இந்துப்பு ( ROCK SALT )
அன்பார்ந்த வலை வாசகர்களே!!!
இடுகை மிகத் தாமதம் ஆனதற்கு மிக வருந்துகிறேன். எனது வலைப்பூவில் ஒரு அன்பர் கருத்துரையில் மற்ற வேலைகளை விட்டு காய சித்திக்கு வழி பார்க்குமாறு கூறி இருந்தார்.காய சித்தி மூலிகைகளை சாப்பிட ஆரம்பித்து இருப்பதால் மிக களைப்பாக இருப்பதால்,சற்று நேரம் கூட எழுத இயலாத அளவிற்கு களைப்பு வேறு.இதிலும் மீறி மின்வெட்டு வெட்டு வேறு.நிறைய அன்பர்களின் வேண்டு கோள் “எழுதுங்கள் என்று”.அனபர்களின் கட்டளைக் கிணங்க இதோ ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை.
யாரைப் பற்றி என்றால் திருவாளர் மத்திய அரசாங்கம் பற்றித்தான்.அரசு என்பது மக்களைக் காக்க என்பது போய்,மக்களை கொன்றாவது தனது முட்டாள் தனமான நிலைப்பாட்டை உறுதி செய்வது என்று மிகவும் வியாபார ரீதியாக நடக்கும் அரசாக நமது மத்திய அரசாங்கம் மாறிப் போனது நமது துரதிருஷ்டமே!!!ஒரு புறம் கூடங்குளம் அணு மின் நிலையத் திறப்பு என்ற அச்சுறுத்தல். கூடங்குளம் அணு மின்னிலையம் பற்றியும் அதன் உண்மைகள் பற்றியும் ஒரு தனிக் கட்டுரை எழுதுகிறேன்.
இன்று எழுத இருப்பது அரசு செய்த முட்டாள் தன வரிசையில்,ஒரு மைல் கல் முட்டாள்தனத்தினால் பொது மக்களும்,நம் எதிர்கால சந்ததிகளும் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர்,இன்னும் எப்படி பாதிக்கப்பட போகிறார்கள் என்பது பற்றிய கட்டுரையே இது.
கல்லுப்பு என்ற சோற்றுப்பு சோடியம் குளோரைடு என்ற வேதிப் பெயர் கொண்டது.இதை செந்தமிழில் அளம் என்பார்கள்.முன்னாளில் சம்பளம் என்று தொழிளாளர்களுக்கு கொடுப்பது (சம்பு+அளம்=சம்பளம்) சம்பா என்ற நெல்லும் உப்பும்தான்.எனவே இது லட்சுமி வாசம் செய்யும் பணமாகக் கருதப்பட்டது.எனவே செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் உப்பு ,உறைமோர்,விதை நெல்,வசம்பு(பேர் சொல்லாதது),நிறை குடம் போன்றவற்றை அறவே தர மாட்டார்கள். இது மட்டுமல்ல மாலை 6 மணிக்கு மேல் விளக்கு வைத்த பின் இவற்றைத் தர மாட்டார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உப்பை நஞ்சாக்கிவிட்டது ஒரு அரசு உத்தரவு .அயோடின் என்ற வேதிப் பொருளை உப்பில் கலக்க அரசு போட்ட முட்டாள்தனமான உத்தரவின் விளைவுகளை விவரிப்பதே இந்த பதிவின் நோக்கம்.
உப்பை சேர்க்காத பொருள்களே இல்லை.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள்.இன்று உப்புள்ள பண்டம் குப்பையிலே என்று சொல்லும் அளவுக்கு அயோடின் கலந்த உப்பின் கோர முகம் உள்ளது.அயோடின் சேர்க்கப்பட்ட உப்பால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பாதிக்கப்பட்டு முக்கியமான நாளமில்லாச் சுரப்பியான தைராய்டு சுரக்கும் சுரப்பு நீர்களானT3 ,T4 ஆகியவை பாதிக்கப்பட்டு விளைவாக உடலின் முழு வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்பட்டு நடைப் பிணங்களாக உலவும் அவலத்தை நாம் வெகு சீக்கிரம் நாம் காணலாம்.கண்கள் பிதுங்கி கழுத்தில் பெரும் கழலைக் கட்டியுடன் மக்களும்,எதிர்கால சந்ததிகளும் அல்லாட வேண்டாம் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
நன்றி:- மல்லிகை மகள்
இந்த இணைப்பையும் பாருங்கள்
http://blogspot.us4.list-manage.com/track/click?u=1fbcbbddf2199b00d58a4c0ab&id=231b5d31a4&e=91275163e0
கல்லுப்பு என்ற சோற்றுப்புக்குப் பதிலாக பாறை உப்பு(ROCK SALT) என்ற இந்துப்பை உபயோகப்படுத்தினால் இந்த பாதிப்புகளில் இருந்து தப்பலாம்.இதை ஹிந்தியில் சிந்தா நமக்கு என்பார்கள்.இந்த இந்துப்பு என்பதும் சோடியம் குளோரைடுதான்.ஆனால் மற்ற சில உப்புக்களும் சரியான விகிதாச்சாரத்தில் உள்ளது.மேலும் இந்த உப்பில் இந்த அயோடின் போன்ற விஷ வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதில்லை.
இந்த இந்துப்பு பல மருத்துவ குணங்கள் கொண்டது.இந்த இந்துப்பு சேர்ந்த மருந்தால் குருடனும் பார்வை பெற வல்ல மருந்தொன்றை திருமூலர் வைத்திய சாகரத்தில் சொல்லி உள்ளார்.அந்தப் பாடல்
இந்துப்பு திப்பிலி இயல் பீதரோகிணி
நந்திப்பூச் சாற்றில் நயந்து அரைத்திட
அந்தகன் கண்ணுக்கு அருந்ததி தோன்றிடும்
நந்தி நாதன் நயந்து உரைத்ததே.
-திருமூலர் வைத்திய சாகரம்-
இந்துப்பு, திப்பிலி,பீத ரோகிணி ஆகியவற்றை சமமாய் எடுத்து நந்தியாவட்டம் பூச்சாற்றில் அரைத்து கண்ணிலிட குருடன் கண்ணுக்கு அருந்ததி என்னும் நட்சத்திரம் தெரியும் என்று நந்திக்கு சிவன் கூறியுள்ளார்,என்பதே இதன் பொருள்.
இப்படி மிக உயர் தன்மையுள்ள இந்துப்பை சோற்றுப்பிற்கு பதிலாக உபயோகித்து வந்தால்,உடலிலுள்ள துர் நீர்கள் எல்லாம் நீங்கி உடல் நலம் பெறும்.காயசித்திக்கும்,பத்தியத்திற்கும்,காய கற்பத்திற்கும் ஏற்ற உப்பு இது.இதை உபயோகித்து,அயோடின் நஞ்சு கலந்த சோற்றுப்பை தவிர்த்து எல்லோரும் நலம் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
என் சித்தி க்கு கூட தைராய்டினால்
உடல் மிக குண்டாகி சிரமப்படுகிறார்
மிக அவசியமான பதிவு
மிக்க நன்றி ஜி
கருத்துரைக்கு நன்றி திரு ஷெரீஃப் அவர்களே,
இனி நாம் அயோடின் கலந்த சோற்று உப்பை உபயோகிக்க,உபயோகிக்க அனிவரும் தைராடிட்டிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு,கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதைப்பட்டு மரணத்தை தழுவ நேரிடும்.எனவேதான் இந்த எச்சரிக்கைப் பதிவு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
சிறப்பான விளக்கங்கள். நமது அரசாங்கம், சில அறிவுஜீவிகளால் நடத்தப்படும் முட்டாள்தனமான அரசாங்கம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
பகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/
கருத்துரைக்கு நன்றி திரு சங்கர் குருசாமி அவர்களே,
அரசு செய்யும் எல்லாக் காரியங்களும் மக்கள் நலனுக்காக மட்டுமே இருக்கும் என்று மக்கள் எண்ணிவிடக் கூடாது. எனவேதான் இந்த எச்சரிக்கைப் பதிவு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Nearly all of whatever you point out is supprisingly appropriate and that makes me ponder the reason why I had not looked at this in this light previously. This article really did turn the light on for me personally as far as this subject goes. But there is one point I am not too comfortable with so whilst I attempt to reconcile that with the actual main idea of your issue, let me observe exactly what all the rest of your subscribers have to say.Nicely done.
கருத்துரைக்கு நன்றி திரு Skyrim Guide அவர்களே,
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Typically, I find this type of information very dull, but you made it interesting to me. This took me in and made me really think about the things you wrote. I really like this article. http://www.samsung1080phdtv.net/
ஐயா,
உப்பின் தன்மை எப்படி இருக்கும்? இரண்டு உப்புக்கும் ஒரே அளவிலான உப்பு தன்மையா?
தயை செய்து விளக்குங்கள்.
S . சேர்மராஜ்
இரண்டு உப்பும் சோடியம் குளோரைடுதான்.ஆனால் இந்துப்பில் உவர்ப்புத் தன்மை சற்றுக் குறைவாக இருக்கும்.இந்துப்பில் பொட்டாசியம் அளவு சற்றுக் கூட இருக்கும்.இதனால் சிறுநீரக செயல்பாடு குறைவாக இருப்பவர்களும்,சிறுநீரக செயலிளப்பால் அவதிப்படுபவர்களும் தவிர்ப்பது நலம்.ஆனால் முதலில் இருந்தே இந்துப்பு உபயோகித்து வந்தால் சிறுநீரக செயலிளப்பு,இரத்தக் கொதிப்பு,ச்ர்க்கரை வியாதி போன்ற தற்போதைய சமுதாய நோய்களும்,இனி வர இருக்கும் சமுதாய நோய்களும் வராது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
INTHUPPA AVL SHOPPING ADDRES PL.
கருத்துரைக்கு நன்றி திரு மனோகரன் அவர்களே,
இந்துப்பு தமிழ் நாட்டில் சித்த மருந்து,நாட்டு மருந்து மருந்துக் கடைகளில் கிடைக்கும்.வட நாட்டில் எல்லா பலசரக்குக் கடைகளிலும் கிடைக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
dear samy sir,
i want sathuragiri sidhamuligai pl send details & contact person addres
thanks.
manoharan.R
கருத்துரைக்கு நன்றி திரு மனோகரன் அவர்களே,
சதுரகிரியில் உள்ள சித்த மூலிகைகள் பற்றி நன்கறிந்த நண்பர் திரு கண்ணன் அவர்களின் முகவரி
இதோ கீழேயும் கொடுத்துள்ளேன்.
+919894912594
+919943205566
அவரது முகவரி:-
பெ.கண்ணன்.
சதுரகிரி ஹெர்பல்ஸ்,
2/147,மங்கம்மாள் கோவில் தெரு,
கான்சாபுரம்,(P-O)
திரு வில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
அவரது எண்ணுக்கு தொடர்பு கொண்டு விலை என்ன என்று கேட்டு அதைப் பெற்றுக் கொள்ளவும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
My cousin is a social worker, and I have seen her touch a lot of lives. Thank you for this information and for provided such a wonderful resource for people who need inspiration and help.
It isn’t often that an informative article grabs my attention and involves me in its content. Your article kept me interested from beginning to end. Yours is a very good informative article with unique content.
நன்றி ஐயா, இந்துப்பு பற்றி தகவலுக்காக. இந்துப்பு எங்கு கிடைக்கும். அதன் தயாரிப்பு பற்றியும் விளக்கினால் நன்றாக இருக்கும். பாக்கட்டுகளில் அடைக்கப்பட்ட இந்துப்பு கிடைக்குமா?
அன்பு மிக்க திரு சிவகுமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
கிடைக்கும். இது போன்று சாதாரணமான கேள்விகளைக் கேட்டு என் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள் .
எனது உங்களோடு தொடர்புடைய நேரம் மிகக் குறைவானது.அந்த நேரத்தை சரியாக உபயோகித்துக் கொள்ளுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
இடுகை மிகத் தாமதம் ஆனதற்கு மிக வருந்துகிறேன். எனது வலைப்பூவில் ஒரு அன்பர் கருத்துரையில் மற்ற வேலைகளை விட்டு காய சித்திக்கு வழி பார்க்குமாறு கூறி இருந்தார்.காய சித்தி மூலிகைகளை சாப்பிட ஆரம்பித்து இருப்பதால் மிக களைப்பாக இருப்பதால்,சற்று நேரம் கூட எழுத இயலாத அளவிற்கு களைப்பு வேறு.இதிலும் மீறி மின்வெட்டு வெட்டு வேறு.நிறைய அன்பர்களின் வேண்டு கோள் “எழுதுங்கள் என்று”.அனபர்களின் கட்டளைக் கிணங்க இதோ ஒரு விழிப்புணர்வுக் கட்டுரை.
மேற்கண்டவற்றை படிக்கும் போது தாங்கள் காய கற்பம் சாப்பிடுவது தெரிகிறது அதைப்பற்றி விளக்கம் கூறவும் தங்களை காண இயலுமா
அன்பு மிக்க திரு ஜே மாரிமுத்து அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
எம்மைச் சந்திப்பது மிகக் கடினம். எம் வேலை நேரம் மிக அதிகம்.நமது வலைத்தள வேலைகள்.அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்தல்.அத்துடன் நோயாளர்கள் வருகையும் மிக அதிகமாக இருப்பதால் நோய் குணமாக்கல் மருந்து செய்தல் போன்ற பல வேலைகள்.இது போக மேலே குறிப்பிட்டது போல சில வேலைகளும்,எமது (ஒரு பொதுத் துறை நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறோம்) பணிச் சுமையும் ,அதில் உள்ள தொல்லைகளும் சேர்ந்து எம்மை மேலும் நேரமில்லா ஆளாக மாற்றிவிட்டது.எனவே அவசியம் ஆனால் மட்டும் எம்மைச் சந்திக்க முயலுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Thank you for your kind information about the indhuppu.
அன்புள்ள திரு லெனின் குகநாதன் அவர்களே,
உங்களது கருத்துரைக்கு நன்றி ,
முதலில் தமிழில் எழுதுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மிகவும் நன்றி.
இங்கே கனடாவில் கடல் உப்பு sea salt என்கின்ற உப்பு கிடைக்கின்றது. இது இந்துப்பு ஆகுமா?
இந்துப்பு ஆகாது .