ஒரு மஹா மூலிகை ( கீழாநெல்லி )

கீழா நெல்லி ( PHYLLANTHUS – NIRURI )

இந்தக் கீழா நெல்லி இலைக்குக் கீழ் காய் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என்றழைக்கப்பட்டு பின்னாளில் கீழ் வாய் நெல்லி என்றும் கீழா நெல்லி என்றும் அழைக்கப்படுகிறது.

இது அஷ்ட கர்ம மூலிகைகளில் ஒன்று.இது மாந்தீரீக கர்மங்களில் மையோட்டம் பார்க்கும் போது வெற்றிலையில் கீழாநெல்லிச் சாறு பூசி அஞ்சனம் தடவிப் பார்க்க ஈரேழு பதினான்கு லோகங்களையும் காணலாம்.

மேலும் யாராவது கர்ப்பிணிப் பெண்கள் நம் வீட்டில் இருந்தால் அவர்கள் பெயரை ஒரு மஞ்சள் தடவிய துண்டுச் சீட்டில் எழுதி மஞ்சள் நூலில் கட்டி அவர்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று கீழா நெல்லி செடிக்கு காப்பு கட்டி தூப தீபம் காட்டி பூஜை செய்து அப்படியே விட்டு வைக்க வேண்டும்.பிறகு அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி எடுக்கும் போது அந்த கீழா நெல்லிச் செடியை நசி மசி என்று மந்திரம் சொல்லி தண்ணீர் ஊற்றி வேர் அறாமல் பிடுங்கி எடுத்து வந்து அந்தப் பெண்ணின் இடது கால் பெரு விரலில் கீழாநெல்லி வேர் படும்படி கட்ட சுகப் பிரசவம் ஆகும்.

பல்வலித்தால் காலையில் கீழா நெல்லியை வேருடன் பிடுங்கி தலைகீழாய் வேர் மேலும் இலைப் பகுதி கீழுமாக நட்டு வைத்து ,மாலையில் மீண்டும் அதை நேராய் நட்டு வைக்க பல்வலி குணமாகும் என்று மூலிகை ஜால ரத்தினம் கூறுகிறது .

மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லியையும் , சின்ன வெங்காயம் , சீரகம் ,  அரைத்து மோரில் கொடுக்க , மூன்று நாட்களில் மஞ்சள் காமாலை குணமாகும் . இதே மருந்தை பாராசிட்டமால் போட்டு கல்லீரலும் மண்ணீரலும் கெட்டுப் போன நிலையில் இருப்பவர்கள் சாப்பிட்டால் கல்லீரல் மண்ணீரல் வீக்கங்கள் சரியாகி நலம் பெறுவர்.

கிராமத்தில் ஒரு பேச்சு வழக்கில் சொல்வார்கள்.“எனக்கு இந்த கொடுமையான விடயத்தைக் கேட்கும் போது என்னுடைய ஈரக் கொலையெல்லாம் பதறுகிறது “ என்பார்கள். அதாவது அதிர்ச்சி , கவலை , பயம் இவற்றில் ஈரக்கொலை என்றழைக்கப்படும் கல்லீரலும் மண்ணீரலும் பாதிக்கப்படுகின்றன. இவற்றை சர்வ சாதாரணமாக சரி செய்யும் கீழா நெல்லி ஒரு அற்புத மூலிகை.

சீதமதி பித்த விடஞ் செவ்விழியி னோய்க் கூட்டம்

பூதமொடு பேயிரத்தப் போக்குகளும் -பூதலத்துட்

டாழ்வாய்ப் பணிந்தேகுந் தப்பாது நற்புலத்துக்

கீழ்வா யெனு நெல்லிக்கே!

                                                   – குணபாடம் –

கீழா நெல்லிக் குணந்தான் கேளாய் மது மேகந்

தாழாக்கா மாலைகளைச் சண்ணுந்தா – தேனழலுந்

தொக்கினனலுந் தொலைக்குந் தொன்மேகம் போக்கிவிடுத்

தக்கவிர ணங்கெடுக்குந் தான்.

கீழா நெல்லிக்கு ஆமக் கட்டு , அக்கினி , கீடவிஷம் , நேத்திர ரோகங்கள் ( கண் சம்பந்தமான ரோகங்கள் ) , பூத முதலிய சங்கை தோஷம் ( பேய் பிடித்தவர்கள் குணமாவார்கள் ), ரத்தாதி சாரம் , மதுப் பிரமேக மூத்திரம் ( சர்க்கரை வியாதி ) , காமாலை ( மஞ்சட்காமாலை ,ஊது காமாலை , மற்றும் பல காமாலைகளை குணமாக்கும் ) , சப்த தாது சுரம் , சரும தாது வெப்பம் , நாட்பட்ட மேகப் புண் ஆகிய இவை போகும் .

செய்கை:- மூத்திர வர்த்தனகாரி ( DIURETIC ) , சங்கோசனகாரி , சோபா நாசினி , சீதளகாரி.

கீழ்வாய் நெல்லிக் கற்கம்:- இதன் சமூலத்தை ( முழுச் செடியும் வேர் உட்பட ) அரைத்து ஒரு கொட்டைப் பாக்குப் பிரமாணம் பசுவின் பாலில் கலக்கிச் சாப்பிட்டு வர சோகை , காமாலை , பாண்டு , வாத பித்த ரோகங்கள் குணமாகும் .இரத்தம் அதிகப்படும்.கண் குளிரும் .

ஈரலில் எந்தெந்த மூலிகைகள் வேலை செய்யுமோ அவை கண்களிலும் வேலை செய்யும். எனவே கண் பார்வைக் குறைவையும் கீழா நெல்லி போக்கும்.காரணமற்ற கவலை கவலையில்லையே என்ற கவலை போன்றவை ஈரல் கெட்டுப் போன நிலையைக் காட்டுவன. அவற்றை இந்த கீழா நெல்லி போக்கும்.எனவே மனம் சம்பந்தமான விடயங்களில் மிக அற்புதமாக வேலை செய்யும்.

காமாலைக் கியாழம்:- கீழா நெல்லி , கரிசலாங்கண்ணி , பேய்ப் புடல் , வெண்மிளகு , சோம்பு , வில்வ வேர் , வகைக்குப் பலம் 1/4 வீதம் ( 8.75 கிராம் ) , வீதம் இடித்து ஒரு குடுவையில் போட்டு 1/2 படி தண்ணீர் விட்டு 1/16 படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 30 மில்லி வீதம் 3 முதல் 5 நாட்கள் வரை உட்கொள்ள பாண்டு , சோகை , காமாலை முதலிய ரோகங்கள் போகும்.

  இப்படிப்பட்ட கீழா நெல்லியை வாயில் போட்டு மென்று ,அதன் சாறு ஈறுகளில் நன்றாக இறங்கிய பின் கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது .கண்ணாடி துண்டுகளை விழுங்கி விடக்கூடாது . அதற்கான பட ஒளிக்காட்சி இதோ கீழே.

https://youtu.be/DhXa33ImN3w

இதே போல நாயுருவியின் இலையையும் வாயில் போட்டு மென்று விட்டு கண்ணாடியை வாயில் போட்டு மென்றால் குத்தாது கிழிக்காது.

இவ்வளவு அரிய மூலிகைகள் உள்ள நம் நாட்டில் பிறந்ததற்காக நாம் பெருமை கொள்ள வேண்டும்.