டெங்கு காய்ச்சல் ஒரு விழிப்புணர்வு சிறப்புக் கட்டுரை
டெங்கு காய்ச்சல் தீர
முதலில் இந்த டெங்கு காய்ச்சல் நமக்கு புதிதல்ல.பழைய ஆனந்த விகடனை எடுத்துப் பார்த்தால் அதில் பல வருடங்களுக்கு முன் வெளியான ( 1967 முதல் 1969 வரை ) சிரிப்புக் கி ( டெங்கு ) என்ற பெயரில் பல சிரிப்புக்களையும் , கார்ட்டூன்களையும் வெளியிட்டுள்ளது. என்னிடம் அந்தப் புத்தகங்கள் உள்ளது .தேடிக் கிடைத்தால் வெளியிடுகிறேன்.
அப்போது இது எதனால் உருவாகிறது ? ஈடிஸ் கொசு கடிப்பதனால் கிருமிகள் பரவி அதன் மூலம் காய்ச்சல் உண்டாகி என்று நீண்டு கொண்டே செல்கிறது அல்லோபதி கதை. இதைவிட இந்தக் கொசுவைக் கொல்ல அடிக்கும் புகைப்பானில் தெளிக்கும் மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகள் அப்பப்பா சொல்ல முடியவில்லை . இந்தக் கொசுவைக் கொல்வதனால் இந்தக் காய்ச்சலை ஒழிக்க முடியுமா ??? வீட்டில் பத்து பேர் இருந்தால் ஒருவருக்கோ இருவருக்கோ மட்டும் காய்ச்சல் வருகிறது . முதலில் இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் வருகிறது.
ஒரு விளம்பரம் கூறுகிறது . தற்போது கிருமிகள் பலமாக மாறிக் கொண்டே வருகின்றன ( நாம் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்லாமலே சொல்லி விடுகின்றனர் ). எனவே உங்களுக்குத் தேவை பலமான கிருமி நாசினி என்று !!! இன்னோர் விளம்பரத்தில் ஒரு பையன் எங்க மம்மி சொல்றாங்க ஒரு நிமிடம் நம்ம கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும் ???? என்று அதற்கு ஒரு பெண் கூறுகிறாள் உன் சோப்பென்ன ஸ்லோவா ??? இவர்கள் என்ன சொல்கிறார்கள் . கிருமிகளைக் கொல்லும் அந்த வேதிப் பொருள் நம் கையிலுள்ள நம் உயிரணுக்களை விட்டு வைக்குமா ????? கிருமிகளை உலகத்தை விட்டே அழித்துவிடலாம் என்கிறார்களா என்ன ???
இதை சாதாரண எந்த உயிரி விஞ்ஞானியும் ஒப்புக் கொள்ள மாட்டார் !!! கிருமிகளை உலகத்தை விட்டோ கேவலம் நம் வீட்டை விட்டோ ஒழிக்க முடியாது .அப்படி ஒரு வீட்டை ஆக்கினால் அந்த வீடு நாமும் வாழத் தகுதியற்றதாக ஒரு விஷமித்த வீடாகத்தான் ஆகிவிடும்.
மீதமுள்ள ஆட்களுக்கு இந்த பயத்திலேயே இது தொற்றிவிடுகிறது . பயத்தினால் காய்ச்சல் பரவுமா ??? நிச்சயமாக ??? பயமே வியாதியை அதிகரிக்க உற்ற துணை !!! ஏனெனில் பீனியல் சுரப்பியின் செயல்பாடு பயம் ஏற்படும் போது குன்றி அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தி குன்றுகின்றது.
இப்போது என்னதான் சொல்ல வருகிறீர்கள். உங்கள் வீட்டை முதலில் நீங்கள் நல்ல உயிரினங்கள் வாழும் வீடாக மாற்ற முதலில் நாட்டு மருந்துக் கடையில் சிங்கப்பூர் சாம்பிராணி , நில வேம்புக் குடிநீர் என்று குச்சி குச்சிகளாக அட்டைப் பெட்டியில் அடைத்தது IMPCOPS தயாரிப்பு கிடைக்கும்.இவற்றை வாங்கி கலந்து கொண்டு முடிந்தால் அத்துடன் குப்பை மேனிப் பொடியும் ,வேப்பிலைப் பொடியும் கலந்து புகை போடுங்கள்.
வீட்டை நல்ல காற்றோட்டமாக திறந்து வையுங்கள் .ஒரு கொசுவும் உங்கள் வீட்டிற்குள் நுழையாது. நீங்கள் ஆவாரை இலைப் பொடி , வேப்பிலைப் பொடி , குப்பை மேனிப் பொடி கலந்து குளிக்கும் போது மேலுக்குத் தேய்த்துக் குளியுங்கள் . ஒரு கொசுவும் உங்களை அண்டாது . கசப்பு உங்களுக்குப் பிடிக்காதது போல எந்தக் கிருமிக்கும் பிடிக்காது. ஒரு கிருமியும் அண்டாது. சோப்பு போட்டு குளிக்கக் கூடாது . பிறகேது காய்ச்சல் .
இது சொல்லி முடித்தவுடன் சோப்பு எப்போது போடலாம் என்று கேட்பது புரிகிறது . சோப்பு போட்டால் உங்கள் உடலில் தோலில் உள்ள அனைத்து எண்ணைச் சுரப்பிகளும் வறண்டுவிடும் .தோல் வறண்டு விட்டால் உடலின் மீது ஓடும் உயிரோட்டமான `CHI ‘ ஓடாது . இந்த உயிரோட்டத்தில் ஏற்படும் மின் சுற்றுப் பூர்த்தி ஆகாததை சரி செய்வதே அக்கு பஞ்சர் . ஊசி மூலம் அந்தச் மின் சுற்றை ஏற்பட செய்வார்கள் . ஒரு இடத்தில் உயிரோட்டம் அற்றால் பூர்த்தி செய்யலாம் உடலெல்லாம் பல இடங்களில் மின் சுற்று அற்றால் , அதாவது உடலின் ஒட்டு மொத்த உயிரோட்டத்தையே சோப்புக்கள் குன்ற வைத்துவிடும் , எனில் இது தேவையா ??? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் !!!!
இருக்கும் இடத்தைச் சரி செய்தாயிற்று. அதற்குப் பிறகு உடலை விஷமிக்காமல் அதாவது அலோபதி மருந்துகளை உட்கொள்ளாமல் இருங்கள் . வீட்டில் அறைக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு புகை வராது என்று கூறப்பட்ட விஷக் ( அல்லெத்ரின் என்ற விஷத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது ) கொசு வர்த்திகளை ஏற்றி வைத்துக் கொண்டு தூங்காதீர்கள் . காற்றோட்டமான இடத்தில் தூங்குங்கள்.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்.சாறுள்ள பழங்களை காலையிலும் மாலையிலும் உண்ணுங்கள் . பழச் சாறாக்கி பிழிந்து எடுத்து சாப்பிடாதீர்கள் . இளநீர் அடிக்கடி சாப்பிடுங்கள். மதியம் ஒரு நேரம் மட்டுமே அரிசி உணவை எடுத்துக் கொள்ளுங்கள் .அதுவும் கஞ்சி வடிகட்டின சோறாக இருப்பது நலம் .குக்கர் அரிசிச் சோற்றை தவிருங்கள் .
இதெல்லாம் போக காய்ச்சல் வந்தால் கீழுள்ள மருந்தை உபயோகியுங்கள் .
( 1 ) விஷ்ணு கிராந்திப் பொடி
( 2 ) பற்பாடகப் பொடி
( 3 ) குப்பை மேனிப் பொடி
( 4 ) நில வேம்புப் பொடி
( 5 ) ஆகாச கருடன் கிழங்குப் பொடி
( 6 ) வாய் விளங்கம்
( 7 ) சங்கங் குப்பி
( 8 ) நத்தைச் சூரி விதை
( 9 ) மாவிலங்கப்பட்டை
( 10 ) கடுகு ரோகணி
( 11 ) அக்கரகாரம்
( 12 ) கோஷ்டம்
( 14 ) செப்பு நெருஞ்சில்
( 15 ) விராலியிலை
( 16 ) நொச்சிப் பட்டை
( 17 ) வேப்பம் பட்டை
( 18 ) மஞ்சள்
இவை கலந்து அரை குறையாக இடித்து வைத்துக் கொண்டு மூன்று நாட்கள் மூன்று வேளை அருந்த காய்ச்சல் பறந்தோடும் . நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . மேற்கண்ட மருந்துகள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் .
மேற்கண்ட மருந்துகள் சுரஹரகாரிகள் , வியதாபேதகாரிகளும் கூட எனவே அவற்றில் ஒன்றிரண்டு கிடைக்காவிட்டாலும் கூட கீழே இருக்கும் இரண்டும் அவசியம் சேர்த்து சாப்பிட்டாலே நலம் பயக்கும்.
விடாத காய்ச்சலுக்கு விஷ்ணு கிராந்தி
படாத பாடு படுத்தும் காய்ச்சலுக்கு பற்பாடகம்
விராலியிலை
விராலியைப் பற்றி எழுதும் போது அதைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் போக முடியாது.ஏனென்றால் அவ்வளவு முக்கியமான மூலிகை. இந்த மூலிகை அதிகமாக வளர்ந்துள்ளதால் முருகன் குடி கொண்டு இருக்கும் மலைக்கு விராலி மலை என்று பெயர் .இந்த மலையில் அருணகிரி நாதருக்கு வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளித்தார்.
மேலும் இந்த விராலிக் கட்டைகளை உள்ளே வைத்துத்தான் அதன் மீது களிமண்ணை அப்பி அக்காலத்தில் குடிசை வீடுகளுக்கு மண்ணால் சுவர் வைத்துக் கட்டுவார்கள். அந்தச் சுவர்கள் எந்த மழையிலும் நனைந்தாலும் நமது உடலில் எலும்புச் சட்டம் இருப்பது போல மண்ணுக்குள் இருந்து மண் கரைந்து போகாமல் காக்கும் . அவ்வளவு வல்லமையுள்ளது இந்த மூலிகை .இதே போல இது எலும்பையும் , எலும்பு மஞ்சையையும் , அதன் மூலம் இரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்தியையும் காக்க வல்லது.எலும்பு முறிவிற்கும் , எலும்பு தேய்மானத்திற்கும் இதன் இலையை அரைத்து மேற்புறமாக பற்றிடலாம்.
ஏனென்றால் டெங்கு காய்ச்சலில் மரணம் நிகழ்வது இரத்தச் சிவப்பணுக்கள் டெங்கு கிருமிகளால் குறைபடுவதால்தான் .மேற்கண்ட இரு மருந்துகள் மட்டுமே காய்ச்சலைக் கட்டுப்படுத்த போதும் என்றால் இது இரத்தச் சிவப்பணுக்களை காப்பாற்ற இது அவசியம்.எனவே இதை அவசியம் சேர்த்தால் இரத்த சிவப்பணுக்களைக் காப்பாற்றி உயிரையும் காப்பாற்றும்.
இத்துடன் IMPCOPS தயாரிப்பான ( 1 ) பிரம்மானந்த பைரவம் அல்லது (2) ஆனந்த பைரவமும் மூன்று வேளையும் ஒரு மாத்திரை வீதம் வெந்நீரில் சாப்பிட்டு வரலாம். இது அனைத்துக் காய்ச்சலுக்கும் குணம் செய்யும் . மலையப்பசாமி வைத்திய சாலை பழனி அவர்கள் தயாரிக்கும் சுர மாத்திரையையும் வாங்கியும் உபயோகிக்கலாம் .
ஐயா ! காலை வணக்கம் .இந்த பயனுள்ள பதிவிற்கு மிக்க நன்றி . ஐயா எனக்கு சந்தேகம் ஒன்று உள்ளது அதாவது நான் காலம் காலமாக சோப்பு பயன்படுத்தி குளிக்கிறேன் . சோப்பு இல்லாமல் குளித்தால் குளித்த மாதிரியே இருக்காது ஆதலால் சோப்புக்கு மாற்று வழி இருந்தால் கூறுங்களேன் !. தாங்கள் கூறிய 18 மூலிகைகளை கலந்து குடிக்க வேண்டுமா ? அல்லது தனிதனியாக குடிக்க வேண்டுமா ?
அன்பு மிக்க திரு கண்ணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!சோப்பிற்கு பதிலாக ஸ்நானப் பொடி சதுரகிரி ஹெர்பல்ஸ் திரு கண்ணன் தயாரிக்கிறார்.அதை தேய்த்து குளித்தால் தோல் மிக வழு வழு என்றிருக்கும் அந்த சுகமே தனி.அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.நான் கூறிய பதினெட்டு மூலிகைகளை பொடியாக செய்து சாப்பிடவும் செய்யலாம் ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொண்டு இரண்டு குவளை தண்ணீர் ஊற்றி ஒரு குவளையாக வரும் வரை சூடாக்கி டிகாக்ஷன் போல இருக்கும் கஷாயமாக்கி குடிக்கலாம். நான் கூறிய பதினெட்டு மூலிகைகளில் ஒரு சில கிடைக்காவிட்டாலும் முக்கியமாக மூன்று மூலிகைகளை ( விஷ்ணு கிராந்தி என்றழைக்கப்படும் விஷ்ணு கரந்தை, பற்பாடகம், விராலி ) உள்ளடக்கிய இவற்றை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் மேற்கண்டவாறு கஷாயமாக்கி குடிக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தங்கள் பதிவில் தான் எத்தனை விஷங்களை
தெரியாமல் பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம்
என்பது தெரிகிறது
டெங்கு வருமுன் காப்போம்
நன்றிகள் பல கோடி சாமி ஜி
அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!இந்த மூன்று மருந்துகளை ( விஷ்ணு கிராந்தி என்றழைக்கப்படும் விஷ்ணு கரந்தை, பற்பாடகம், விராலி ) உபயோகித்தாலே டெங்கு வருமுன் காக்கலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்,
தங்களின் பதிவு அருமையாக இருக்கிறது.
மேலும் உங்கள் முயற்சி தொடரட்டும்.
நன்றி.
அன்பு மிக்க திரு காளியப்பன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Great work
kindly continue your service
Thanks,
Nantha
Tambaram
அன்பு மிக்க திரு நந்தா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,
மிகவும் பயனுள்ள தகவல்கள். இன்றைக்கு நம் எல்லோருக்கும் தேவையான மருந்துகள்.
தங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.
அன்பு மிக்க திரு ரமேஷ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பு மிக்க திரு ரமேஷ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Ayya,
It’s a great post.
No words to Thank for a lot of your information to community.
I had sent a mail in your gmail I’d.
kindly reply me
Thanks,
Karthick
Mumbai
அன்பு மிக்க திரு அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!மக்கள் சேவையே மகேசன் சேவை என உத்தாரத்துடன் பிறப்பித்தான் நம்மை . செய்கிறோம் !!! அவன் செயலன்றி வேறில்லை .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Great job. while reading it we feel our wrong doings.
அன்பு மிக்க திரு மீனா கணபதி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!செய்யாதன செய்யோம்!!!என்ற ஆண்டாளின் பாசுரங்களை ஞாபகத்தில் கொண்டாலே போதும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.
சித்தமருத்துவத்தின் அடிப்படையான விஷயங்களை உள்ளடக்கிய, பரவலாக உள்ள மூலிகைகள் குறித்தும், நோய்கள் குறித்தும் ஞானம் பெறக்கூடிய அளவுக்கான விஷயங்களை உள்ளடக்கிய ஒரு சித்தமருத்துவப் பயிற்சியை தாங்கள் உருவாக்கி வழங்கவேண்டும் என விரும்புகின்றேன்.
அர்ப்பணிப்பும், சமூக அக்கறையும் உள்ளவர்களுக்கு இப்பயிற்சியை தாங்கள அளித்தால் சித்தமருத்துவத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் உகந்ததாக இருக்கும்.
மக்கள் மருத்துவராகிய தங்களிடம் பயிற்சியைப் பெற இப்போதே நான் தயார். தாங்கள் இந்த விஷயத்தை ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்பு மிக்க திரு ஸ்ரீதரன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!தங்களின் மனம் போல நடக்கட்டும்.நான் இயன்ற வரை என்னாலாதை அனைவருக்கும் கற்றுக் கொடுக்க தயார்.இடமும் காலமும் ஒத்துழைத்தால் நடக்கும்!!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா,ஒரு குட்டி சித்தர் என்ற தங்களின் முந்தைய பதிவு
ஒன்றில் , //தலைக்கு மேல் மூன்று சக்கரங்கள் தோன்றும்.
அதன் பிரகாசம் சில சமயம் புகைப் படங்களிலும் தெரிவதுண்டு
.பின்னொரு சமயம் அது உரியவர்களின் அனுமதியோடு
பிரசுரிக்கப்படும்.// என குறிப்பிட்டு இருந்தீர்கள் அந்த
புகைப்படங்களை பதிவிட்டால் பார்க்க மிகவும் ஆவலாக
இருக்கிறோம்.
தயவு செய்து வெளியிடவும்.
அன்புடன் ஹரி
அன்புள்ள சாமிஜி,
மூலிகை சாப நிவர்த்தி மந்திரம்,மற்றும்
அதன் முறையினையும்,கன்னி நூல் என
படும் கற்றாளை நூலை எப்படி தயாரிப்பது
(கற்றாளை ஈரப்பதமானதால்)என தெரிவித்தால்
உதவியாக இருக்கும்.
அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! மூலிகை சாப நிவர்த்தி மந்திரங்கள் முதலில் சித்தி செய்ய வேண்டும் . அதற்குள்ள முறைகளையும் அது பற்றிய விவரங்களும் தொடர்ந்து வரும் கட்டுரைகளில் வெளியிடப்படும்! விரைவில் பிரசுரிக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம் ஐயா,
Platelets குறைவுக்கு சித்த வைத்திய மருந்துகள்
உள்ளனவா இருந்தால் தயவுசெய்து தெரியப் படுத்தவும்.
நன்றி ஐயா.
அன்பு மிக்க திரு தமிழன்பன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இரத்தச் சிவப்பணுக்கள் குறைவிற்கு , கரிசலாங்கண்ணி சிறந்த மருந்து .இரும்புச் சத்து நிறைந்தது. அயச் செந்தூரம் , அயக்காந்த செந்தூரம் நெ 1 ,அயக்காந்த செந்தூரம் நெ 2 ,அன்னபேதி செந்தூரம் ஆகிய மருந்துகள் சிறந்தவை .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா வணக்கம், ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்து போய் விட்டால் மறுபடியும் வருமா?
அன்பு மிக்க திரு அப்துல் ரஸாக் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
ஒரு முறை டெங்கு காய்ச்சல் ஒரு முறை வந்து குணமானால் , மீண்டும் வராத அளவுக்கு நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள் (ANTI – BODIES ) பார்த்துக் கொள்ளும்.சித்த மருந்துகள் இதற்கு துணை புரியும் ,ஆனால் அல்லோபதி மருந்துகளை உட்கொண்டு அதனால் அந்த நோய் அடக்கப்படுமானால் அது திரும்ப வரும்.நோய் தானே குணமாகும் போதோ ,அல்லது அதற்கு துணை புரியும் மருந்துகளை உட்கொள்ளும் போதோ மட்டுமே உடலில் நோய் எதிர்ப்புப் பொருட்கள் (ANTI – BODIES )உற்பத்தி ஆகும் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அருமையான பதிவு,
சில சந்தேகங்கள்….
அலோபதியினர் காய்ச்சல் என்று சொன்னால் ஒரு பெரிய இரத்த சோதனை சீட்டே கொடுப்பார்கள், உதாரணத்திற்கு, Malaria, Typhoid, Rat Fever, Brain fever, Dengue … இந்த லிஸ்டுக்கு கணக்கே இல்லை…
மேற்சொல்லப்பட்ட இந்த அற்புதக் கலவை மருந்தை இதில் எல்லாக் காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாமா. மற்றும் அந்தக் காலத்தில் இந்த டெஸ்ட் எல்லாம் இல்லாமல் நம் முன்னோர்கள் எப்படி கண்டறிந்து சிகிச்சை செய்தார்கள் என்பதை அறிய ஆவல். மற்றும் இந்தப் பதினெட்டு மருந்துகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா, அனைத்தையும் சம எடை அளவு சேர்க்க வேண்டுமா.
என் தந்தையார் சொல்லி கேட்டிருக்கிறேன், அவர்கள் சிறு வயதில் வைத்தியர் இது போன்று பொடிகளின் (சூரணம் எனச் சொன்னார்கள் என நினைக்கிறேன் ) கலவையை தேன் குழைத்து கொடுப்பார்கள். விரைவில் காய்ச்சல் நீங்கிவிடும் என்றார்கள்.
இந்தக் கலவை பற்றி யாரிடம் கேட்பது என்று நெடு நாள் தேடினேன் , இவையெல்லாம் அழிந்து விட்டதென நினைதேன்.இன்று தான் அது பற்றி தெரிந்தது.
மட்டற்ற நன்றிகள்….
மிகப்பெரிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
ஏதேனும் தவறுகள் இருப்பினும் பிழை பொறுக்கவும்.
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
சாதாரணமாக காய்ச்சல் பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ அதைவிட கொஞ்சம் மேலதிக விளக்கத்துடன் எனது வலைப்பூவில் , இந்த வலைத் தளம் ஆரம்பிப்பதற்கு முன்னால் எழுதிய விடயங்களை கொஞ்சம் படித்தால் நலம்.ஏனெனில் உங்கள் கேள்விக்கு பதிலாய் ஒரு பதிவே எழுத வேண்டி வரும் எனக் கருதுவதால் அதை பின்னொரு முறை செய்ய எண்ணி உள்ளேன். இந்த இணைப்புக்களைப் பாருங்கள்.
http://machamuni.blogspot.in/2010/09/1_16.html
http://machamuni.blogspot.in/2011/07/30.html
http://machamuni.blogspot.in/2010/10/blog-post_27.html
http://machamuni.blogspot.in/2010/12/blog-post.html
http://machamuni.blogspot.in/2010/11/6.html
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
உங்களுடைய கீழ்கண்ட அனைத்து வலைப் பூக்களையும்
http://machamuni.blogspot.in/2010/09/1_16.html
http://machamuni.blogspot.in/2011/07/30.html
http://machamuni.blogspot.in/2010/10/blog-post_27.html
http://machamuni.blogspot.in/2010/12/blog-post.html
http://machamuni.blogspot.in/2010/11/6.html
படித்தேன் மிக அருமை அய்யா. பல உபயோகமான அரிதான குறிப்புகள். நன்றி அய்யா.
அன்பு மிக்க திரு ஸ்ரீதர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அண்ணன் அவர்களுக்கு மட்டற்ற நன்றிகள்,
அணைத்துப் பதிவுகளும் அருமை, அவற்றில் சமீப காலமாக நான் அந்த கருஞ்சீரக எண்ணையை தினமும் உபயோகித்து வருகிறேன், விவரங்கள் தெரியாமலே., இன்று தெரிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
மற்றும் இன்று தமிழக அரசு சார்பில் டெங்கு பாதித்தவர்களுக்கு நில வேம்பு குடிநீர் வழங்க ஆணையிட்டதை செய்தியில் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்., மிக சீக்கிரத்தில் மக்கள் அனைவரும் உண்மையான சித்தத்தின் யதார்த்தம் அறிந்து, உலகிலேயே பண்டைய லெமூரியாவின் பேரறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் பெருமையுணர்ந்து திரும்புவர் என பேராசை கொள்ளும் சிறுவன் இவன்…
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
///உலகிலேயே பண்டைய லெமூரியாவின் பேரறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்தின் பெருமையுணர்ந்து திரும்புவர் என பேராசை கொள்ளும் சிறுவன் இவன்…///
உங்கள் அவா மட்டுமல்ல சித்தர்களின் அவாவும் அதுதான்.அதுதாம் எம்மையும் எழுத வைக்கிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நான் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன், அதை காண முடியவில்லை. எனினும் நான் எழுதியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்.
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு சதயத்துல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
பதில் கொடுத்துள்ளோம். பாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நண்பர்களே
நீங்கள் கூறியது போல் டெங்கு முன்னர் இருந்தது எனினும் அது வைரஸ் கிருமி என்றபடியால் தான் பிரச்சனை அதன் விரியத்தன்மை யை பொறுத்து அதன் தாக்கமும் இருக்கு அத்துடன் அதனை கட்டுப்படுத்த முடியும் இருப்பினும்
அதன் தாக்கம் இதயம் செயல் பாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும்
சாதாரண காச்சல் போல் முட்டு வலி என்று சிந்திக்காமல்
உடன் காய்ச்சலை கட்டுப்பாடுக்கு கொண்டு வரவேணும் இல்லையேல்
இதய செயல் பாட்டில் தாக்கத்தினால் மரணம் நிச்சயம்
சிந்திப்போம் செயல் படுவோம்
டெங்குவினை கட்டுப்படுத்த
நன்றியுடன்
யாழவன்
அன்பு மிக்க திரு யாழவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
///நீங்கள் கூறியது போல் டெங்கு முன்னர் இருந்தது எனினும் அது வைரஸ் கிருமி என்றபடியால் தான் பிரச்சனை அதன் விரியத்தன்மை யை பொறுத்து அதன் தாக்கமும் இருக்கு அத்துடன் அதனை கட்டுப்படுத்த முடியும்///
///அதன் தாக்கம் இதயம் செயல் பாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சாதாரண காய்ச்சல் போல் முட்டு வலி என்று சிந்திக்காமல் உடன் காய்ச்சலை கட்டுப்பாடுக்கு கொண்டு வரவேணும் இல்லையேல் இதய செயல் பாட்டில் தாக்கத்தினால் மரணம் நிச்சயம்///
வைரஸ் என்பது உயிருள்ளவற்றுக்கும் உயிரில்லாதவற்றுக்கும் இடையில் உள்ள பாலம் போன்றது.இது தனக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும் போது உயிருள்ளதாக மாறி பல மடங்கு பெருகும் ,அவற்றின் வளர்சிதை மாற்றத்தின் போதும் ,அவற்றின் கழிவுகள் உருவாகும் போதும் தோன்றும் நச்சுக்கள்தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு பெரும் கேடு விளைவிக்கின்றன.விளைவு இவற்றின் நச்சுக்களை எதிர் கொள்ள முடியாத உடல் மரணத்தை தழுகின்றது.
ஆனால் இந்த வைரஸ்களுக்கு உயிர் வாழ சரியில்லாத சூழ்நிலை உருவானால் அவை தம்மைச் சுற்றி ஒரு வலுவான கவசத்தை உருவாக்கிக் கொண்டு , தூங்கும் நிலைக்குச் சென்று உயிரில்லாத ஒரு வஸ்து போல் ஆகிவிடும். அந்த கவசத்தை சாதாரண நெருப்போ, சில சமயம் கடும் உஷ்ணமான 2000 டிகிரி செண்டி கிரேடு வெப்ப நிலைக்கும் (இரும்பே உருகும் வெப்பம்), அல்லது அசாதாரணமான வேதிப் பொருட்களோ (வயிற்றில் உள்ள அமிலங்கள் நமது உள்ளங்கையில் விட்டால் பொத்து அடுத்த பக்கம் வரும் அளவு வலிமை உடையது,ஆனால் அதிலும் இப்படிப்பட்ட கிருமிகள் உயிருடன் இருக்கின்றது) இவற்றை எதுவும் செய்ய முடியாது .அப்படி நிலைமை இருக்க கடும் விஷத் தன்மை வாய்ந்த மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது , அவற்றில் இருந்து எந்த வைரஸ்களும் தங்களை மேற்கண்ட கவசத்தினால் பாதுகாத்துக் கொள்கின்றன. ஆனால் விஷத்தன்மை வாய்ந்த மருந்துகளால் உடலின் , உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு , இந்த வைரஸினால் சாவதற்கு முன்பே உடலைவிட்டு உயிரை பிரித்துவிடுகின்றன.இவர்கள் கொடுத்த விஷங்களினால் இரத்தம் விஷமித்து , இதயத்தையும் இந்த விஷம் தாக்கும் போது இதயம் தன் வேலையை நிறுத்திவிடுகிறது ,என்ன செய்வது எங்களாலானதை செய்துவிட்டோம் ஆனால் இதயத் தாக்குதல் வந்து இறந்துவிட்டார்கள் என்று கையை விரித்துவிடுவார்கள்.இப்படிப்பட்ட முட்டாள்தனமான வைத்தியத்துக்கு பாதுகாப்பு கொடுக்க பல கோடி மதிப்புகளில் இயங்கும் பல பல் நாட்டு மருந்து கம்பெனிகள் உள்ளன.
படித்த பலருக்கும் இதை ஆராய்ச்சி செய்யும் மனப் பக்குவமும்,புரிதலும் இருப்பதில்லை.அயல் நாட்டு மோகம் நம்மை வைத்தியத்திலும் விடாமல் , அலோபதி வைத்தியத்திலும் நம் மக்களுக்கு கடும் மயக்கம்.எனவே அதில் உள்ள விஷங்களின் பக்க விளைவுகளையும் கருதாமல் நாமும் வாங்கி உள்ளே தள்ளி ,மேலுக டிக்கட் வாங்கி பயணப்பட்டுக் கொள்வதில் மிகப் பெருமை கொள்கிறோம்.
மேலும் ஒரு விடயத்தை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த பல வகையான வைரஸ்களை மட்டுமல்ல,சில வகையான பாக்டீரியாக்களையும் நம்மால் சுத்தமாக அழிப்பது என்பது முடியாத காரியம் . அப்படி வைரஸ்களையும் ,பாக்டீரியாக்களையும் சுத்தமாக அழிக்கப்பட்ட இடம் என்ற இடம் ஒன்று இருக்குமானால் , அது நாமும் வாழத் தகுதியற்ற கொடிய இடமாகத்தான் அந்த இடம் இருக்கும்.
எனில் நாம் இவற்றை அழிக்கவே முடியாது என்றால் ,நாம் அவற்றில் இருந்து எப்படி தப்பிப்பது எப்படி????? நாம் நம் உடலை இந்த வைரஸ்களும் பாக்டீரியாக்களும் வாழத் தகுதியற்ற இடமாக மாற்ற உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைத்தாலே போதும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்பு பொருட்களை (ஆண்டி பாடீஸ்களை) உருவாக்குகிறது(இந்த கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே தடுப்பு ஊசிகள்,தடுப்பூசிகள் நமது அந்தக் குறிப்பிட்ட நோய்க்கு மட்டும் எதிரான இந்த நோய் எதிர்ப்பு பொருட்களை வீணாக சும்மா உற்பத்தி செய்து வைப்பதால்,நம் முடலில் தாக்க நுழையும் வேறு வகையான நோய்க் கிருமிக் கெதிரான நோய் எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்ய மூலப் பொருள் இல்லாமல் தடுமாறும் நிலையிலேயே மரணம் நிகழ்கிறது.மேலும் இந்த தடுப்பூசிகளின் தீமைகள் பற்றித் தெரிந்து கொள்ள எமது இந்த வலைப்பூ இணைப்புகளைப் பார்க்கவும்.http://machamuni.blogspot.in/2010/09/1_16.html)., இந்த வைரஸ்களும் பாக்டீரியாக்களும் செயல்படுவதற்கு அற்ற சூழ்நிலையை உண்டாக்கி உடல் வியாதிகளை, உடல் வெல்லும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.இவற்றைத் தூண்ட இந்த ஆண்டிபாடிகள் தயாரிக்கத் தேவையான பொருட்களை நம் உடலுக்குக் கொடுத்தாலே போதும்.இதை விட்டுவிட்டு கடும் விஷங்களை மருந்துகள் என்ற பெயரில் உள்ளுக்கு கொடுத்து உடலைப் படாத பாடு படுத்தி கடைசியில் மரணத்தையும் பரிசாக கொடுத்துவிடுகிறார்கள்.
இந்த நிலையைப் பார்க்கும் போது எனக்கு இந்தப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
http://youtu.be/JgUOyi2TWyo
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி அஞ்சி சாவார் , இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே!!!!
வஞ்சனைப்பேய்களென்பார் இந்த மரத்திலென்பார் அந்தக் குளத்தில் என்பார்!!!
துஞ்சிடு முகட்டில் என்பார், மிகத் துயர்படுவார் எண்ணிப் பயப்படுவார்!!! அந்தோ!!!
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்!!!!
பஞ்சமோ பஞ்சமென்றே நிதம் பரிதவித்து உயிர் துடித்து துடித்து துஞ்சி மடிகின்றாரே
இவர் துயர்தகளைத் தீர்க்கவோர் வழியுமில்லை!!!!
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!!!!
போதும் என்றே நினைக்கின்றேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அண்ணன் அவர்களுக்கு,
அருமையான பின்னூட்ட பதில், இதுவரை வைரஸ் பற்றி இவ்வளவு நுட்பமான விளக்கத்தை அறிந்திருந்ததில்லை. கிருமிகளைக் கொல்கிறோம் என்கிற பெயரில் எங்களைக் கொல்கிறார்கள் இந்த அலோபதியினர், அறியாமையில் தவிக்கும் மக்கள் விழித்துக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. வாழ்க சித்த மருத்துவ மரபு..!
தங்களன்புள்ள,
ஸஹதுல்லாஹ்
அன்பு மிக்க திரு ஸஹதுல்லாஹ் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்