சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)5
நான் திருச்சியில் மலைக்கோட்டை அருகே தெப்பக்குளம் பக்கத்தில் நடந்து கொண்டு இருந்தபோது எனது நண்பர் ஒருவர் திடீரென்று இந்தக் கடையில்
ஞானப் புத்தகங்கள் கிடைக்கும் என்றார்.
அந்தக் கடையோ வெளிநாட்டுப் பொருள்கள் விற்கும் கடை போல் இருந்தது.இங்கேயா புத்தகங்கள் கிடைக்கும் என்றேன்.பிறகு அந்தக் கடையில் (நம்பிக்கையில்லாமல்தான்) புத்தகங்கள் கிடைக்குமா என்று கேட்டேன்.
அந்தப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தால் அத்தனையும் ஞானப் புத்தகங்கள்.
அதை எனக்குக் கொடுத்தவர் நல்ல தம்பி என்பவர்.தற்போது அதில் சில புத்தகங்களே உள்ளன.அந்தப் புத்தகங்களை எழுதியவர் வீர உலக நாதன் என்ற
மஹா ஞானி(மேலே உள்ள படத்தில் இருப்பவர்).மிக அரிய ஞான விஷயங்களை சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தி இருந்தார்.அந்த புத்தகங்களை படித்துவிட்டு தருகிறேன் என்று வாங்கிய நண்பர்கள் திருப்பித் தரவேயில்லை.
அவரை எனது வாழ்நாளில் சந்திக்க இயலாமல் போனது எனது துரதிருஷ்டமே.
அவரது புத்தகங்களை மீண்டும் பார்த்துப் படிக்க இயலுமா என்பது தெரியவில்லை.எனெனில் நமது ஆன்ம நிலை உயர,உயர படித்த அதே விஷயங்களை மீண்டும் படிக்கும்போது ,அவ்வப்போதுள்ள ஆன்ம நிலைகளுக்குத் தகுந்தவாறு வேறு வகையாக பொருள் விளங்குகிறது.
இதில் வேறொரு விஷயமும் குறிப்பிட விரும்புகிறேன்.இந்த மஹா ஞானி வீர உலக நாதன் அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.அவரது மனைவி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலத்தில் இந்தப் புத்தகங்களை விற்று வரும் பணத்தில் தனது வாழ்நாளை ஓட்டி வந்தார். திருவண்ணாமலையில் இருந்து
வந்திருப்பதாகக் கூறிய ஒருவர் அவரது புத்தகங்களை மூட்டையாக கட்டி எடுத்துக் கொண்டு அதற்கான பதிப்புரிமையையும் எழுதி வாங்கிக் கொண்டு
போனவர் போனவர்தான். திருமதி கோமதி உலகநாதன் தனது கடைசிக் காலம்
வரை அந்த நபர் அதற்கான பணம் கொண்டு வருவார் எனக் காத்திருந்து மரணத்தைத் தழுவினார்.
‘இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களுக்கா ஞானம் கிட்டும்’
இயற்கையில் பஞ்ச பூதங்களான நிலம், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் (பிருதிவி,அப்பு,தேயு,வாயு, ஆகாயம்) எப்படி அமைந்துள்ளனவோ அதற்கு நேர் தலைகீழாக நம் உடலில் அமைந்துள்ளன.
இயற்கையில் ஆகாயம் பெரிய அளவில் இந்த உலகம் மற்ற கோள்கள், எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு பெரிய அளவில் உள்ளது. அதற்கடுத்ததாக காற்றும்,அதற்கடுத்ததாக நெருப்பும், அதற்கடுத்ததாக நீரும்,
அதற்கடுத்ததாக மண்ணும் உள்ளன.
ஆனால் உடலில் பெரிய அளவில் நீர் அதிகம், அதற்கடுத்ததாக மண்ணும்,அதற்கடுத்ததாக நெருப்பும், அதற்கடுத்ததாக காற்றும், அதற்கடுத்ததாக ஆகாயமும் உள்ளன.
இயற்கையில் உள்ளது போல்,நமது உடலில் உள்ள பஞ்ச பூதங்களை அளவீடுகளை ஆக்க முடியுமானால் நமதுடலும் இயற்கையைப் போல் அழிவில்லாமல் அழியாமல் இருக்கும்.
அதாவது நமது வழக்குச் சொல்லில் ‘அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல் பண்ண வேண்டும் ‘என்பார்கள். உயிர் உடலைவிட்டு பிரியும்போது ஆகாயம் உயிருடனே ஓடிப்போகும்,துருத்தியில் வாசித்து (ஊதிக்) கொண்டிருக்கும் மூச்சுக்காற்றானது அதன் பின்னோடிப் போகும்,அதன்பின் காற்றுள்ள வரையிருந்த நெருப்பு அணைந்து போகும்.மண்ணும், நீரும் மட்டும் பிணமாகக் கிடக்கும்.அஞ்சுக்கு ரெண்டு பழுதில்லாமல்தான் இயற்கையிலேயே இருக்கிறது.பழுதுள்ளவை மூன்றும் ஒடிவிடுவதால் மண்ணும் நீரும் பிணம் என்னும் பேர் பெற்றுக் கிடக்கின்றன்.
( எனவேதான் உடலை திருப்பூந்துருத்தி என்பார்கள்,திருவையாறு அருகே இந்தப் பெயருள்ள ஒரு திருத்தலம் உள்ளது .அங்கே ஒரு ஞானியின் ஜீவ சமாதி உள்ளது.அவர்தான்.பாடகர் உயர்திரு ஜேசுதாஸ் அவர்களுக்கு அருள் புரிந்தவர்.இவரது கிருஷ்ண தரங்கினி பாடல்களை ஞானியின் ஜீவ சமாதியில் பாடிய பின்னரே அவரது புகழ் உலகளாவிப் பரந்தது என்று அவரது ஜீவ சமாதியைப் பராமரிப்பவர்கள் கூறினார்கள்).
மேற்குறிப்பிடப்பட்டுள்ள கருத்தமைந்த பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
‘நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
‘யுலவை யிரண்டொன்று விண்.(அவ்வைக்‘குறள் 5)
‘முன்னிக் கொருமகன் மூர்த்திக்கிருவர்
‘வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்‘கன்னிக்கு பிள்ளைகள் ஐவர்மு னாளில்லை‘கன்னியை கன்னியே காதலித்தாரே(திருமந்திரம்2152)
‘பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
‘ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்(திருக்குறள் 6)
‘ஓதலும் வேண்டாம் உயிர்குயி ருள்ளாற்
‘காதலும் வேண்டாமெய்க் காயமிடங்கண்டாற் சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினால்‘போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே(திருமந்திரம் 1633)
‘மண்ணகத் தான்ஒக்கும் வானகத்தான் ஒக்கும்
‘விண்ணகத் தான்ஒக்கும் வேதகத்தான் ஒக்கும்
‘பண்ணகத்(து) இன்னிசை பாடலுற்றானுக்கே‘கண்ணகத்தே நின்று காதலித்தேனே‘(திருமந்திரம்31)
இது பற்றிய மற்றைய ஞான ரகசியங்களை
வரும் மடல்களில் காண்போம்
Dear Sir,
It is disheartening reading the sction of Shri Veera Ulaganathan
What are the topics written by Shri Veera Ulaganathan and are those books available for xerox. Kindly mail me at holistic_learning@rocketmail.com
Thanking You
S. Ananthakrishnan
அய்யா ஸ்ரீ வீர உலகநாதன் அவர்களின் புத்தகங்கள் இப்பொழுது கிடைகின்றனவா. அவை எங்கு கிடைகின்றன. தயவு செய்து அதை பற்றிய குறிப்புகளோ இல்லை விலாசமோ இருந்தால் கொடுக்கவும்
அன்புள்ள திரு எஸ். ஆனந்த கிருஷ்ணன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இப்போது அந்தப் புத்தகங்கள் கிடைக்கவில்லை.கிடைப்பதற்கான வழி வகைகளும் அடைபட்டுவிட்டன.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
திருச்சிஇல் எந்த கடை என்று சொல்ல முடியுமா? நான் முயன்று பார்கிறேன். புத்தக தலைப்பை கூறுங்கள் தேடி பார்கிறேன்
ராமநாதன்