப்பு அணைந்துவிடும் .ஆனால் பற்றி யெரியும் பெரு நெருப்பை பெருங்காற்று மேலும் வளர்க்கும்.என்வே சிறு நெருப்பை பெரு நெருப்பாக்கி நித்தம் நித்தம் அந்தக் குளிர் நெருப்பை (அந்த நெருப்பு சுடும் நெருப்பல்ல குளிர் நெருப்பு { தண்ணெண் கதிர்} ) மூட்டி அதில் மூழ்கி நம் தேகத்தை சுத்தமாக்க வேண்டும்.இப்படி அசுத்த தேகமாக இருக்கும் தேகத்தை சுத்த தேகமாக ஆக்க வேண்டும் . இதைத்தான் அஞ்செழுத்தில் ஓரெழுத்தை அறிந்து கூற வல்லீரேல் என்று கூறியுள்ளார்.சிகாரத்தை அறிந்து அப்பியசித்தால் இறைவன் அஞ்சேல் என்று கூறி மரணத்தைத் தள்ளிப்போடவும் தவிர்க்கவும் நான் இருக்கிறேன் , இருக்கிறேன் உன்னைக் காக்க என்று உதவிக்கு வருவதாகக் கூறுவான் இறைவன் , என்கிறார் சிவவாக்கியர் . இதற்கு மேல் விளக்கம் சபையினர் அல்லாத நபர்களுக்கு கொடுக்க எனக்கு அதிகாரம் இல்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா மிக மிக அருமையான விளக்கம்.மிகமிக நீண்ட நாட்கள் பாடலின் பொருள் தெரியாமல் இருந்தேன்.அருமையாக விளக்கிவிட்டீர்கள்.விரைவில் ஞானசபை உறுப்பினராகி இறவா நிலை எய்ய வேண்டும். நீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா?
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.
Vanakkam Aiyaa,
Ennakkum Muraippadi Tamil Siddha Maruththuvam karkka Aasai..
Vazhikattungal…
Nandri
Raj.
அன்பு மிக்க திரு பாக்கியராஜ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இது இளவயதிலிருந்தே கற்க வேண்டியவை . நான் என்னால் முடிந்த அளவிற்கு வலைத்தளத்திலேயே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.இவற்றைக் கற்றாலேயே நீங்கள் உங்கள் வியாதிகளை சமாளிக்க , உங்களுக்குப் போதும் என்ற அளவிற்குத் தெரிந்து கொள்ளலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
நன்றி.. நன்றி.. விரிவான விளக்கம் 🙂
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள்,
“அஞ்செழுத்தில் ஓர் எழுத்து அறிந்து கூற வல்லரேல் ,
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.”
மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முத்துகுமரன்
அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்களது பெயரை நமது வலைத்தளத்தில் வெளியான சமீபத்திய பதிவான http://machamuni.com/?p=1387 ல் வெளியிட்டுள்ளேன் .பாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
நான் பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை. தாங்கள் தொடர்புக்கு முன் நான் பல நேரங்கள் பல விடயங்களுக்காக நீண்ட காலமாக மிகவும் வருந்தி இருக்கின்றேன் 🙁 . தங்களை கண்டுவிட்ட பின் அந்த வருத்தங்கள் சிறிது சிறிதாக மனதில் இருந்து மறைந்து வருகின்றன. ஐயம் தொலைகின்றது. தங்களுடைய தொடர்பே பெரும் புண்ணியம், நம்பிக்கை, மன நிறைவு, தெளிவு. என்ன தவம் நான் செய்தேனோ? கோடி நன்றிகள் அய்யா 🙂
மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முத்துக்குமரன்
அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பாராட்டுவது எம் கடமை .உங்களைப் போன்றோரை பாதுகாப்பதும் எம் கடமை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
வணக்கம். நன்றி.. நன்றி.. மிக்க நன்றி 🙂
என்றும் அன்புடன்
முத்துக்குமரன்
அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
திரு. சாமீ அழகப்பன் அவர்களுக்கும், திரு. வேங்கடாசலபதி ஐய்யா அவர்களுக்கும் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்.
இத்தனை சிறப்புக்களை கொண்ட சித்த மருத்துவத்தை கற்காமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாக இருக்கிறது. அதனால் என்ன, சித்தமுனியாம் மச்சமுனியின் சித்த ஞான சபைக்கு வருவதற்கு விருப்பம் உள்ளது. அதற்காக அகஸ்திய முனிவரின் ஆசியும், சித்தர்களின் ஆசியும் வேண்டிக்கொள்கிறேன். எம் விருப்பததை சொல்லியாகிவிட்டது. இனி, எல்லாம் அவர்கள் விருப்பம், செயல்.
அன்புடனே இவன்.
அன்பு மிக்க திரு அ.சங்கரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இறைவன் அருளிருந்தால் அனைத்தும் நடக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Sarkuruvirku
adiyenin panivana vanakkangal. poorva jenma punnniyathin payanaga thangalin thodarpu kidaithullathu. kuruvarulal neril santhikum aavavinani viraivil niraiveruvar ena thida sithathudan ellam valla iraivanai ennukineren. sitharkal marai porul ena sonna pala visayangalai anayasamaka
vilakkam koori viyappukkulakum sarkuruve. sitha karuvoorar kooriyathu pola ullathai ullapadi eduthuraithen. purinthavar purinthukolka endu kurippittullar. Anaal entha vitha marai porulum illathu thelivaka eduthuraikum umathu arivin veechu piramikka vaikirathu. thodarattum umathu seeria thondu. vaiyagam sezhikkavum, Anbu vazhiyil payanikkavum sitharkal arulasi vazhankattum.
Endrum ungal anbu vendi
Ramesh kumar.c.
அன்பு மிக்க திரு ரமேஷ் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்