முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 2
இந்த முப்புகுருவைப் பற்றி பெரும் ஞானிகள் கண்டு பிடித்து தாங்கள் அனுபவித்து விட்டு பின் அதை பரி பாஷைகளால் மறைத்தனர் .ஏனென்றால் இது தகுதியில்லாத நபர்களிடம் கிடைத்தால் அவர்கள் இந்த உலகத்தையே ஆட்டி வைத்துவிடும் வல்லமை அளிக்கக் கூடியது . மெய்யன்பர்கள் இதை அனுபவித்து எல்லா உயிர்களுக்கும் நல்லது செய்யவே இதை இறைவன் படைத்துள்ளான் .இதைப் பற்றி தெரியாத பலர் முப்பு எந்தக் கடையில் கிடைக்கும் என்று கேள்விகள் அனுப்பும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை .
எனக்குத் தெரிந்து சித்ரா பௌர்ணமியன்று பல்லாயிரம் பேர்களாவது முப்பு எடுக்கிறேன் பேர்வழி என்று அருப்புக் கோட்டை அருகிலுள்ள கோவானூர் என்ற இடத்தில் உள்ள குண்டு மேனியம்மன் சன்னதியையைச் சுற்றி தோண்டி தோண்டி குழிகளாக்கிவிட்டார்கள்.அதில் பூநீர் எடுக்கும் விதத்தை விஸ்தாரமாக வேறு சொல்வார்கள்.
இதில் காய்ச்சினால் உப்பெல்லாம் போச்சப்பா ,காய்ச்சடா ரவி முகத்தில் காய்ச்சு காய்ச்சே !!!! என்று சுப்பிரமணியர் ஞானத்தில் சொன்னதை வைத்து இந்தௌவர் உப்பை பனி நீரிலும் , மழை நீரிலும் கரைத்து வடி கட்டி சூரிய வெளிச்சத்தில் காய்ச்சி எடுப்பர்.
இந்த முப்புவை அண்டம் என்றழைப்பார்கள் ஆனால் இது முட்டையல்ல , முட்டை ஓடுமல்ல, மானிடர்கள் மண்டையோடுமல்ல , உவர் நீரல்ல , ரோமமல்ல , கண்ணீரல்ல ஈசனுடைய விந்து என்பார்கள் அதனால் இது சூதம் என்ற பாதரசம் என்று நினைப்பார்கள் ,அதுவுமல்ல , தளிராக இருக்கும் எந்த மூலிகையுமல்ல , சமாதி நிலையில் ஊணும் உப்புமல்ல (சமாதிகளில் கல்லுப்பைக் கொட்டி நிரப்புவார்கள் ), சுக்கிலமான விந்தின் கூறுமல்ல , கொடிய சுண்ணாம்புக் கூட்டமுமல்ல.
கீழ்க்கண்டவையெல்லாம் முப்பு அல்லவென்று தள்ளிவிடு , உவரல்ல (களர் நிலங்களில் விளையும் உவர் மண்ணல்ல ), துருசுமல்ல ( மயில்துத்தமென்பர் ) , சவுக்கார மண்ணுமல்ல அதன் சத்துமல்ல , ஆணுமல்ல ,பெண்ணுமல்ல , வெடியுப்பு , கறியுப்பு , விஷ நீரல்ல , ரத்தினமும் இல்லை , மலையுமில்லை , கோசமல்ல ( உடல் என்று பொருள் படும் ) , எலும்பை எரித்த அஸ்தியல்ல , குருவண்டல்ல ( குரு வண்டு என்பது அதன் மேல் பகுதியில் ஆறு புள்ளிகளுடன் இருக்கும் ) , அது வஸ்துவும் இல்லை, சிறு நீருமில்லை, எனில் அது பஞ்ச பூதங்களில் ஒன்றே .
பிண்டம் என்ன என்று சொல்லப் புகுந்தால் பாரமில்லை , சாரமில்லை , இவற்றால் பயனுமில்லை . பேர் பல சொன்னாலும் பெண்ணில்லை , அப் பெண்பிள்ளை பெற்ற பிள்ளையில்லை , கருவுமில்லை , சிசுவும் இல்லை , மங்கையர்கள் தூரமான கழிவு இரத்தமான மாதாந்திர இரத்தமுமில்லை , கும்பிடும் கல்லுமல்ல ,பூமியுமல்ல , உயிருடன் இருக்கும் ஜீவ ஜந்துக்கள் ஒன்றுமில்லை, மதுவில்லை , மலமில்லை , இன்னும் இது பற்றி சொல்லுகிறேன் என்கிறார் .
நன்றி முப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்
பதிவு மிகப் பெரியதாகப் போவதால் முத்திரவியம் மூன்றாம் பாகமாகவும் வெளிவருகின்றது .
எம்குருநாதர் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா.பரிபாசை அறியாதமூடர் எல்லாம் என்னவெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறியும்போது பரிதாபம் தான் தோன்றுகிறது.
தாங்களுடைய படிப்படியான பதிவுகளை பார்வையுற்ற பிறகு மனதில் இருந்த பல வினாக்களுக்கு விடைகிடைத்துள்ளது.அத்தகை அருமை.என்னில் வார்த்தைகள் இல்லை.
ஐயா!”எமக்கும் எட்டுமோ ஞானப்பழம்?”
என்றும் அன்புடன்
தங்கள் மாணவன்
மு.பைசல் கான்
அன்பு மிக்க பொறியாளர் திரு மு.பைசல் கான்(ksa) அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஞானம் எட்டாமலா நமது வலைத் தளத்துக்கு வந்துள்ளீர்கள் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
arumaiyana pathivu..adutha pathivirkaga kathirupen
அன்பு மிக்க திரு ஞானகுரு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
விரைவில் அடுத்த பதிவு வரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா, வணக்கம்.
முத்திரவியம் பரிபாசை தூங்கிக்கொண்டிருந்த எனக்குள் பல வினாக்களை
எழுப்புகின்றது.
முத்திரவியம் மூன்றாம் பாகத்தினை விரைவில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்
வெங்கட்.
அன்பு மிக்க திரு வெங்கட் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
விரைவில் அடுத்த பதிவு வரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தங்களின் கருத்து எங்களுக்கு சித்த மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்தை தூண்டுகிறது
அன்பு மிக்க திரு வெங்கட் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பலரை சிந்திக்கச் செய்யவே இந்தப் பதிவுகள் .ஞானம் பிறந்து தழைத்த இந்த மண்ணில் சிந்திக்கவே தெரியாத ஆட்டு மந்தைக் கூட்டமாக ஆக்கிவிட்டது மெக்காலே கல்வி முறை . மீண்டும் நாம் சிந்திக்க தெரிந்த மனிதர்களாக மாறினால் போதும் .ஞானம் நம் கையில்தான்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அருமையான விளக்கம் சாமி ஜி
அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ayya,thangal pathivugal anaithum migavum arumai ungal sevai thodaravendum… ‘THIGAIPPOONDU’enral enna athan photo matrum botanical name kooravum
அன்பு மிக்க திரு சிம்புமதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
திகைப்பூண்டு என்பது தாவரச் செடியே அல்ல.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இந்த வலைத் தளத்தை நாம் தொடர்ந்து வாசித்து வருவதே நமது பாக்கியமில்லையா. சாமீ அவர்களின் பேரன்பினாலும் கருணையாலும் நாம் இந்த ஞானமும் மரணமில்லா பெருவாழ்வும் பெற நான் அந்த கடவுளையும் நம் சித்த குருக்களையும் சாமீ அழகப்பன் அவர்களையும் வேண்டுகிறேன்
அன்பு டன்
ஜெகதீசன்
அன்பு மிக்க திரு ஜெகதீசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
புத்தரின் சீடர் ஒருவர் அவரிடம் வந்து ’’ குருநாதரே சொர்க்கம் நமது அருகாமையில் கைக்கெட்டும் தூரத்தில்தான் உள்ளது என்று கூறுகின்றீர்கள் ,இதில் எனக்கு உடன்பாடு இல்லை ,இந்த ஊரில் சொர்க்கத்துக்கு போகத் தகுதியான தர்மவான்கள் பலரிருப்பதாகக் கருதுகிறேன். நீங்கள் கூறுவதை என்னால் நம்ப இயலவில்லை’’ என்றார். அதற்கு புத்தர் சொன்னார் “ அப்பா சீடனே இந்த ஊரில் நீ குறிப்பிடும் அனைத்து தர்மவான்களையும் வரிசையாக அவர்கள் பெயரை எழுதிக் கொண்டு போய் , அவர்களிடம் இன்றைக்கு சொர்க்கத்துக்கு போக விரும்புகிறீர்களா என்று கேள். அவர்கள் சொல்லும் பதிலையும் எழுதிக் கொண்டு வந்து காண்பி ” என்றார். சீடனும் ஊரில் சொர்க்கத்துக்கு போகத் தகுதியான தர்மவான்கள் அனைவரையும் பேட்டி காணத் தொடங்கினார் .ஒருவரும் சொர்க்கத்திற்கு போகத் தயாராக இல்லை .பல வருடங்கள் கழித்து போகத் தயாராய் இருப்பதாகவும் , அதற்கு முன்னர் முடிக்க வேண்டிய கடமைகள் இருப்பதாகவும் கூறினர் .பின்னர் புத்தர் “ நாளை அவர்கள் உயிர் அவர்களிடம் இருப்பது அவர்கள் கையில் இல்லை .ஆனால் அவர்கள் அவர்கள் கடமையை முடித்துவிட்டு சொர்க்கம் செல்லக் காத்திருப்பதாகக் கூறுவது அறிவீனம் . அவர்கள் சொர்க்கம் செல்லத் தகுதியானவர்கள் என்று நீ நினைப்பது உன் அறிவீனம் . எங்கு செல்ல அவர்கள் விரும்புகிறார்களோ அங்குதான் அவர்கள் செல்வார்கள் .மாறாக நீ கூறியது போல அவர்கள் செல்ல விரும்பாத சொர்க்கம் பக்கத்தில் இருந்தாலென்ன தூரத்தில் இருந்தாலென்ன,அவர்கள் போக விரும்பாத இடத்திற்கு உன்னால் கூட்டிச் செல்லவும் முடியாது .அனுப்பி வைக்கவும் முடியாது ” என்று கூறினார். “ உங்கள் விசுவாசம் உங்களைக் காப்பாற்றும் ” என்று இயேசு கிறித்து சொன்னதும் இதுதான்.மரணமில்லாப் பெரு வாழ்வு உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் மாறாத சிந்தையுடைய விசுவாசம் இருந்தால் கிடைக்கும் .ஆனால் இப்படி பெரும் உபதேசங்களைப் பொழிந்த தேவ குமாரனை காட்டிக் கொடுக்க அவர் சீடர்களில் ஒருவர் வெறும் பனிரெண்டு பொற்காசுகளுக்காக துணிந்ததும் அதே சரித்திரத்தில் நிகழ்ந்ததே . அதனால்தான் சித்தர்களும் ஞானிகளும் இத்தகைய கொடும் மனிதர்களிடம் இருந்து எட்டியே நிற்கிறார்கள் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
vanakkam ayya,thangal pathivugal anaithum arumi… Ayya kannil sathai valarchikku marunthu koorungal pls
அன்பு மிக்க திரு ஷிம்பு மதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
விரைவில் இது பற்றிய பதிவு வரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சகோதரரே,
வணக்கம். மக்கள் தொண்டே மகேசன் தொண்டென வேலைப்பளுவிற்கிடையிலும் பல திரவியங்களை(உதவிகள்,மருந்துகள்,மருத்துவக்குறிப்புகள்,பரிபாசை விளக்கங்கள்)அளித்துவருகின்ற தங்கள் பணி வளரட்டும். பதிவுகள் அனைத்தும் அருமை. மேலும் பதிவுகள் வளர விருப்பங்களுடன்.
நன்றி
மணிகண்டன்-கோவை
அன்பு மிக்க திரு மணிகண்டன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
என்ன மணிகண்டன் நலமா??? நீங்கள் அளித்த பணம் குருநாதரின் பையனின் கல்விக்கு போய்ச் சேர்ந்ததை வெளியிட்டிருந்தேன் .அது பற்றி நீங்கள் வெளியிட வேண்டாம் என்று கூறி இருந்தீர்கள். அதை வெளியிடாமல் வைத்தால் நானே அந்தப் பணத்தை கொடுத்ததாக எண்ணலாம் .எனவேதான் வெளியிட்டேன். அது பற்றி உங்களிடம் இருந்து அலைபேசி அழைப்பு ஏதும் வரவில்லையே?????? ஏன்?????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சகோதரரே
வணக்கம். தொடர்பு கொள்ளாமைக்கு மன்னிக்கவும்.நான் தங்களை ஒருபோதும் தவறாக நினைத்ததில்லை.செய்கின்ற உதவிகளை தெரிவிப்பதில் எனக்கு விருப்பமில்லை. உங்களை போன்ற நல் உள்ளங்களுடன் ஒப்பிடுகையில் நான் பூஜ்ஜியமே. நான் தங்களிடம் கொடுப்பதாக கூறிய தொகையில் சிறிதளவே என்னால் கொடுக்க முடிந்தது. கொடுத்த வாக்கை காப்பற்ற முடியாதது ஒரு காரணம். மற்றவை தங்களது அலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கின்றேன்.
நன்றி
மணிகண்டன்-கோவை
அன்பு மிக்க திரு மணிகண்டன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
உங்களின் பதிவை படிப்பது மட்டுமல்ல கருத்துரை மற்றும் பதில்கள் படிப்பது
ஒரு தனி அனுபவம். அது இந்த வலை தளத்தின் சிறப்பு.
அன்புடன்..
அன்பு மிக்க திரு எம் கோபி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா!!
வணக்கம். முப்பூகுரு பற்றிய விடயங்கள் மிகவும் ஆச்சரியப்படும்படியாக உள்ளது.
தொடரட்டும் உங்கள் பணி.
என்றும் அன்புடன்
வெங்கட்.
அன்பு மிக்க திரு வெங்கட் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்