திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் ( 1 )
திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியானில் குறிப்பிடப்பட்டுள்ள நவலோக பூபதி எப்படி செய்வது என்பதை இபோது பார்ப்போம்.
பிணமானாலும் இந்த நவலோக பூபதி என்னும் மருந்தைக் கொடுத்தால் , பிணமானவனும் எழுந்து மூன்றே முக்கால் நாழிகை வரைக்கும் பேச வைக்கக் கூடிய மருந்து இது என்று திருவள்ளுவர் தனது ஞான வெட்டியானில் கூறியுள்ளார் என்றால் இதன் பெருமையைப் பற்றி நாம் சொல்லவும் வேண்டுமோ???
நவலோகங்களையும் , நவபாஷாணங்களையும் கலந்து வைத்து ஒரே திரவமான ஆங்காரியாகிய பச்சை சிங்கத்தால் வேக வைத்து இந்த மருந்தை செய்வதை ஒளிப்படக் காட்சியாகவும் புகைப் படங்களாலும் விளக்க இருக்கிறேன். ( போகர் செய்த பழனி மலை முருகன் சிலையில் நவ பாஷாணங்கள் மட்டுமே உள்ளன எனில் நவலோக பூபதியில் நவ பாஷாணங்களும் , நவ உலோகங்களும் உள்ளதால் அதைவிட சிறப்பானது ) .
நவ லோகங்களான ( 1654 பாடல் ) 1 ) பொன்னிமிளை, 2 ) வெள்ளை அல்லது வெள்ளி அல்லது ரசிதம் , 3 ) தாமிரம் , 4 ) அயம் , 5 ) வங்கம் , 6 ) நாகம் , 7 ) வெங்கலம் , 8 ) வெள்வங்கம் , 9 ) பித்தளை இவ்வொன்பது ( நவம் என்றால் ஒன்பது ) உலோகங்களையும் கீழே படத்தில் கொடுத்துள்ளேன்.
நவ லோகங்கள்
1) தங்கத்திற்கு சமமான பொன்னிமிளை
2) வெள்ளை என்ற வெள்ளி என்ற ரசிதம்
3) தாமிரம் என்ற செம்பு
4) அயம் என்ற இரும்பு
5) வங்கம் என்ற கருவங்கம் என்ற காரீயம்
6) நாகம் என்ற துத்த நாகம்
7)வெங்கலம் என்ற வெண்கலம்
8) வெள்வங்கம் என்ற வெள்ளீயம்
9) பித்தளை
மேற்கண்ட ஒன்பது உலோகங்களையும் ராவி தூளாக்கிப் போட்டு அத்துடன் அடுத்த பதிவில் வரும் ஒன்பது பாஷாணங்களையும் (விஷங்களையும் ) போட்டு எப்படி நவலோக பூபதி செய்வது என்று வரும் பதிவுகளில் காணொளிக் காட்சிகளாக வெளியிடுகிறோம் . திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான், நவலோக பூபதி பாகம் (2 ) ல் தொடர்கிறேன் .
வியப்பாக இருக்கிறது! அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள திருவள்ளுவ நாயனார் தான் திருக்குறளையும் எழுதியவரா?
அன்பு மிக்க திரு சுதாகர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
திருக்குறள் எழுதிய திருவள்ளுவரும்,ஞான வெட்டியான் எழுதிய திருவள்ளுவ நாயனாரும் ஒருவரே என்றும் அல்ல வேறுவேறு நபர்கள் என்றும் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.நமக்கு அவர் சொன்ன கருத்துக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படி புரிந்து கொண்டு செய்ய வேண்டியதை செய்தால் பயனுண்டு. கவுண்டமணி சொல்வது போல கோழி குருடாயிருந்தாலென்ன குழம்பு ருசியா இருக்கா பாருங்க??? ரிஷி மூலம் நதி மூலம் பார்த்து என்ன ஆகப் போகிறது.பயனான விடயங்களில் உங்கள் ஆய்வைச் செலுத்துங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஏன் கேட்கிறேன் என்றால் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கி.மு 31 ல் வாழ்ந்ததாக தானே வரலாறு அதை வைத்து தானே நாம் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறோம் (இது 2043 திருவள்ளுவர் ஆண்டு இல்லையா!) ஆனால் முந்தைய பதிவின் அண்டக்கல் காணொளியில் மதிப்பிற்குரிய குருநாதர் திரு வெங்கடாசலம் ஐயா அவர்கள் திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான் 2312 என்று குறிப்பிடுகிறாரே. அப்படியானல் திருக்குறளை எழுதியவரும் இவரும் வெவ்வேறு நபர்களா?! தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி
அன்பு மிக்க திரு சுதாகர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
திருக்குறள் எழுதிய திருவள்ளுவரும்,ஞான வெட்டியான் எழுதிய திருவள்ளுவ நாயனாரும் ஒருவரே என்றும் அல்ல வேறுவேறு நபர்கள் என்றும் இரு வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.நமக்கு அவர் சொன்ன கருத்துக்கள் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ அப்படி புரிந்து கொண்டு செய்ய வேண்டியதை செய்தால் பயனுண்டு.ரிஷி மூலம் நதி மூலம் பார்த்து என்ன ஆகப் போகிறது.பயனான விடயங்களில் உங்கள் ஆய்வைச் செலுத்துங்கள்.///(இது 2043 திருவள்ளுவர் ஆண்டு இல்லையா!) ஆனால் முந்தைய பதிவின் அண்டக்கல் காணொளியில் மதிப்பிற்குரிய குருநாதர் திரு வெங்கடாசலம் ஐயா அவர்கள் திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான் 2312 என்று குறிப்பிடுகிறாரே///திருவள்ளுவ நாயனாரின் ஞான வெட்டியான் 2312 பாடலைக் குறிப்பிடுகிறார்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம்.தங்கள் பதிவு அருமை.அடுத்த பதிவையும் காண ஆவலோடு
காத்திருக்கிறேன்.ஒரு சிறு சந்தேகம்.
மருந்துக்கு சேர்க்கப்படும் உலோகங்கள்,பாஷானங்களை நேரடியாக
எடுத்துக்கொள்ளலாமா அல்லது சுத்தி செய்து தான் உபயோகபடுத்த
வேண்டுமா?
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வரும் பதிவுகளில் உங்கள் கேள்விக்குப் பதில் இருக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
சுத்திகரிப்பு முறையிலும்,உருக்கினங்களுக்கும் ஆட்டின் சிறுநீர்
எருமை சாணம்,புற எச்சம் போன்றவைகளை உபயோகப்படுத்துமாறு
பல பாடல்களில் உள்ளது.அப்படிதான் செய்ய வேண்டுமா?
அவை மருந்துகளில் அப்படியே இருக்குமா?அல்லது மறைந்து விடுமா
என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்களுக்கு எந்த மருந்தையாவது நீங்கள் எதற்காகவாவது சுத்தி செய்துள்ளீர்களா????உங்களுக்கு ஏதாவது மருந்துகள் செய்யத் தெரியுமா??எதற்காக இதைக் கேட்கிறீர்கள் என்று தெரியவில்லை.அனாவசியமான கேள்விகளை தவிருங்கள்.மருந்துகளை சுத்தி செய்த பின் அந்தப் பொருட்கள் சுத்தமான தண்ணீரில் கழுவும்போது அகற்றப்பட்டுவிடும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
உண்மையான நவரத்தினங்களை (9 கற்களையும் )சேர்த்து அணியலாமா?
அதனால் சரியாக என்ன பலன் ஏற்படும்.ஆரோக்கியம்,உடல் நலம் கூடுமா?
என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நான் கல் விற்கும் ஜோதிடரில்லை. என்னிடம் இந்தக் கேள்வி கேட்டுப் பயனில்லை.எனக்குத் தெரியாது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
//பயனான விடயங்களில் உங்கள் ஆய்வைச் செலுத்துங்கள்.//
அப்படியே செய்கிறேன். மறுமொழிக்கு மிக்க நன்றி ஐயா!
அன்பு மிக்க திரு சுதாகர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்,
தங்களை மிகவும் வருத்தப்பட வைத்துவிட்டேன்.
தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டுமென
கேட்டுகொள்கிறேன்.தவறுக்கு வருந்துகிறேன்.
தேவையற்ற கேள்விகள் இனி கேட்க மாட்டேன்.
(நேற்றைய என் கேள்வி மற்றும் தங்கள் பதில்களை
தயவு செய்து நீக்கிவிடுமாறு கேட்டுகொள்கிறேன்)
என்றும் அன்புடன் ஹரி
Sir, yestday washd my eyes with water and aplied dabur eranda thailam as told in ur video. My eyes never felt so cool. Iam enjoyng the chillness with my childrn. Udal mulavathum inda egandam kidaika vendum. Atarkana vazhkaimurai, vaithyamurai thangal blog-l pathipiyungal sir. Thanks a lot. Can we store karisalai kanmai in mud, ss steel box other than silver?
அன்பு மிக்க திரு அருள் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
கண்மையை தேங்காய் சிரட்டை அல்லது வெள்ளிச் சிமிழில் அடைத்து வைத்து உபயோகியுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா ,
நலம் , தங்களின் நலம் அறிய ஆவல்,
சில நாட்களாக தங்களின் வலைப்பதிவை படிக்கமுடியாமல் போய்விட்டது,
மன்னிக்கவும் , பின்னுட்டம் எதுவும் இடவில்லை,
தாங்கள் வலைபதிவில் தெரிவித்தபடி , ஆகாச கருடன் கிழங்கை , சதுரகிரி மலை சென்று திரும்பும் வழியில் , திரு . கண்ணன் அவர்களை சந்தித்து வாங்கி சென்றேன். அவரிடம் உரையாடினோம் , பழகுவதற்கு எளிமையாக இருந்தார்.
மீண்டும் செல்ல காத்து இருக்கிறேன். இயற்கை மருத்துவத்திலும், இயற்கை விவசாயம், சித்தா, ஆகியவற்றில் ஆர்வம் இருக்கிறது.. ஆனால் நான் ஒரு மின்அணு (Electronis software engineer) பொறியாளர் , இருந்தபோதிலும் தமிழில் உள்ள ஆர்வம் மிகுதியாலும் ,தமிழ் மருத்துவத்தால் மக்கள் பயனுரவும், பல தமிழ் மருத்துவ , அதை சார்ந்த புத்தகளையும் தேடி படித்து வருகிறேன். தங்களின் சித்த சபைக்கும் வரவேண்டும், தங்களை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது, இறைவனின் ஆசி படி இது அமையும் என்று நம்புகிறேன், தங்களின் மேலான பதில் எதிர்நோக்கி. தங்களின் நல்ல பணி மக்களுக்கு என்றும் பயன்பட , தொடர வேண்டுகிறேன்.
அன்புடன்
எ. தயாளன் .
அன்பு மிக்க திரு தயாளன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இறை என்ற காலம் நீங்கள் கூறிய அனைத்திற்கும் இடமளித்தால் சந்திப்போம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,மிகமிக அருமையான பதிவு.வரும் பவுர்ண்மி அன்று பாண்டியூர் சிததஞானசபை வருகிறேன்
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வருகிறேன் என்றீர்கள் வரவில்லையே???ஏன்??பெரும் வாய்ப்பொன்றை நழுவ விட்டு விட்டீர்கள்!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மன்னிக்க வேண்டும் ஐயா,கடந்த மாதம் 5 நாட்கள் என் கிளினிக் விடுமுறை விடும்படி ஆகிவிட்டது.இந்தமுறை கனண்டிப்பாக வர இறையருள் வேண்டுகிறேன்.
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இறையருள் கருணையுடன் காத்திருக்கிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் ஐயா,
என் மகனுக்கு காதல் தோல்வியால் மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் அவனுக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்கள்.
அன்புடன்
வி இராசாராம்
அன்புள்ள திரு வீ ராஜாராம் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண்ணை அனுப்பியுள்ளேன்.தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்