அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 5
பஞ்ச பூத தத்துவங்கள் பற்றியும் ஆக்கும் அழிக்கும் சுற்று CREATIVE -DESTRUCTIVE CYCLE என்பார்கள், சீன மொழியில் SHEN – KO CYCLE என்பது பற்றியும் சென்ற அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 4ல் கண்டோம்.
இப்போது ( VITAL FORCE)’QI’ பற்றியும் , அதை உடலில் எப்படி நிலை நிறுத்துவது என்பது பற்றியும் ,உடலின் ஆயுள் அதிகரிக்க வழி என்ன என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.
அன்பர்களுக்கு ஒரு முக்கிய விஷயத்தைக் கூற விரும்புகிறேன். அக்கு பஞ்சர் பற்றி மட்டும் விவரிக்காமல் ஏன் இவர் சித்த வைத்தியத்தையும் மற்ற விஷயங்களையும் போட்டு குழப்பி கற்றுக் கொடுக்கிறார்,என்று நினைக்கலாம்.
நம் சித்தர்கள் தோற்றுவித்த மருத்துவமான சித்த வைத்தியம் ,நோய்கள் குணமாக வழி சொல்வது மட்டுமல்ல, மரணமும் ஒரு நோயே ,அதையும் குணமாக்கலாம். அதாவது மரணமில்லாப் பெரு வாழ்வு வாழலாம், என்று விவரித்துள்ளது.
அட போங்கப்பா! உள்ள 65 வயதையே நிம்மதியாக வாழ்வோமா என்று தெரியவில்லை .மரணமே இல்லாமல் வாழ்ந்தால் நாம் என்னாவது என்று என்னிடமே கேள்வி கேட்டவர் பலருண்டு .
மஹா கவி காளிதாஸ் படத்தில் காளிதாசன் வாழ்க்கையில் வெறுப்புற்று கடைசியில் ‘வாழ்க்கையில் துன்பப்படும் உயிர்களுக்கு விடுதலை கொடுக்கும் தருமதேவதையே எமன்,என்னுயிரை எடுத்துக் கொண்டு எனக்கு நிம்மதியைக் கொடு,என்று வேண்டுவதாக அமைந்திருக்கும்.
அது கிடக்கட்டும், எந்த மருந்தெல்லாம் , எந்த மூலிகையெல்லாம், எந்த பயிற்சிகளெல்லாம் (யோகாப்பியாசம்,பிரணாயாமம்),எந்த முறையெல்லாம் ஆயுளை நீட்டிக்குமோ , அவையெல்லாம் நோயையும் போக்கும்.இந்த முக்கிய விஷயத்தை சொல்வதற்கா இவ்வளவு பீடிகை என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
ஏனென்றால் அடிப்படையை சரி செய்தால்தான் மற்றவை எல்லாம் சரியாகும்.இதையே வள்ளுவர் தன் குறளில்
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்
வேறோடு கெல்லி எடுத்தால்தான் செடி வளருவதைத் தடுக்க முடியும். அது போலவே நோயின் அடி வேர் வரை கெல்லி எடுத்தால்தான். நோயை முழுவதுமாக போக வைக்க முடியும்.
அதற்கு சில எளிதான வழிமுறைகள் இருந்தால் உபயோகிக்கலாம்தானே! இன்னொரு முக்கிய விஷயம் அக்கு பஞ்சரில் உபயோகிக்கும் ஊசிகளில் ஒரு மருந்தும் இல்லை.அதுதான் குணப்படுத்துகிறதா என்றால் இல்லை. அந்த ஊசி ஒரு கருவிதானே தவிர அது குணப்படுத்தும் மருத்துவனோ,மருந்தோ இல்லை.அந்த ஊசி என்ன செய்யுமோ அதை செய்ய வேறு வழிகளும் உண்டு!
அது பற்றி அடுத்த அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 6 ல் பார்ப்போம்.
நன்றி
இப்படிக்கு என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம். தங்களுடைய அறிவோமா அக்குபஞ்சர் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். மிக்க பயன் பயனுள்ளதா இருக்கிறது. தற்போது அக்குபஞ்சர் மருத்துவத்தில் ஒரு புள்ளியின் சக்தியை கூட்ட வும் குறைக்கவும் அம்புக்குறியை மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் பல புத்தகத்தில் அச்சிட்டு இருப்பதை பார்த்து இருக்கிறேன். இது பற்றிய விளக்கத்தை அறிய விரும்புகிறேன். தங்கள் பதிவினை ஆவலோடு எதிர்பார்க்கும். தங்கள் அன்புகொண்ட மாணவன் சி.பழனியப்பன். குன்னூர். நீலககிரி மாவட்டம். நன்றி.
அன்புள்ள திரு Palaniappan. S அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
கூட்டவும் குறைக்கவும் என்று நீங்களே கூறிவிட்டீர்கள்.மேல் நோக்கிய குறியீடு சக்தியூட்டுவற்காக(ENERGISING), கீழ் நோக்கிய குறியீடு சக்தியை குறைப்பதற்காகவும் (SEDUCTION) பயன்படுகிறது . சக்திப் பாதையின் திசையில் தோலின் மேலாக புள்ளியில் குத்தப்படும் ஊசிகள் சக்தியூட்டுவற்காகவும் , (ENERGISING, TONIFICATION ) , சக்திப் பாதையின் எதிர்த்திசையில் தோலின் மேலாக புள்ளியில் குத்தப்படும் ஊசிகள் சக்தியை குறைப்பதற்காகவும் (SEDUCTION) பயன்படுத்தப்படுகிறது.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்