அல்லோபதி மருத்துவத்தின் அவலம்
புதிய தலைமுறை வாராந்தரி இதழில் வெளிவந்த கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். உண்மையில் தலைப்பு ” கசக்கும் அல்லோபதி மருத்துவம் ” என்று இருக்க வேண்டும்.ஏனெனில் இதில் விவரிக்கும் அனைத்து விடயங்களும் அல்லோபதி மருத்துவ அவலங்களையே விவரிக்கிறது.அதை நமது மச்ச முனி வலைத்தள வாசகர்களுக்காக பார்வைக்கு வைக்கிறோம்.
மேலும் அரசாங்கமும் பெரும் கொள்ளை நோய்கள் பெருகி மக்கள் அனைவரும் துன்புறும் போது மட்டுமே சித்த மருந்துகளை பரிந்துரைக்கிறது .எடுத்துக்காட்டாக சிக்குன் குனியா காய்ச்சலின் போது நில வேம்புக் குடி நீரையும் , டெங்கு காய்ச்சலின் போது நில வேம்புக் குடி நீரையும்,பப்பாளி இலைச் சாறையும், மலைவேம்புச் சாறையும் உபயோகிக்க மக்களுக்கு விளம்பரம் செய்கிறது.
இயற்கையாக உண்டாகும் வியாதிகளுக்கே சித்தவைத்தியத்தை நம்பியே அரசும் மக்களும் உள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது சீனா தனது தங்க முத்து மாலைத்திட்டம் என்பதை செயல்படுத்தி நம் நாட்டைச் சுற்றி பல இராணுவத்தளங்களை உருவாக்கிவிட்டது, அதன் பின் நமது நாட்டிற்குள் ஊடுருவி உட்கார்ந்து கொண்டு சண்டித்தனம் செய்கிறது. இந்திலையில் ஏழாம் அறிவு என்ற சினிமாவில் கூறியுள்ள படி ஒரு பயோ வார் (BIO- WAR ){கிருமிகளால் தொடுக்கப்படும் போர்}நம் மீது தொடுக்கப்படுமானால் அப்போது உண்டாகும் வியாதிகளை சித்தர்கள் கண்ட சித்தவைத்தியத்தால் மட்டுமே காக்க முடியும் என்பதை உறுதிபட தெரிந்து கொள்ளலாம்.
அல்லோபதி மருந்தால் எந்த வியாதியையும் கட்டுப்படுத்த முடியாது என்று அரசுக்கு நன்றாக தெரிகிறது.ஆனால் அல்லோபதி மருந்துகளின் உலகளாவிய மார்க்கெட் எளிதாக யாரையும் விலைக்கு வாங்கி குப்பைகளை நம் நாட்டில் கொண்டு வந்து தள்ளிவிடுகிறது.பல பன்னாட்டுக் கம்பெனிகள்,அவர்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அந்தந்த நாடுகளில் தயார் செய்து நமது மக்கள் தலையில் கொண்டு வந்து கட்டுகின்றன.
ஏனெனில் அந்த மருந்துகள் நம் நாட்டில் தடை செய்யப்படவில்லை. மாறாக பீட்டியாட்ரிக் ட்ராப்ஸ் ஆகக் கூட கொடுத்து வருகிறோம்.எடுத்துக்காட்டாக பாராசிட்டமால் (பாரா அசிட்டோ அமினோ பினைல் )நம்மைச் சுற்றியுள்ள 23 நாடுகளிலும் , உலக நாடுகள் பலவற்றிலும் (அமெரிக்கா உள்பட ) தடை செய்யப்பட்ட மருந்து என்பது உங்களுக்கு தெரியுமா???? அமெரிக்காவின் க்லொக்ஸோ கம்பெனி அமெரிக்காவில் பாராசிட்டமால் தயார் செய்து ஒரு மாத்திரை கூட அமெரிக்காவில் விற்காமல் இந்தியா போன்ற நாடுகளில் கொண்டு வந்து விற்கின்றன. நாம்தான் எதை வேண்டுமாலும் யோசிக்காமல் சாப்பிடுவோமே ?????
நன்றி :- புதிய தலைமுறை
புதிய தலைமுறை இதழில் இப்படிப் பல சமுதாய விழிப்புணர்வுக் கட்டுரைகள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன என்பதை இங்கே மனமார பாராட்டவும் யாம் செய்கிறோம். படித்து அனைவரும் பயனுறுங்கள்.
மதிப்பிற்குரிய சாமி அய்யா
மேற்கண்ட தகவல் 100{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007} உண்மை. இன்று பாரம்பரிய மருத்துவம் செய்பவர்களுக்கு பல கஷ்டங்களை சில விஷமிகள் செய்துகொண்டிருக்கிறார்கள். இது நம் வருங்கால சமுதாயதை சீர்குலைக்க வழி அமைக்கும்.
அன்புள்ள திரு திருநாவுக்கரசு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இதைவிட மேலும் ஒரு முக்கிய விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறொம்.தற்போது கட்டுரையை விரிவாக்கம் செய்துள்ளோம்.படியுங்கள்.இது இப்போதுள்ள சமுதாயமே சீர் குலைய வழி வகுக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள ஐயா அவர்களுக்கு, மிக்க நன்றி. உண்மையில் இந்த தகவல் என்னை மிகவும் பயமுறுத்துகிறது . தகவல்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. புதிய தலைமுறைக்கும் நன்றி.
அன்புடன்,
சுமதி
அன்புள்ள திரு சுமதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
இதற்கெல்லாம் பயப்படாதீர்கள்.நம்மைக்காக்க சித்தர்கள் காத்திருக்கிறார்கள்.அவர்களைச் சரணடையுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தாங்கள் சொன்னது போல் ஆகாச கருடன் வேர் திரு கண்ணன் அவர்களிடம் வாங்கி வீட்டில் வைத்தேன், அவர் இரண்டு வேர் அனுப்பி இருந்தார், ஒன்றை வாசல் அருகிலும்(உள்ளே) மற்றொன்றை சாமி அறை முன்னும் கட்டி இருந்தேன், இரண்டும் நிறைய பச்சை நிற கிளைகள் விட்டன, ஆனால் தற்பொழுது சாமி அறை முன் கட்டியிருந்த ஆகாச கருடன் வேர் காய்ந்து கிளைகள் இல்லாமல் காய்ந்து சுருங்கி விட்டது, இதை எப்படி எடுத்துகொள்வது, தங்கள் கருத்து,,,
அன்புள்ள திரு செந்தில் குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
உங்களுக்கு வைக்கப்பட்ட பில்லி சூனியத்துக்கோ ,ஏவலுக்கோ அந்த ஆகாச கருடன் தன் இன்னுயிரைத் தந்து தங்களிக் காத்து இருக்கும்.எனவே தாமதிக்காமல் இன்னும் ஒரு கிழங்கை வாங்கி மீண்டும் அதே இடத்தில் கட்டுங்கள் .அது உங்களைக் மேலும் காக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமீ அழகப்பன் அய்யா,
அல்லோபதி மருத்துவத்தின் அடிப்படையே தவறு தான் என்பதை தங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும். ’நோய் முதல்’ நாடாமல், நோய்க்கு உண்டான அறிகுறிகளை கட்டுப்படுத்துவது மட்டுமே மருத்துவம் என்ற தவறான அடிப்படையில் இயங்குகிறது. மருத்துவம் என்ற பெயரில் சிறு நோயாளர்களை பெரும் ஆபத்தில் தள்ளி விடுகிறார்கள். நம்மை ஆண்ட வெள்ளையன் அவன் வியாபரத்திற்காக அல்லோபதி மருத்துவத்தை கொண்டு நம் நாட்டு மருத்துவத்தை அழித்தான். தற்போதைய ஆட்சியாளர்களும் கோடாரிக் காம்புகளாக நம் மருத்துவத்தை அழிப்பது கொடுமையிலும் கொடுமை.
சாதாரனமாக வயிற்று எரிச்சல் என்று மருத்துவமனைக்கு (கசாப்பு கடைக்கு) சென்ற என்னை, ஒரு நாளைக்கு 30 மாத்திரைகள் சாப்பிடச் சொல்லி, என் உள்ளுறுப்புகள் அனைத்தும் கெடுத்து விட்டார்கள். நல்ல சமயத்தில் சுதாரித்ததால் உயிர் பிழைத்தேன். யோகா, தியானம், சித்த மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவம் கொண்டு உடலை மறுசீரமைப்பு செய்து வருகிறேன். கோட் அனிந்த வெள்ளைக்காரன் உள்ளூர் அரசியல்வாதிகளை வைத்து நம் மக்களை ஏமாற்றும் காலம் இன்னும் எத்தனை காலம் தான் தொடருமோ!!!!!!
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று தான் பாடத் தோன்றுகிறது.
அது சரி! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இது அல்லோபதி மருத்து வத்தால் பாதிக்கப் பட்டவனின் பொறுமல்.
வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!
என்றும் அன்புடன்,
மா.சத்தியமூர்த்தி.
அன்புள்ள திரு சத்திய மூர்த்தி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மற்றவருக்கும் இதை எடுத்துரைப்போம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்
அன்புடன்
வெங்கட்
சங்ககிரி
அன்புள்ள திரு வெங்கட் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
வணக்கம். கடந்த 24/04/13புதன் அன்று என் மனைவி,குழந்தைகளை அழைத்து வர என் மாமனார் வீட்டிற்க்கு (தொட்டியம் சர்ச் எதிர்ல் ) சென்றிருந்த போது என் மனைவியின் குடிகார தம்பி அவன் மச்சினன் ஆகியோர் நன்றாக குடித்துவிட்டு என்னை தாக்கி என் 3 பவுன் நகையை திருடி வைத்துகொண்டு அரிச்சந்திரன் போல போலீஸ் ஸ்டேஷன் ல் பேசி திருடவில்லை என்று மறுத்துவிட்டனர். போலீஸ் ம் அவர்களுக்கு துணை போகிறது. நான் அடிபட்டு மூக்கு உடைந்து 7 நாட்களுக்கு மேல் GH ல் இருந்து treatment எடுத்து நகைய மீட்க நடவடிக்கை எடுத்தால் போலீஸ் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை. என் நகையை மீட்க தங்கள் ஆலோசனை தேவை. உங்கள் தாத்தா திருடனை தண்டித்த விதம் பற்றி எழுதி இருந்தீர்கள். என் 3 பவுன் துபாய் செயின் கழுத்தில் இல்லாமல் நான் மிகவும் துன்பத்தில் உள்ளேன். ஆகையால் உங்கள் உதவியை எதிர்பார்கிறேன். நன்றி.
அன்புள்ள திரு கே ஆனந்த் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
நீங்கள் கூறியதைக் கேட்டதும் என். எஸ் .கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. “ காதுக் கம்மல் வேண்டுமா??? இல்லை செகுடாப் போவேன் என்குதா ??? ” என்பார்.துபாய் தங்கச் சங்கிலி இல்லாவிட்டால் கழுத்து தலையில் நிற்க மாட்டேன் என்கிறதா??? இந்த பூமியில் பிறந்ததுவும் நிர்வாணம்,இறப்பதுவும் நிர்வாணம்.இதில் நடுவில் என்ன இந்தப் பொருட்களால் வருவதென்ன??? அவ்வையார் கூறுவார் “ பத்தாவுக்கேற்ற பதிவிரதை உண்டானால் எத்தாலும் கூடி இருக்கலாம், சற்றேனும் ஏறு மாறாக இருப்பளேயாயாமாகில் கூறாமல் சன்னியாசங் கொள் ”.கணவன் செய்யும் காரியங்கள் தவறே என்று சமுதாயத்தால் ஒத்துக் கொள்ளாத காரியங்கள் எவை செய்ததாகத் தெரிந்தாலும் , தெரியாவிட்டாலும் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத மனைவி உண்டானால் எப்போதும் ,எந்த விளைவு ஏற்பட்டாலும் இணை பிரியாமல் கூடி இருக்கலாம்.இதற்கு சற்றே ஏறுமாறாக இருந்தால் அவளிடம் மறுமொழி கூறாமல் சன்னியாசத்தை ஏற்று துறவறம் நாடிவிடு ” என்கிறார். உங்களால் முடிந்தால் எதை துறக்க வேண்டுமோ அதை துறந்துவிடுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,
நானும் அல்லோபதி மருத்துவம் சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன், ஆயுர்வேதா, சித்தா,யுனானி என்று ஆர்வம் காட்டியவன். ஆனால் நடைமுறையில் மேற்கொள்வது கடினம். எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தால் அதை பற்றி சிந்தித்து கொண்டு இருக்கலாம். நான் கடந்த 24/4/13 ல் பலமாக தாக்கப்பட்டு , செயின் ஐ பறிகொடுத்து இருந்த நிலையில் அல்லோபதி மருத்துவம் தான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. உடல் முழுவதும் வலி, ரத்த இழப்பு இருந்தது. போலீஸ் அல்லோபதி மருத்துவரின் கூற்றைத்தான் எடுத்துக்கொள்வர். இரண்டு புட்டங்களிலும் 2 ஊசி போட்டும், வலியும், ரத்தம் வழிவதும் நிற்காததால் மேற்கொண்டு ஒரு ஊசி குத்தினர். திருச்சி GH ல் மேலும் இரண்டு புட்டங்களிலும் ஊசி போட்டனர். IV INJECTION ல் antibiotic தொடந்து காலை, மாலை போட்டனர். இல்லாவிட்டால் எனக்கு மூக்கு வலி எடுத்துக்கொள்ளும். ஊசி போட்டால் தான் நன்றாக இருக்கும். IV ல் ஊசி போட்டது இரண்டு நாட்களில் அந்த இடத்தில் வலி இல்லாமல் போய்விட்டது. ஆனால் இன்னும் 11 நாட்கள் கழிந்த பின்னும் வலது புட்டத்தில் ஊசி போட்ட இடத்தில் வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு நாளுக்கு ஆகும் மருந்து செலவு ரூ.100. இந்த மாதிரியான சூழலில் அல்லோபதி மருத்துவம் தான் என் போன்றவர்களுக்கு துணை செய்யும் வழியாக இருக்கிறது.
துறவு போவது எல்லோருக்கும் எளிதான சிறந்த வழியாக இருக்காது. நான் எனக்கும் என் மனைவிக்கும் இடையில் பிரச்னை வந்தவுடன் அலஹபாத் கும்பமேளா, காசி, கயா என்று ஊர், ஊர் ஆக சுற்றினேன். பல கோயில்கள் சுற்றினேன். ஒரு நாள் 9 கோயில்கள் தரிசனம் கண்டேன்.பல தெய்வத்தை வேண்டி என் வாழ்க்கையை சீரமைத்து தர வேண்டினேன். தற்போது மீண்டும் பலமாக தாக்கப்பட்டு, தங்க சங்கிலியை இழந்து விட்டு வருத்தப்பட்டு கொண்டுள்ளேன். வருத்தப்பட கூடாது, நீ வருந்தி அழுவது உன்னை அடித்தவர்களுக்கு கிடைத்த வெற்றி என்று என்னை பார்பவர்கள் எல்லாம் சொன்னாலும் என்னால் வருத்தப்பட முடியாமல் இருக்க முயயவில்லை. போலீஸ் துறையில் உள்ள SI எவ்வாறு அநியாயத்திற்கு துணை போகிறார் என்பதை நினைத்து இன்னும் வேதனை கூடுகிறது.
நான் சந்தித்த துறவிகள் வாழ்க்கையும் போராட்டமாகவே உள்ளது. அவர்களுடன் சில நாட்கள் இருந்து உள்ளேன். இப்பொழுதும் ஒரு துறவி அவர் இருக்கும் இடத்தில் எனக்கு எப்பொழுதும் ஒரு இடம் உண்டு என்று கூறியுள்ளார். ஆனால் மற்ற துறவிகள் வேண்டாம் துறவு வாழ்க்கை. கெட்டதில் இருந்து மீண்டு நல்ல வாழ்க்கையை தேர்ந்து எடுத்துகொள் என்று அறிவுரை கூறினர். போராட்டமாகவே உள்ளது என் வாழ்க்கை.
அரசு முயற்சித்தால் அன்றி நல்ல வழி நமக்கு கிடைக்காது. நாம் முயற்சி செய்யலாம். அரசும் நல்ல வழியில் செல்ல உதவ வேண்டும்.
அன்புள்ள திரு கே ஆனந்த் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
சாதாரணமான மனிதன் மன நிலையில் இருந்து பார்த்தால் உங்கள் வருத்தம் புரிகிறது.ஆனால் ஞான நிலையில் இருந்து பார்த்தால் மனிதன் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று புரிகிறது.நீங்கள் ராஜாதான் , தற்போது பிச்சைக்காரன் வேஷம்தான் போட்டிருக்கிறீர்கள் என்று சொன்னால் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் நாம் சொல்வதைச் சொல்கிறேன்.புரிந்து கொள்ள முடிந்தால் புரிந்து கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
thiruvalruku vanakkam vunkalin sevai thodara vendom, vunkalin pathivai neenda natkalaga patithu varugiren, anal enakku pathividom vasathi yillai, enakku email accounts vasathi ellai, appadiea erunthalum athu viraivil neekkapadogirthu karanum nan neenda edaiveli vittu vidugrean, nan enathu mobile phone lea thnkalin pathivai padithuvidugrean enimal thavaramal tmizhil pathivida muyarchi saigiran ennai pontra elainnergalukku thangallin pathivu oru varaprasadam agum, thangalum thangalin stramum nallamudan valla eraivanidam vendukiran, thodarum R.VIJAYARAGAVAN
அன்புள்ள திரு ஆர்.விஜயராகவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
தமிழில் இனிமேல் எழுதுகிறேன் உறுதி மொழிக்கு நன்றி.தமிழ் வாழ பாடுபடுவோம்.தமிழ் நம்மை வாழ வைக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா
நான் சொரியாசிஸ் வியாதியினால் சிரமப்படுகிறேன். இதில் இருந்து விடுபட வழி சொல்லுங்களேன். ஆங்கில மருத்துவத்தில் விடுபட இயலவில்லை. தயவு செய்து விடை தாருங்கள். நன்றி.
அன்புள்ள திரு அருள்குமார் அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணனைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்