தமிழ் இனி சாகுமா ????

tamil1

சிவனும்  முருகனும் அகத்தியரும் கட்டிக் காத்த தமிழ் இனிச் சாகுமா????

மெல்லத் தமிழ் இனிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்! ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
பாரதியார்-

50 ஆண்டுகளில் 220 இந்திய

மொழிகள் மாயம் : ஆய்வில்

தகவல்

இந்தியா கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 220 மொழிகளை இழந்துவிட்டதாக வதோதராவில் இயங்கும் மொழி ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மையம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

1960ஆம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 1,100 மொழிகள் பேசப்பட்டு வந்தன. ஆனால், அவற்றில் சுமார் 220 மொழிகள் தற்போது வழக்கத்திலேயே இல்லாமல் மாயமாகிவிட்டது என்று எழுத்தாளரும், ஒருங்கிணைப்பாளருமான கணேஷ் தேவ் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாங்கள் செய்த ஆய்வில் சுமார் 780 மொழிகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதில் 100 மொழிகளை எங்களால் திரட்ட முடியாமல் கூட போயிருக்கலாம். எனவே அதையும் சேர்த்தால் 880 ஆகும். 1100 மொழிகளில் தற்போது 880 மொழிகள்தான் உள்ளன என்றால், மற்ற மொழிகள் மாயமாகிவிட்டன. இது கவலை தரும் நஷ்டம் என்று தெரிவித்துள்ளார்.

Thanks : DINAMANI

தமிழ் மட்டுமல்ல உலகில் உள்ள பல மொழிகள் பல அழியும் நிலையில் உள்ளது.கீழுள்ள இணைப்புகளையும் பார்வையிடுங்கள்.

http://www.uyirmmai.com/contentdetails.aspx?cid=62

http://dinamani.com/editorial_articles/article791614.ece?service=print

http://eluthu.com/kavithai/60234.html

தென்னாடுடய சிவனே !!!!என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!இறையனாராக வந்து தமிழ் வளர்த்தது உண்மையானால் , எம்மொழியாகிய செந்தமிழ் மொழியைக் காத்து ரட்சிப்பாயாக!!!

நமக்கும் நம் மொழியை வீட்டிலாவது பேசி வாழ வைக்கும் கடமை உள்ளது.தயவு செய்து வீட்டிலாவது தமிழ் பேசுங்கள்.நம் தாய்மொழியை வாழ வைப்பது நம் தாயை வாழ வைப்பதற்குச் சமம்.

http://www.youtube.com/watch?v=ufvA_VNj–M