நாதநீர் தயாரித்தல்

நாதநீரை எம் குருநாதர் திரு வெங்கடாசலம் ஐயா அவர்கள் தயாரித்துக் கொடுத்தலையும் ,கந்த சஷ்டி கவசத்தையும் கூறி அதன் விளக்கத்தையும் . அதை நாங்கள் சாப்பிடுவதையும் காணொளிக்காட்சியாக கீழே கொடுத்துள்ளேன்.கண்டு இன்புறுங்கள்.

சுத்த கந்தகத்தையும் , சுத்த நாதத்தையும் கண்டு தெளியுங்கள்.அக்கரை மீனைப் பிடித்து , சர்க்கரையாக வடித்து  சொக்கநாதரைத் துதித்து ,நக்கவே முடிந்ததடா முப்பு .வெளிநாட்டு மேதைகள் இதையே நமது சமுத்திரத்தில் எலும்பில்லாத இரண்டு மீன்கள் உள்ளன  என்று குறிப்பிடுகின்றனர்.

ஆத்தாளை அங்கமெல்லாம் பூத்தாளை , மாதுளம் பூ நிறத்தாளை கண்டு தெளிவு பெறுங்கள்.செங்கண் மால் என்று சொல்வதும் இதையே .பொற்கடுக்காய் வன்னி நிறம் என்பதுவும் இந்தச் செந்நிறத்தைக் குறிக்கவே!!!கருமை , செம்மை , வெண்மையைக் கடந்து நின்ற காரணம் என்று சிவவாக்கியர் சொல்வதும் இதுவே .இதுவே ஏசுவின் இரத்தம் என்றழைக்கப்படும் புனித நீர் .

அண்ட வித்தை வெகு சுழுவு , இதன் கரும்பூப் பொருள் கொல்லி மலை , சேலம் கஞ்ச மலை  மற்றும் சுண்ணாம்புப் படிவங்கள் உள்ள பாறை இடுக்குகளிலும் கிடைக்கும்.

இந்த கருப்பு நிறப் பொருளை பேய்க் கரும்பு என்று பட்டினத்தார் கூறியிருக்கிறார். ஊசிக் காந்தம்  ( இதன் வடிவத்தை வைத்து ) என்று கூறுவர்.

உடலை வறுத்து  அமுரியில் கலந்து நாத நீரை வடிக்கும் காட்சி இதோ .

[tube]http://www.youtube.com/watch?v=0xS9hs1fVQA[/tube]

[tube]http://www.youtube.com/watch?v=NrjbWJUasic[/tube]

பரலோக ராஜ்ஜியம் சமீபித்துவிட்டதைக் கூறி இத்தப் பதிவை நிறைவு செய்கிறோம்.

இந்த காணொளிக்காட்சிகளுக்கு அதிக விளக்கங்கள் தேவையில்லை என்பதால் அதிக விளக்கங்கள் கொடுக்கவில்லை.அடுத்து வரும் பதிவுகளில் பல விளக்கங்களுடன் சந்திக்கிறேன்.