தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம் 1)

machamuni

ஆதி , பகவன் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் போது  “ஒரு இடத்தில் தங்கக் கூடாது ,  அடுத்த நாளுக்கு என்று உணவோ , பொருளோ ,தங்களுக்கு பிறந்த குழந்தை ஆனாலும் வைத்துக் கொள்ளக் கூடாது , அணிந்திருக்கும் ஒரு உடைக்கு மேல் வேறு உடை வைத்துக் கொள்ளக் கூடாது .” என்று  விரதம் பூண்டனர் .

அவ்வையார் ஆதி , பகவன் என்ற இருவருக்கு பிறந்தவர் என்று சில நூற்களில் காணப்படுகிறது .வினோத ரச மஞ்சரி என்ற பழமையான நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது .அவர்கள் வள்ளுவர் தெருவில் நடந்தது போய்க் கொண்டு இருந்த போது   பிறந்த குழந்தைதான் திருவள்ளுவர் என்றும் கூறுகிறது.

ஒரு நாள் நடுக்காட்டில்  நடந்து கொண்டிருக்கும் போது ஆதிக்கு பிரசவ வலி வந்து , ஒரு பெண் குழந்தையை பெற்று எடுக்கிறார்.   ஆதி , பகவன் இருவரும் பூண்ட விரதத்தினால் அக்குழந்தையை நடுக்காட்டில் விட்டுச் செல்ல வேண்டிய  நிலை . ஆதி இது நடுக்காடே , ஏதாவது மிருகங்கள் வந்து குழந்தையை கொன்று , தின்று விட்டு போய்விட்டால் என்ன செய்வது , அதுவும் பெண் குழந்தையாய் இருக்கிறதே ! என்று மலைக்கிற போது அந்தப் பிறந்த பெண் குழந்தை ஒரு வெண்பாப் பாடுகிறது .

“இட்டமுடன் வென்றலையில் இன்னபடி என்றெழுதி

விட்டசிவ னும்செத்து விட்டானோ? – முட்ட முட்ட

பஞ்சமே யானாலும் பாரமவ னுக்கன்னாய்!

நெஞ்சமே அஞ்சாதே நீ.”

என்னுடைய தலையெழுத்து என்ற விதியை எழுதிய சிவன் இன்னும் செத்துப் போய்விடவில்லை . உலகத்தில் ஒன்றுமே கிடைக்காத அளவிற்கு பஞ்சமே ஆனாலும் என்னைக் காப்பாற்றும் பொறுப்பு அந்த சிவனுக்குத்தானே தவிர இந்தப் பிறவியில் என் தாயான ,  உனக்கு இல்லை . பயப்படாமல் போய் வா!!! என்று கூறுகிறது . இந்த அளவிற்கு ஞானம் அளிப்பது தமிழ்.

அவ்வையாரது தந்தையாரது நண்பர் நன்றி மறவாமை பற்றி ஒரு பாடலை எழுதி கொண்டு வருகிறார்.  அந்த பாடல்

நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி

என்று தருங் கொல் என வேண்டா

என்று இத்துடன் பாடல் அவ்வையாரது தந்தையாரது நண்பரால்  பாடல் பாடல் பாட முடியாமல் நின்று விட்டது.

“”நன்றி ஒருவருக்கு செய்தோம் என்றால் அந்த நன்றி என்று நமக்கு திரும்பக் கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம் ” என்று நினைக்க வேண்டாம் ” என்று கூறுகிறார் .இதற்கு சரியான உவமை கூற முடியாமல் அவ்வையாரது தந்தையாரது நண்பரால் கூற முடியாமல் திகைத்து நிற்கிறார் .

அதற்கு  ஔவையார் மீதி பாடலை பாடியுள்ளது

–  நின்று

தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரை

தலையாலே தான் தருதலால்.

நின்று தளராது  வளர்ந்து உயர்ந்தோங்கி  நிற்கும் தென்னை மரம் தான்  தன் வேரால் உண்ட நீரை தலையிலே இளநீரால், அதே தண்ணீரை  தென்னை மரம்தான்  தருவதால்.

ஒரு வெண்பா எழுத பல விடயங்கள் உள்ளன .வெண்பா என்பது இயற்சீர் வெண்டளையும் , வெண்சீர் வெண்டளையும் மட்டும் நிரவி வரலாம் . செப்பலோசை பெற்று வர வேண்டும் . விளமுன் நேரும் , காய் முன் நிரையும் சீராக வர வேண்டும் .இப்படிப்பட்ட இலக்கணங்களோடு  ஒரு வெண்பாவை பாட அல்லது எழுத வேண்டும் என்றாலே  ஒரு தெளிவான அறிவும் ஞானமும் வேண்டும்  என்று புரிகிறதல்லவா?இந்த அளவிற்கு ஞானம் அளிப்பது தமிழ்.

பதிவு பெரிதாகப் போவதால் அடுத்த பதிவான  தமிழின் பெருமை, ஞானம், தீர்க்க தரிசனமும் , தற்போது தமிழில் பேசக் கூசும் நிலையும் (பாகம் 2)தொடரலாம்.