சித்தர்களின் ரசமணி ரகசியங்கள் 3
எனக்கு நீங்கள் சொன்ன மாதிரி புடம் போட எல்லாம் முடியாது.எளிதான வழி சொல்லுங்கள் என்று கூறும் உங்களுக்கு ஒரு எளிதான வழி இதோ.
பெரும் பூசணிக்காய் கொண்டு வந்து அதில் ஒரு இடத்தை சிறு சதுரத்துண்டு எடுத்து (மீண்டும் அதை மீண்டும் அடைப்பது போல் இருக்க வேண்டும்) அப்பிரகம் பொடி செய்து வஸ்திரகாயம் (நல்ல சல்லாத் துணியினால்(சிறு கண் கொண்ட ) சலித்து எடுத்து ) செய்த பொடியை நிரம்ப அடைத்து அதற்குள் உலை ரசம் விட்டு முன்னர் எடுத்த வில்லையை வைத்து ஏழு சீலை மண் செய்து உறிக்குள் வைத்து அடுப்புக்கு மேலே (௪௰௫(45)) நாற்பத்து ஐந்து நாள் வைத்திருந்து (௪௰௬(46)) நாற்பத்து ஆறாவது நாள் கீழே ஒரு பாத்திரம் வைத்துக் கொண்டு ஊசியினால் ஷ காயின் (அந்தக் காயின்) அடியில் துவாரம் செய்தால் ரசம் விழும்.
இந்த ரசத்தையே ரச மணி கட்ட உபயோகிக்க வேண்டும்.இந்த ரசம் (2)இரண்டு விராகனிடை ஒரு மண்சட்டியில் விட்டு சரக் கொன்றைப்பூ ரசம் சுருக்குக் கொடுக்க ( ரசத்தை சட்டியில் விட்டு சட்டி சூடாகும் போது சரக் கொன்றைப் பூச் சாறு சிறிது சிறிதாக விடுவதையே சுருக்கு என்பார்கள் ) ரசம் மணியாகும்.சட்டியை சூடாக்கும் போது அடுப்பை தீபாக்கினி எரிவு எரிக்க வேண்டும்.( அடுப்பை தீபாக்கினி எரிவு எரித்தல் என்றால் தீபம் எப்படி எரியுமோ அப்படி எரிக்க வேண்டும் )
மீண்டும் ஒரு சுவாரசியமான மடலுடன் தங்களைச் சந்திக்கிறேன்.
நன்றி
என்றென்றும் அன்புடன்
சாமீ அழகப்பன்
நன்றி திரு சாமீ அழகப்பன். நம் உண்மையான செல்வம், நம் முன்னோரின் அனுபவ அறிவு பெட்டகங்களே.உங்கள் பங்கு போற்ற தகுந் தது.
வாழ்்்துகள் பல. இ்ை(ரச மணி ) உண்மையாய் செய்பவர்கள் உண்டா?
நான் ரசமணி செய்வது மட்டுமல்ல,அதைத்தான் உங்களுக்கு கற்றுக் கொடுத்தும் விட்டேனே!இதற்கு மேலும் ஏன் இத்தனை சந்தேகம்.ரசமணி நான் செய்துவிட்டேன்,என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிறையப் பேர்கள்,(ரசத்தையும்(MERCURY) காரீயத்தையும்(LEAD)உருக்கி கலந்து ரசமணி என்று பொய் சொல்லித் திரிகிறார்கள்.போலி ரசமணியைப் பார்த்தாலே அது பளபளப்பற்று,இருக்கும்.பேப்பரில் எழுதினால் பென்சில் போல எழுதும்.அதனால் ஒரு பயனும் இல்லை.இது போல சித்த ரகசியங்களை வெளியில் சொல்லக் கூடாது என்றிருந்த தடையை உடைத்தெறிந்தே இவைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.என் குழந்தைகள் இவைகளை போற்றிப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.எனவேதான் அனைவரும் இந்த விஷயங்களை வெளிப்படையாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன்.அனைவரும் பயன்பெற வேண்டுகிறேன்
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
அருமை அருமை !!! கோடான கோடி வாழ்த்துக்கள் அய்யா ..,
தங்களின் வலைப் பூ கண்டேன்.என்னோடு என் கருத்தோடு என்னில் இணைந்த நண்பரைக் கண்ட பேரானந்தம்.உங்களின் வலைப் பூவில் இணைந்திருக்கிறேன்.
நன்றி
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
அய்யா , மனிக்கவும் அது என்னுடைய வலைப்பூ ஆல்ல , நான் follow செய்யும் வலைப்பூ , இருந்தாலும் நான்னும் அதே எண்ணத்தோடு வாழ்பவன் .
நன்றி
இப்படிக்கு
மனோஜ் குமார்
கோவை
அய்யா புலிப்பாணி தங்கள் பதில் கிடைத்தது.எப்படி இருந்தாலும் எனக்கு ஒரு வலைப்பூ தொடர்பு கிடைத்தது.அதற்கும் நன்றி
நன்றி
இப்படிக்கு
சாமீ அழக்ப்பன்
Dear சாமீ அழகப்பன்,
Pl write mahalakshmi ANJANAM .HOW TO PRAPARATION.MATERIAL & MANTHRAM.
RULES.
I WILL WAITING YOURS REPLY.
THANKS®ARDS,
MANOHARAN
பெருமதிப்பிற்குரிய எம்குருநாதர் அவர்களுக்கு,
வணக்கம் ஐயா.சாரணையேற்றும் முறைகளைப் பற்றியும் சிறிது விளக்கமளிக்க வேண்டுகிறேன்.
எளியவன்
மு.பைசல் கான்
அன்பு மிக்க திரு மு.பைசல்கான் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சாரணையேற்றும் முறைகள் பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன் விரைவில்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்,
தங்களின் வெளிப்படையான நோக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.நான் இப்போது ரசமணி கட்டி கொண்டு இருக்கிறேன். அனால் நான் பல முறை முயன்றும் துரிசு சுண்ணம் செய்ய முடியவில்லை. தெரிந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.
நன்றி
அன்பு மிக்க திரு ரஞ்சித் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
துரிசு முடித்தவன் கோடி சித்தாடலாம் என்று சொன்னால் அது எவ்வளவு அற்புதமான விடயம் .அதற்கு அவ்வளவு எளிதில் தகுதியாகிவிட முடியுமா???? யோசியுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ரசமணி செய்யும் முறைகள் சொல்லி தருவது வரவேற்கத்தக்க விடயம்.
என்னுடைய கருத்து காணொளி மூலம், புகைப்படம் போன்றவிற்றி செய்முறை கட்டுவது இன்னும் அருமையாக இருக்கும் அல்லவா?
அன்புள்ள திரு கே சி மோகன் அவர்களே
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இது என்னுடைய வலைப்பூவில் உள்ள பதிவை இந்த வலைத்தளம் ஆரம்பித்த போது கொடுத்த மீள்பதிவு.அப்போது என்னிடம் ஒரு புகைப்படக் கருவியே கிடையாது.இப்போதுள்ள புகைப்படக் கருவி திரு கஜேந்திரராஜ் என்ற அன்பர் எனக்கு வாங்கி கொடுத்த புகைப்படக் கருவியைக் கொண்டுதான் இப்போதுள்ள காணொளிக்காட்சிகள் எடுக்கிறேன்.இனிமேல் எழுதும் கட்டுரைகளுக்கு காணொளிக்காட்சிகளுடன் வெளியிடுவோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்,
நான் துரிசு வைத்து ரசமணி கட்டிவைத்துள் ளேன் சாரணையேற்றும் முறைகளைப் பற்றியும் சிறிது விளக்கமளிக்க வேண்டுகிறேன்.
மிக்க நன்றி
கி.சிவராமன்
அன்புள்ள திரு கே சிவராமன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
முதலில் அது நெருப்புக்கு ஓடாத மணியாக இருக்கிறதா (பாதரசம் அதன் இயல்பு நிலையில் மிக சிறிய அளவு சூடானாலே முதலில் விரிவடையும் பின் ஆவியாகி ஓடிவிடும்.) என்று பாருங்கள் அப்படி ஓடாத மணியாக இருந்தால்தான் சாரணை தீர்க்க முடியும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா
துரிசு மூலம் ரசத்தை கட்டுவது எப்படி என்று சொல்லுங்களேன்
அன்பு மிக்க திரு ராம் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
எதற்கு ரச மணி .காரணம் சொல்லாமல் எந்த விடயமும் தெரிவிக்க மாட்டோம்.காரணம் சரியாக இருந்தால் அவசியம் என்று தெரிந்தால் மட்டுமே கூறுவோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பு மிக்க திரு ராம் குமார் அவர்களே,
திரு சாமீ அழகப்பன் ஐயா அவர்களின் கருத்தே என்னுடை கருத்துமாகும்.
கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சாமீ அழகப்பன் ஐயா அவர்களே
கி. சிவராமன்
அன்புள்ள திரு கி.சிவராமன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா கருத்துரைக்கு மிக்க நன்றி
சிறிது சூடக்கிய பின்பும் ஓடவில்லை
மிக்க நன்றி
கி. சிவராமன்
அன்புள்ள திரு கே சிவராமன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மண்ணாலான ஓட்டை நெருப்பில் வைத்து அதன் மேல் பாதரச மணியை வைத்து அதன் மேல் வேப்பிலைச் சாறு , கிரந்தி நாயகம் சாறு , சீதேவிச் செங்கழுநீர்ச் சாறு , குப்பை மேனிச் சாறு, எலுமிச்சம் பழச்சாறு , சிறு கண் பீழைச் சாறு, மாவிலிங்கப் பட்டைச் சாறு, ஆலம் பட்டைச் சாறு , அரசம்பட்டைச் சாறு ,ஈஸ்வர மூலிச் சாறு, கீழா நெல்லிச் சாறு என்று எந்தெந்த தேவதைகளுக்கு உகந்த மூலிகைகளைச் சாறு எடுத்து கொஞ்ச கொஞ்சமாக அந்த ரசமணிக்கு சுருக்குக் கொடுக்க அந்த மணிக்கு அந்தந்த மூலிகைக்கு அதிதேவதையாய் உள்ள தேவதைகள் வசியமாவார்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா கருத்துரைக்கு மிக்க நன்றி
முயற்சிசெய்து பார்த்து வி ட்டு தொடர்புகொள்கின்றேன்
மிக்க நன்றி
கி. சிவராமன்
அன்புள்ள திரு கே சிவராமன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
ஒவ்வொரு சாற்றையும் 21 தடவை சுருக்குக் கொடுக்கவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிக்க நன்றி
கி. சிவராமன்
அன்புள்ள திரு கி சிவராமன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா குரு நாதர் அவர்களுக்கு வணக்கம்
தங்கள் பதிவில் வரும் உலை ரசம் என்றால் என்ன அது தயாரிப்பது குரித்து தயவு செய்து தெரிவிக்கவும்
மிக்க நன்றி
க.புருஷோத்தமன்
yougha@gmail.com
அன்புள்ள திரு புருஷோத்தமன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
அது உலை ரசமல்ல வாலை ரசம் .வாலையில் பாதரசத்தை விட்டு , சூடு செய்து ஆவியாக்கி மீண்டும் குளிர்வித்து வாலையில் வடித்தெடுப்பது வாலை ரசம்.இது மிகச் சுத்தமான பாதரசம்.அவ்வளவே!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய ஆசான் அவர்களுக்கு,
என்னிடம் ரச லிங்கம் ஒன்ற என் தாத்தாவிடம் இருந்து கிடைக்க பெற்றேன். என் தாதா விடம் மற்றுமொரு ரச லிங்கம் உள்ளது.கொல்லிமலையில் ஒரு சித்தர் கொடுத்ததாக சொன்னார். இது 10 ஆண்டுகள் நடந்து ஆனது.இப்போது என் தாதா விடம் இருக்கும் ரச லிங்கம் கட்டு குலைந்து பாதரசம் வெளி வருகிறது. அதை மறுபடியும் கட்டுவது எப்படி. நீர் பூத்தது போல் பாதரசம் வெளிவருகிறது. தங்களின் உதவி தேவை. என்னிடம் இருக்கும் ரச லிங்கத்தினை பூஜிப்பது எப்படி?எனக்கு உதவுங்கள்.
வணக்கம் அய்யா , நான் தங்களின் ரசிகன் . தங்களின் அனைத்து பதிப்புகளும் படித்து பயன்பெறும் எளியவன் நான் . எனக்கு தங்களின் எண்ணம் போல சித்தர்கள் மூலிகைகள் பற்றிய விசயங்கள் அறிந்து கொள்ள ஆசை . உங்கள் தொடர்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் . நன்றி
அன்புள்ள திரு சிவபாத சேகரன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எமது அலைபேசி எண்ணை அனுப்பியுள்ளோம் .தொடர்பு கொள்க.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்கு உரிய ஆசான் அவர்களே,
நன்றி தங்களின் பதில் கண்டேன். தங்கள் அலை பேசி எண் எனக்கு கிடைக்க பெறவில்லை. மீண்டும் ஒருமுறை தயவு கூர்ந்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
சித்தர்கள் சேவகன்
சிவபாதசேகரன்.
அன்புள்ள திரு சிவபாத சேகரன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மீண்டும் எமது அலைபேசி எண்ணை அனுப்பியுள்ளோம் .தொடர்பு கொள்க.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பு வணக்கம் அய்யா,
கடை சரக்குகளுக்கும் சாபம் உண்டா?மூலிகைகளின் சாப நிவர்த்தி,எந்திர சாப நிவர்த்தி போன்றவைகளை இங்கு சொல்லவும். எவை எவைகளுக்கு சாபம் உண்டு. எதனால் இந்த சாபம்?யாரால் கொடுக்க பட்டது?
அன்புள்ள திரு சிவபாதசேகரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
நீங்கள் கேட்ட கேள்விகள் ஒரு நீண்ட கட்டுரை எழுதும் அளவில் உள்ளது.என்வே இதை ஒரு பதிவாகவே எழுதுகிறோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Please sir send your phone number, address to my mail.
அன்புள்ள திரு ராஜா அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
எமது அலைபேசி எண் எவ்வித காரணமும் இல்லாமல் நாம் அலை பேசி எண்ணை தருவதில்லை . எதற்காக எனது அலைபேசி எண் தேவை என்ற காரணம் சொன்னால் அனுப்பப்படும்.ஏனெனில் எமக்கு உள்ள வேலைப்பளு அதிகமாகும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ayya, enaku rasamani suthi muraigal mattrum saranai etrum muraigalai patriya vilakkam kidaikuma? rasamani moolam enna enna kuligaigal seiyalam? muraigal enna? vilakkavum
nandri
அன்புள்ள திரு சிவபாத சேகரன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி
நீங்கள் கேட்கும் விடயங்கள் எல்லாம் நேரில் பார்த்து பழக வேண்டிய விடயங்கள்.ரசமணி , ரசவாத விடயங்களில் விபரம் அறியாமல் ஈடுபடும் பலர் , தங்களது தவறான கையாளலால் உயிரை விட்டுள்ளனர்.இவை அனைத்துமே குருகுலக் கல்வியின் மூலமே கற்றுணர வேண்டியவை. இன்றைய வேகமான உலகில் இவற்றுக்கு யாருமே முக்கியத்துவம் அளிப்பதில்லை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ungal bathiluku nandri ayya. na anda kalaiyai kattukolla virumbugiren.thangal machamuni sitharidam utharavu petru enaku solli tharuvergala?na thangalin thodarbu petrathu kadavulin kirubai mattume. enaku uthava ungalal mudiuma?nan ungalai thodarbu kolkiren viraivil.
nandri ayya
அன்புள்ள திரு சிவபாத சேகரன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி
முதலில் தமிழில் எழுதுங்கள். பொதுவாக தமிழில் கருத்துரை எழுதாத நபர்கள் மீது எமக்கு சரியான மரியாதை ஏற்படுவதில்லை.நமது மொழி தமிழ்.நமது தமிழ் நம் உயிர்.நாமே அதை உபயோகிக்காவிட்டால் தமிழ் எப்படி வாழும்.பழக்கத்தில் உள்ள மொழிதான் வாழும்.நாம் எழுதியதை தமிழை அறிந்ததால் நீங்கள் படித்தீர்கள். இனி ஆங்கிலத்தில் கருத்துரை எழுதினால் வெளியிட மாட்டோம் என மிகப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.“ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” “ சாகும் வரை தமிழ் பயின்று சாக வேண்டும் .என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற பாரதிதாசனின் வார்த்தைகள் எமக்கு உயிரான வார்த்தைகள்.எமது வலைத் தளத்தில் தமிழே முக்கியமானதாக இருக்க வேண்டும்.
தமிழ் கற்காத , தமிழை எழுதாத ஒரு நபருக்கு சித்த வைத்தியத்தின் அரிச்சுவடி கூட வராதே ! நீங்கள் எப்படி அதில் மேலான இந்த விவரங்களை கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். இறைவன் அருள் இருந்தால் எதுவும் நடக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நன்றி அய்யா.என்னுடைய மொழியை மிகவும் நேசிக்கிறேன். ஒரு சின்ன பிரச்சினை காரணமாக ஆங்கிலத்தில் எழுத வேண்டியதாகி விட்டது. மன்னிக்கவும். என் தாத்தா தஞ்சை சரஸ்வதி மகாலில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். பல ஓலைச்சுவடிகளை நடைமுறை தமிழில் மொழி பெயர்ப்பு செய்தவர். என் தந்தை கல்வெட்டு ஆராய்ச்சியாளர். நானும் மொழி மீது பற்று கொண்டவன்தான்.
நான் தங்கள் மச்சமுனி அமைப்பில் சேர என்ன செய்யவேண்டும். என் முன்னோர்கள் பாதையில் நானும் பயணம் செய்யவேண்டும். என் வாழ்வில் ஆன்மீக பதில் என்னை அழைத்து செல்ல நல்ல குருமார்கள் தேவை,நான் இறைவனிடம் வேண்டுவது இது தான். நன்றி
அன்புள்ள திரு சிவபாத சேகரன் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி
நாம் அப்படி எழுதாவிட்டால் இப்போது தமிழில் இப்படி எழுத முயற்சி எடுத்திருப்பீர்களா???எமது அலைபேசி எண்ணை உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளோம்.தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா,
நான் மிக நீண்ட நாட்களாக தேடி வந்தது கிட்டியது, இனி உங்கள் பாதையில் தொடர ஆசைப்படுகிறேன்.
எளிய தமிழாக்கம் அருமை.
என்றென்றும் அன்புடன் (பிழை பொருத்தருள்க, இன்னும் பிடிபடவில்லை)
ஏ.புஷ்பராஜ்
அன்புள்ள திரு ஏ.புஷ்பராஜ் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
முதலில் தமிழில் எழுதியதற்காக பாராட்டுக்கள்.இப்படி எழுதி இருந்ததை
“அன்புள்ள ஐயா,
நான் மிக நிண்ட நாட்களாக தேடி வந்தது கிட்டியது, இனி உங்கள் பாதையில் தொடர ஆசைப்படுகிறேன். எளீய தமிழாக்கம் அருமை.என்டெண்ட்ரும் அன்புடன் (பிழை பொருதருள்க, இன்னும் பிடிபடவில்லை) ஏ.புஷ்பராஜ்”
மேலே கண்டபடி திருத்தி எழுதியுள்ளோம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அய்யா , நான் தங்களின் ரசிகன் . தங்களின் அனைத்து பதிப்புகளும் படித்து பயன்பெறும் எளியவன் நான் . எனக்கு தங்களின் எண்ணம் போல சித்தர்கள் மூலிகைகள் பற்றிய விசயங்கள் அறிந்து கொள்ள ஆசை . உங்கள் தொடர்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் . நன்றி
அன்புள்ள திரு லக்ஷ்மி காந்தன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
///உங்கள் தொடர்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் ///
இப்போதும் தொடர்ப்பில்தானே இருக்கிறீர்கள் நம் வலைத்தளம் மூலமாக .இருப்பினும் உங்களுக்கு எமது அலைபேசி எண் அனுப்பப்பட்டுள்ளது .
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா
இதை ஒரு இணையதளத்தில் சேகரித்தேன்
இதில் ு சித்திரமூல
வேர்ப்பட்டை இலிங்கம் என்றால் என்ன ஐயா அதன் படம் பாற்கமுடியுமா ஐயா… இதை எவ்வாறு தயார் செய்வது. எங்கு கிடைக்கும் எந்த மூலிகை
ரசம் எடுக்கும்
விதம் :- ஒரு பங்கு
இலிங்கத்திற்கு 4 பங்கு சித்திரமூல
வேர்ப்பட்டையை எடுத்து தூள்
செய்து ஒர் பானையில்
பாதி பாகத்தை போட்டு ,
பொருத்தமான மேல்
பாணை மூடி சீலை மண்
செய்து அடுப்பிலேற்றி முறைப்படி
எரித்து ஆறின
பின்பு மேற்பானையின்
உட்புறத்திலுள்ள பதங்கத்தை
சுரண்டி எடுத்து துணியில்
வைத்து பிழிய ரசம் கிடைக்கும்.
இதே இலிங்க ரசம் எனப்படும்.
இது மிக சுத்தமான ரசம் எனப்படும்
ஐயா தங்களது அலைபேசி எண் கிடைத்தால் இந்த அடியேன்னுக்குள் இருக்கும் பல கேள்விகளுக்கு விடையும்விளக்கமும் கிடைக்கும் ஐயா
ஐயா ரசத்தை எவ்வாறு இயற்கையான முறையில் செய்யமுடியும்.ரசத்தை எவ்வாறு சுத்தி செய்வது.
ரசத்தை , சுத்தி செய்வதற்கு பயன் படுத்தும் நீர் எவ்வாறு செய்யவேண்டூம்.
இந்த மாதிரி பல கேள்விகளுக்கு நிங்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா..
பணிவுடன் பாலசந்தர்
சித்திர மூலம் என்பது கொடுவேலி எனப்படும் மூலிகையே. பச்சைக் கொடிவேலி , அல்லது கருங் கொடு வேலியின் பாகங்கள் சிறப்பானவை.லிங்கம் என்பது chinnabaris factitia chinensis என்ற பாதரசத்தின் வேறு பொருட்களுடன் கூடோயுள்ள வேதியியல் பெயரே .அதாவது பாதரசம் குளோரினோடும் , பல வேதிப் பொருள்களோடும் கூடியிருப்பதேயாகும் . இதில் குளோரினையும் ,பல வேதிப் பொருட்களான அழுக்குகளையும் , நீக்கினால் சுத்தமான பாதரசம் கிடைக்கும் .இந்த குளோரினை நீக்க நமது முன்னோர்களாகிய சித்தர்கள் பல வழிகளைக் கையாண்டு பாதரசத்தை பிரித்தெடுத்துள்ளனர் . அதில் ஒன்றே நீங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது . பாதரசம் எளிதில் ஆவியாகக் கூடியது . லிங்கத்தை ஒரு மூடிய பாத்திரத்தில் வைத்து சூடாக்கும் போது பாதரசம் ஆவியாகும் . அந்தப் பாத்திரத்தின் மேல் பகுதி குளிர்ந்து இருந்ததால் அங்கே அது ஒட்டிக் கொள்ளும் .இது இரசப் பதங்கம் . அதிலுள்ள ரசத்தை பிழிந்து எடுத்து பயன் படுத்தலாம் .(எச்சரிக்கை :- மூடிய பாத்திரம் காற்றுப் புகா வண்ணம் இருக்க வேண்டும் . இல்லையெனில் ரசம் ஆவியாகி காற்றில் ஓடிப் போய்விடும். இந்த பாதரச ஆவி மூச்சில் கலந்தால் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் .மேலும் மேற்படி காரியம் செய்யும் போது தங்கப் பொருட்களை அணிந்திருந்தால் அவை பாத ரசத்தோடு கூடி உடைந்து போய்விடும்)
ஐயா உங்களின் பற்று இல்லா மனதிற்கு வணக்கம் நான் வெகு நாட்களாக செயநீர் செய்முரை பற்றி தேடுகிரேன் தயவுகூர்ந்து என்கு உதவவும் நன்றி வணக்கம்
அன்புள்ள திரு joseph அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
எந்த பாஷாணத்தையும் ஜெயித்து மருந்தாக்குவதே ஜெயநீர். இறை அருள் துணையில்லாமல் இது போன்ற விடயங்கள் சாத்தியமில்லை.அகத்தியர் மஹா திராவகத்தில் இது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது , பெரியோர் துணையுடன் தெரிந்து , புரிந்து செய்யுங்கள்.ஏனெனில் இது உயிர் கொல்லி .
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா
ரசமனியின் சாரனை முறையினை பற்றி ஒரு பதிவு வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
அன்புடன்
இளங்கோவன் க
iyya shiva shiva .vanakkam
thangalai contect seivathu eppadi . nan pollachi .neril parkthu pesa vendum thangalai
மதிப்பிற்குரியீர்,
வணக்கம் தங்ளை பற்றி அறியும் வாய்ப்பை
ஆசான் வழங்கியுள்ளார்கள்.அடியேன் தங்களை தொடர தாங்கள் அனுமதிக்க தங்களின் தொடர்பு எண்ணை கூறவும்
நன்றி
Ayya thangilin arumaiyana badilgal lukku kodi nandri
Guruvae
Guruvae, kudumbam noi indri valavum, vedu thedi vandavarukku udavum alavirkku selvamum, mana amaidiyum kedikka – enda rasamani aniya vendum – matrum enda mooligai kondu surukku kodukka vendum
அன்புள்ள திரு Prathap அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
குரு என்று என்னை அழைத்தால் மட்டும் நான் குரு ஆக மாட்டேன். 12 ஆண்டுகள் சேவை செய்யாத யாரும் சீடன் ஆக மாட்டார்.நான் உங்கள் குரு அல்ல. நீங்களும் உஙகள் குடும்ப மூதாதையர்களும் செய்த கருமங்களே நோய்களாக விளைந்து வந்து கர்ம பலனை(பிராரத்த கர்மாவாக) அளித்துக் கொண்டிருகின்றன.பிராரத்த கர்மா பலனை மாற்ற இறைவனாலும் ஆகாது .எனெனில் அது வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போலவும் , துப்பாக்கியில் இருந்து கிளம்பிய குண்டு போலவும் இலக்கை தாக்காது தப்பாது.அதனால் எம்மிடம் இதற்கு வராதீர்கள். ஆனால் இதற்கு உம்மால் ஆன முயற்சியை செய்ய இடம் உண்டு.உம்மால் மட்டும்!!!!!!
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Tamilil eluda mudiya mayikku mannikkavum.
Ayya 12 rasi ikku undana mooligaigal pattri kooravum.
Nandri
Dear Sir,
We need your tooth powder. Please give me your contact no or tell me from were to purchase it.
Thanking you
Regards
Sathya
அன்புள்ள திரு sathya அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்களுக்குள்ள பிரச்சினைகளையும் , தேவையான மருந்துகளையும் திரு அமீர் சுல்தானிடம் வினவுங்கள்!அவர் தீர்வு தருவார்.தேவையான மருந்துகளையும் தருவார்.திரு அமீர் சுல்தான் அவர்கள் ,தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்,
மச்சமுனி மூலிகையகம்( MACHAMUNI HERBALS )
S.S.I NO: 330021189121
எண்.1/17,5வது தெரு, நாராயணசாமி தோட்டம், சின்னகொடுங்கையூர், சென்னை-118.
Cell: 9597239953
மின் அஞ்சல் முகவரி.
machamunimooligaiyagam@gmail.com
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம் நான் சென்னையில் வாடகை வீட்டில் இருக்கிறேன் என்னால் இதைபோல் செய்ய இயலாது எவே தாங்களே பாதரச இரசமணி செய்து தர வேண்டுகிறேன் இதற்கு எவ்வளவு தங்களுக்கு தர வேண்டும் தங்களது போன் நெம்பரை தயவு செய்து எனக்கு 9629740872 என்ற நெம்பரில் தெரியபடுத்தவும் நன்றி அய்யா
அன்புள்ள திரு நாகராஜன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
பாதரச இரசமணி தேவையெனில் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுங்கள்.
வர்மக் கலை ஆசான்
S.கோபால கிருஷ்ணன் ஆச்சார்யா,
4/113,-பானு நகர் ,
தேத்திப் பாளையம் ,
கோயம்பத்தூர்-641010
அலை பேசி :- 88838-83303
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி அவர்களுக்கு வணக்கம்,சரக்கொன்றை பூவில் சாறு எடுப்பது எப்படி என்று தெரிவிக்க வேண்டுகிறேன் அய்யா..
நன்றி,என்றும் அன்புடன் ஹரி.S
அன்புள்ள திரு ஹரி என்ற ஶ்ரீநிவாசன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி.இது போன்ற யாருக்கும் பயனில்லாத கேள்விகளைத் தவிருங்கள்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்