வர்மம் கற்க விரும்புபவர்களுக்கு ( மருத்துவத்திற்காக மட்டுமே )பாகம் 3
வர்மம் கற்க வேண்டும் எனப் பலரும் எம்மிடம் கேட்ட வண்ணம் உள்ளனர் .எமது நேரமின்மை காரணமாகவும் . வர்மம் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்பு வசதிகள் எம்மிடம் இல்லாததாலும் இந்த வர்மம் கற்றுக் கொடுக்கும் இடத்தை தங்களுக்குத் தெரிவிக்கிறேன். எமது பார்வைக்கு எட்டிய அளவில் நன்றாக உள்ள வர்மம் பயிற்றும் இடத்தைப் பற்றிய இந்த தகவலைத் தெரிவிக்கிறேன்.இதை தயவு செய்து மருத்துவ காரணங்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டுகிறேன்.வேறு ஒருவரைத் தாக்க இதை பிரயோகம் செய்தால் , தாக்குதலுக்கு உட்படும் நபர் இறந்து போகலாம், கைகால்கள் ஊனமாகலாம், அல்லது இவற்றுக்காக நீங்கள் காராக்கிரகத்துக்கு (சிறைச்சாலைக்கு ) செல்ல நேரலாம். இதிலும் தப்பித்தால் , நீங்கள் எந்த வர்மத்தை அடிக்க பயன்படுத்தினீர்களோ அந்த வர்மத்திலேயே உங்களுக்கு இயற்கையிலேயே தாக்குதல் நேரலாம்.
வர்மம் என்றாலே கர்மம் .இது இறைவன் போட்டு வைத்த வாசி முடிச்சுக்கள்.எனவே கெடுதல் செய்ய அந்த இடங்களைத் தொடாதீர்கள்.
வகுப்புக்கு பணம் செலுத்தும் நமது வலைத் தள அன்பர்கள் மட்டும் இன்னும் கால அவகாசம் எடுத்து அடுத்த மாதம் 2 ம் தேதி வரை பணம் செலுத்திக் கொள்ளலாம்.
06-07-2013 மற்றும் 07-07-213 ஆம் தேதியில் கன்னியாகுமரியில் ஆரம்ப கட்ட வகுப்புக்கள் ( சீடன் )நடை பெற இருக்கின்றன. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Dr. T. MOHANARAJ
MUNCHIRAI, PUDUKKADAI P.O. 629171
KANYAKUMARI DISTRICT. TAMILNADU
Cell No : 09442364659
இதன் பின்னர் நேரடி வர்மா மசாஜ் வகுப்புக்கள் நடத்தப்பட இருக்கின்றன.
அலோபதி மருத்துவத்தின் சீர்கேடுகள் குறித்து நீங்கள் எழுதி வரும் கட்டுரைகளை படித்து வருகிறேன். எப்போது அரசு இலவச சேவையாக மருத்துவத்தை மக்களுக்கு வழங்குகிறதோ அப்போதுதான் மாற்று மருத்துவத்தின் பக்கம் மக்கள் கவனத்தை திருப்புவர். அரசு – மருந்து கம்பெனிகள் – மருத்துவர்கள் இந்த கூட்டு கொள்ளையர்கள் ஒன்று சேர்ந்து உலக அளவிலான மிகப்பெரிய அதிகார வர்க்கத்தை கட்டமைத்துள்ளனர். இதை நம்மைப்போன்ற எளிய மனிதர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனாலும் உங்களின் தொடர் கட்டுரைகள் என்னை போன்ற ஒரு சிலரை விழிப்புணர்வு பெறச்செய்து சித்த மருத்துவத்தை நாடிச்செல்ல உதவும் & சித்த மருத்துவத்தை மேலும் வளர்க்க உதவும். எனவே இதை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பலன் குறைவுதான் என்றாலும் மதிப்பு மிக்கது.
எனக்கு தினமும் கண்ணில், மூக்கில், காதில் அதிக அளவு அழுக்கு சேருகிறது. மேலும் காலையில் எழுந்தவுடன் வாயில் வெண்மையான பேஸ்ட் போன்ற திரவம் அதிகம் காணப்படுகிறது. கண்ணில், மூக்கில், வாயில் உள்ள அழுக்குகளை எப்படி போக்குவது என்பதை ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? என்ற தொடரில் எழுதியுள்ளீர்கள். ஆனால் காதில் உள்ள அழுக்கை எப்படி நீக்குவது? ஒருவேளை 8வது பாகத்தில் எழுதுவீர்களா?
பாரன்ஹீட் 9/11 என்ற ஆவணப்படம் எடுத்த மைக்கேல் மூரேவின் அலோபதி மருத்துவம் மக்களை எப்படி சுரண்டுகிறது என்பதைப்பற்றிய ஆவணப்படம் – SICKO.
http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/06/sicko.html
SICKO DOWNLOAD – http://kickass.to/sicko-2007-dvdrip-axxo-t5711.html
அலோபதி மருத்துவம் வணிகத்தின் மூலம் மக்களின் பணத்தை சுரண்ட அதிகார வர்கத்தால் ஏற்படுத்தப்பட்டது. அலோபதி முழுக்க முழுக்க விஞ்ஞானத்தால் கட்டமைக்கப்படவில்லை. ஆலோபதியால் வணிகம்தான் செய்யமுடியும்.
அன்புள்ள திரு பிரேம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
மிகச் சரியாக உள்ளது இந்த விடயங்கள்.வியாபார ரீதியாக்கப்பட்ட மருத்துவம் சாமானியனை சீரழிப்பதாகவும் மாறிப் போனதே கொடுமை.
///எனக்கு தினமும் கண்ணில், மூக்கில், காதில் அதிக அளவு அழுக்கு சேருகிறது. மேலும் காலையில் எழுந்தவுடன் வாயில் வெண்மையான பேஸ்ட் போன்ற திரவம் அதிகம் காணப்படுகிறது. கண்ணில், மூக்கில், வாயில் உள்ள அழுக்குகளை எப்படி போக்குவது என்பதை ஞானம் என்பது உடல் சார்ந்ததா ? உயிர் சார்ந்ததா ? என்ற தொடரில் எழுதியுள்ளீர்கள். ஆனால் காதில் உள்ள அழுக்கை எப்படி நீக்குவது? ஒருவேளை 8வது பாகத்தில் எழுதுவீர்களா?///
காதில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற காதில் அழுக்கெடுக்கும் குறண்டி கொண்டு மிக ஜாக்கிரதையாக எடுக்க வேண்டும்.அந்தக் குறண்டி செப்புக் குறண்டியாக இருந்தால் மிக மிக நலம். காதின் செவுள் பகுதியையும், சவ்வுப் பகுதியையும் சிறிதளவும் காயப்படுத்திவிடக்கூடாது.இதை தலை சிறந்த சித்த வைத்தியர்கள் செய்து வருகிறார்கள்.பஞ்சால் செய்யப்பட்ட குச்சிகள் அழுக்குகளை நீக்காது.எனவே இவற்றை உபயோகித்தால் அழுக்குகள் உள்ளே தள்ளப்படுவதோடு , அழுத்தி காதின் உள்புறம் படிய வைக்குமேயல்லாது வெளியே வராது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்,
நான் மதுரையில் வசிக்கிறேன்.உங்களின் பதிவுகள் மிக அருமையாக உள்ளது….. உங்களது இந்த முயற்சியை வணங்குகிறேன்.
மேலும் செல்வம் பெருக,நோயின்றி வாழ யந்திர தகடுகள் இருந்தால் கூறவும் ஐயா அல்லது தாங்கள் முன்பே இதைப் பற்றி கூறிவிட்டாள் மன்னிக்கவும். மேலும் அதற்கான இணைப்பை(link) தரவும் ஐயா.
நன்றி
என்றென்றும்
க.சுந்தரவடிவேல்
அன்புள்ள திரு சுந்தர வடிவேல் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி,
செல்வம் பெருக திரு கண்ணன் அவர்களிடம் வந்தான் மூலி என்ற மூலிகை உள்ளது.அந்த மூலிகையை தாயத்தில் அடைத்து இடுப்பில் அணிய செல்வம் வந்த வண்ணம் இருக்கும்.எனவே இந்த விடயத்திற்கு சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவர்களை அணுகவும்.அவரது அலைபேசி எண் +9199432 05566
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ayya unkal pathivkal ondru ondrum mika arbuthamanayai.mika nandri.
அன்புள்ள திரு p.r. jayaprakah. அவர்களே ,
உங்களது கருத்துரைக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பிற்குரிய சாமீ அழகப்பன் அவர்களுக்கு ஐயா வணக்கம்,
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
வர்மக்கலை மற்றும் வர்ம மருத்துவம் பற்றி
மிகவும் தெளிவாக தெரிந்து கொண்டேன்.
மேலும் பல அறிய தகவல்கள் உங்கள் மூலம் அறிந்து கொள்ள
ஆவலுடன் இருக்கிறேன்.
நன்றி!
மு.செல்வம்
திருநெல்வேலி.