ஒரு சிறந்த ரசவாதி ( பாகம் 1 )
அகஸ்திய முனிவர் அருளிச் செய்த கற்பமுப்பூக் குருநூல்
முப்பூ முடிக்க விவரம்
சாற்றினேன் முப்பூவின் மார்க்கந்தன்னை
தவசிகட்கு கிடைக்கு மல்லால் மற்றோருக்கு
ஏற்றமுடன் கிடைக்காது இந்த நூல்தான்
இனிமையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
நாற்றிசையிலுள்ள வர்கறியாரப்பா
நன்றாகவுந்தனுக்குத் திறந்து சொல்வேன்
ஆற்றலுடனிதையறிந்து செய்வாயானால்
அப்பனே ரிஷிசித்தனாவாய் கூறே !!!
பாடல் ( 4 )
கூறுவேன் குருமுடிக்கும் விபரமெல்லாம்
குறிப்பாக வறிந்து செய்தோன் சித்தனாகும்
தேறுவாயின்னூலை முழுதும் பார்த்தால்
சித்தனென்று பெயர்பெறலா முலகத்துள்ளே
தூறுதலாயச் சேர்ந்து கொண்டு செய்ய வேண்டாம்
சுகமாகத் தனியா நீயிருந்து கொண்டு
பேறுபெறச் செய்தாக்கால் லாபமுண்டு
பிரியமுடனுந்தனுக்குச் செப்பினேனே!!
பாடல் ( 5 )
செப்புவேன் சித்தருட பாதம் போற்றி
செந்தூரப் பற்ப முறை தன்னைச் செய்ய
அற்புதமாய்ச் சொல்லுகிறேன் முப்பூ தன்னை
அடக்கினேன் நூறுக்குள் அறிந்து பாரு
முப்பொருளு முடிந்தவிட மிந்தநூலப்பா
முக்கண்ணன் மனோன் மணியா ளெனக்குச் சொன்னாள்
தப்பிதங்களில்லை யடாயிந்த நூலை
தாய்சொன்னபடி சொன்னேன் தரணியோர்க்கே !!!
பாடல் ( 6 )
தரணியிலே நீயிருந்து தாயைப்பூசி
சற்குருவை மறவாம லேற்றிப் போற்றி
அரணியங் மாங்காடு மலை அலைய வேண்டாம்
ஆசானையொரு வருக்குங் காட்ட வேண்டாம்
திரணமாய் நினைத்து நீவிடவே வேண்டாம்
திறமாக அகார உகாரத்தைக் கொள்ளு
பரமாகக் கற்பமது கொள்ளுவாயானால்
பார்தனிலே யெந்த நாளு மிருப்பாய்தானே !!!
பாடல் ( 7 )
இந்தப் பாடல் 7 ல் சிவப்பு எழுத்தில் காட்டப்பட்டுள்ளவை ஆசானான குருவை ஒருவருக்கும் காட்டக் கூடாது என்று அகத்தியர் கூறியுள்ளார். நான் ராமானுஜரைப் போல நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயரிய நோக்கில் ஆசானைக் காட்டித் தந்துள்ளேன்.நற்கருமம் உள்ளவர்கள் பயன் பெறட்டும்.
எம்மிடம் பலர் பல கடுமையான கர்ம வியாதிகளுக்கு ( புற்று நோய்,எய்ட்ஸ் ) மருந்து கேட்டு , மின்னஞ்சல் மற்றும் அலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர் . அவர்களுக்காக எனது குருநாதரின் அலைபேசி எண்ணைத் தர இருக்கிறேன் . அவர் தனது உடலை காய சித்தியாக்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளார் . என்னைப் போன்ற அவரது சீடர்கள் பலரும் அவர் வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.
அவருக்கு 54 வயது.அவருடைய புகைப்படத்தைப் பாருங்கள் . அவருக்கு வயது 35 சொல்லலாம் அப்படி இருக்கிறது அவர் தற்போது தோற்றம் மற்றும் உடல் அமைப்பு இருக்கிறது இல்லையா ???? அவரது புகைப்படம் இதோ கீழே !!!!!
GREEN LION SULPHER ( பச்சை சிங்கம் )
ஆண்டாள் கையில் இருக்கும் பச்சைக் கிளியும் இதுதான்,மதுரை மீனாட்சி அம்மன் தோளில் இருக்கும் கிளியும் இதுதான், சிம்ம வாகினி அருகில் இருக்கும் பச்சை சிங்கமும் இதுதான். இதுதான் சித்தர் வேதியியலில் மிகப் பெரிய படித்தரம்.
இதிலிருந்துதான் சுத்தகங்கை என்றும் , வாசி நீர் என்றும் , தேசி நீர் என்றும் , ஊசி நீர் என்றும் , மங்கையர் கருக்குடத்து நீர் என்றும் , ஆகாய கங்கை என்றும் , அமுத கலசம் என்றும் , ஐங்கோலக் கரு என்றும் , வாழவதி என்றும் , வாழை சலம் என்றும் , வாழைப்பூச்சாறு என்றும் , அமுத ரசக் குடத்து நீர் என்றும் , நாத விந்து என்றும் , கானப்பால் என்றும் , குமரிப்பால் என்றும் , அண்டக்கல் என்றும் , பூநீர் என்றும் , முப்பூ என்றும் , குரு என்றும் , முப்புளி என்றும் , வானமாமலை நாதம் என்றும் , அழைக்கப்படுவதனை தயாரிக்க மூலப் பொருள் இந்த பச்சை சிங்கம்தான்.ஜெர்மன் சித்தர் பாராசெல்ஸ் தனது நூலில் இதை விவரித்துள்ளார் .
கோரக்கர் அருளிய ரவி மேகலை என்னும் நூலை ஆதாரமாக வைத்தே நீதிபதி பலராமையா அவர்களின் குருநாதர் கருணாகர சுவாமிகள் வான் மெழுகு தயாரித்து கொடுத்தார். அந்த கோரக்கர் ரவி மேகலையில் இருந்து சில பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன் .
கோரக்கர் அருளிய ரவி மேகலை – 75
காப்பு
அரு உபரதி ரூபஒளி அண்ட பிண்ட
அகரவுயிர் பிரணவமா மோங்கா ரத்தாய்
கருணைபெறுக் கற்பகத்தேன் அமுத ஞானக்
கமலபரி பூரணிமுக் கமலத் தோங்கும்
பருவரைய மதலை குமரி பராப ரிநற்
பார்பதிபங் கஜவேணி பரம நந்திக்
குருரவிமே கலையோதக் குமரிவாலைக்
குஞ்சரியென் தாய்சக்தி யிருந்தாள் காப்பே !!!
பாடல் ( 1 )
தாள்பணிந்து தெண்டனிட்டுத் தாயைப் போற்றித்
தந்ததொரு வரமதனைத் தரணி யோர்க்கு
ஏழ்மையற் றெப்போதும் இருந்து வாழ
எடுத்துரைத்தேன் சந்திர ரேகை இரு நூறு முன்னே
வாழ் நலங்கள் பெருகிடவும் வாத யோகம்
வழுத்திடுவேன் வைத்தியமும் ஞான சூட்சம்
பாழ்போகா ரவி மேகலை எழுபத்தைந்தில்
பலம் பெற்ற சித்தர்களின் மறைப்பத் தானே!!!
பாடல் ( 2 )
தானென்ற சித்தர்களுங் கபடாய்ப் பேசி
தரணிதன்னில் சாத்திரங்கள் சங்காசங்கம்
வானெய்ய ஒழித்துவைத்து கருவு மார்க்கம்
வழங்கிடுவேன் வெளியாக வாமம் வைத்து
ஊனென்ற வுடலாகி யுகந்துற் றுய்ய
உண்மையுடன் கற்பவகை சுண்ணமுந்தான்
பானென்ற மாதமாங் கருவின் சூட்சம்
மகிழ்ச்சியுடன் ஓதி வைத்தேன் மனுக்கள் வாழ !!!
பாடல் ( 3 )
வாழவதி வாழைசலம் வாழைப்பூச்சாறு
வமுதரச குடத்துநீர் நாதவிந்து
சூழதிக வூசிநீர் சுத்த கெங்கை
சுரபியுடன் பனங்கள்கைத் தோடா வாழை
கூழருவி கானப்பால் குமரிப் பாலாம்
தேசிநீர் வாசிநீர் தீப்ப னிநீர்
தோஷமரும் மாதர்கருக் குடத்து நீர்க்குத்
தொகுத்தின்னம் பலநாமம் உண்டு காணே
பாடல் ( 4 )
காணவே ஐங்கோலக் கருவதென்றும்
காசினியிற் பூநீர்தான் அறியா வண்ணம்
நாணவே வானமாமலை நாதமென்றும்
நன்மையுறக் குடநீரை மறைத்துப் பேசித்
தோணவே தொல்லுலகோர் தியங்கி வாடத்
தொகுத்திட்டார் சித்தர்களும் தொகையா கத்தான்
பூணவே குடநீர்க்கே யெல்லாப் பேரும்
புகன்றிட்டார் சித்தர்கள்நான் வெளியாய்ச் சொன்னேன்
பாடல் ( 5 )
சொல்லுவேன் ஐங்கோலக் கருவின் மார்க்கம்
சித்ததிகம் இதனாலே கோடாகோடி
பாடல் ( 6 )
இவ்வளவு அற்புதமான ஒன்றை , வாழ்வில் யாரும் காணற்கரிய ஒன்றைத்தான் மேலேயுள்ள படத்தில் GREEN LION SULPHER ( பச்சை சிங்கம் ) பார்க்கிறீர்கள்.இதன் மூலம் எல்லோரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
முதலில் முப்பூ குரு பற்றி அதிகம் எழுத வேண்டாம் என்று எண்ணியிருந்தேன் . ஏனெனில் பல ஆண்டுகள் அலைந்த பின்னர்தான் இது பற்றி எனக்கு ஒரு வாறு இது பற்றி அறிய முடிந்தது.எனவே வாசக அன்பர்களின் வேண்டு கோளும் , ஆர்வமும் மீண்டும் ஒரு பதிவு என் ஒரு சிறந்த ரசவாதி பாகம் 2, 17 -06 -2012 அன்று வெளி வர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
அன்புள்ள சாமிஜி
பதிவினை படித்ததும் மிகவும் ஆச்சர்யமும்
பெருமிதமும் அடைந்தேன்.ஐங்கோலக்கரு
என்பது சித்தவேதியியலில் மிகவும்
சிறப்பானது.இதனை சித்தர்கள் சிறப்பாக
கூறி இருக்கிறார்கள்.இந்த சித்தவேதியியலில்
எங்களுக்கு ஒரு குருவை காட்டிய நீங்களே
எங்கள் (தொட்டு காட்டிய )குரு..
அரிய அற்புதமான பதிவு.இந்த மறைபொருள்
விளக்கங்களை திறந்து வெளியிடுவோர் இன்று
யாரும் இல்லை. மேலும் இது போன்ற வேதியியல்
விளக்கங்களை தர வேண்டுமாய் என் போன்ற
ஆர்வமுள்ள மாணவர்கள் சார்பாக கேட்டு
கொள்கிறேன்.
காடி,பழச்சாறு,கருங்குறுவை அரிசி பற்றியும்
தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!எல்லாமே மிகச் சிறப்பாக எவ்வளவு வெளிப்படையாகக் கூற முடியுமோ அவ்வளவு வெளிப்படையாக வெளிப்படுத்தப்படும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அற்புதமான சேவை. உங்களைப் பொல உள்ளவர்கள் இருப்பதால்தான் நம் இனம் மானத்துடன் வாழ முடியும். வாழ்துக்கள்.
அன்பு மிக்க திரு பரமசிவம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!நம் தமிழ் சித்தர் இனம் அனைத்தும் சாதிக்கும் இனம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Anbulla Sagotharare,
Aasai thavaru endru uraippathum aasai than. Enakkum oru aasai, Nanum Thangalaipola Avatharu enna seiya vendum endruraithal nandraga irukkum. Ennaipola aasai irukkum palarum payanadaivarhal.
Nandri
MANIKANDAN-KOVAI
அன்பு மிக்க திரு மணிகண்டன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!அறுமின் அறுமின் ஆசை அறுமின்!! ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்று சொல்லும் சித்தர்கள் வழியில் நில்லுங்கள் எல்லாம் சரியாகும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Ayya,
Vannakkam.
Venkatachalapathy Guru ayya umm Namaskaram.
Green Lion Sulphur is available in Nathu Maruthu Kadai.
How to use it (Quantity) per day?
Any restrictions to be followed before using this divine medicine.
Thanks in Advance
Karthick
Mumbai
அன்பு மிக்க திரு கார்த்திக் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!பச்சை சிங்கம் என்பது சுக்கு , மிளகு , திப்பிலி போல கடைச் சரக்கல்ல.அது நாட்டு மருந்துக் கடையில் கிடைப்பதல்ல. அது கிடைத்தால் நீங்களும் நானும் சித்தர்தான் . என்றால் புரிகிறதா ?????புரியவில்லை ஆனாலும் பரவாயில்லை, தொடர்ந்து பதிவுகளை பார்த்து வாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
குரு அருளால் , திரு அருளால் ., இந்த அரிய பொருளை பார்க்கும் பாக்கியத்தை தந்தீர்கள் மிக்க நன்றி அய்யா ..!!!
புலிப்பாணி சித்தர் அடிமை ,
அன்பு மிக்க திரு சிவமயம் புலிப்பாணி சித்தர் அடிமை அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!பச்சை சிங்கம் பார்ப்பதே பெரும் புண்ணியத்திலும் புண்ணியம்.தொடர்ந்து பதிவுகளை பார்த்து வாருங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா ! வணக்கம் . தகவலுக்கு மிக்க நன்றி . உங்கள் குரு நாதரை அறிமுகம் செய்ததுருக்கு மிக்க நன்றி .இந்த பச்சை சிங்கம் இபொலுதும் உள்ளதா ? இந்த பச்சை சிங்கம் பற்றி விரிவான பதிவை தங்கள் அளித்தால் மிக்க நலமாக இருக்கும் ஐயா !
அன்பு மிக்க திரு கண்ணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!பச்சை சிங்கம் தற்போது இருப்பதால்தானே அதை புகைப்படமாக வெளியிட்டுள்ளேன்.இது பற்றி தெரிவிக்க முடிந்த , அனுமதி உள்ள விடயங்களை மட்டும் பதிவிடுகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
I am a regular reader of your blog. All the best for your valuable informations. Thank you. GKT
அன்பு மிக்க திரு ஜி. கே . தமிழ் செல்வன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மூப்பை நீக்கும் முப்பூ
இதை எப்படி சாப்பிட வேண்டும் ?
பத்தியம் இருக்க வேண்டுமா ?
– – – – – – – —- ————- ——- ——————
சாமி ஜி
உங்க குருநாதர் பற்றி
உண்மையை சொல்லனும்னா
உடம்ப இரும்பு மாதிரி வைத்து இருக்கின்றார்
நன்றி ஜி
அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!! இது குரு முகாந்திரமாக நேரடியாக இருந்து உட்கொள்ள வேண்டியது கற்ப முப்பூ முறை.அதை முறையாக செய்தால் நம் நல்ல மானிடப் பிறவிப் பயனை அடையலாம் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா
லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல
மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே
நாறுமுடலை, நரிப்பொதி சோற்றினை, நான்தினமுஞ்
சோறுங் கறியும்நிரப்பிய பாண்டத்தைத் தோகையர்தம்
கூறும்மலமும் இரத்தமுஞ் சோருங் குழியில்விழாது
ஏறும் படியருள்வாய் இறைவா
—————————————-
“கற்பத்தை யுண்டல் காயமழியாது
கற்பத்தினாலே காணலாம் கலையை
கற்பத்தினாலே காணலாம் சோதியை
கற்பத்தினாலே காலையும் கட்டி டே
கட்டிட சித்தாம் காயப் பரீட்சை”
என்கிறார் சட்டை முனி.
——————————————-
இதுபோல காய கற்பம் சாப்பிட்டவர்கள் உடல்
“காலமதில் கடியரவம் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமத்தில் சமாதிபெற மண்ணும் தின்னா
நடுவானவன் உன்னருகில் வரவே மாட்டான்”
“வேலணைய கத்திவாள் வேட்டுமேறா
விடந்தலை மேல் கொண்டவனும் விமலி
சீலமுடன் ஞாணப் பால் தந்து காத்தே
ஈரெட்டாம் வயதுமெப் போதிருந்து வாழ்வாய்!”
– என்பார் கோரக்கர்.
நன்றி ஜி
அன்பு மிக்க திரு ஷெரீஃப் அவர்களே,
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!! கற்ப முப்பூ முறை சித்தர்கள் மிக மறை முகமாக வைத்து குரு சிஷ்ய மார்க்கமாக கற்பித்து வந்துள்ளார்கள்.நீங்கள் மேற்கண்ட பாடல்களில் கூறியது அனைத்தும் உண்மை.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
all of fools waste below its not all seeing meter the secret be serious mind it…..ok
அன்பு மிக்க திரு சித்தர் மதிபவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.எழுதியது சரியா இல்லையா ?இது பற்றி தொடர்ந்து எழுதவா ?
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
iyya vankam ithalum net la potalama samy nalla vaithiyatha potunga atha vittu pacha singam karupu singam nu solitu elloroium emathathirkal….rakasayama iruka vendiya visainkal rakasiyamaka than iruka vendum…itha unga gurnatharukum solunga…first ungala padinga namma etha noki poramnu……..
அன்பு மிக்க திரு சித்தேறி மதி பவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இதைப் பற்றி உங்களுக்கு இரு முறை எழுதிய பதில் கருத்துரை பிரசுரம் ஆகவில்லை.என்ன காரணம் என்று தெரியவில்லை.இது சித்தர்களின் கருத்தென்றே எண்ணுகின்றேன்.சித்தர்களின் மரணமில்லாப் பெருவாழ்வு என்னும் இந்த துறையில் நம் நாட்டில் இருந்து பிரிட்டிஷ்காரர்களாலும் பிரெஞ்சுக்காரர்களாலும் கொண்டு போன ஓலைச் சுவடிகளை வைத்து பல்கலைக் கழகமே நடத்தி வருகிறார்கள்.பாராசெல்ஸ் போன்ற வெளி நாட்டுச் சித்தர்களும் இதை மறை பொருளாகச் சொல்லி வருகிறார்கள்.இதை மறை பொருளாகச் சொல்வதால்தான் வேதங்களுக்கு மறை என்று பெயர்.இந்தத் தளத்தைப் பாருங்கள்.
http://www.levity.com/
நானும் அதை அளவோடுதான் வெளியிடுகிறேன்.உங்களுக்கு இதன் அருமை தெரியவில்லை. பல்லாண்டுகள் இதைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து திரிந்துள்ளோம்.சித்தர்களின் பரி பாஷை புரியாமல் அல்லாடி இருக்கிறோம்.இதை வெளியிடுவதன் மூலம் பல நோயாளர்கள் பயன் பெறுவார்கள்.ஆங்கில மருத்துவம் என்பது ஒரு வியாதிக்கும் மருந்தில்லாமலும் பல வியாதிகளைக் குணப்படுத்துவதாக பறை சாற்றுகிறது. இதை நான் அடுத்த பதிவில் ஒளிக்காட்சி ஆதார பூர்வமாக வெளியிட்டிருக்கிறேன்.அகார,உகார ,மகார ,சிகாரம் நம்முள்ளும் உள்ளது பரத்திலும் உள்ளது.பரத்தில் உள்ளதை அறிவது கடினம்.உள்ளே உள்ளதை உணர்ந்தாலும் அது பரத்தில் உள்ளதைக் காட்டி நம்முள் சேர்த்தால் காயம் சித்தியாகும்.எனக்குக் கிடைத்துவிட்டது, நான் மட்டும் இதை அனுபவித்தால் போதும் என்று சுய நலமாக நான் செயல்படவில்லை.பலரும் இதை வெளியிடுவதிலிருந்து தடுப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள் .ஏன் என்று தெரியவில்லை.நல்லதே நடக்கும்.நடக்கட்டும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா வணக்கம்….. நான் தங்களது குருவை நேரில் காண விரும்புகிறேன்…. எனக்கு உதவி செய்யுங்கள்……
சித்த மருந்து பெறவும்……, என்னால் முடிந்த உதவியை செய்யவும் (சித்தமருத்துவம் வளர ) …..,
எனக்கு தெரிந்த மூலிகைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும்.
எனக்கு உதவி செய்யுங்கள் ஐயா….
நான் எந்த நேரத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம்..?
…. இப்படிக்கு
தங்களை போலவே சித்தத்தில் ஆர்வமுடையவன்
சரவணன் .ச
அன்பு மிக்க திரு சரவணன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
என் குருநாதரின் அலை பேசி எண்ணைக் கொடுத்திருக்கிறேன் . எந்த நேரமும் அவரிடம் பேசலாம் . அவரிடம் பேசும் போது பணிவுடன் பேசவும் . மூலிகைகள் பற்றி எம்மால் முடிந்த அளவு தெரிவித்துக் கொண்டே இருக்கின்றேன் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா நீங்கள் செய்து காண்பித்தவற்றையெல்லாம் கண்டு பிரமித்துவிட்டேன் தங்களின் திருப்பணி மென்மேலும் தொடர தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா
அன்பு மிக்க திரு கருப்புசாமி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ellam erivan seyal mattum
அன்பு மிக்க திரு மது அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
எனில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு அவசியமே இல்லை?????விடை (கேள்விகளுக்கெல்லாம் விடை ) ஏறியோன் கேள்விகளுக்கெல்லாம் விடையாக இருக்கின்றானே ????எனில் கேள்விகள் ஏன்????
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்