இரங்கும் மனமுடையவர்களின் பார்வைக்கு(கல்விக்கு ஒரு உதவி)பாகம் 3

எமது நண்பர் திரு ஜவஹர்லால் என்பவர் எம்முடன் பணி புரிந்து சென்ற மூன்று வருடங்களுக்கு முன்னால் இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருடைய அந்திம காலத்தில் அவருக்கு செய்த மருத்துவச் செலவுக் கடன்களை அடைக்கவே அவரது இறுதிப் பணிக்கொடையும் , தொழிலாளர் சேம நலநிதி சேமிப்பும்  உதவின.

அவருடைய புதல்வர்களில் இருவர் தற்போது பள்ளிப் படிப்பில் உள்ளார்கள் .தற்போது அந்தப் பையன்களின் படிப்புக்கு பணம் கட்ட முடியாத,  வழியில்லாத  நிலையில் உள்ளார்கள். ’’அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டலின் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது என்பது  முன்னோர் வாக்கு.’’  அதற்கிணங்க பண உதவி புரிய எண்ணும் தொண்டுள்ளம் கொண்டவர்கள் அவர்களுடைய வங்கிக் கணக்கு எண்ணுக்கு தங்களால் இயன்ற பணம் உதவி செய்யுமாறு  Aug 5, 2012 @ 17:55  அன்று வேண்டி கேட்டுக் கொண்டேன்.

1 )திரு பரமசிவம் , சிங்கப்பூர் அவர்கள் ரூபாய் 35,000மும்

2 )திரு முத்துக் குமரன் , சென்னை  அவர்கள் ரூபாய்20,000மும்

3 ) திரு சுரேஷ் , கும்ப கோணம் அவர்களும் ரூபாய் 10,000 மும்

4 ) திரு மாரிச் செல்வம் , பெங்களூர் அவர்களும் ரூபாய்2,000மும்

அனுப்பி இருந்தார்கள்.மொத்தம் 67,000 அனுப்பி இருந்தார்கள்.

மேற்கண்ட சிறுவர்களின் படிப்புச் செலவுக்கு நிதியுதவி செய்துள்ளார்கள். இப்படி அவர்களால் இயன்ற அளவு உதவி செய்த அன்புள்ளங்களுக்கு என் அன்பார்ந்த , நெஞ்சார்ந்த நன்றிகள் பல  . இவர்களுக்கு என்னால் எப்போதெல்லாம் , ஏதாவது  மருத்துவ ரீதியிலான உதவிகளோ அல்லது ஞான ரீதியிலான உதவிகளோ ,வேறு எந்த மாதிரியிலான உதவிகள் என்னால்  ஆக வேண்டுமோ ,அப்போதெல்லாம் தடையில்லாமல் செய்யத் தயாராக உள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இதில் திரு பரமசிவம் அவர்களையும் , மாரிச் செல்வம் அவர்களையும் நேரில் பார்த்ததே இல்லை.திரு பரமசிவம் அவர்கள்  உதவி செய்த தொகை அந்த நோக்கத்திற்குப் பயன் பட வேண்டும் என கூறியிருந்தார்.அதற்கிணங்க அவர்கள் உதவிய தொகை கல்விப் பயன்பாட்டிற்கே பயன்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டியது .எம் கடமை. எனவே அவர்கள் கல்விக் கட்டண ரசீதுகளின் ஒளி நகல்களை இங்கே இணைத்துள்ளேன்.

 

மேற்படி கூட்டுத் தொகை 38,880 + 7330 +1450 =47,660 நாற்பத்து ஏழாயிரத்து அறுநூற்று அறுபது மட்டும் . போக மீதி 19,340 உள்ளது .அதில் ஜெகத் ராஜ் இரண்டு பகுதிக் கட்டணங்கள் ரூபாய் 2900 மும், பரத்ராஜ் ற்கு  இன்னும் அடுத்த பகுதிக் காலக் கட்டணம் வேண்டிய பாக்கிக் கட்டணம்  இன்னும் உள்ளது . அதற்கு திரு ஸ்ரீதரன் ,சென்னை அவர்கள் நிதியுதவி செய்வதாக சொல்லியுள்ளார்.

இத்துடன் குருநாதர்  பையன் குன்னூரில் சித்த ஆயுர்வேத படிப்புப் படித்துக் கொண்டிருக்கிறார்.அதற்கு இரண்டாவது  பகுதிக் காலக் கட்டணச் செலவிற்கு கோவை திரு மணிகண்டன் அவர்கள் குழுவினர் ரூபாய் 11,000 மும் , திருப்பூர் திரு சுப்பிரமணியம் அவர்கள் ரூபாய் 4,000 மும் கொடுத்துள்ளார்கள்.அதை 21 -09-2012 அன்று குருநாதர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது .

தை மலையில் குருநாதர் குடும்பப் படங்களும் நமது     வலைத்தள நண்பர்களும் இதோ கீழே , 

திருப்பூர் சுப்பிரமணியமும் அவர் தம்பியும் குருநாதர் உடன்

திரு கஜேந்திர ராஜ்  அவர்கள் மனைவியுடன் குருநாதரின் பிள்ளைகள்

குருநாதர் தம் மனைவி மற்றும் குழந்தைகளுடன்

நாமும் நமது நண்பர் குழாமும் குருநாதர் குடும்பத்துடன்

தை மலை இயற்கைக் காட்சிகள்