சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)6
வெளியிட மறுத்து பல மணி நேரம் செலவிட்டு எழுதிய கட்டுரைகளை அப்படியே விழுங்கிவிட்டு SIGN OUT ஆகி வெளியே வந்துவிட்டது.இந்த அனுபவம் சற்றே விசித்திரமாகவே இருந்தது.ஆனால் சட்டைமுனி செய்த விஷயங்களைப் பார்த்த போது இது அவர் தடுத்ததாகவே எண்ணுகிறேன்.
ஒரு முறை சித்தர்கள் திருக்கூட்டம் சதுர கிரி மலையில் நடக்கும்போது; மகா சித்தரான காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 3,00,000 பாடல்களில் எழுதி ,அந்த ஞான நூலை தான் இயற்றி கொண்டு வந்ததாக அரங்கேற்றினார்.
அப்போது அங்கிருந்த சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்தால் அதைப் படித்தவர்கள் அனைவரும் ஞானியாகிவிட்டால் உலக விருத்தி (காமம் அற்றுப் போய் அனைவரும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டால்) இல்லாமல் சித்தர்கள் அனைவரும், பராசக்தியின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்; என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.
தன்உழைப்பு வீணானாலும் மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 1,00,000 பாடல்களில் எழுதி ,அந்த ஞான நூலை சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்
அரங்கேற்றினார்.
மீண்டும் சித்தர் சட்டைமுனி அதைப் படித்துப் பார்த்துவிட்டு ஞானத்தை இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருந்ததால் அனைவரும் ஞானியாகிவிடுவார்கள், என்று கூறி கிழித்துப் போட்டுவிட்டார்.
உலக மக்கள் ஞானம் அடைய செய்ய வேண்டும் என்பதற்காக, தான் செய்த உழைப்பு வீணானாலும், மீண்டும் காக புசுண்ட மஹரிஷி ஞான விளக்கங்களை பட்டவர்த்தனமாக 10,000 பாடல்களில் எழுதி ,அந்த ஞான நூலை சதுர கிரி மலையில் சித்தர்கள் திருக்கூட்டம் நடக்கும்போது;மீண்டும்
புண்ணியப் பணி மேலோங்கட்டும். சித்தர்களின் ஆசி இவர்களுக்கு உண்டாகட்டும்.
எங்கே என்று கேட்டார். அப்போது அங்கிருந்த சித்தர்கள் எல்லாம் பல ஊழி முடிவும்,பல பிரளயங்களையும் கண்டவர் மகரிஷி காகபுஜண்டரே! அவருக்கே
இது பற்றித் தெரியும், என்று கூறினர்.
காக புஜண்ட மகரிஷியும் தான் ஊழி முடிவில் கண்ட காட்சியை இந்த காக புசுண்டர் பெருநூல் காவியத்தில் விவரித்துள்ளார்.(காக புசுண்டர் பெருநூல் காவியம் பாடல் 923)(காக புசுண்டர் ஞானம் 80 ல் பாடல்கள் 40-42)
கூறுகின்றே னென்மகனே வாசி நாதா
குணமான வீச்சுரனார் சபையிற் கூடித்
தேறுகின்ற பிரளயமாம் காலந் தன்னிற்
சீவசெந்து சித்தருடன் முனிவர் தாமும்
வீருடனே எங்கேதான் இருப்பா ரென்று
விமலருந்தான் விஷ்ணுவயும் விவரங் கேட்கக்
கார்மேக மேனியனங் கவரை நோக்கிக்
கண்டு மிகப் பணிந்து மினிக் கருது வானே.
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-40)
கருதுவான் ஆலிலைமேற் றுயில்வேன் யானுங்
கனமான சீவசெந்தும் அனந்த சித்தர்
உறுதியா யென்ற னுடைக் கமலந் தன்னில்
ஒடுங்குவா ராதரித்து மிகவே நிற்பேன்
வருதியாய்ப் புசுண்டருந்தான் வருவா ரென்று
வலவனுடன் மாலானும் உரைக்கும் போது
சுருதியாய் எனை அழைத்தே சிவன்றான் கேட்கச்
சூத்திரமாய் நல்வசனம் மொழிந்தேன் பாரே.
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-41)
பாரென்று சிவனுடைய முகத்தைப் பார்த்துப்
பல்லாயிரங் கோடியண்ட வுயிர்க ளெல்லாஞ்
சீரென்ற சித்தருடன் முனிவர் தாமுந்
திருமாலும் ஆலிலைமேற் றுயிலும் போது
கூரென்ற வுந்தியிடக் கமலந் தன்னிற்
கூடியே அடைந்திருப்பர் குணம தாக
வீரென்ற ஐவரையும் தாண்டி யப்பால்
வெகு சுருக்காய் வீதி வழி வந்தேன் பாரு
(காக புசுண்டர் ஞானம் 80 ல்-42)
இது பற்றிய மற்றைய ஞான ரகசியங்களை வரும் மடல்களில் சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு7ல்)காண்போம்
மக்கள் ஞானம் பெற கூடாது என்று சித்தர்கள் மகான்கள் நினைப்பார்களா? அப்படி நினைத்து இருந்தால் நமக்கு ஞான பொக்கிசங்கள் கிடைத்து இருக்குமா?
ஆன்ம தேடல் உள்ளவர்களுக்கு போய் சேர வேண்டும் என்றும் மனிதன் சிந்திக்க வேண்டும் என்பதற்காக சித்தர்கள் பரிபாசைகளில் எழுதி வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறன்.
நாம் அனைவரும் அவர்கள் பெற்ற ஞானத்தை அடைய வேண்டும் எண்று தானே பெரியவர்கள் (ஞானிகள்) நினைப்பார்கள்.
அனைவரும் ஞானியானால் உலக இயக்கம் எவ்வாறு நடைபெறுவது?
அவையேதானே யாகி இருவினையிற் போக்கு வரவு புரிய சிவஞான சூத்திரம்
அனைவரும் ஞானியானால் இல்லற வாசியேது உலக இயக்கம் ஏது.இல்லற வாசிகளால்தான் உலக இயக்கம் நடைபெறுகிறது.எனவே ஞானத்தை மறைவாக வைத்தால்தான் ஞானம் (ஞானிகளும்தான் )என்பது குறைவாக இருக்கும் என்பதால் இவ்வாறு வைத்துள்ளார்கள்.எப்படி அவையும் தானாகி போக்குவரவு புரிய இறைவன் விரும்புகிறானோ அங்கேதான் படைப்பு துவங்குகிறது.படைப்பு இல்லையேல் உலக இயக்கம் இல்லை.சக்திதான் உலக இயக்கத்திற்கு காரணமான மஹாமாயா.அனைவரும் ஞானியானால்,உலக இயக்கம் தடைப்படும்,அப்படி உலக இயக்கம் தடைப்பட்டால்,மஹாமாயாவின் கோபம் சித்தர்கள் மேல் வரக் கூடாது என்பதற்காகவே,அவர்கள் ஞான நூல்களை மறைத்து வைத்தும்,(தங்களுக்குள் வாதாடியும்)கிழித்து போட்டும்,மறைபொருளாக பாடியும், உள்ளார்கள்.எல்லோரும் அரசனானால் வேலை யார் செய்வது?ஞானிகளுக்கு ஆதாரம் இல்லற வாசிகளே!!!!!இல்லறவாசிகள் ஞானிகளை போஷிப்பது கடமை!!!!!ஞானிகள் இல்லற வாசிகளைக் காப்பது கடமை!!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்