சித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 2
சென்ற வலைப்பூ வெளியீட்டில் கொடுத்துள்ள இரச மணியை எந்த விதமான நஞ்சையும் முறிக்க உபயோகிக்கலாம்.எந்தக் கடியாக இருந்தாலும் கடிவாயில் இரசமணியை வைக்க ஒட்டிக் கொள்ளும் .நஞ்சை உறிஞ்சிய பின் பிறகு இரசமணி கீழே விழும் அதை கையால் தொடாமல் ஒரு பற்றுக் குறடால் எடுத்து பாலில் போட அது நீலநிறமாக மாறும்.
பிறகு மீண்டும் கடிவாயில் இரசமணியை வைக்க ஒட்டிக் கொள்ளும் .நஞ்சை உறிஞ்சிய பின் பிறகு இரசமணி கீழே விழும் அதை கையால் தொடாமல் ஒரு பற்றுக் குறடால் எடுத்து வேறு புதிய பாலில் போட அது நீலநிறமாக மாறும்.இதே போல் சில முறை செய்ய கடைசி முறையில் கடிவாயில் எப்போது ரச மணி ஒட்டாமல் இருக்கிறதோ அப்போது நஞ்சு முழுவதும் நீங்கிவிட்டது என்று பொருள்.
நீல நிற்மாக மாறிய பால் நஞ்சு நிறைந்தது ,எனவே அதை கவனமாக குழி தோண்டி அதில் ஊற்றி மூடிவிடவும்.பிறகு அவருக்கு சுக்குக் கஷாயத்தில் சிறுதும்பை சேர்த்து கொதிக்க வைத்துக் கொடுக்க மீதி ஏதேனும் விஷம் இருந்தாலும் அதுவும் முறிந்துவிடும்
சித்தர்கள் ரசமணியை பலவிதமாக வர்ணிக்கிறார்கள்.பலவிதமான ரசமணியைத் தயாரிக்கும் விதம் பற்றியும் விவரிக்கிறார்கள்.முதலில் சாதாரண மனிதர்கள் நினைப்பது போல் நானும் சித்தர்கள் சொல்லும் விஷயங்கள் சாத்தியம் இல்லாதது ,நம்ம விஞ்ஞானிகள் பாணியில் சொல்வதானால் டுபாக்கூர் என்றே எண்ணியிருந்தேன்.ஆனால் சித்தர்கள் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களை பரீட்சை செய்து பார்த்தவுடனே எனது அபிப்பிராயம் முழுவதும் மாறி எனது வாழ்க்கைப்பாதையே சித்தர்கள் பாதையில் மாறிவிட்டது.இப்போது இரசமணியின் வகைகளைப் பார்ப்போம்.
சப்தவேதி இரசமணி என்பது அதனிடம் இருந்து வரும் சப்தத்தால் சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தையும் தங்கமாக்கும்.என்னங்க சப்தம் தங்கமாக்குமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
” BIG BANG THEORY ” என்பது ஒரு பெருவெடிப்பினால்தான் இந்த கேலக்ஸி என்ற அண்ட பேரண்டங்களே உண்டானது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது.அந்த அண்ட பேரண்டங்களையும் தோற்றியது ‘ஓம்காரம்’ என்று சித்தர்கள் சாத்திரம் கூறுகிறது.இதோ உங்களுக்காக ஒரு யூ ட்யூப் வீடியோ,
சப்தம் அண்ட பேரண்டங்களையே உண்டாக்கியது என்றால் ,கேவலம் தங்கத்தையா உருவாக்காது? இந்த சப்த வேதி இரசமணி அதன் சப்தம் கேட்குமிடம் வரை உள்ள பொருட்கள் அனைத்தும் தங்கமாகும்.
இது போல் ஸ்பரிச வேதி இரசமணி எந்தப் பொருளைத் தொட்டாலும் அந்தப் பொருள் தங்கமாகும்.
கவுனமணி வாயில் ஒதுக்கி அது வாயில் இருக்கும் போது ஊரும் எச்சிலை விழுங்கி வர உலகில் உள்ள அத்தனை விஷயங்களையும் ஒதாமல் உணரலாம்.கவுனமணி பற்றி சித்தர்கள் ராஜ்ஜியம் தோழி அவரது வலைப்பூவில் விவரமாக கொடுத்துள்ளதால் இங்கு அதை விவரிக்காமல் விடுகிறேன்.
நன்றி
சாமீ அழகப்பன்
interesting and amazing facts but not easy to understand. Thanks
தங்கள் தொடர்புக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
can you tell me the link for kevuna mani
அன்பு மிக்க திரு சுபன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இது பற்றி விரைவில் ஒரு நேரடிப் பதிவு காணொளிக் காட்சியோடு இருக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thanks ji it is a very useful compilation. I was searching for these informations elsewhere during my college days and some five years during my career. After marriage I have lost my interest. Now after seeing your blog has brought me back in this field. You are really open in all your statements. Its very rare to find such people. I have seen many gurus in my life not many are as you are. Thanks for everything I am following your blog regularly. I don’t know tamil typing hence I am giving a reply in english.
அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
தமிழ் வாழ தமிழை பயன்படுத்துங்கள்.NHM WRITER ஐ உங்கள் கணிணியில் நிறுவி கருத்துரை எழுதுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thanks Mr.Samee Ji,
NHM writer has been installed. In future comments definitely I will use it. Right now I am at Madurai and my hometown is Dindigul. My guru in giving such a sort of knowledge is Mr.Balakrishnan who is also a siddha practitioner and he is a pancha Bakshi expert. He use to travel on and often to Virudhunagar and srivillipuddhur. I am not sure you know him.
Yesterday I tried to contact Sathuragiri herbals by 7.00 PM mainly to enquire the rate of Agasa Karudan to install it in my house. But he has not picked up the call. Today Also I will try him and get back to you. I am interested in attending your Thiru gnana sabhai. But I need to plan to continuously come for three pournamis atleast. Since I am moving to maharashtra next month atleast for 10 days, I will try to attend from Jan 2012 full moon day. With gods grace and blessing I have reached you. Thanks I have read all your blogs in a single day. Its all amazing and I am happy I am back in search of the path of the gnanam through your blogs.
அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
என்னுடைய வலைப்பூ இரண்டு உள்ளது.அவற்றின் இணைப்புக்கள் இதோ
http://machamuni.blogspot.in/
http://kavithaichcholai.blogspot.in/
இவற்றையும் பாருங்கள்.சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் அவர்கள் ஒரு பல வேலைக்காரர். அது மட்டுமல்ல சதுரகிரி , கான்சாபுரம் காடுகளில் மூலிகை தேடி அலைபவரும் கூட , எனவே உயர்ந்த பொருள் கிடைக்க பல முறை முயல்வது தவறேதுமில்லையல்லவா??????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சாமீ ஜீ தொலைபேசி இனணப்பு சதுரகிரி ஹெர்பல் உடன் கிடைத்தது நன்றி !!!!!. ஆகாச கருடன் வாங்குவதறகு order செயதுவிட்டேன். நன்றி!!!.
அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
தமிழ் வாழ தமிழை பயன்படுத்துகிறீர்கள்.மிக்க நல்லது .அத்தோடு “order” என்பதற்குப் பதில் “பதிவு செய்துவிட்டேன்” என்று எழுதுங்களேன்.தமிழ் முழுதாய் வாழட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா மிக்க நன்றி இப்பொழுது மிக நன்றாக தமிழ் தட்டச்சு செய்கிறேன். இன்னும் வேகமாக தட்டச்சு செய்ய முயற்சி செய்கிறேன். நன்றி.
அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
தமிழ் வாழ தமிழை பயன்படுத்துவோம்.மிக்க நல்லது.தமிழ் தட்டச்சில் ஒரு நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் அடிப்பதை அதி விரைவு தட்டச்சு வேகம் என்பர்.ஆனால் இந்த பேச்சு வழக்கு மொழியாக்கத் தமிழ் தட்டச்சில் (PHONETIC SET) தற்போதைய எனது வேகம் ஒரு நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் .எனக்கு முன்னால் தட்டச்சே தெரியாது .பழகப் பழக அழகப்பா!!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஆம் அய்யா முயற்சி திருவினையாக்கும். விடா முயற்சி செயற்கரிய சாதனை புரிய வைக்கும். நன்றி.
அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்