முப்பூ குரு ( அண்டக்கல் ) பாகம் 3
முப்பூ பற்றிய கேள்விகளுக்கும் ,முப்பூ என்றால் என்ன ,அது எந்த வடிவில் இருக்கும் என்பதையும் பற்றிய கேள்விகளுக்கு என் பெரு மதிப்பிற்குரிய குருநாதர் திரு வெங்கடாசலம் ஐயா கூறும் விளக்கங்கள் பற்றிய ஒளிப்படக்காட்சி இதோ!!!
[tube]http://www.youtube.com/watch?v=MJERnftHKxE[/tube]
பூதமைந்துங் கூடி நாதவிந்து நீராச்சுது என்று சொல்வதையும் பூரணமாம் மூன்று நாள் தெளிந்தான பின் ( பெண்கள் ) மாதவிடாய் என்றிந்த நீருக்குப் பேரு என்று திரு வள்ளுவ நாயனார் தன் ஞான வெட்டியானில் கூறு வதை என் குரு நாதரின் செயல் விளக்கத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து தெளிந்து கொள்ளுங்கள். பலர் இது அறியாமல் பெண்களின் மாதாந்திர ருதுவான் கழிவு இரத்தத்தை எடுத்து முப்பூ செய்கிறேன் பேர் வழி என்று இறங்கி வீட்டையே நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அல்ல இது என்பதைத் தெளிவாக்கவே இந்த விளக்கம்.
[tube]http://www.youtube.com/watch?v=PG2tMlPkKts[/tube]
[tube]http://www.youtube.com/watch?v=Zwdj_CwZvto[/tube]
அவரது நேரத்தை விரயம் செய்யும் முகமாகவோ , காரியங்கள் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவர் சித்தர் வேதியியல் விற்பன்னர்.எனவே பயனான விடயங்களுக்கு மட்டுமே இந்த அலை பேசி எண்ணை உபயோகித்துக் கொள்ளவும். ஆர்வ மிகுதியில் பலர் தொந்தரவு செய்வதால்தான், தயவு செய்து இப்படி மீண்டும் செய்ய வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் மன்றாடி கேட்டுக் கொள்ளுகிறேன்.
ஒரு நல்ல மருந்து அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் என்றால் அது இந்த முப்பூதான்.இந்த முப்பு சேர்ந்த மருந்துகள் அனைத்து வியாதிகளையும் ,கர்ம வியாதிகள் என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்திக் குறைவு நோய் ( AIDS ) , பால்வினை நோய்கள் )VENEREAL DISEASE , குஷ்டம் ( LEPROSY ) புற்று நோய்கள் ( CANCER , BLOOD CANCER ) போன்ற ஆயுள் நிர்ணயம் செய்யப்பட்ட ( நாளை இறந்துவிடுவார்கள் என்று ஆயுள் நிர்ணயம் செய்யப்பட்ட நோயாளிகள் முதல் சாதாரணமாக மரணத்தால் இறக்கும் அனைவருக்கும் ) அனைத்து நோயாளர்களும் ( மரணமும் ஒரு நோய்தான் ) குணமாவார்கள் .
திருவள்ளுவ நாயனார் ஞான வெட்டியானில் குறிப்பிடப்பட்டுள்ள நவலோக பூபதி என்பதை முப்பூ குருவான பச்சை சிங்கத்தை வைத்து எப்படி செய்வது என்பதை அடுத்த பதிவில், மற்ற முப்பூ பற்றிய ரகசியங்களுடன் தொடர்ந்து வெளியிடப்படும்.
அய்யா,
வணக்கம். திரு. வெங்கடாசலபதி அய்யா அவர்களுக்கு வணக்கம் மற்றும் நன்றிகள். மறைவாக வைக்கப்பட்ட சித்த ரகசியங்கள் அனைத்தும் வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய மனது வேண்டும். முதல் பதிவில் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றம் அளித்தார்கள். அதன் பிறகு வந்த பதிவுகள், அறிவின் ஆழத்தில் விஸ்வருப தரிசனம் வெளிப்படுவதை காண்கிறேன். நான் இதுவரை “காலையில் இஞ்சி தண்ணீர் மதியம் சுக்கு இரவில் கடுக்காய்” என்பதை அப்படியே நினைத்து அதை செய்யவும் முனைந்தேன். அது தவறு என உணர்ந்தேன்.
மிக்க நன்றி
என்றும் அன்புடன்
முத்துக்குமரன்
அன்பு மிக்க திரு முத்துக் குமரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வெங்கடாசலம் ஐயா , அவர்களிடம் உங்கள் கருத்துரைகளை தெரிவித்துவிடுகிறேன்.மிக எளிமையாகத் தோற்றத்துடன் பழகுவதற்கு இனிமையானவர் எம் குருநாதர்.இன்னும் பல விடயங்களை அவர் தெரிவித்துக் கொண்டே இருக்கிறார் எமக்கும் , உங்களுக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம்.குருநாதர் சொல்வதைப்போல ஆயிரம் பாடல்களை படித்தால் தான்
நமக்கு தேவையான இரண்டு முக்கியமான பாடல்கள் தெரியும்.
அது தெரியாமல் சித்தர்கள் சொல்வது பொய் என்று புலம்புவார்கள்-
மிகவும் சரியாக கூறினார்.
வெண்சாரை கையில் பிடித்து உண்ணு என்பதன் விளக்கம் அருமை
சாதாரணமாக சித்தர் பாடலை படித்தால் புரியாது போல.
“குரு தொட்டு காட்டாத வித்தை,சுட்டு போட்டாலும் வராது ” என்பது தான் சரி.
சித்தர்கள் வழி ரசாயனத்தில் அய்யா,செய்யும் வித்தைகள்(விந்தைகள்)
கண்டபிறகு சித்தர்கள் மேல் மிகப்பெரிய பயமும் ,மரியாதையும்
வருகிறது.சாதாரணமாக PhD படித்த (ஏதோ கொஞ்சம் தெரிந்து வைத்துள்ள )
கல்லூரி பேராசிரியருக்கே அவ்வளவு பேரும் புகழும் இருக்கும் போது
நமது சித்தர்கள் மறைவாக இருந்து கொண்டு மறைகளை ஆராய்ந்து
வெற்றி கண்டிருக்கிறார்கள் எனில் நாமும் அவர்கள் அவதரித்த புண்ணிய
பூமியாம் தமிழகத்தில் பிறந்ததே பேரும் கொடுப்பினை என்று எனக்கு
எப்பொதும் தோன்றும்.
என்றும் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தர்கள் அடி போற்றி.
என்றும் அன்புடன் ஹரி, நற்பவி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இன்னும் அற்புதங்கள் அதிகம் உள்ளன. நவலோக பூபதி என்னும் அதி அற்புத மருந்து செய்முறை நமது மச்ச முனிவரின் சித்த ஞான சபைத் தளத்தில் வெளியிட இருக்கிறோம். பார்த்துப் பயன் பெறுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி.
///வாணுதற் கன்னியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி
பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற் கண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே///
/// கிளியே! கிளைஞர் மனதே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே! எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே ///
“பச்சைக்கிளியாளை” அகத்தில் கண்ட அபிராமி பட்டரின் பாடல் என்று நினைக்கிறன் (சரியா ?)
புறத்தில், அந்த பச்சைக்கிளியாளை பற்றிய விளக்கம் காட்டிய ஐயா அவர்களுக்கு நன்றி.
எளிதில் புரிபடாத,மறைத்து வைக்கப்பட்ட இந்த ரகசியங்கள் புரிந்தது போலவும்,
புரியாதது போலவும் உள்ளது.காலம் வரும் போது புரியும் போலும்,
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சித்தர் விடயங்களை தெரிந்து தெளிய மலை வாகடங்கள் , சித்தர்களின் பரிபாஷைத் திரட்டு , போகர் நிகண்டு , கோரக்கர் நிகண்டு , போன்ற நிகண்டுகளையும் , சித்தர்களின் குழூ உக் குறிகளையும் , தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து அறிந்தால் மட்டுமே செய்ய முடியும் .இல்லை என்றால் பாஷாணங்களையும் உலோகங்களையும் சரியாக நீற்றத் தெரியாமல் வைத்தியம் செய்ய முற்பட்டால் ,அந்த மருந்து விஷமாகிவிடும் . எனவே இதில் நல்ல ஞானம் மட்டுமே நம்மை வழி நடத்திச் செல்லும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி.
கருங்குறுவை அரிசியை சமைத்து சாப்பிடலாமா? எப்படி
செய்து சாப்பிடுவது?அதன் பலன் என்ன என்று தெரியபடுத்துங்கள்.
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சாதாரண கருங்குறுவை அரிசி மாவில் பல மருந்துகளைக் கொடுக்கலாம். கருங்குறுவை சமைத்துச் சாப்பிட்டால் உடல் நன்கு போஷிக்கப்பட்டு வலுவாகும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம்.தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
சூரியகாந்தி விதை சாப்பிடுவதன் மூலம் என்ன பயன் ஏற்படும்?
என்று தெரிவிக்கவும்.தவிர ஒரு இடத்தில் சிவப்பு நிறமாயும்
வேறொரு இடத்தில் வெள்ளை நிறத்திலும் பார்த்தேன்.எது
உண்மையான நிறம் என்றும் தெரிவிக்கவும்
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்களுக்கு எப்படி இப்படி கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது . இந்தக் கேள்வி தேவைதானா?? பயனுள்ளதா நமக்கு உபயோகம் ஆகுமா என்று முதலில் உங்களிடம் கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.பிறகு என்னிடம் கேள்வி கேளுங்கள் .அனாவசியமான கேள்விகளை தவிருங்கள்.அது என் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் வீணாக்கும். இல்லை உங்கள் கேள்விகளை நான் தவிர்க்க நேரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய குருநாதர் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா.கீழ் காணும் பாடல்வரிகள் 300 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து குமரிமண்ணில் ஜீவசமாதிகொண்ட ஓர் இசுலாமிய சூபிசித்தருடையது.இதுவரையிலும் இந்தவரிகளுக்கு என்னால் பொருள்காண இயலவில்லை.அவர் குறிப்பிடுவது,அய்யா அவர்கள் குறிப்பிட்ட “பச்சை நிறத்தாளையா?” அல்லது வேறுஏதாவது “யோகபரிபாசையா?”.தாங்கள் தான் என் ஐயம் தீர்க்கமுடியும்.
“உச்சிக்கு நேரேகிழக்கே நத்தமூருக்கு வெளியே
பச்சைப் புறாவந்து மேயும்
அதைப் பழகிப்பிடிக்கும் முறை பாங்காக………………
என்றும் அன்புடன்
மு.பைசல்கான் (ksa)
என்றும் தங்கள் மாணவனாய்
மு.பைசல் கான் (ksa)
அன்பு மிக்க பொறியாளர் திரு மு.பைசல் கான்(ksa) அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இது போன்ற கேள்விகளுக்கு எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு வந்து கேளுங்கள்.பொதுவில் கட்டுச் சோற்றை அவிழ்க்க முடியாது.தனியே வாருங்கள். தருகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நவலோக பூபதி போன்ற வற்றை மருந்தாக எடுப்பதால் மலட்டு தன்மை உண்டாகுமா.
அன்பு மிக்க திரு விஜித்தன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
உங்களது விசுவாசம் உங்களைக் காக்கும் . தகுதியில்லாத கேள்விகளை கேட்காதீர்கள் . எனினும் தங்களுக்கும் நமது வலை வாசக அன்பர்களுக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்