எலும்பு முறிவிற்கு முட்டைப் பற்றிடல் – பாகம் 2

முதலில் முட்டைப் பற்றிட தேவையான பொருட்கள்

( 1 ) நாட்டுக் கோழி முட்டை (கிடைக்கவில்லை என்றால் லக்கான் கோழி முட்டை உபயோகிக்கலாம் )

( 2 ) உளுந்தம் பொடி மிக மெல்லியதாய் அரைத்தது

( 3 ) நல்லெண்ணெய்

( 4 ) அத்திக்காய் காய வைத்தது மெல்லியதாய் பொடி செய்து அரைத்தது ( கிடைக்கவில்லை என்றால் விட்டுவிடலாம் )

( 5 ) காடாத் துணி வேண்டிய அளவுக்கு

( 6 ) துளி அளவு சுண்ணாம்பு

முதலில் நாட்டுக் கோழி முட்டைகளை கட்டுப் போட தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்த கட்டிற்கு 4 முட்டைகள் தேவை என்பதால் 4 முட்டைகள் மட்டும் எடுத்துள்ளேன்.

அடுத்து நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட முட்டை வெள்ளைக் கருவுடன் உளுந்தம் பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் பிசைந்து கொண்டு அத்துடன் அத்திக்காய்ப் பொடியும் சேர்த்துப் பிசைந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து நல்ல ஒட்டும் பருவம் வந்தவுடன் அதில் துளியளவு நீற்றுச் சுண்ணாம்பை சேர்த்து பிசைந்து துணியில் தடவி மேலே போட்டு காற்று குமிழ் இல்லாமல் இறுக்கமாக போட்டு கட்டுப் போட்டுவிடவும்.

இந்த முட்டைப் பற்று சாதாரணமாக அலோபதி எலும்பு முறிவு மருத்துவர்கள் போடும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுப் போடுவது போலன்று. இது எலும்பும் , எலும்பு மச்சையும் , எலும்பிலுள்ள சவ்வுகளையும் மிக நன்றாக ஒட்ட வல்லது .

இத்துடன் உள்ளுக்குச் சாப்பிட நத்தைச் சூரி எண்ணெயும், வஜ்ஜிர வல்லி என்னும் பிரண்டையை லேகியமாகச் செய்து தர ஒரு வாரத்தில் எலும்பு கூடும்.

இதே எலும்பு முறிவை அலோபதி வைத்தியத்தில் சரி செய்ய 3 மாதங்கள் ஆகும். அத்துடன் சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் செயலிளப்பு , மண்ணீரல் செயலிளப்பு அலோபதி வைத்தியத்தில் போனசாக வழங்கப்படும்.இது தேவையா என்று யோசியுங்கள் ???

இந்த முட்டைப் பற்றை ஒடிந்த எலும்பைச் சேர்க்க மற்றும் எலும்புத் தேய்மானம் , சவ்வு கிழிதல் , சவ்வு விலகல் , இடுப்பெலும்பு தேய்மானம் , முதுகுத் தண்டுவட விலகல் , கழுத்தெலும்புத் தேய்வு ஆகியவற்றைக் குணமாக்கும் . இதோ கீழே முட்டைப் பற்றிடும் ஒளிப் படக்காட்சியை யூடுயூப்பில் பட ஒளியில் காணுங்கள்.

http://youtu.be/LmAZGZwaVz0