ஓர் அரிய மூலிகை ( வெள்ளை நொச்சி ) குளிர் கால நோய்கள் போக்குதலுக்கு

இப்போது மழைக்காலம் முடிந்து  குளிர் காலம் ஆரம்பிக்கும் நேரம் , குளிர்ச்சியினால் உடல் ஆரோக்கியம் பாதிக்கும் . வயிற்றின் செரிமானத் தன்மை  குறைவதும் , உடலில் குளிர்வதும் , அதன் காரணமாக சிலேத்துமக் கூறு அதிகரிப்பதும் , அதனால் சளி அதிகரிப்பதும் , அதனால் சீதளம் உடலில் உண்டாவதும் , அதனால் கிருமிகளின் தாக்கம் உடலில் அதிகரிப்பதும் , விளைவாக உடல் துன்பம் அதிகரிப்பதும்  இயற்கையின் செயல்பாடு. நம் உடல் அதற்குத் தகவமைக்க சித்தர்கள் சித்த மருத்துவத்தின் மூலம் பல வழிகளை வகுத்துள்ளார்கள் , அவற்றில் ஒன்றுதான் இந்த மூலிகை ஆவி பிடித்தல் என்னும் முறை . இதன் மூலம் நோய் வராமல் காத்துக் கொள்வதுடன் , வந்த நோயையும் தீர்த்துக் கொள்ளலாம்.

 நீல நொச்சி படம்

nochi neelam

வெள்ளை நொச்சி படம்

nochie

நன்றி படத்துக்காக :- ஆயுர் வேத மருத்துவம்

வெள்ளை நொச்சி என அழைக்கப்படும் நொச்சி சிறு மர வகுப்பைச் சேர்ந்தது .இதில் கரு நொச்சி என்ற வகை அரியதாகக் கருதப்படுகிறது.இது சதுரகிரி மலையிலும் , கொல்லி மலைப் பகுதியிலும் கிடைக்கிறது . நீல நொச்சி என்பதும் காணக் கிடைக்கிறது. இந்த நீல நொச்சியும் வெள்ளை நொச்சியின் குணத்தையே பெற்றுள்ளது .

வெள் நொச்சி இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி ஒரு பருத்தித் துணியால் செய்யப்பட்ட பையில் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் இந்த மழைக்காலத்து சலதோஷம் , தலையில் நீர்க் கோர்த்துக் கொள்ளல் , அதனால் வரும் தலைவலி ஆகிய அனைத்தும் தீரும்.தலையில் ஒரு ( சிரிஞ்சை ) பீச்சாங்குழலை வைத்து இழுத்தது போன்று தலையில் கோர்த்துள்ள நீரை இழுத்துவிடும்.சல தோடம் என்னும்  தோடம் உடன் தீர்ந்து உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

மேலும் கடும் காய்ச்சல் , உடல் வலி  தலை பாரம் மூக்கு ஒழுகுதல் இவற்றுக்கு கீழ்க்கண்ட காணொளிக் காட்சியில் கண்டவாறு ஆவி பிடிக்க அனைத்து நோய்களும் , வலுத்த காற்றில் பஞ்சு போல் பறக்கும்.நாம் மழையில் நனைந்ததனால் சளியின் தாக்கம் அதிகமாகி காய்ச்சல் ஏற்பட்ட போது அதற்காக எடுத்துக் கொண்ட சாதாரண சிகிச்சை இது . இது மிகச் சக்தி வாய்ந்த பலனைத் தர வல்லது . சல்பூட்டமால்  பஃப் அடித்துக் கொண்டிருக்கும் ஆஸ்த்துமா நோயாளிகளுக்கும் இது சுகம் தர வல்லது .

ஆவி பிடித்தல்:- முதலில் ஆவி பிடித்தலுக்கு தண்ணீரை மூடிக் கொதிக்க வைக்கும் போது அதில் நொச்சி இலை , குப்பை மேனி , வேப்பிலை ,தும்பை , துளசி ,  எலுமிச்சை இலை , யூகலிப்டஸ் இலை , இவைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கும் போது  மஞ்சள் தூள் சேர்த்து இறக்கி , நாம் நன்றாக போர்வையால் உடல் முழுவதும் மூடிக் கொண்டு அந்தப் பானையில் கீழ்க் கண்டவாறு செங்கற்களை சூடாக்கி  அவற்றை ஒவ்வொன்றாக சீரான இடை வெளியில் போட்டு ஆவி பிடிக்க வேண்டும்.அவ்வாறு பிடிக்க உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கி , தலையில் உள்ள நீர்க் கோவையும் நீங்கி உடல் நலம் பெறும்.

ஜல நேத்தி:-இதன் பின் எஞ்சியிருக்கும் தலையில் கோர்த்திருக்கும் சளியையும் , நீரையும் நீக்க இந்த ஜல நேத்தி மூலம் தீர்க்கலாம்.

பிறகும் தலையில் நீரேற்றம் தெரிந்தால் நீர்க் கோவை மாத்திரையை வெந்நீரில் கெட்டியாக கரைத்து  நெற்றியிலும் பொட்டுப் பகுதியிலும் பற்றிட சிரசில் நீர்க்கோவை மறைந்து தலைவலி , மூக்கடைப்பு , மூச்சு விடாமல் சிரமம் , இரைப்பு , இருமல் , ஈசனோபிலியா , ஆஸ்துமா போன்றவை தீரும்.

சாம்பிராணிப் புகை போடுதல்:-வீட்டில் மழைக்காலங்களில் கிருமிகள் தாக்கா வண்ணம் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக நம் பழந்தமிழர் கையாண்ட சாம்பிராணிப் புகை போடுதல். புகை போட சிங்கப்பூர் சாம்பிராணி அல்லது சதுரகிரி மலையில் கிடைக்கும் சாம்பிராணி மரப் பிசின்  ஆகியவற்றை உபயோகிக்கலாம். இதனைப் புகை போடும் போது இத்துடன் மஞ்சள் தூள் சேர்த்துப் புகை போட குளிர்கால கிருமித் தொற்று மற்றும் நோய்களிடம் இருந்து தப்பலாம்.

இத்துடன்  பேய் மிரட்டி  ( இது பேயை மிரட்டுவதால் பேய் மிரட்டி என்றும் பேயை  விரட்டுவதால் பேய் விரட்டுவதால் பேய் விரட்டி என்றும் அழைக்கப்படுகிறது . இதை பற்றி தனி பதிவு எழுத இருக்கிறோம் .இது தற்போது அமீர் சுல்தான் அவர்களிடம் கிடைக்கும் ) மற்றும் நில வேம்பு என்றழைக்கப்படும் பெரியா நங்கை சூரணம் (இம்ப்காப்ஸ்  தயாரிப்பில் நன்னாரி வெட்டி வேர் , விலாமிச்சை வேர் இன்னும் பல மூலிகைகள் கலந்தது )கடையில் இம்ப்காப்ஸ் தயாரிப்பில் கிடைக்கிறது . இவற்றை கலந்து புகை போட ஏவல் , பில்லி சூனியம் , பேய் பிசாசுத் தொல்லை , காரணமற்ற பயம்  போன்றவை தீயினிற் தூசாய் எரிந்து போகும் .  சித்தர்கள் பாதம் போற்றி எல்லோரும் நலமுடன் வாழ்வோம்.