சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(6)

கருப்பட்டியின் நன்மைகளும் சீனியின் கெடுதல்களும்

கருப்பட்டி

நான் 2001ம் ஆண்டு ராஜ் T.V.யில் ஒளிபரப்ப தொழிலாளர் தினமான மே ஒன்றாம் தேதி 2001வருடம், நான் பல விடயங்களைத் தயார் செய்து கொண்டு போனேன்.அதில் கடைசியாக நானே ஒளி பரப்ப ஏற்றவை என்று, முடிவான முடிவுக்கு குறிப்பிட்ட ஏழு விடயங்களை தயார் செய்து கொண்டு போனேன்.

அந்த ஏழு விடயங்களில் இரண்டை மட்டும் ஒளி பரப்பினார்கள்.அதில் ஒன்று (1)என் நாடித்துடிப்பை நிறுத்திக் காண்பித்தது.மற்றொன்று(2)மூலிகைகளின் உதவியால் கண்ணாடியை வாயில் போட்டு மென்று காண்பித்தது.ஒளி பரப்பப்பட்ட அந்த இரு விடயங்களை பின்னொரு சமயம் ஒளிக்காட்சியுடன் வலைப் பூவில் இடுகையாக இடுகிறேன்.இப்போது அந்த ஏழுள் ஒளிபரப்பப்படாத ஒரு விடயம் பற்றி என் வலைப்பூ அன்பர்களுக்கு சொல்ல விழைகிறேன்.

கந்தகப் பொடியை சாம்பிராணிக் கரண்டியில் தீக் கங்குகளை வைத்து புகை போட்டு அந்தப் புகையில் ரோஸ் நிறம் உள்ள , ஒரு ரோஜாப் பூவைக் காண்பித்தால்,ரோஜாப்பூ கந்தகத்தின் விஷத்தன்மையால் வெள்ளையாக மாறிவிடும்.

பனைவெல்லத்தை (பனங் கருப்பட்டியை) இதே போல் புகை போட்டு, மீண்டும் அந்த வெள்ளையான ரோஜாவை கருப்பட்டியை நெருப்புக் கங்கில் இட்டதால் வரும் புகையில் காட்ட,கந்தகத்தால் ஏற்படுத்தப்பட்ட நஞ்சின் காரணமாக, நீங்கிய தன் பழைய நிறமான ரோஸ் நிறத்தை மீண்டும் ரோஜா அடைகிறது. கருப்பட்டிப் புகை கந்தகத்தால் ஏற்படுத்தப்பட்ட நச்சை நீக்குவதால் ரோஜா தன் நிறத்தை அடைகிறது.

மேற்கண்டதை,மந்திரவாதம்(HERBAL MAJIC) போல் இதை நீங்களும் செய்து பார்க்கலாம்.மற்றவர்களுக்கும் வேடிக்கை காட்டலாம். இது போலவே மூலிகைகளை வைத்துச் செய்யும் வித்தைகளை கண்கட்டு வித்தை இரண்டாயிரம் என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
எனது நண்பரின் தாய் இறந்து போனபோது எரியூட்டும் நிகழ்வுக்கு,போய் இருந்தேன்.வானம் மப்பும் மந்தாரமும் ஆக இருந்தது.மழை சற்று சிறு தூற்றலாய் வேறு விழுந்து கொண்டிருந்தது.

சுடு காட்டில் பிணம் எரிக்க மட்டும் சிறு கூரை மட்டுமே இருந்தது.வேறு ஒதுங்கக் கூட இடம் கிடையாது.அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிணத்தை எரிக்க பிண மேடையில் வைத்து மண்ணெண்ணெய் போன்றவற்றை துணிகளில் நனைத்து பிணம் நன்றாக எரிய, எல்லாப் பக்கமும் வைத்து பற்ற வைத்தார்கள்.

அப்போது மழை பெய்ய ஆரம்பித்தது. மழை பெய்ய ஆரம்பித்தவுடன், பிணம் எரிக்க வைத்த நெருப்பு தணிய ஆரம்பித்து அணையும் நிலைக்குப் போனபோது,வெட்டியான் சீனியை எடுங்க,சீனியை (வெள்ளைச் சர்க்கரை என்றும் சென்னையில் அஸ்கா சர்க்கரை என்றும் அழைக்கப்படுவது)எடுங்க என்று அவசரப்படுத்தினான். உடனே சீனியை எடுத்து அந்தப் பிணம் எரியும் நெருப்பில் தூவியதும்,அந்தப் பெரு மழையிலும் நெருப்பு சட சட வென தாவி எரிய ஆரம்பித்தது.

சாதாரணமாக எட்டு அல்லது ஒன்பது மணி நேரம் எரியும் பிணம் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் சுத்தமாக வெந்து சாம்பலாகிவிட்டது.அதே சமயம் கொஞ்சம் கருப்பட்டியை எந்த நெருப்பில் இட்டாலும் அது நெருப்பை அணைக்கும் செய்கையைத்தான் செய்யும்.புரிகிறதா!

இது போலவே சீனி நம் உடலில் உள்ள வெப்பத்தை கடுமையாக கிளர்ந்து எழ வைத்து,உயிரோடு பொசுக்கும் வேலையை திறம்பட செய்து சாப்பிட்டவரை ஒரு வழி செய்துவிடும்.பிறகு அவர் உயிரோடு எரிவது போலத்தான்.

ஆனால் கருப்பட்டியை(பனை வெல்லம் என்னும் கருப்புத்தங்கம்) உணவில் எப்படி சேர்த்தாலும்,நம் உடம்பில் சேர்ந்த நஞ்சை நீக்கி,உஷ்ணத்தை தணித்து உடலை உரம் பெறச் செய்யும்.

வெள்ளையாய் இருந்து உடலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் நஞ்சு வேண்டுமா! அல்லது கருப்பாய் இருந்து உடலை வளப்படுத்தும் கருப்பட்டி வேண்டுமா! நமது வலைப்பூ வாசக அன்பர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

நான் சீனியைவிட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது.அப்ப நீங்க!

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.