சித்த குளிகை இரசமணி 2

பல சித்துக்களுக்கு உதவும் சித்த ரச குளிகை செய்யும் முறையை இங்கு விவரிக்கிறேன்.

காக்காச் சிப்பியும்(காக்கையின் மலமும்(பிய்யும்))  வெள்ளாட்டுப் புளுக்கையும் சமமாய்ப் பொடித்து எடுத்துக் கொண்டு புதுச் சட்டியில் கீழும் மேலுமாக வைத்து மத்தியில் ஒரு பலம் வாலை ரசம்  (35 கிராம்) வைத்து ஒரு விரல் கடை  மணலைப் பரப்பி அதன் மேலே புது ஓடு வைத்து அதன் மேலே ஒரு விரல் கடை மணலைப் பரப்பி அதன் பேரில் பெரிதான ஒரு எருவில் , புடம் போட்டு, குளிர்ந்து ஆறின பிற்பாடு அதிலிருந்த (எரிந்து போன காக்காச் சிப்பியும்,வெள்ளாட்டுப் புளுக்கையும் )எரிந்து போன பொடியை கொட்டிவிட்டு மேலே சொன்ன பிரகாரமே இரண்டு எருவில் புடம் போடவும்.

இந்தப் பிரகாரமாக புடத்திற்கு புடம் ஒவ்வொரு எருவு சாஸ்தியாய் புடம் போட்டு( ௪௰௪(44)) நாற்பத்தி ஐந்தாவது (௪௰௫(45)) எருவில் புடம் போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியது.

இது ரச மணி ஆகும்.இதை திரும்ப ௰௮ ( 108 ) தடவை புடம் போட்டால் சித்த குளிகை ஆகும்.

1
2
3
4
5
6
7
8
9
10
100
1000
  • ௧ = 1
  • ௨ = 2
  • ௩ = 3
  • ௪ = 4
  • ௫ = 5
  • ௬ = 6
  • ௭ = 7
  • ௮ = 8
  • ௯ = 9
  • ௰ = 10
  • ௰௧ = 11
  • ௰௨ = 12
  • ௰௩ = 13
  • ௰௪ = 14
  • – 2 –
  • ௰௫ = 15
  • ௰௬ = 16
  • ௰௭ = 17
  • ௰௮ = 18
  • ௰௯ = 19
  • ௨௰ = 20
  • ௱ = 100
  • ௨௱ = 200
  • ௩௱ = 300
  • ௱௫௰௬ = 156
  • ௲ = 1000
  • ௲௧ = 1001
  • ௲௪௰ = 1040
  • ௮௲ = 8000
  • ௰௲ = 10,000
  • ௭௰௲ = 70,000
  • ௯௰௲ = 90,000
  • ௱௲ = 100,000 (lakh)
  • ௮௱௲ = 800,000
  • ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
  • ௯௰௱௲ = 9,000,000
  • ௱௱௲ = 10,000,000 (crore)
  • ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
  • ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
  • ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
  • ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
  • ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
  • ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

[தொகு]

இது பல சித்துக்களுக்கு உதவும். சித்த ரச குளிகையை அவ்வளவு எளிதாக எந்த குருநாதரும் கொடுக்க மாட்டார்கள்.12 வருடம் ( திட சித்தத்துடன் பன்னிரண்டு வருடம் பிரம்மச்சரியம் அனுஷ்டித்து தன்னிடம் விசுவாசத்துடன் நடந்து கொள்ளும் சீடனுக்கு மாத்திரம் எந்த குருநாதரும் கற்றுக் கொடுப்பார்கள்)
ஆனால் நான் இங்கே அதை சர்வ சாதாரணமாகக் கொடுத்து இருப்பதனால், இதை சாதாரணமாக எண்ண வேண்டாம்.

எந்த ரகசியமும் என்னோடு போகக் கூடாது.எனவேதான் இந்த வலைப் பூவில் இவ்வளவு ரகசியமான விஷயத்தையும் என்னோடு வைத்துக் கொள்ளாமல் இவ்வளவு பட்டவர்த்தனமாக எழுதியிருக்கிறேன்.

நன்றி
இப்படிக்கு
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்