கை பிடி விளையாட்டு ( வர்மத்தின் உட்பிரிவு )
எச்சரிக்கை :-இதில் உள்ள விடயங்கள் எல்லாம் மிகத் தரம் வாய்ந்த வர்ம மருத்துவரால் மட்டுமே செய்யப்பட வேண்டும். மாறாக விளையாட்டுக்கோ, செய்து பார்ப்போம் என்ற வீண் செயலிலோ ஈடுபட்டால் விளையும் விளையும் உயிர்ச் சேதத்துக்கோ உடல் சேதத்துக்கோ நாம் பொறுப்பேற்க முடியாது என்று எச்சரிக்கிறோம்.
கைபிடி விளையாட்டு என்றால் கையை பிடித்து விளையாடும் விளையாட்டல்ல. இது கையை ஒடிப்பது காலை ஒடிப்பது போன்ற விடயங்களைக் கற்றுக் கொடுக்கும் வர்மத்தின் உட்பிரிவு இது . நாமோ வைத்தியர் நமக்கெதற்கு இந்த ஒடிப்பதும் உயிர்களை துன்பப் படுத்துவதும் ??? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
கைபிடி விளையாட்டு மூட்டுக்களை கழற்றும் விதத்தைப் போதிப்பது .இந்த விதத்தில் முறுக்கேற்றி மூட்டைக் கழற்றினால் மீண்டும் அதற்கு எதிர் திசையில் மூட்டை தளர்வாக கொண்டு சென்று சேர்த்தால் சேர்ந்துவிடும்.அவ்வளவுதான். மூட்டுக்கள் எப்படி சேர்த்து ஆக்கப்பட்டிருக்கின்றன என்பன போன்ற விடயங்களையும் ,அவற்றில் நரம்புகள் எப்படி வேலை செய்கின்றன என்பதையும் போதிப்பதே இந்த கைபிடி விளையாட்டு.
இது தெரியாததால்தான் சிலர் மூட்டுக்களை வகையாக சரி செய்யத் தெரியாமல் அப்படியே வெறும் கட்டுக்களை மட்டும் போட்டு அனுப்பிவிடுவார்கள் .ஆனால் மூட்டுக்கள் மடக்க நீட்ட முடியாமல் வாழ்நாள் பூராவும் அவதிப்படுவார்கள் .
இது சித்தர்களின் கலை .இதைத்தான் வெளிநாட்டார்கள் நம்மிடம் இருந்து கற்றுக் கொண்டு மீண்டும் நமக்கே கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் கராத்தே , குங் பூ போன்றவற்றிற்கெல்லாம் தாத்தா இது தான்.
கீழே உள்ள காணொளிக் காட்சியில் கையில் ஒரு முறுக்கை ஏற்றும் விதமும் , அதில் எதிராளி பிடிபடும் விதமும் அதில் இருந்து விடுபடும் விதமும் விளக்கியுள்ளேன் .தயவு செய்து சரியான ஆசான் இல்லாமல் யாரிடமும் பரீட்சை செய்து பார்த்துவிடாதீர்கள் .
அதற்காகத்தான் முதலிலேயே எச்சரிக்கை செய்து இருக்கிறேன். பிடியில் இருந்து விடுபடும் போது பிடியில் இருக்கும் நபர் சுற்றலை மாற்றி சுற்றினால் அவரது கை ஒடிந்துவிடும் .எனவே கவனம் தேவை.
[tube]http://www.youtube.com/watch?v=o_O47p1loTQ[/tube]
[tube]http://www.youtube.com/watch?v=HGAoX2HJaXA[/tube]
வேறொரு முக்கிய சித்தர்கள் விடயத்துடன் அடுத்த பதிவில் சந்திக்கிறோம்.
Dear Saamiji
Very impressive details.Thanks a lot
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய குருசித்தர் ஐயா,
வணக்கம்.பூட்டும் பிரிவும் மிக அருமையான பதிவு.தாங்கள் கேட்டிருந்த தகவல்கள் விரைவில் அனுப்பிதருகிறேன்,ஐயா.மூலிகைகள் பற்றிய பதிவுகளை தங்களிடமிருந்து மேலும் பார்க்கிறோம்.நன்றி,
அன்புடன்
மு.பைசல்கான் (ksa)
அன்பு மிக்க பொறியாளர் திரு ஃபிஷல் கான் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மூலிகைகள் பற்றி எழுத என்னும் எத்தனையோ இருக்கிறது .இன்னும் வரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு
உங்கள் பதிவுகளை கடந்த வாரம் முதலாக படிக்கும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது,, ஒவ்வொரு பதிவும் மக்களுக்கு பயனுள்ளதாத உள்ளது. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.
ஆகாச கருடன் வேர் திரு.கண்ணன் அவர்களிடம் ஆர்டர் செய்துள்ளேன், அத்துடன் கூடவே சங்கம் வேரும் அனுப்புவதாக கண்ணன் அவர்கள் கூறி உள்ளார், சங்கம் வேர் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அன்பு மிக்க திரு செந்தில் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நற் சங்கன் , முட்சங்கன் , பீநாறிச் சங்கன் என மூவகை பற்றியும் பற்றி ஒரு பதிவு எழுதுகிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Anna
Where can i get Judge V. Balaramaiah and Karunagakara swamigal books about siddha
Thank you
அன்பு மிக்க திரு கலா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சென்னையில் மூர் மார்க்கெட்டில் அருள்நிதி நூலகம் என்று ஒன்று உள்ளது .அதில் உள்ள அருள்நிதியை அணுகினால் பலராமையா நூல்களும் , கருணாகர சுவாமிகள் நூல்களும் கிடைக்கும். அவரது அலைபேசி எண் +919380871581.இவரை பிடிப்பது கடினம் .கிடைத்தால் உங்கள் அதிர்ஷ்டம் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,
நான் வர்மம் முறையாக கற்றுக்கொள்ள விரும்புகிறேன், ஏற்கனவே நான் அடிப்படை சிலம்பம் மற்றும் குங்பு சில வருடமும் சிறு வயதில் கற்றுள்ளேன், ஆனால் நமது கலையான வர்மம் கற்றுக்கொள்ள பல வருடங்களால் முயற்சி செய்து வருகிறேன், எனது ஊர் ஈரோடு,அருகில் முறையாக கற்றுக்கொடுக்க குரு யாரும் இல்லை, எனது விருப்பம் முறையாக வர்மம் கற்று இந்த அரிய கலையை அழிந்து விடாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவேண்டும் என்று அவா,,தாங்கள் தான் இதற்கு வழி காட்ட வேண்டும்.
அன்பு மிக்க திரு செந்தில் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு வாருங்கள் . எமது மின்னஞ்சல் முகவரிகள் machamuni.com@gmail.com , sralaghappan007@gmail.com , sameealagappan@gmail.com , இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Anbulla saamiji
vanakkam,mei theendaa varmam matrum athan muraikal patri thagavalkal tharumaaru
thaalmayudan ketu kolkiren.
Nandri