இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

முதலில் நமது இணைய தள அன்பர்களுக்கு இனிய ஜெய ஆண்டு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . இந்த ஆண்டு ஜெய ஆண்டு எதையும் ஜெயிக்கும் ஆண்டு என்பதால்  இந்தப் பெயர் .  மேலும் இது சந்திரனுக்குரிய ஆண்டு , திங்கள் கிழமை என்பது  சந்திரனுக்குள்ள  கிழமையில் பிறந்துள்ளதால் , இந்த ஆண்டு பலருக்கும் நன்மை விளைவிக்கும் ஆண்டாகத் திகழும் என்று வருஷாதி நூல் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டில் முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு . வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு , சுத்தம் செய்து , விக்கிரகங்கள் இருந்தால்  அவற்றை சுத்தம் செய்து திரு நீறு போட்டுத் துடைத்து வைத்து , அவற்றுக்கும் பூ போட்டு அலங்காரம் செய்து , ஒரு கோலமிட்ட ( பச்சரிசி மாவினால் ) மனைப் பலகையில் ஒரு கண்ணாடி  வைத்து அதற்கு பூ போட்டு தங்க நகைகள் இருந்தால் போட்டு அலங்காரம் செய்து வைக்க வேண்டும்.

அந்தக் கண்ணாடியின்  முன்னர் , ஒரு குத்து விளக்கேற்றி வைத்து  ஒரு தாம்பாளத்தில் பூ , வெற்றிலை பாக்கு ,  மா , பலா , வாழை , முதலிய பழங்களுடன் , பல  வகைப் பழங்களுடன் , ஒரு கிண்ணத்தில் அரிசி பருப்பு , காய் கறிகள் போன்றவற்றை வைத்து , தங்க நகைகள் , காசுகள் , பணம்  , முதலியவற்றையும் , வைத்து ,தென்னம்  பூவிரி , ஆவாரம்பூ போன்றவற்றை வைத்து இந்தபொருட்கள் கண்ணாடியில் தெரிவது போல் வைத்து அதை காலையில் எழுந்தவுடன் கண் விழித்துப் பார்க்க அந்த வருடம் முழுக்க நல்ல செல்வமும் வாழ்வில் நல்ல வளமும் கிடைக்கும் .

மா , பலா , வாழை , முதலிய பழங்களை முக்கனிகள் என்பர் .அதாவது  முக்கனிகள் என்பது மூன்று இனிப்புக்களையும் குறிப்பன. அதாவது இனிப்பு என்பது மூன்று  நெருப்புக்களால் ஆனது . அதாவது இனிப்பு  என்பது கார்போ ஹைட்ரேட்டுக்களால் ஆனது , ஆக்சிஜனோடு கூடி எரியும்போது  நெருப்பையும் , தண்ணீரையும் உண்டாக்குகிறது . அதனால் இவை முத்தீயை குறிப்பன . இதுவே முத்தி தரிசனத்தை குறிப்பது.

இது காலையில் கண் விழிக்கும் போது பார்க்கும் வளமான விடயம் மனதில் புகுந்து  , நமக்கு நல்ல வாழ்வும் வளமும் நல்கும் என்பார்கள் . இதற்கு சங்கல்பம்  ( ஆங்கிலத்தில் RESOLVE  )  என்பார்கள் . அதுவும் சித்திரை மாத முதல் தேதி  , தமிழ் வருடப் பிறப்பன்று வளமான விடயங்களைப் பார்க்கும் போது

எங்களது வீட்டில் இப்படி வைத்துப் பார்ப்பது மரபு . கீழே அந்தப் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

விஷுக் காட்சி 1 விஷுக் காட்சி 2
எங்களது வீட்டில் பூசை அறையில் ஒவ்வொரு நாளும் அந்தந்த நாட்களுக்கு  நவக்கிரக கோலமிடுவது வழக்கம் . இன்று திங்கட் கிழமை என்பது சந்திரனுக்குள்ள நாள் என்பதால் சந்திரனுக்குள்ள கோலம் போட்டுள்ளார் எமது துணைவியார் . இதே போல எல்லா நாட்களிலும் பச்சரிசி மாவினால் கோலமிட்டு வர மிக்க நன்மை பிறக்கும் . அதாவது நாம் கோலம் போடும் பச்சரிசி மாவைச் சாப்பிடும் எறும்புகள் நம்மை வாழ்த்தும் . நம் போன்ற எறும்புகளையும் பார்க்கும் வண்ணம் இவருக்கு கண் பார்வை நன்கு தெரியட்டும் என வாழ்த்துவதால் நம் கண்களும் நன்கு தெரியும்.இதையேதான்      ” எறும்பு தின்றால் கண் தெரியும் ” என்ற அர்த்தத்தையே ” எறும்பைத் தின்றால் கண் தெரியும் ” என்று அனர்த்தம் ஆக்கிவிட்டார்கள் . அதனால் கோலம் போடும் போதெல்லாம் சுண்ணாம்பால் கோலம் போடாதீர்கள், பச்சரிசி மாவால் கோலமிடுங்கள் . இதுதான் நமது பாரம்பரியம் . நம் கொள்கை .

vallalar

” எல்லாவுயிரும் என்னுயிர் போல் எண்ணி இரங்கவும் நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே ” என்னும் திரு அருட்பிரகாச வள்ளலாரின் வாக்கை உயிரென மதிப்போம் . எறும்பு சாக்பீஸ் போட்டு எறும்புகளை அழிக்கும் முன்னர் ஒரு கணம் யோசியுங்கள்.எந்த உயிரையும் அழிக்கும் முன்னர் இது அவசியமா? என்று யோசியுங்கள் .

சந்திரனுக்குள்ள நவக் கிரககோலம்மேலே குறிப்பிட்டவற்றுள் ஆவாரம் பூவை ஏன் முக்கியத்துவப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அடுத்த கட்டுரையில் ஆவாரம்பூ காணலாம் .