நோக்கு வர்மம் என்ற மெய் தீண்டாக் காலம் ( சித்தர் விஞ்ஞானம் பாகம் 50)

nokuvarmam

நோக்கு வர்மம் என்ற மெய் தீண்டாக் காலம் சித்தரியல் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு ஒரு அதிசயமாகவும். சிலர் இதை தற்காப்புக்கு உபயோகிக்கலாமா??? என்ற ரீதியில் கேள்வி கேட்ட வண்ணம் உள்ளனர்.முதலில் வர்மம் என்பதையே தற்காப்பு என்ற ரீதியில் உபயோகப்படுத்த ஏற்பட்ட கலையே அல்ல.அது வைத்தியத்திற்கென ஏற்படுத்தப்பட்ட தெய்வீகக் கலை. இதை சிவன் பார்வதிக்கு உபதேசித்து , பார்வதி நந்தி தேவருக்கு உபதேசித்து , நந்தி தேவர் அகஸ்தியர் தமது மாணாக்கர்களுக்கு உபதேசித்த  அற்புதக் கலை.

எனது ஆசானான திரு முத்துராமலிங்கத் தேவரும் , பார்த்திபனூர் சிலம்பாசிரியர் ரே. சமயம் அவர்களும் , திரு மணிமந்திரம் அவர்களும் ஒரு விடயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.வர்மம் என்றாலே அது கர்மம் ,வர்மப் புள்ளிகள் எல்லாம் இறைவன் போட்டு வைத்த முடிச்சுக்கள் .அதில் கை வைக்கும் முன்னால் மிக யோசித்து மற்றவர்களின் நல்லதற்காக மட்டுமே கை வையுங்கள் என்பார்கள்.

நோக்கு வர்மம் என்ற சொல்லே ஏழாம் அறிவு படத்துக்கு பின்னர்தான் மக்களிடையே பிரபலம் பெற்றது . நம் தமிழ்ச் சித்தர் கலைகள் பற்றி ஒரு மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது . அதற்கு ஏழாம் அறிவு படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருக்குமே நாம் நன்றி சொல்லலாம். படத்தின் கடைசியில் கூறப்படும் பல விடயங்கள் நமது தமிழ்ச் சித்தர் கலைகள் எவ்வளவு மோசமாக அழிவின் விளிம்பில் உள்ளன என்பதை தெளிவாக்கியது.

ஆனால் நோக்கு வர்மம் என்ற மெய் தீண்டாக் காலம் என்ற நோக்கு வர்மத்தை ஏழாம் அறிவு படத்தில் மெஸ்மரிசம் , ஹிப்னாட்டிஸம் , வசியம்  , ஆகர்ஷணம் போலக் காட்டி இருப்பார்கள். உண்மையில் அது போலல்ல . ஒரே நேரத்தில் பலரின் உயிரோட்டத்தையும் ஒரே  பார்வையாலே நிறுத்தவும்  ( மயக்கமடையச் செய்யவும், செயலிளக்கச் செய்யவும் ) , மீண்டும் அந்த உயிரோட்டத்தை நிலை நிறுத்தவும் (மயக்கத்தை தெளிய வைக்கவும் , செயல்பட வைக்கவும் ) முடியும் சக்தியே அது.

மேலும் ஏழாம் அறிவு படத்தில் ஜெனடிக் இஞ்சினீரிங் மூலம் டி என் ஏ ஆக்டிவேடிஷன் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்களும்  வீண் கற்பனைகள். குலவித்தை கல்லாமல் பாகம்படும் என்பது ஞானிகளின் வாக்கு . அது  போல ஞானமும் , கல்வியும் , மருத்துவமும் , சித்தர் கலைகளும் ஒருவருக்குப் பலிதமானால் அவரிலிருந்து 21 தலைமுறைக்குள் மீண்டும் பலிதமாகும் , அவர்களின் சந்ததிக்கும் உணர்த்தப்படும்.

எனில் இது போன்ற கலைகளை சித்தர்கள் ஏன் இவ்வாறு ரகசியமாக ஆக்கியிருக்கிறார்கள்.அது அழிந்து விடுமா??? என்றால் இல்லை . எல்லாவுயிரும் என்னுயிர் போல எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!!!! என்றும்  “அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்”  , என்ற மனோநிலை சித்தித்த மெய்யன்பர்களுக்கு மட்டுமே இது சித்திக்கும் வண்ணம் சிவானந்த அருள் புரிந்திருக்கிறார்கள்.இது கற்றுக் கொடுக்கும் கலை அல்ல. இறைவனே அருளும் கலை.

கீழ்க் கண்ட இணைப்புக்களைப் பார்வையிடுங்கள்.இதில் திரு மருத்துவர் கண்ணன் ராஜாராம் அவர்களும் , திரு மோகனராஜ் அவர்களும் பல சித்தர் நூல்களையும் ஆராய்ந்து பதிப்பித்து வருகிறார்கள்.அவர்கள் பல சித்தர்கள் நூல்களை சுவடிகளை நூல்களாக பதிப்பித்து வருகிறார்கள்.அவர்களது  இணைய தள முகவரியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதில் 108 வர்மப் புள்ளிகளையும் விளக்கியுள்ளார்கள்.

Home

நோக்கு வர்மம் பற்றிய விஜய் டி வி ன் காணொளிக் காட்சி.

[tube]http://www.youtube.com/watch?v=0cxfIZSxfKM [/tube]]

ஒரு ஆசான் தான் கற்றுள்ள வர்ம விடயங்களை சோதனையிட்டு தெரிந்து கொள்ள கையில் ஒரு தங்கக் காசை கையில் வைத்துக் கொண்டு கையை வலுவில் திறக்காமல் தாமாகவே கையை திறக்க வைக்க  சொர்ண தட்சிணைக்காலம் என்ற வர்மத்தை பிரயோகம் செய்வார்கள்.அந்த வர்மத்தை பிரயோகம் செய்து கையில் உள்ள காசை ஆசான் எடுப்பதை , எமது கையில் திரு மருத்துவர் கண்ணன் ராஜாராம் அவர்கள் கையாளும் காட்சியை கீழுள்ள காணொளிக் காட்சியை பார்வையிட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

[tube]http://www.youtube.com/watch?v=2sUTRCVS49A [/tube]]

இந்த காணொளிக் காட்சியில் பல தலைமுறையாக வைத்தியம் செய்து , முன்சிறையில் சித்த வைத்திய கல்லூரி வைத்து நடத்தி வரும் தாளாளர்  திரு மோகன சுந்தரம் முன்னால் இருக்கிறார்.அவருடைய இணைய தளத்தில் வர்மப் புள்ளிகளையும் விளக்கியுள்ளார்கள். புத்தகங்களையும் பல நோய்களையும் அவற்றுக்கான மருந்துகள் பற்றியும் விளக்கியுள்ளார்கள் . வர்ம வகுப்புக்கள் நடத்தி வருவதோடு பல தலைமுறையாக பாது காத்து வைத்துள்ள ஓலைச் சுவடிகளை அவருடைய தன்னலமில்லாத சேவையால் பதிப்பித்து வருகிறார்.அவருடைய இணைய தள காணொளிக் காட்சி இணைப்புக்களை பார்வையிடுங்கள்.

http://www.siddhabooks.com/videos/239-varmam_other_videos/341-videos-varmam-classes-kannanrajaram

மேலும் இங்கே ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறோம்.நமது சீடர்களில் ஒருவர் சதுரகிரி மலையடிவாரத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது , அவர் எமக்குச் செய்த அவமரியாதையால் ,  அவர் மீது இந்த முக்கிய சக்தியை உறிஞ்சும் நோக்கு வர்மத்தை பிரயோகம் செய்ய அவர் அப்படியே மயங்கி தண்ணீரில் விழுந்து மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை கவனித்து கண்ணன் தண்ணீரில் இருந்து  தூக்க முயற்சி செய்து எம்மை அழைக்க, அவருக்கு சரி செய்யும் பரிகாரங்கள் அனைத்தும் செய்து அவரை சரி செய்தும் இரண்டு மணி நேரத்துக்கு அவரது புத்தி சுவாதீனத்தில் இல்லை.

இதன் மூலம் மனிதனுடைய முக்கிய சக்தி ( VITAL FORCE ) தடுக்கப்பட்டு எத்தனை பேரானாலும் சக்தியிழந்து போய்விடுவார்கள்.அந்த சீடர் தற்போது மிகப் பிரபலம் அடைந்துவிட்டதால் தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க , அவரது பெயரும் காணொளிக் காட்சியும் வெளியிடப்படவில்லை.இந்த வர்மப் பிரயோகத்தின் விளைவைக் கண்டவுடன் இதை வெறொருவருக்கு செய்து ஆவணப் படமாக வெளியிடவும் எமக்கு விருப்பம் இல்லை என்பதால் காணொளிக் காட்சி வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இது பற்றி மேல் விபரங்கள் தெரிந்து கொள்ள இதை நேரடியாக பார்த்த சாட்சியான  கண்ணன் அவர்களிடம் அலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த அற்புதக் கலை அழிந்துவிடவில்லை. தகுதியுள்ள நபர்களுக்கு இந்தக் கலை உணர்த்தப்பட்டே வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்வதுடன் இந்தக் கலை கற்பிக்கப்படுவதில்லை ,  என்பதுடன் இந்தக் கலை இறைவனால் உணர்த்தப்படுவது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இதில் மாந்திரீகப் பிரயோகமும் உண்டு  என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.