முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 4
கும்பிடு சிப்பியும் முப்பு குரு அல்ல என்பது தெளிவாகிறது.
சிலர் முப்பூ என்பதை சோற்றுப்பு என்று கருதி அதை தச சுத்தி செய்து அதை தச தீட்சை என்று சொல்வதும் , அதை பனிநீரில் கரைத்து அதை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொண்டு அதை முப்பூ என்றும் சொல்லி வீணில் கெட்டலைகின்றனர் .
முப்பூ என்றால் உப்பல்ல ,கருவுப்பு என்பதும் உப்பல்ல , ஊனென்ற உட்கருவும் உப்பல்ல , ஊட்டு முறை செய்வதும் உப்பல்ல , மானென்ற அண்ணுப்பு உப்பல்ல , மாதவிடாயனதுவும் உப்பல்ல , சானென்ற சவுட்டுப்பு ( கோவானூர்ப் பொட்டலிலே குண்டுமேனியம்மன் சன்னதியில் வாரி வருகிறார்களே அந்தக் களர் நில உவர் மண் , பூநீறு என்றழைக்கப்படுவது ) உப்புமல்ல , சாதகமாம் இவை உப்பு வல்லத்தானே !!!என்று கீழே விளக்கியுள்ளார்கள் நீதியரசர் திரு பலராமையா அவர்கள்.
நான் ஏற்கெனவே சொன்ன கருங்குருவைக்காடி முப்பு அல்ல என்பது பற்றியும் திரு நீதியரசர் திரு பலராமைய்யா அவர்கள் கூறியிருப்பதைப் பாருங்கள்.
சித்தர்கள் சொல்லும் கல்லுப்பு தண்ணீரில் கரையாது என்று சொல்லுவதைக் கவனியுங்கள்.
குரு வண்டு என்றும் கருவண்டு என்றும் பலர் இதை எண்ணி ஏமாந்து போகிறார்கள்.
சவுக்காரம் என்று இவர்கள் சொல்லுவதைக் கண்டு பலர் கடையில் கிடைக்கும் சவுக்காரத்திலிருந்து எண்ணெய் கழட்டுவார்களும் உண்டு.அதுவும் தவறே.
முப்புளி என்றால் மலம் என்று எண்ணி பலர் மனித மலத்தையும் , அமுரி என்றால் மனித மூத்திரம் என்றும் எண்ணி பலர் மலத்தையும் மூத்திரத்தையும் கலந்து வைத்து உண்டு வருகிறார்கள்.
அப்படியானால் மனித மலத்தையுண்ணும் பன்றிகள் அஷ்டமாசித்து செய்ய வேண்டுமல்லவா????? பரகாயப் பிரவேசம் செய்ய வேண்டுமல்லவா?????
பதிவு பெரிதாய்ப் போவதால் மற்றவை முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 5 ல் காணலாம்.
பெருமதிப்பிற்குரிய எம்குருநாதர் அவர்களுக்கு,
வணக்கம்.அருமையான பதிவு ஐயா.
உலுத்தர் தமை ஓங்கியறையும் வரிகள் //””அப்படியானால் மனித மலத்தையுண்ணும் பன்றிகள் அஷ்டமாசித்து செய்ய வேண்டுமல்லவா????? பரகாயப் பிரவேசம் செய்ய வேண்டுமல்லவா?????
……………………………………அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ஐயா.
“நாளப்பா …….மெத்தவுண்டு
நாடினாற்கிடைக்குமடா நலம் பெற்றோர்க்கு
வாளப்பா மலையாதே மயங்கிடாதே
மண்டையிலே யெழுதினது பிரம்மந்தானே…”
அவனருளோடு குருவருளும் வேண்டியவனாய்
என்றும் தங்கள் மாணவனாய்
எளியவன் மு.பைசல் கான்
அன்பு மிக்க பொறியாளர் திரு மு.பைசல் கான்(ksa) அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மண்டையெழுத்தை மாற்றும் பிரம்மந்தானே!!!!! பிரம்மம் என்பது மண்டையெளுத்தை மாற்றவல்லது முப்பு குரு .இதை இதுதான் முப்பு என்று அறிவிக்கும் நாள், சித்தர்கள் எனக்களிக்கும் முதல் சித்தர் உரிமை. அந்நாளில் எனக்கு பல பிரதம சீடர்கள் இருப்பார்கள்.அவர்களுக்கு பல கட்ட கற்பித்தலுக்கு பின் முப்பு என்ற உலகமஹா சித்து அளிக்கப்படும்.இது பற்றிய அறிவித்தல் பின்னால் அறிவிக்கப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Migavum arumayaga irukkiradhu ungalin indha narpani..ungal pani melum melum sirakka..valthukkal…Melum neengal oru sila pakkangalai mattum puthagangalil irunhu scan seidhu poduvathai vida..ungalidam ulla puthagangalin soft copy yai uploadseydhu anaivarum padikkum vannam seydhal migavum nadraga irukkum endru nambugurane…Nandri
அன்பு மிக்க திரு திவாகர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பொருள் புரியாத புத்தகங்கள் பல இருந்து யார் ஞானியாயிருக்கின்றார்கள்.தேவையான பகுதிகளுடன் வெளிவருவது உங்களுக்கு புரிந்தால் அதுதான் எமக்கு வேண்டியது.உமக்கு வேண்டியது பொருள் புரியாத பாடல்கள் என்றால் நீங்கள் நாட வேண்டிய இடம் தாமரை நூலகம் அல்லது சித்தர்கள் ராச்சியம் வலைத் தளம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
முத்திரவியம் பற்றிய உங்களது இத்தொடர் மிக அருமை.
பரம இரகசியம் என்று சொல்லக்கூடிய இப்படிப்பட்ட விஷயங்களை மக்கள் நலனுக்காக, எளிமையாக விளக்கம் கொடுத்து வருவது உண்மையிலேயே, இந்தக்காலத்தில் இப்படிப்பட்ட உங்களைப் போன்ற நல்ல மனிதர்களைப் பார்ப்பதரிது.
யதார்த்தமாய் எனக்குள் இருந்த கருத்துக்கள் இவை, வெறும் புகழ்ச்சி அல்ல இது. இது போன்ற முத்துத் தொடர்கள் இரத்தினங்களாய் இனி வரும் காலங்களிலும் மிளிர்ந்திட இறையை வேண்டியவனாய் …..
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு சதயத்துல்லா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பன்னிரண்டு வருடங்கள் தவமிருந்து குருவின் சேவை செய்ய வேண்டிய விடயங்களை மிக எளிதாக கொடுத்து வருகிறோம்.அதன் பலனறிந்து உணர்ந்து நடந்தால் இன்னும் பல விடயங்களை நேரிடையாக கொடுக்க தேர்வே நடக்கும் .அப்போது வாருங்கள் .நலம் பல சிறந்து விளங்கட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்.
முத்திரவியம் பற்றிய தங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது.
நான் யார் என்ற ஒரு அன்பரின் கேள்விக்கு திருவண்ணாமலை ரமண மகரிஷி,
இந்த உடல் நானல்ல ,இந்த மனதும் நான் அல்ல என்று அனைத்து தேவையற்ற
விஷயங்களை நீக்கினால் மிஞ்சுவதே “நான்”என்ற தன்னை அறிவதாகும் என்றார்.
தாங்களும் எது எதை முத்திரவியம் என்று நினைத்து உலக மக்கள் ஏமாந்து போயினர்
என்று தெளிவுபடுத்தி வருகிறீர்கள்.
நன்றி .வணக்கம்
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நிறைய பேர்கள் முத்திரவியம் என்றாலோ அல்லது முப்பு என்றால் என்ன என்பதோ அறியாமல் அலைவதை தடுக்கவே இந்தப் பதிவுகள் . முப்பு என்றால் என்ன என்று தெளிவாக ஒரு குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும் ( எனது சீடர்கள் என்று நான் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே ) அறிவிக்க எனக்கு அதிகாரம் அளிக்கப்படும் .அவர்களும் அவர்களது சந்ததி மட்டுமே ஊழிப் பெரு வெள்ளத்தில் ஆட்படாமல் தப்பிக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
vanakkam ayya thangalin intha pathivu migavum arumi,ayya valamrasam engu kidakkum,sila marunthu seimuraikalil abini(abin)serkka vendum endru ullathu ingu abinikku bathil veru marunthu serkkalama appadi enral entha marunthai serkkalam illai enral bogar sarakku vaippil kooriyulla abini vaippu muriyal abini thayar seithu payan paduthalama thayavu seithu kooravum ayya…
அன்பு மிக்க திரு திவாகர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
வாலை ரசம் தயார் செய்யும் முறை பற்றியும் அதை வைத்து ரச மணி செய்யும் முறைகள் பற்றியும் ஏற்கெனவே எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன். பார்த்துத் தெளியவும்.
http://machamuni.blogspot.in/2010/09/blog-post.html
மேலும் போகர் சரக்கு வைப்பு , கோரக்கர் சரக்கு வைப்பு ஆகிய நூல்களில் பார்த்து செய்யலாம்தான்.ஆனால் அதற்கான பொருட்களை நீங்கள் கடையில் கேட்டால் , ஏற இறங்கப் பார்ப்பார்கள், ஏனென்றால் அவையெல்லாம் வைத்தியர்களுக்கு மட்டுமே தரப்படக் கூடிய சரக்குகள் .அதிலொன்று போஸ்தக்காய் ஓடு .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
“பொருள் புரியாத புத்தகங்கள் பல இருந்து யார் ஞானியாயிருக்கின்றார்கள்.தேவையான பகுதிகளுடன் வெளிவருவது உங்களுக்கு புரிந்தால் அதுதான் எமக்கு வேண்டியது.”
“பன்னிரண்டு வருடங்கள் தவமிருந்து குருவின் சேவை செய்ய வேண்டிய விடயங்களை மிக எளிதாக கொடுத்து வருகிறோம்.”
-அருமையான வரிகள்
“சித்தர்கள் எனக்களிக்கும் முதல் சித்தர் உரிமை. அந்நாளில் எனக்கு பல பிரதம சீடர்கள் இருப்பார்கள்.அவர்களுக்கு பல கட்ட கற்பித்தலுக்கு பின் முப்பு என்ற உலகமஹா சித்து அளிக்கப்படும்”
“முப்பு என்றால் என்ன என்று தெளிவாக ஒரு குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும் ( எனது சீடர்கள் என்று நான் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே ) அறிவிக்க எனக்கு அதிகாரம் அளிக்கப்படும் .அவர்களும் அவர்களது சந்ததி மட்டுமே ஊழிப் பெரு வெள்ளத்தில் ஆட்படாமல் தப்பிக்கும்.”
கண்களில் நீரை வரவைக்கும் அருமையான வரிகள்
மிக்க நன்றி
Jagadeesan
அன்பு மிக்க திரு ஜெகதீசன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா நான் உஙகள் வலைதலதில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடரட்டும் உமது பணி. நன்றி.
அன்பு மிக்க திரு மன்னின் மன்னன் (மண்ணின் மன்னன் என்றால் வேறு பொருள்) அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Guruji,
Ungalin Aduttha padhiviukka avaludan katthuirukkerom…
Anbudan
அன்பு மிக்க திரு எம் கோபி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
விரைவில் அடுத்தடுத்த பதிவுகளை இட முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
முப்புளி என்றால் மலம் என்று எண்ணி பலர் மனித மலத்தையும் , அமுரி என்றால் மனித மூத்திரம் என்றும் எண்ணி பலர் மலத்தையும் மூத்திரத்தையும் கலந்து வைத்து உண்டு வருகிறார்கள்.
அப்படியானால் மனித மலத்தையுண்ணும் பன்றிகள் அஷ்டமாசித்து செய்ய வேண்டுமல்லவா????? பரகாயப் பிரவேசம் செய்ய வேண்டுமல்லவா?????
பதிவு பெரிதாய்ப் போவதால் மற்றவை முத்திரவியம் ( சித்தர் விஞ்ஞானம் ) பாகம் 5 ல் காணலாம்.
பொருள் புரியாத புத்தகங்கள் பல இருந்து யார் ஞானியாயிருக்கின்றார்கள்.தேவையான பகுதிகளுடன் வெளிவருவது உங்களுக்கு புரிந்தால் அதுதான் எமக்கு வேண்டியது.உமக்கு வேண்டியது பொருள் புரியாத பாடல்கள் என்றால் நீங்கள் நாட வேண்டிய இடம் தாமரை நூலகம் அல்லது சித்தர்கள் ராச்சியம் வலைத் தளம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
குறிப்பு : அமுரி என்பது நமது சிறுநீர்தான். சில பிரத்யேக உடல் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை குறிப்பிட்ட காலம் கடுமையாய் கடைபிடித்து உடலை பழக்கிய பின்னர், வெளியேறும் சிறுநீரே அமுரி எனப்படுகிறது. இதனை சுத்தி செய்து மருந்தாக பயன்படுத்துகின்றனர். அமுரியை சித்த மருத்துவத்தில் சிவநீர் என்றும் சொல்லுவர். இதன் சிறப்பை திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.
– திருமூலர்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
இது பெரும் முரண்பாடாக உள்ளது இது எப்படி சாத்தியமாகும்
அன்பு மிக்க திரு அறந்தாங்கி அப்துல்லா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
முரண்பாடுகளை விவரிக்க நாம் இல்லை.
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
உண்மைகளை விளக்குவது மட்டுமே எம் வேலை . முடிந்தால் உங்கள் அறிவால் இதிலிருந்து புரிந்து கொள்ளப் பாருங்கள் .மற்றவர் கருத்தோடு எம் கருத்து முரண்படுவது எமக்குத் தெரியாததல்ல.இதை அவரது தளத்திலிருந்து எடுத்து எழுதி கேள்வி கேட்டால், இதைப் பார்க்கும் அவர்கள் மனம் புண்படும்.உங்களது வீணான கேள்வியினால் எமது பொன்னான நேரம் வீணாகிறது . எனவே இது போன்ற கேள்விகளை இனி வருங்காலங்களில் தவிர்க்கவும். இல்லையேல் நாம் பிரசுரிக்க மாட்டோம் என்று பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,வணக்கம்.
இந்த கட்டுரை படியுங்கள் ஐயா…..கருத்தை சொல்லுங்கள்….நன்றி!!
http://timesofindia.indiatimes.com/home/science/Brain-cells-developed-from-pee/articleshow/17593894.cms
அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சிறு நீரில் சிற்சில அற்புதங்கள் உண்டு.சில மருந்துகளை அரைக்க பச்சிளம் குழந்தைகளின் சிறு நீரை அப்படியேயும் ,அதை முறித்தும் பயன்படுத்துவோம் . அக்குழந்தைகளின் தாயாருக்கோ , தந்தைக்கோ மேகம் 21 லும் ஒரு வியாதியும் இருக்கக்கூடாது .இந்த மேகங்கள் 21 ம் 21 தலைமுறைகளுக்கு தொடர்ந்து தொல்லை தரக் கூடியது. மற்றபடி ஏற்கெனவே முன் கட்டுரையில் குறிப்பிட்டது போல சில வியாதிகளுக்கும் , நஞ்சு முறிவிற்கும் பயனாகும்.ஆனால் அமுரி என்று இதை சித்தர்கள் குறிப்பிடவில்லை என்றுதான் கூறியிருக்கிறேன்.அமுரி என்றால் வேறு . நம் சிறு நீரில் உள்ள வேதிப் பொருட்களைக் காண இந்த இணைப்பில் செல்லுங்கள்.
http://chemistry.about.com/od/biochemistry/f/What-Is-The-Chemical-Composition-Of-Urine.htm
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,வணக்கம்.
மிக அற்புதம் உங்கள் கண்டுபிடிப்புக்கள்……..
மிக்க நன்றி…
அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இவை அனைத்தும் சித்தர்கள் கண்டுபிடிப்புக்கள். அவர்கள் எனக்கு உணர்த்தியவைதாம் இவைகள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்,
நான் அந்த லிங்கை ஏன் அனுப்பினேன் என்றால்….அன்று சித்தர்கள் சொன்னதை இன்று விஞ்ஞானம் இன்று இப்போது தான் அதை ஆராய்ச்சிக்கு எடுத்து உள்ளார்கள்….
ஆனால் எனக்கு ஓரு டவுட் ஐயா…..???
மனித மூதிரத்தில் இவளவ் பவர்புல்லா இருக்கும்போ ..அப்போ ஏன் கிட்னி செயளியப்பு ஏற்படுகிறது????
அன்பு மிக்க திரு நிடிங்கீதம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மனிதனுடைய மூத்திரம் இவ்வளவு செயல்பாடு உடையதாக இருந்தாலும் .ஆங்கில மருத்துவம் சிறு நீரக செயலிளப்புக்கு காரணங்களை ஆராயாமல் .உப்பைச் சாப்பிடாதே என்று சொல்லும். உப்புச் சுவையில்தான் சிறு நீரக செயல்பாடே இருக்கிறது . சோடியம் கூடாது என்பதற்காக உப்பே வேண்டாம் என்று சொல்வது மகா முட்டாள்தனமானது . உப்புச் சுவையில்லாமல் சிறு நீரக செயல்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கடைசியில் செத்துப் போகிறது.இவர்கள் சாப்பாட்டு முறையினால்தான் சிறு நீரக செயலிளப்பு ஏற்பட்டு இருக்கிறது .ஆனால் அதை சரி செய்யாமல் மேலும் புதிதாக வேறோர் நபரிடமிருந்து சிறு நீரகம் பொறுத்தினால் அதுவும் சில நாட்களில் செயலிளந்துதான் போகும்.சிறு நீரகம் தண்ணீரிலேயே ஊறிக் கொண்டிருக்க வேண்டிய ஓர் உறுப்பு .ஆனால் ஆங்கில மருத்துவம் தண்ணீரை அளந்து இவ்வளவுதான் குடிக்க வேண்டும் என்று கொடுத்து .உடலில் நீரெல்லாம் வற்றி சிறு நீரகம் காய்ந்து கருவாடாக மாறி சுருங்கிப் போய் சிறு நீரக செயலிளப்புக்கு காரணம் ஆகிறது .இன்னும் இது பற்றி சொல்ல நிறைய இருக்கிறது .வேறோர் சமயம் பார்க்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dr பலராமையா அவர்களை 1982ல் அவருடைய எழும்பூர் இல்லத்தில், என் தாத்தா சந்தித்து நிறைய பேசினார் என்பதை அவர் சொல்லுவார். Dr பலராமையா வயதான காலத்தில் காயகற்பம் உண்டபின் அவர் உடலில் நிகழ்ந்த மாற்றங்களை அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். மீண்டும் வாலிபனாக உலா வந்தார் என்றும் சொல்லுவார். அந்த மாற்றங்களை பார்த்து அவர் குடும்பத்தினர் பயந்துவிட்டனாறாம். தோல், முடி, நகம் எல்லாம் விழுந்து புதிதாய் வளர்ந்த விதம் எங்களுக்கு அப்போது ஆச்சர்யமாய் இருந்தது.
அவர் நீதித்துறையில் மட்டுமல்ல, சித்த வைத்தியத்திலும் சிறப்பாக விளங்கியவர். அவருக்குப்பின் அவர் குடும்பத்தில் இப்போது யாராவது சித்த வைத்யம் செய்கிறார்களா என தெரியவில்லை.
அன்புள்ள திரு சந்திர சேகர் அவர்களே ,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
அவருடைய மகளும், மருமகனும் வைத்தியம் செய்து வருகிறார்கள் .ஆனால் அவை அவரளவிற்கு உயர்ந்ததாய் இல்லை என்று கேள்வி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
thanks for your health tips
அன்புள்ள திரு சாந்தா தேவி அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முதலில் தமிழில் எழுதுங்கள் .நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள்.இவை உடல் நலத்திற்கான குறிப்புக்கள் மட்டும் அல்ல . நம் நாட்டு சித்த வைத்தியத்தின் பெருமையை ஆதாரத்துடன் நிலை நாட்டுவதுடன் , அதன் குணமளிக்கும் தன்மையையும் அறியாத மக்களிடம் அதன் சிறப்புக்களை கொண்டு சென்று அவர்களுக்கு குணமளிக்க அவர்களையே தயார் செய்வதும்தான் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்