கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -2)

கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும்வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் –2)
எல்லா கோவில்களிலும் ஒவ்வொரு மூலிகை  பிரசாதமாக  கொடுக்கப்படுகிறது. ஒவ்வோர் மூலிகைக்கும் ஒரு சிறப்பியல்பு உள்ளது. முன்பு ஆரோக்கியத்திற்கும் கோவில் ஓர் இருப்பிடமாக இருந்துள்ளது.

கோவில்களில் அடிக்கப்படும் பூங்காவி கிருமிகளை அழித்தொழிக்கும். தீய பூச்சிகளை நெருங்க விடாது. முன்னால் பொங்கலன்று வீடுகளுக்கும் பூங்காவி அடிக்கும் பழக்கம் இருந்தது.
சிவன் கோவிலுக்குப் போனால்,அங்கே வில்வம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. சிவனுக்கு குழந்தைகள் இருக்கிறது. எனவே குழந்தைகள் வேண்டுமா?வில்வத்தை சாப்பிடுங்க குழந்தை பிறக்கும்.
வில்வம் மேகரோகங்களைத் தீர்க்கும்.(மேகங்கள் 21,அவற்றுள் ஒன்று மதுமேகம்,என்றழைக்கப்படும் . சர்க்கரை நோய்,பால்வினை நோய்களும் மேகத்தின் கீழேயே வரும்,மேகம் ஓரிடத்தில் நிலையாக இல்லாமல் அலைவது போல மேகங்கள் உடலெங்கும் அலைந்து , அதன் நோய் குறிகுணத்தைக் காட்டும்.
இது 21 தலை முறைக்கு {ஞானமும் இப்படியேதொடர்ந்து வரும் மேகரோகங்களை  நம் தலை முறையில் அனுபவிக்கவில்லை என்றாலும் ( CARRIER ) , அடுத்தடுத்த பின்வரும் தலைமுறைகளுக்கு போய்ச் சேர்ந்துயாருக்காவது இடர் அளிக்கும்) எனவே பெற்றோர்கள் வில்வம் சாப்பிட்டால் முன்னோர்கள் கொண்டுள்ள மேகரோகங்களில்லாமல்பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
சிவன் பழைய பாவத்தைத் தீர்க்கிறாரோ இல்லையோ.வில்வம் முன்னோர் செய்த பழைய பாவத்தையும்   தீர்க்கும்,பல தலைமுறை தொடரும் வியாதியையும் தீர்க்கும்.(இன்னோர் முக்கிய தகவல் மஹா வில்வம் என்று ஒன்று இருக்கிறது.அது கேன்சரையும் குணமாக்கும் வல்லமை வாய்ந்தது.)
மஹா வில்வம்
  
விஷ்ணு கோயிலுக்கு செல்வோம்.அங்கே என்ன  கொடுக்கிறார்கள். விஷ்ணுவுக்கு குழந்தைகள் இருக்கிறதாஇல்லை.குழந்தைப் பிறப்பை தள்ளிப் போட வேண்டுமாதுளசி சாப்பிடுங்கள்.அந்த விந்தணு உற்பத்திக்கு செலவிடப்படும் ஜீவ சக்தி மீதம் ஆவதால,அந்த ஜீவ சக்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உபயோகப்படுவதால்காய்ச்சல் உடல் வலி சளி போன்றவை குணப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகைப் பிரயோகத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்தப்படுகிறது. இந்த துளசி இயேசு கிறித்துவின் சமாதியில் (கபாலக் குகையில்) வளர்ந்துள்ளதை எனது MEL(MANKIND ENLIGHTMENT LOVE) குருவான SISTER அமலாவதி அவர்கள் கூறியுள்ளார்.
துளசி
  கண்களில் உள்ள வட்டத்திற்கு நந்தி வட்டம் என்று பெயர்.கண்களிலும்,கண்கருவிழியிலும் ஏற்படும் எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் வன்மை வாய்ந்தது.எல்லா சிவன் கோவில்களிலும் இருக்கும்.அடுக்கு நந்தியாவட்டை என்றும்,சாதாரண நந்தியாவட்டை என்றும் இருவகை உண்டு. இதில் சாதாரண நந்தியாவட்டைக்கு அதிக மருத்துவ குணங்கள் உண்டு. இதன் பூக்களை இரவில் தண்ணீரில் போட்டு,காலையில் எழுந்தவுடன்,அந்தப் பூக்களை எடுத்துக் கீழே போட்டுவிட்டு,அந்தப் பூக்கள் ஊறிய தண்ணீரில் கண்களை கழுவி வந்தால்,கண்ணில் உண்டாகும் கண்குற்றங்கள்(96 வகை என திருநேத்திர சிந்தாமணி கூறுகிறது) அனைத்தும் தீரும்.கண் வலியும் தீரும். 

நந்தியாவட்டை



நீலாஞ்சனக்கல் என்பது அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களும் கண்கள் நன்றாகத் தெரிவதற்காக கண்களின் கீழ்ப் பட்டையிலும்,மேல் பட்டையிலும்,புருவத்திலும் தீட்டி வந்துள்ளனர்.அபிராமி அம்மையை அஞ்சன விழியாள் என்று அழைப்பர்.

இந்த நீலாஞ்சனக்கல்லை பன்னீருடன் உரசி கண் உள்பட்டை,மேல் பட்டை போன்ற இடங்களில் தடவி வந்தால் இறக்கும் வரை கண்பார்வை மங்காமல் இருக்கும்.  

இந்த நீலாஞ்சனக்கல்லை முஸ்லீம் அன்பர்கள் சுருமாக்கல் என்று அழைப்பர்.குர் – ஆன் ல் இதை ஒவ்வொரு தொழுகையின்போது கண்களுக்குத் தடவுவது தலையாய கடமைகளாய் சொல்லி வைத்துள்ளார்கள்.
ஆனால் தற்போது கடைகளில் விற்கப்படும் கண்மை காரீயத்தை அடிப்படையாகக் கொண்டது.இதனால் மூளையின் செயல்பாடு வெகுவாக பாதிக்கப்படும். கண்பார்வையும் வெகுவாகப் பாதிக்கப்படும். எனவே கீழ்க்கண்ட கண்மையை உபயோகித்தால் இது போன்ற மோசமான விளைவுகள் இல்லாமல் நல்ல விளைவுகள் உண்டாகும்

நீலாஞ்சனக்கல்

மேலும் நீலாஞ்சனக் கல் பற்றி தெரிந்து கொள்ள சித்தர் ராச்சியம் தோழி அவர்களின் இடுகையைப் பார்வையிடவும்.
http://siththarkal.blogspot.com/2010/10/blog-post_25.html
 மஞ்சள் கரிசலாங் கண்ணி

கண்மை – :தூய்மையான வெள்ளைத் துணியில்(மஞ்சள் கரிசலாங் கண்ணி,அல்லது வெள்ளைக் கரிசலாங்கண்ணிச் சாறு) கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, மீண்டும் கரிசாலைச் சாறுவிட்டு உலர்த்தி, இப்படி பல தடவை செய்து பிறகு அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை சிற்றாமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.
சிற்றாமணக்கு விதை

மேலும் முன் பதிவில் கூறிய மூலிகைகள் பற்றி அன்பர்கள் எனது அடுத்த பதிவான காய்ச்சல்,கண்வலி,வீட்டில் உள்ளவர்களுக்கு வராமலும், வந்தால் பரவாமல் தடுப்பது பற்றி (பாகம் -3) என்ற பதிவைப் பார்க்கவும்.


கொள்ளை நோயின் தூதுவர்கள் நம்மை ஒன்றும் செய்யாமல் இருக்க மேன்மேலும் வழிகள் தரப்படும்.

மிக்க நன்றி

என்றென்றும் பேரன்பினால்

அன்பன்
சாமீ அழகப்பன்