சித்தர்களின் சாகாக்கலை(மரணமில்லாப் பெருவாழ்வு)7

பேசா மந்திரம் பற்றி இங்கு காண்போம்.

அகத்தியர் தமது அடுக்கு நிலைப் போதத்தில் இவ்வாறு கூறுகிறார்.

சொல் பிறந்த விடமெங்கே ,முப்பாழ் எங்கே

சொல் பிறக்குமிடம் இந்த மறைமுகமான இடம்.இந்த இடத்தில் பேச்சு நடந்து கொண்டே இருக்கிறது.’இந்தப் பேச்சு நடப்பதையே ‘ ‘பேச்சுப் பேச்சென்னும் பெரும்பூனை வந்தக்கால் கீச்சுக் கீச்சென்னும் கிளி’.உயிர் இருப்பதின் அடையாளமான இந்த இடத்தில் பேச்சு நடந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது, யமன் என்ற பெரும்பூனை உயிரை எடுக்க வரும் போது இந்த இடம் பேசாமல் இருக்கும் என்பதையே கூறுகிறார்கள்.

“பேச்சற்ற இன்பத்துப் பேரானந்தத் திலே





மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்





காச்சற்ற சோதி கடன் மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.’

-திருமந்திரப் பாடல் எண்: 1579.
பேச்சற்ற இன்பம் அதுவே மவுனம்.அதன் இன்பமான முடிவு சமாதி,சிவானுபத்தில் சாலோகம் ,சாமீபம்,சாயுச்சியம் என மூன்றாக கூறுவார்கள்.சாலோகம் என்பது இப்போது நாம் செத்துக் கொண்டிருக்கும் லோகமே.சாமீபம் என்பது சிவனுக்கு சமீபமாக(பக்கத்தில்) செல்வது.சாயுச்சியம் என்பது இறையனுபவத்தின் உச்சியேயாகும்.
அந்த சாயுச்சியம் என்பது சிவமாகவே ஆகிறதாகும்.அந்நிலை அடைந்தால் (மாள்வித்து) செத்தாரைப் பொலாவோம்.செத்தாரைப் போலத்திரி என்று சித்தர் பாடல்களில் குறிப்பிடும் அந்த நிலைஅடைந்தால் செத்தாருக்கு இருப்பதைப் போல் சிந்தனையற்று, நம்மில் உள்ள ஓரிடம் மாறும்.
அதற்கு காச்சற்ற சோதியான ரவி,மதி ,சுடர் முச்சுடர் கைக்கொண்டு வாய்த்த புகழ் மாள தாள் என்ற (சாகாக்கால்)காலைத் தந்து மன்னும் ( பூமியில் நிலைபெற வைக்கும்) 


‘பார்வதி என்றொரு சீமாட்டி அதில் பாதியைத் தின்றதுண்டு

இன்னும் பாதி இருக்குது பறையா நீ போய்ப்பார் என்றுத்தாரம் தாரும் தாரும்’
என்று நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளில் கூறுகிறார்.

பறையன் என்பவர் சொல்லுபவர்(விண்டவர்,பறைதல் என்றால் சொல்லுதல்).பார்ப்பான் என்பவர் பார்ப்பவர்(கண்டவர்;பார்ப்பான் என்றால் பார்ப்பவர் ).கண்டவர் விண்டிலர்.பார்ப்பவர் சொல்ல மாட்டார். சொல்பவர் பார்க்க மாட்டார்

‘பிறந்த இடம் நோக்குதே பேதை மட நெஞ்சம்
கரந்த இடம் நாடுதே கண்’

இந்தப் பாடல் மேலோட்டமாகப் பார்த்தால், நாம் பிறந்து வந்த இடமாகிய
யோனித்துவாரத்தின் மூலம் கிடைக்கும் சிற்றின்பத்தை நோக்குதே மட நெஞ்சம்,பால் கரக்கும் இடமான முலைகளை நோக்குது கண் என்ற பொருள்படும்.
 ஆனால் உண்மைப் பொருள் ,மூச்சுப் பிறக்கின்ற இடத்தை நோக்குகிறது மனம்.மனமே கரந்து (மறைந்து) மறைந்திருக்கும் இடம் இதுதான்.மனம் என்பது
எண்ணங்களின் தொகுப்பே . மூச்சு உள்வாங்கும் போதோ அல்லது வெளியே விடும்போதோதான் மனம் புலன்களின் வழியே வெளியே பாய்கிறது.
  
இஸ்லாம் கூறுகிறது ,இறைவன் நம்மிடம் கலீமா வாகவே இருக்கிறான்.பேசா மந்திரத்தை ‘இஸ்முல் அஹிலம்‘ என்பார்கள்.இதை ஒருவர் கீழ்க்கண்டவாறு தவறாக விளக்கம் அளிக்கிறார்,மனம் ஒத்து மந்திரத்தை வாய் திறவாது மனதிற்குள் இடைவிடாது ஜபித்துக் கொண்டே இருப்பது என்கிறார்.

மனதின் திறமே மந்திரம் .’மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் ,மனமது செம்மையானால்வாசியை உயர்த்த வேண்டாம்.’ என்று சிவவாக்கியர் கூறுகிறார்.இதனால் மனத்தில் நினைப்பது என்ற செயல் நடக்க ஆரம்பிக்கும் போதே மூச்சு விரயம் ஆரம்பித்துவிடும் . பிறகு எங்கே மனம் ஒருமைப்படுவது.தியானம் கைகூடுவது.

அசைத்துக் கொண்டே இருப்பது அசபை.அசையாமல் இருப்பது அஜபா.
இதையே விநாயகர் அகவலில்
‘குண்டலியதனிற் கூடிய அசபை , விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி’

குண்டு போன்ற ஒரு இடம்.அதுவே மூலாதாரம் .அதில் மூண்டெழு கனலாகிய ‘சி’காரம் இருக்கிறது . அதில் அசபை கூடி நிற்கிறது.அது பேசினால் அது அசபை ,அது பேசாமல் இருந்தால் அது அசபா.அதை ‘சாகாக்காலால்’ எழுப்ப வேண்டும்.அமுத நிலை மதியாகிய நிலவோடு எப்படி தொடர்பு பெற்று இருக்கிறது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த அமிர்த நிலை பற்றி யாழ் இணையம் பண்டுவமும் (அறுவை மருத்துவமும்) காலமும் என்ற தலைப்பில் நன்கு விவரிக்கிறது.அதற்கான லிங்க் இதோ
http://www.yarl.com/forum3/index.php?showtopic=62448

இந்த அமிர்த நிலைஆண்களுக்கு பவுர்ணமியில் தலையில் இலங்கும்.பெண்களுக்கு அமிர்த நிலை அமாவாசையன்று தலையில் வரும்போது உயிரும் அங்கே இலங்கும்.இந்த அமிர்த நிலை இப்படி  ஆண்களுக்கும், பெண்களுக்கும் எதிர் எதிராக இயங்குவதால்தான் ஆணுக்கும் ,பெண்ணுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டு காமம் உண்டாகிறது.

நெடுநாள் உடல் நலக் குறைவினால் அவதியுறும் ஆண், இந்த அமிர்த நிலை ஆண்களுக்கு பவுர்ணமியில் தலைக்கு வருவதால்  ஆண்களுக்கு பவுர்ணமியில் மரணம் நேரும் என்றும், நெடுநாள் உடல் நலக் குறைவினால் அவதியுறும் பெண், இந்த அமிர்த நிலை அமாவாசையன்று பெண்களுக்கு தலைக்கு வருவதால் பெண்களுக்கு அமாவாசையில்  மரணம் நேரும் என்றும், கூறுகிறார்கள்.