முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 3

 

 

 

நன்றி:- தெய்வீக வாழ்க்கைச் சங்கம் , சிவானந்தா ஆஸ்ரமம் இராசிபுரம்.

மூத்திரத்தை சிவாம்பு என்றும் அமுரி என்றும்  சொல்லி உட்கொள்ளும் மருத்துவ முறையே உள்ளது அந்தப் புத்தகத்தின் சில பக்கங்களை உங்கள் பார்வைக்கு மேலே  தந்திருக்கிறேன். பொதுவாக விஷ ஜந்துக்கள் கடிக்கும் போது நம் உடலில் விஷ எதிர்ப்புப் பொருட்கள் , இம்மியூனோ குளோபுலின் {(ANTI – VENAM , ANTI – (DISEASE PARTICLES )ANTI -BODIES } ஆகிய பொருட்கள் அதிகம் உற்பத்தி ஆகும்.

இவற்றை சிறு நீரகம் வெளியேற்றும் போது , மீண்டும் நாம் சிறு நீரில் அவை வீணாகாமல் அவற்றை வாய் வழியே உள்ளே எடுத்துக் கொள்வதால்,அவற்றில் உள்ள மேற்படி பொருட்களை மீண்டும் எடுத்துக் கொண்டு  உடல் உடனே விஷத்திலிருந்தோ , நோயிலிருந்தோ , விடுபடும் .

இது மட்டுமே சிறு நீர் பற்றிய உண்மைகள் .ஆனால் உடலை மரணத்திலிருந்து காப்பாற்றும் முப்பூ என்பது மிகப் பெரிய அறிவீனம் .இதோ அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் சில.

(immunoglobulin (Ig), is a large Y-shapedprotein produced by B-cells that is used by the immune system to identify and neutralize foreign objects such as bacteria and viruses.)

http://en.wikipedia.org/wiki/Antibody

http://en.wikipedia.org/wiki/Antivenom

அப்போது சிறு நீரை குடித்தாலும் கடித்த இடத்தில் போட்டாலும் அது நஞ்சு நீக்கியாக வேலை செய்யும்.வியாதிகளும் சிறு நீரில் உள்ள நோய்  எதிர்ப்புப் பொருட்கள் சிறு நீரை அருந்துவதால் மீண்டும்  உடலில் சேருவதால்  நோய்கள் குணமாகின்றன.

மற்றபடி சிறுநீர் என்பது அமுரி என்று கூறுமளவிற்கு பாஷாணங்களை முறித்து மருந்தாக்காது.உயிரும் உடலும் பிரியாமல் உயிரைத் தக்க வைக்கும் முப்பு குரு இதுவல்ல.

முப்பு குரு என்பதை மங்கையருடைய கருக்குடத்து நீர் என்ற அர்த்தத்தை எடுத்து அதை முப்பூ என்று சோதித்துக் கொண்டிருக்கும் அறிவாளிகளைப் பற்றி நீதியரசர் திரு பலராமைய்யா அவருடைய நூலில் கூறியிருப்பதைப் பாருங்கள்.

சிவப்பு நிறமுள்ள கன்னியின் யோனியில் (பெண்ணுறுப்பில் ) நாக்கால் குடைந்து அதில் வரும் நாதத்தையுண்டால் காயசித்தி என்றுள்ளதை பரி பாஷை தெரியாத மூடர்  பலர் கன்னி கழியாத பெண்களின் மாதாந்திர விலக்கான கழிவு இரத்ததை எடுத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.இதுவும் தவறு.

கும்பிடு சிப்பிகளின் ஓடுகளை  சாரமான உப்புச் சரக்கென்றும் ,அதன் சதைகளை புளிச்சரக்கென்றும் சிலர் கருதி அதன் பின்னோடுகின்றனர் .

நன்றி முப்பூ குரு ,ஆசிரியர், நீதியரசர் திரு பலராமையா அவர்கள்

 பதிவு பெரிதாய்ப் போவதால் மற்றவை முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 4 ல் காணலாம்.