சர்க்கரை வியாதியை குணமாக்கலாம் ( பாகம் 7 )

சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம் 6) ஐ படித்த பின்னர் இந்தப் பதிவைப் படிக்கவும்.என்றால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

kids-dr.-killer-driller-costume

இந்தப் பதிவின் நோக்கம் அல்லோபதி மருந்துகளைக் குறை சொல்வது நோக்கமல்ல.ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகள் என்று சொல்லப்படும் கொடும் விளைவுகளில்  இருந்து அப்பாவி மக்களை காப்பாற்றுவதே நோக்கம் .ஒவ்வொரு அல்லோபதி மருந்தை நீங்கள் உள்ளுக்கு சாப்பிட எடுக்கும் போதே அந்த அல்லோபதி மருந்தின விஷம் உடலில் உள்ள ராஜ கருவிகளை கெடுப்பதன் மூலம் ஒரு 25 அல்லது 30 வியாதிகளுக்கு உங்கள் உடலின் உள்ளே வர அழைப்பு கொடுத்துவிடுகிறீர்கள் என்பதை தெளிவாக உணருங்கள்.

அல்லோபதி மருத்துவத்தின் பக்க விளைவுகள் என்னும் (சிறு வியாதிக்குக் கொடுக்கப்படும் மருந்துகளும்  பெரும் வியாதிகளையோ உண்டாக்கும் )கொடூரத் தன்மையையும் , அதன் திறனில்லாத தன்மையையும் , அதற்கு ஒரு நோயையும் குணப்படுத்தாத திறனற்ற மருத்துவம் என்பதையோ, நம் நாட்டில் படிக்காத பாமரனுக்குப் புரியாமல் இருந்தால் பரவாயில்லை. படித்த மேதாவிகளுக்கும் புரிவதில்லை.இதுதான் மிகக் கொடுமை.

இதைவிடக் கொடுமை எம்முடன் பணி புரியும் ,ஒரு சக பெண் பொறியாளரின் தாயார் ஒரு அரசு சித்த மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.அவர் அவரது சர்க்கரை நோய்க்கும் , இரத்த அழுத்தத்திற்கும் ஆங்கில மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறார், என்று கேள்விப்பட்டதும் மிக, மிக நொந்தே போனோம். அவ்வளவு தூரம் அரசிலுள்ள சித்த மருத்துவர்களும்  , அல்லோபதி மருந்துகள்தான் சிறந்தவை என்று பயிற்றுவிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்கள்.தனக்கே சித்த மருந்துவம் செய்து கொள்ளத் தெரியாத இவர்கள் எப்படி அடுத்தவர்களுக்கு சித்த மருத்துவ சிறப்புக்களைக் கூறுவார்கள், நம்பிக்கையோடு சித்த மருத்துவம் புரிவார்கள்.

வெறும் உடற்கூறுகளைப் பற்றி படிப்பது மருத்துவம் ஆகாது.அதாவது பிணங்களை அறுத்துப் பார்ப்பது மட்டும் மருத்துவம் ஆகாது. உடலில் என்ன நடை பெறுகிறது.இயற்கை நம் உடலை எப்படி வைத்துள்ளது. அதில் மருந்துகள் எப்படி செயல்படுகின்றன என்பது ஒரு இயற்கை சார்ந்த அறிவு.இந்த அறிவைப் பெற நம் பார்வையை இயற்கை மீது செலுத்தி அதனுடன் ஒன்றிணைந்தால் போதும்.

ஹோமியோபதியின் தந்தை என்றழைக்கப்படும் மேன்மை தங்கிய மருத்துவர் ஹானிமன் முதன் முதலில் ஒரு அல்லோபதி மருத்துவர். அவர் அல்லோபதி மருத்துவத்தால் எந்த நோயையும் குணமாக்க முடியாது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதன் பின்னர் பிழைப்பிற்காக நிலம் வாங்கி விற்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.

அந்தப் பணிக்காக பல்வேறு இடங்களுக்கு செல்லும் போது ஒரு கிராமத்தில் வெயிலில் அலைந்து திரிந்துவிட்டு வந்து ஒரு குளத்தில் உள்ள தண்ணீரை,தாகம் தீரக் குடித்தார்.உடனே சற்று நேரத்திற்குள் அவருக்கு காய்ச்சல் வந்துவிட்டது.உடனே அந்தகிராமத்தில் உள்ளவர்களிடம், காய்ச்சலுக்கு அந்தக் கிராமத்தில்  மருந்துகள் ஏதேனும் கிடைக்குமா என்று விசாரித்தார்.

’’இந்தக் கிராமத்தில் மருந்துகள் ஏதும் கிடைக்காது.இந்தக் குளத்தில் உள்ள தண்ணீரைக் குடித்தீர்களா? ’’ என்று கேட்டனர் அக்கிராமத்தில் உள்ள மக்கள்.மருத்துவர் ஹானிமனும் ’’ஆம் ” என்றார்.அப்போது அந்தக் கிராமத்திலுள்ள மக்கள் சொன்னார்கள் “ இந்தக் குளத்தில் உள்ள தண்ணீரைக் குடித்துக் காய்ச்சல் வந்தாலும் சரி, வெறுமனே எங்களுக்குக் காய்ச்சல் வந்தாலும் ,அந்தக் குளக்கரை ஓரத்தில் உள்ள மரப்பட்டையை எடுத்துக் கஷாயம் செய்து குடிப்பது எங்கள் வழக்கம்.காய்ச்சலும் சரியாகிவிடும்” என்றார்கள்.

மருத்துவர் ஹானிமனும் அவ்வாறே செய்ய காய்ச்சல் சரியாகிவிட்டது. அதன் பின்னர் மருத்துவர் ஹானிமன் அந்தக் கிராமத்தில் உள்ள அத்தனை குளங்களில் உள்ள தண்ணீரையும் குடித்துப் பார்க்க காய்ச்சல் வரவில்லை .அவரது அல்லோபதி மூளைக்கு எட்டியது அவ்வளவுதான்.அப்போது ஒரு முடிவுக்கு வருகிறார்.இந்தக் காய்ச்சல் கிருமிப் பரவலால் அல்ல.கிருமிப் பரவல் இருந்தால் எல்லா குளத்துத் தண்ணீருக்கும் இந்த காய்ச்சல் உண்டாக்கும் தன்மை இருந்திருக்கும் அல்லவா? என்று கண்டு பிடித்தார்.

மருத்துவர் ஹானிமன் அந்தக் குளத்தை ஆராய்ச்சி செய்ய அதனுள் இந்தக் கரையில் இருந்த மரத்தின் வேர்கள் இறங்கி, மரத்தின் வேர்களினால் மரத்தின் சத்து குளத்துத் தண்ணீரில் இறங்கி குளத்துத் தண்ணீர் லேசான நிறமாற்றமும் அடைந்துள்ளதைக் கண்டு பிடித்தார். அந்த மரம் மலேரியா காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் மருந்தான கொய்னைன் என்னும் மருந்தை தயாரிக்கப் பயன்படும் மரமான சின்கோனா மரம் என்பதியும் கண்டு பிடித்தார்.

அந்த மரத்தின் பட்டையை கஷாயம் செய்து தண்ணீர் குடிப்பதைப் போல் குடித்தார் .அது உடனே காய்ச்சலை உண்டாக்கியது. கொஞ்சமாகக் குடித்தார் காய்ச்சல் தீர்ந்தது.அப்போதுதான் அவர் ஒரு முக்கிய விடயத்தைக் கவனித்தார்.ஒரு அடிப்படையைக் கண்டுபிடித்தார்.அது எது எதனை உண்டாக்குமோ அதுவே அதனைத் தீர்க்கும்  (similia similibus curantur:-Definition: The homeopathic concept expressing the law of similars (literally, “likes are cured by likes”), the doctrine that any drug capable of producing morbid symptoms in the healthy will remove similar symptoms occurring as an expression of disease. Another reading of the concept, employed by Hahnemann, the founder of homeopathy, is similia similibus curentur, “let likes be cured by likes.”) என்று கண்டுபிடித்தார்.இது சித்த மருத்துவத்தின் பல தத்துவங்களில் ஒன்றுதான்.மரணத்தை உண்டாக்கும் விஷங்களை மருந்தாக்கி மரணத்தையும் வெல்லலாம் என்ற சித்த மருத்துவ தத்துவம்தான் அது.இது போன்ற ஆராய்ச்சிகள்தான் இயற்கை சார்ந்த அறிவு.இதைப் பெற்றால்தான் எந்த மருத்துவ முறைகளிலும் வெல்ல முடியும்.

மேலும் ஹோமியோபதி பற்றி அறிய இந்த இணைப்புக்களையும் பாருங்கள்.

http://innominatesociety.com/Articles/Homepathy{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20Similia{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20Similibus{447c8c239b33e3463d0c067d40bee514ab07bd6d8df12f8084016b41e1737007}20Curentur.htm

http://neiah.nic.in/homeopathy.html

இதே போலவேதான் அல்லோபதி மருத்துவர்களாக மருத்துவத்தை  துவக்கிய  உயர்திரு சித்திக் ஜமால் அவர்களும் , பஸ்லூர் ரஹ்மான் அவர்களும் , பின்னாளில் ஹோமியோபதி , அக்குபஞ்சர் ஆகிய விடயங்களில் விற்பன்னராக மாறிய பின்னர் கடைசியில் பெரிய குர்-ஆன் வாசகங்களிலேயே குணம் அளிக்கும் வழி வகைகளைக் கண்டறிந்தார்கள்.பல அக்குபஞ்சர் மருத்துவர்களையும் , ஹோமியோபதி மருத்துவர்களையும் , பல ஹீலர்களையும் உருவாக்கிய பெருமை இவர்களுடையது.

திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள் எழுதிய புத்தகத்தின் பக்கங்களை கீழே கொடுத்துள்ளோம்.அதில் மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் ஷெட்யூல் -ஜெ ன்படி மருத்துவ தொழிலில் பல மருத்துவர்கள் , சொல்லி வரும் ஸ்பெசலிஸ்ட் என்று சொல்லும் பல துறைகளுக்கு ஆங்கில மருத்துவர்கள் வைத்தியமே செய்ய முடியாது என்று விளக்கியுள்ளார்.ஒரு அல்லோபதி மருத்துவராக இருந்தாலும் , அவர் வாயாலேயே அல்லோபதி மருந்துகளின் கொடூரத் தன்மையை அவர் மிகச் சிறப்பாக விளக்கி உள்ளார். இது அவரது மேன்மைத் தன்மையைக் காட்டுகிறது .மக்கள் இந்த அல்லோபதி  மருத்துவ முறையில் மாட்டிக் கொண்டு படும் அவஸ்தையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கருணை தெரிகிறது.

இந்த புத்தகப் பக்கங்களை இங்கே கொடுக்கக் காரணம் இந்த மருத்துவச் சட்டத்தின்படி பல குணப்படுத்த முடியாது என்று கூறப்படும் வியாதிகளுக்கு அல்லோபதி  மருந்து கொடுக்கும் மருத்துவர்களை நாம் குறை சொல்ல முடியாது.அதையும் நம்பி வாங்கிச் சாப்பிடும் அப்பாவி மக்களைத்தான் நாம் என்ன சொல்லித் திருத்த என்று தெரியவேயில்லை.இவர்களை  எப்படிக் காப்பாற்றுவது என்றும் தெரியவில்லை.

இதில் பெரிய கூத்து கடும் பக்க விளைவுகளுள்ள ,எந்த வியாதியையும் குணமாக்க திறனற்ற அல்லோபதி மருந்துகளை எந்தக் கேள்வியும் கேட்காமலும் , எவ்வளவு விலை இருந்தாலும் வாங்கிச் சாப்பிடும் , படித்த மற்றும் படிக்காத மேதாவிகள் ,சித்த மருந்துகளைப் பற்றி பேசும்போது சித்த மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டா ?? இல்லையா?? என்று கேள்விகள் கேட்கும்போது எமக்கு அழுவதா!! சிரிப்பதா!! என்றே தெரியவில்லை!!

இந்தக் கட்டுரையை இங்கே கொடுக்க இன்னும் ஒரு காரணமும் உண்டு.எந்த வியாதியையும் குணமாக்க திறனற்ற அல்லோபதி விஷமுள்ள மருந்துகளை சாப்பிடுவதே , கல்லீரல் , மண்ணீரல் , வயிறு இவற்றின் சக்தி குறைந்து சர்க்கரை நோயே உருவாகிறது.எம்மிடம் மருந்துகள் கேட்பவர்கள் அல்லோபதி மருந்துகள் , சாப்பிட்டுக் கொண்டே சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்கிறார்கள். உடம்பை கெடுத்துக் கொண்டே , உடலை சரி செய்யலாமா என்று கேட்பதை ஒத்ததே இது.அப்படிச் செய்தால் உடல் சரி ஆகாது என்பதே உண்மை.

marunthaal uNdaakum noykaL2_mini

marunthaal uNdaakum noykaL3_mini

marunthaal uNdaakum noykaL4_mini

marunthaal uNdaakum noykaL5_mini

marunthaal uNdaakum noykaL6_mini

marunthaal uNdaakum noykaL7_mini

marunthaal uNdaakum noykaL8_mini

marunthaal uNdaakum noykaL9_mini marunthaal uNdaakum noykaL10_mini

marunthaal uNdaakum noykaL11_mini

நன்றி , மருந்துகளால் வரும் நோய்கள் ,ஆசிரியர் திரு பஸ்லூர் ரஹ்மான் அவர்கள்.

எனவே மேற்கண்ட வியாதிகளுக்கு அல்லோபதி மருத்துவரை நாடும் முன்னர் யோசியுங்கள்.நீங்கள் அல்லோபதி மருத்துவரிடம் போகப் போவது இப்போது ஏற்பட்டுள்ள  நோய்களை  போக்கப் போய் , எந்த வியாதிக்காக அல்லோபதி மருத்துவத்தை நாடினீர்களோ அந்த வியாதியை குணப்படுத்தாதது மட்டுமல்ல ,அந்த அல்லோபதி மருந்துகள் உடலின் உள்ளே உள்ள பல ராஜ கருவிகளைக் கெடுப்பதோடு சர்க்கரை நோய் உட்பட பல கடும் வியாதிகளை வலுவில் விலை கொடுத்து வாங்கிக் கொள்வீர்கள்  என்பதை மனதில் வையுங்கள்.

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  சர்க்கரை வியாதியை குணமாக்கலாம்(பாகம்8) ல் தொடரலாம்.