அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 4

இப்போது பஞ்ச பூத தத்துவங்கள் பற்றியும் ஆக்கும் அழிக்கும் சுற்று பற்றியும் இப்போது காண்போம்.இதை ஆங்கிலத்தில் CREATIVE -DESTRUCTIVE CYCLE என்பார்கள். சீன மொழியில் SHEN – KO CYCLE என்பார்கள்.

நமது சித்த வைத்தியத்திலும் பஞ்ச பூத தத்துவங்கள் உண்டு. அவை(1)பிருதிவி ( நிலம் =EARTH),(2)அப்பு(நீர்=WATER),(3) தேயு(நெருப்பு=FIRE ) ,(4)வாயு(காற்று= WIND ) , (5)ஆகாயம்(வெட்டவெளி= SPACE).

ஆனால் சீன முறையில்(1) நெருப்பு=FIRE , (2)நிலம் =EARTH, (3)உலோகம் = METAL அல்லது காற்று = WIND, (4)நீர்=WATER,(5)மரம்=WOOD என்று அழைப்பார்கள்.

இந்த பூமி முதலில் நெருப்பாக(FIRE ) இருந்து குளிர்ந்து நிலம்(EARTH) ஆனது,நிலத்திலிருந்து காற்று(WIND) அல்லது உலோகம் (METAL) உண்டானது,காற்று நீரை(WATER) உண்டாக்கியது,நீர் மரத்தை(WOOD ) உண்டாக்கியது.இது ஆக்கும் சுற்று(CREATIVE அல்லது SHEN CYCLE ) 
   
நிலம் நீரை உறிஞ்சும்,நீர் நெருப்பை அணைக்கும், நெருப்பு காற்றை உண்ணும்(நெருப்பு எரியும்போது காற்றில் உள்ள ஆக்சிஜனை எடுத்தே எரியும்),காற்று மரத்தை சாய்க்கும்,மரம் நிலத்தைப் பிளக்கும்.இது அழிக்கும் சுற்று(DESTRUCTIVE அல்லது KO CYCLE).
இந்த ஆக்கும் சுற்றும் அழிக்கும் சுற்றும் சமமாக இருந்தால் உடலில் நோய் உண்டாகாது. 


இதனையே குறள் இப்படிக் கூறுகிறது.

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் 
வளிமுதலாய் எண்ணிய மூன்று. 
நம் சித்த வைத்தியத்தில் வளி என்றால் காற்று என்று பொருள். காற்று, நெருப்பு , நீர்,இவற்றையே வாதம் ,பித்தம், சிலேற்பனம் எனக் குறிப்பிடுகின்றனர்.இவையே சித்த வைத்தியத்தில் முக்கியமாகக் கொள்ளப்படுகின்றன.இவையே மூன்று நாடிகளிகளிலும் நோய் கணிக்கப் பயன் படுகின்றன.
ஆனால் அக்கு பஞ்சரில் 12 நாடிகள் இருக்கின்றன. அவையே நோய் கணிக்க பயன்படுகின்றன. 
அதைப் பார்க்கும் முன் பஞ்ச பூத சக்திகளைப் பற்றி தெளிவாகப் பார்த்துவிடுவோம்.

பஞ்ச பூத சக்திகளின் செயல்பாடுகள் அவைகளுக்குரிய திசை, காலம், பருவம், நிறம்,உடலோடுள்ள சம்பந்தம், சுவை மற்றும் தன்மைகள் மேலே விவரிக்கப்பட்டுள்ளன.மேலும் விவரம் தேவை என்றால் கேட்டால் கிடைக்கும்.



நன்றி 
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்