புருவ முடி திருத்துதல்(த்ரெட்டிங்)(THREADING)
இப்போதுள்ள இளைய தலைமுறை பெண்கள் அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகிறார்கள்.எனக்குத் தெரிந்து ஸ்டிக்கர் பொட்டால் வரும் கேடுகள் பற்றி என்னதான் பெண்களிடம் எடுத்துச் சொன்னாலும் குங்குமம் அழிந்துவிடுகிறது, என்று கூறி ஸ்டிக்கர் பொட்டை விட மறுக்கிறார்கள்.பெண்ணைப் பேதை எனச் சொன்னதற்காக,தன்னுயிரை தானே அழிக்கும் அளவு இவ்வளவு பேதமையாகவா இருப்பது????
இப்போது பெண்கள் தங்களை அழகுபடுத்துதல் என்ற பெயரில் தங்கள் உயிரை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இன்னோர் பழக்கத்தையும் இங்கே விளக்கவே இந்தப் பதிவு!!!!
புருவ முடிகளைத் திருத்துகிறோம் (த்ரெட்டிங்)(THREADING)என்ற பெயரில் தங்கள் உயிரைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி விளக்க இருக்கிறேன்.புருவ முடிகள் என்பவை பிராணன் இயங்கும் இடங்கள்.இறப்பு நெருங்கி வரும்போது புருவ முடிகள் தொட்டாலே கையோடு வந்துவிடும்.உடல் பிராணன் தீர்ந்து போய்விடுவதாலேயே புருவ முடிகள் கொட்டிப் போய்விடுகின்றன.
இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றபோது (த்ரெட்டிங்)(THREADING) ,கண்ணைச் சுற்றியுள்ள நட்சத்திர காலம்,காமபூரி வர்மம்,திலர்த வர்மம் (பொட்டு வர்மம் அல்லது சுடரொளியின் காலம்) , மின் வெட்டி வர்மம் (முன் வெட்டி வர்மம் அல்லது விழி பிதுங்கி வர்மம்),மந்திரக் காலம், அடக்க வர்மம், நேம வர்மம், பட்சி வர்மம்,கண்ணாடி வர்மம்(மூக்கிறாணி வர்மம்), பால வர்மம், சூண்டிகை வர்மம், கொண்ட வர்மம் போன்ற கண்ணைச் சுற்றி உள்ள வர்மங்களில் , பாதிப்புக்கள் நேர்கின்றன.இந்த புருவ முடிகளைத் திருத்துகின்றவர்களுக்கு இந்த வர்மங்களைப் பற்றித் தெரிய வாய்ப்பேயில்லை.
இதனால் பெண்களின் பிராண சக்தி குறைகின்றது.விளைவு குறைவான பிராண சக்தியால், ஆயுளும் குன்றி, பிராண சக்தி குன்றிய குழந்தைகளையும் பெற்று, ஆரோக்கியக் குறைவான சமுதாயத்திற்கே வித்திட்டுவிடுகின்றனர்.
இவை ஆயுளைக் குறைப்பதுடன் பல பெரும் நோய்களுக்கும் காரணம் ஆகின்றன.பல ஆங்கில மருத்துவத்துக்கு பிராணன் எங்கே நிலை கொண்டிருக்கிறது. அதை சிதைத்தால் என்ன விளைவுகள் நேரும் என்பது தெரியாது. இதனால் பல ஆங்கில மருத்துவர்கள் கத்திகளை வைக்கக் கூடாத இடத்தில் வைத்து பலரை பர லோகம் அனுப்பிவிடுகிறார்கள்.
வர்மங்களில் நிலை கொண்டிருக்கும் மின்காந்த சக்தியை எந்த வழியிலும் சிதைப்பது கூடாது.மேலும் உடலின் முக்கிய சக்திப்பாதைகள் கண்களுக்கு அருகில் ஓடுகின்றன, எனவே இந்த இடங்களில் கை வைப்பது நமக்கு நாமே தலைக்கு கொள்ளி வைத்துக் கொள்வது போல ஆகும்.
மேலும் எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். இறைவன் உறையும் இடம் இதுவே!!!! இதை உணர்ந்து நம் நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்றாற் போல் பெண்கள் நல்ல சுத்தமான விளக்கெண்ணையை(டாபர் நிறுவனம் ஏரண்டத் தைலம் { DABUR ( ERAND THAIL ) என்ற பெயரில் சுத்தமான விளக்கெண்ணெயை சந்தைப்படுத்தி வருகிறார்கள்) கண் புருவங்களில் தீட்டுவதானாலும், கண்ணில் இட்டு வருவதனாலும் தம் ஆயுளையும் காத்து , நீட்டித்து,நல்ல பிராணனும்,நீண்ட ஆயுள், நிறை ஆரோக்கியமும் கொண்ட தேகத்தால் இதே போல நற்குழந்தைகளையும் பெற்று நல் ஆரோக்கிய சமுதாயத்திற்கு வித்திடுங்கள் .
தெரிந்துகொள்ள வேண்டிய பதிவுகள் அய்யா, வழங்கியமைக்கு நன்றி.
தேவன் வெகு நாட்களுக்குப் பின் வலைப் பூவில் உங்கள் கருத்துரையை பார்க்கிறேன்.கருத்துரைக்கு நன்றி.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thanks Iyyah! for your information.
Thank you for very much for your valuable message.
kalai
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,
மிக மிக அற்புதமான செய்தி…நன்றி அய்யா.
நன்றி சாமிராஜன்
அன்புள்ள திரு சாமிராஜன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மதிப்பு மிக்க ஐயா வணக்கம்!
மிகவும் முக்கியமான தகவல்
இன்னும் அதிகமாகவே உங்களிடம் எதிர் பார்க்கிறேன்.
மிக்க நன்றி
very good information…….
அப்போ threading செய்யாம எப்படி shape ah eyebrow வெச்சிக்கரது? I didn’t mean this question in funny way, seriously I’m asking ஐயா.
அன்புள்ள திரு ஸ்ரீ வித்யா அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி,
கையில்லாமல் , கண்ணில்லாமல் , காலில்லாமல் வாழ்பவர்களிடையே உங்களை நல்ல நிலையில் படைத்துள்ள இறைவனுக்கு தெரியாதா உங்கள் புருவம் எப்படி இருக்க வேண்டும் என்று . அதைத் திருத்துகிறேன் பேர்வழி என்று உயிரைக் குறைக்கும் வேலையில் ஈடுபட்டால் அது இறைவன் பொறுப்பில்லை. அமுதமும் , விஷமும் இறைவன் படைப்பே ! அமுதம் சாப்பிடுவதும் , விஷம் சாப்பிடுவதும் உமது பொறுப்பு . விளைவுகளை அனுபவிப்பதும் உம் பொறுப்பே. அழிந்து மறையும் இந்த அழகுக்காக இப்படி உயிரைக் குறைத்துக் கொள்கிறார்களே , இதையே விதி என்று அழைக்கிறோம்.
இப்படிக்கு
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்