சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(2)

அணுவிற்கும் அணுப்பிரமாய் இருக்கும் ஒன்றிலிருந்து இவ்வளவு அண்ட பேரண்டங்களும் தோன்றி இருக்குமா? என்னால் நம்ப இயலவில்லை? என்று நினைக்கத் தோன்றுகிறதா? இதோ இந்த ஒளிப்படக் காட்சி உங்களுக்காக!




யான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணேன்.என்று முழங்கிய பாரதி அருமையான இல்லற ஞானி . அவர் எல்லா இயற்கை அறிவும் , இறை ஞானமும் நிறைந்த மஹா ஞானி.அவரின் பாடல்களில் நிற்பதுவும், நடப்பதுவும், பறப்பதுவும், சொப்பனந்தானோ(கனவோ),நானும் ஓர் கனவோ, இந்த ஞாலமும் (இந்த உலகம்) பொய்தானோ? என்கிறார். கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ, உம்முள் ஆழ்ந்த பொருள் இல்லையோ? என்று கேட்கிறார்
.

இந்தப் பிரபஞ்சத் தோற்றத்துடன் ஒப்பிடும்போது நமது ஆயுள் என்பது இந்தப் 




பிரபஞ்ச ஆயுளில் ஒரு வினாடியில் லட்சத்தில் ஒருபங்கு நேரம் கூடக் கிடையாது .நமது தோற்றம்,பிரபஞ்சத் தோற்றத்தில் (VOLUME) ஒரு அணுப்பிரமாணத்தில் லட்சத்தில் ஒரு பங்கு கூடக் கிடையாது .இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தால் நம் ஆணவம், அகங்காரம் அனைத்தும் அற்றுப் போய்விடும்.
மேலே கண்டுள்ள வலைப்பூ இணைப்பை நமது அன்பர்கள் கண்டு நிறைய விஷயங்களை தெரிந்து தெளிய வேண்டும் என்பது என் மற்றும் அந்த வலைப்பூ நிறுவனர் தோழி அவர்களின் அவா! மற்றும் வேண்டுகோள்.
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குக் சேர்ப்பீர் என்று பாரதி பாடினார்.நாம் புதியதாக கொண்டு வராவிட்டாலும் இருப்பதையாவது காப்பாற்றி வைப்போம்.
நன்றி
இப்படிக்கு உங்கள் அன்பு நண்பன்
சாமீ அழகப்பன்