நீரோட்டம் பார்க்கும் கருவி
நான் வசிக்கும் ராஜபாளையத்தின் அருகே உள்ள முறம்பு என்ற இடத்தில் என்னுடன் பணிபுரியும் திரு குணபால் ஜெயவீரன் என்பவரின் மாமா திரு பால் வாசன் அவர்கள் நீரோட்டம்( WATER DEVINING ) பார்ப்பதில் விற்பன்னராக இருப்பதாகக் கேள்விப்பட்டு,அவரை சந்திக்க சென்றேன். எனது வீட்டிற்கு ஆழ்துளைக் குழாய்க் கிணறு தோண்டுவதற்காக நீரோட்டம் பார்த்துக் கொடுக்க வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.
அவரும் நீரோட்டம் பார்த்துக் கொடுக்க ஒப்புக் கொண்டு வீட்டிற்கு வந்தார் அவர் வைத்திருந்த நீரோட்டம் பார்க்கும் கருவி ஒரு பத்து விளக்குமாற்றுக் குச்சிகளை ஒன்றாகக் கட்டிய ஒரு சிறு விளக்குமாறு போல் இருந்தது. படம் (1)ல் காண்க!அது செவ்விளநீர் தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட குச்சிகளைத் தொகுத்துக் கட்டப்பட்டவை.
படம்1
அவர் அதில் கைக்கு ஐந்து குச்சிகளாக பிடித்துக் கொண்டு(தோராயமாக) என் மனைக்குள் நடந்தார். அவர் கையில் அந்தக் குச்சி சுழல்வதையும் அது எதிர்த்து’ டப் ‘ என்று அவர் மேல் அடிப்பதையும் கண்டு எனக்கு ஆச்சரியம் ஆனது.இந்தக் குச்சிகளை நீங்கள் சுழற்றுகிறீர்களா அதுவாக சுழல்கிறதா என்றேன்?அவர் உடனே அவரது இடது கையை என் வலது கையுடன் கோர்த்தார்.என் இடது கையில் குச்சியைக் கொடுத்துவிட்டு அவரது வலது கையில் மீதி குச்சியை பிடித்துக் கொண்டார்.என்ன ஆச்சரியம் என் கையில் உள்ள பாதிக் குச்சிகள் என் கையை மீறி சுற்றியது . எனக்கு ஆச்சரியம் ,இது போல் என் கையில் சுற்ற என்ன செய்ய வேண்டும் என்றேன்.(என் உடலின் உயிர்ச் சக்தியும் அவருடைய உடலின் உயிர்ச் சக்தியும் இணைத்து இதை நிகழ்த்தினார்.)
அதற்கு அவர் சொன்னார் 48 நாட்களுக்கு குறையாமல் தினமும் முளைக் கட்டிய பாசிப் பயறு சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றார்.அதன் பிறகு அவ்வாறே செய்து அந்த அற்புத சக்தியைப் பெற்றேன்.இது பற்றிப் பிறகு ஒரு பதிவு நிச்சயம் உண்டு.அது பற்றி வெளியாக வேண்டும் என்றால் அது உங்கள் கையில்!பின்னூட்டம் இல்லை என்றால் இது பற்றிய தகவல்களை வெளியிட மாட்டேன். ஏன் என்றால் இது உங்களுக்கு பிடிக்காதில்லையா?
கொஞ்சமாவது உங்கள் தேவை என்ன, நீங்கள் படிக்கின்றீர்களா? என்பது எனக்கு தெரிய வேண்டாமா?தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள் இல்லாவிட்டால் ‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று கூறி கடையை ஏறக் கட்டிவிட வேண்டியதுதான்!அதுவும் உங்கள் கையில் !
உங்கள் அனைத்துப் பதிவுகளையும் ஆவலுடன் படிக்கின்றேன், நிறைய விடயங்களை அறிந்துகொண்டு ஏனையவர்களுக்கும் சொல்வதுண்டு. நீங்கள் உங்கள் கடையை மூடத் தேவையில்லை. உங்கள் கடையில் அரிதான பொருட்கள் நிறைய உண்டு. எனவே இன்னும் பெரிதாக்கலாம்.
உங்களது பதிவுகள் மிகவும் நன்மை பயப்பன .
உங்கள் வலைப் பூவை நான் எனது தோழர் தோழியரிடம் பகிர்ந்து இருக்கிறேன் .உங்களது பணி மேலும் தொடர்ந்து சிறக்கட்டும்,பெரு நன்மை விளையட்டும்.நன்றி.
நன்றி வினொதினி,ஜாய் மாணிக்கா என் வாசக அன்பர்களாகிய ஆண்,பெண் என்ற பேதமில்லாமல் உங்கள் அனைவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் எனக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய டானிக், அது இல்லையேல் நான் வெறும் கூவாத குயில் ஆகிவிடுவேன்.இதே வார்த்தைகளை தன் மனைவியான விலாசவதியைப் பார்த்து 'மஹாகவி காளிதாஸ்'ல் காளிதாசன் இவ்வாறு கூறுவார்'பொன்னல்ல புவியல்ல புவியாழும் மன்னர் பெரும் எண்ணமெலாம் அறியாத தெதுவுமல்ல, மின்னி வரும் மெய்க்கவியின் சொல்லழகைக் காண்போர்தம் கண்ணில் வரும் ஓர் துளியே கவிஞருக்குப் பல கோடி'.கூவாத குயில் யாருக்குப் பிடிக்கும்.கூவும் குயிலாக வைத்திருப்பது உங்கள் விமரிசனங்களே! இப்படிக்கு என்றென்றும் நட்புடன் சாமீ அழகப்பன்
வினொதினி, ஜாய் மாலிக்கா,உங்களுக்கு என் நன்றி.இனி என் வலைப்பூவை பார்க்கும் அன்பர்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும் வரைக்கும் எனது வலைப்பூ வெளியீடு உங்க்ளுக்காக காத்திருக்கும்.
இப்படிக்கு
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
வினொதினி, ஜாய் மாலிக்கா,உங்களுக்கு என் நன்றி.எனது வலைப் பூவைப் பார்க்கும் எங்களது பா ண்டியூர் சித்த ஞான சபையைச் சேர்ந்த அன்பர்,என் மேற்கண்ட அறிவிப்பைப் பார்த்தவுடன்.கைபேசியில் தொடர்பு கொண்டு,ஐயா பிறர் கருத்துக்கு செயல்பட ஆரம்பித்தால் கழுதையைத் தூக்கி சுமந்த முல்லாவும் ,அவ்ர் பேரனும் கதை ஆகும் என்று நீங்களே கூறிவிட்டு கருத்துக்களுக்கு எதிர் பார்த்தால் ஒன்றும் நடக்காது எனவே தொடர்ந்து எழுதுங்கள் என்று கூறிவிட்டு, கடைசியில் நானும் இது வரை கருத்துக்கள் தெரிவித்ததில்லை.அதை தெரிவிக்க வேண்டும் என்று தோன்றவில்லை.இனி தெரிவிக்கிறேன் என்றும் கூறினார்.அது சரி எனப் பட்டதால் இனி எனது வலைப்பூ வெளியீடு உங்களுக்காகவே எழுதப்படும்.எனதுவலைப்பூ எனது வித்துவத்துவத்தை மட்டும் காட்டுவதாக இல்லாமல்,உங்கள் கருத்துக்களையும் வெளிப்படையாக சொன்னால்தான், அது உங்களுக்கு பயனுள்ளதா இல்லாததா என்று நான் மட்டுமல்ல, வலைப்பூ வாசிக்கும் அன்பர்களும் அது புரியும்.
இப்படிக்கு
என்றென்றும் நட்புடன்
சாமீ அழகப்பன்
Hi Alagappan Sir,
Great Article. Meet you at thoothukudi on 19-11.
Thanks
கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஸ்ரீகாந்த் அவர்களே,
தங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்.அதற்கு முன்னால் திரு மு.ஆ.அப்பன் அவர்களுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துவிடவும்.இது மிக மிக முக்கியம்.இல்லாவிட்டால் அவர் தகுந்த ஏற்பாடுகள் செய்ய இயலாது.அழகுத் தமிழில் எழுத அருமையான தமிழ் எழுதி கீழே கொடுத்துள்ளேன் அடுத்த முறை கருத்துரை எழுத அதை உபயோகிக்கவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தங்கள் பதிவுக்கு நன்றி, தொடரவும்,
மிக்க நன்றி திரு ஆதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி ஆதி அவர்களே!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் அய்யா, 48 நாட்களுக்கு முளைக் கட்டிய பாசிப் பயறு சாப்பிட்டுவிட்ட பிறகு தங்களுக்கு எப்படி நீரோட்டம் பார்க்கும் அதிசய சக்தியின் ஆற்றலை பெற்றீர்கள்? என்பதை பற்றி விளக்கவும். ராகவன்.
Visited ur site recently only. Going thru all the topics one by one. Very useful info to public. Hope people will utilize and enjoy this life. Keep posting it. BTW how did u get the power to find the underground water. Please share it.
All the best for ur postings.
-Raviii
கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ரவீ அவர்களே,
முதன் முதலில் நான் எனது பதிவை பதிப்பிப்பது மிகக் கடினமாக இருந்தது.மக்களைப் படிக்க வைக்கவும்,அனைவர் கையில் இது போய்க் கிடைப்பதற்கும் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது.கடவுளின் பேரன்பினால் எல்லா விஷயங்களும் தெளிவுபட்டது.{BTW how did u get the power to find the underground water. Please share it. All the best for ur postings.}இந்தக் கேள்விக்கு ஒரு பதிவு இட இருக்கிறேன்.விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Good article on natural food! I enjoy the goodness of being vegetarian for the past 7 – 8 years.
Thanks.
Ahoi there, just wanted to say how great this website is!
very nice
கருத்துரைக்கு நன்றி திரு சாமி அவர்களே,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம்!
//அதற்கு அவர் சொன்னார் 48 நாட்களுக்கு குறையாமல் தினமும் முளைக் கட்டிய பாசிப் பயறு சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றார்.அதன் பிறகு அவ்வாறே செய்து அந்த அற்புத சக்தியைப் பெற்றேன்.இது பற்றிப் பிறகு ஒரு பதிவு நிச்சயம் உண்டு//
முளைகட்டிய பாசிப்பருப்பு பற்றிய தங்களின் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
சற்று மனமிரங்கக் கூடாதா?
சந்தோஷம்.
அன்புடன்,
செ.சீனிவாசன்
அன்புள்ள திரு செ சீனிவாசன் அவர்களே,
///முளைகட்டிய பாசிப்பருப்பு பற்றிய தங்களின் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.///
பதிவு விரைவில் வெளியிட முயற்சி செய்கிறோம்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பருக்கு வாழ்த்துகள்.தொடரட்டும் உங்கள் அன்பு பதிவுகள்.மலேசியாவில் இருந்து தமிழகம் வரும் போது தங்களைக் காண வேண்டும்.முழு முகவரியும் தொலைபேசி எண்களையும் தந்து உதவ வேண்டும்.நன்றிகள் உரித்தாகட்டும்.
அன்புள்ள திரு சங்க்கீரன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் ,அலைபேசி எண்ணையும் கருத்திரையில் இருந்து நீக்கிவிட்டோம்.உங்களுக்கு எமது அலைபேசி எண்ணை தங்கள் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளோம் . தொடர்பு கொள்க.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்