ஒரு சிறந்த ரசவாதி ( பாகம் 2 )
சென்ற பதிவில் எழுதியிருந்த பச்சை சிங்கமே “பச்சை மாமலை போல் மேனி ” என்று வைணவர்களாலும் , “ஆங்காரி என்பாள் அவள் ஒரு பெண்பிள்ளை நீங்காத பச்சை நிறத்தை உடையவள் ஆங்காரி ஆகியே ஐவரை பெற்றிட்டு ரீங்காரத்துள்ளே இனிதிருந்தாளே!!”என்று திரு மூலரும், கிறித்துவர்களால் கிறிஸ்துமஸ் மரம் என்றும் , முகமதிய சகோதரர்களால் கொடியில் பச்சையாக வைக்கப்பட்டும் மறை பொருளாக வைக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாகவே அகாரம் , உகாரம் , மகாரம் , சிகாரம் என்பவை தோற்றமாகின்றன . அது மட்டுமல்ல இவை உடலின் உள்ளே சேர்ந்திடில் உடல் அழியாத் தேகமாகும்.இந்த வித்தை ”வகார வித்தை” என்றும் அழைக்கப்படுகிறது.
///அன்புள்ள சாமிஜி பதிவினை படித்ததும் மிகவும் ஆச்சர்யமும் பெருமிதமும் அடைந்தேன் . ஐங்கோலக்கரு என்பது சித்தவேதியியலில் மிகவும் சிறப்பானது . இதனை சித்தர்கள் சிறப்பாக கூறி இருக்கிறார்கள். இந்த சித்தவேதியியலில் எங்களுக்கு ஒரு குருவை காட்டிய நீங்களே எங்கள் (தொட்டு காட்டிய )குரு..அரிய அற்புதமான பதிவு . இந்த மறைபொருள் விளக்கங்களை திறந்து வெளியிடுவோர் இன்று யாரும் இல்லை . மேலும் இது போன்ற வேதியியல் விளக்கங்களை தர வேண்டுமாய் என் போன்ற ஆர்வமுள்ள மாணவர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.
காடி,பழச்சாறு,கருங்குறுவை அரிசி பற்றியும் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன் ஹரி///
இப்போது மேலே உள்ள அன்பர் ஹரி கேட்டிருந்த கருங்குறுவை அரிசி பற்றியும் காடி பற்றியும் தெளிவுபடுத்த இருக்கிறேன்.
இந்த காடி செய்யும் பக்குவம் முழுக்க ஆணே செய்ய வேண்டும் . பெண் வாடையே ஆகாது.
நான் என்னுடைய அனுபவத்தைக் கூறுகிறேன். கருங்குறுவை அரிசி என்பது திருச்சி காந்தி சந்தையில் முனியாப்பிள்ளை கடையில் கிடைக்கும். அதை வாங்கிக் கொண்டு வந்து ஒரு மண் பானையில் சமைத்து, மறு பானையில் மாற்றி தண்ணீ ர் ஊற்றி வெயிலில் வைக்க வேண்டும் . மறுநாள் மாலையில் வேறு ஒரு புது மண்பானையில் மாற்றி நன்கு கலக்கி கிண்டிவிட வேண்டும் .பிறகு வெயிலில் வைக்க வேண்டும்.
மறு நாள் மீண்டும் கழுவி வைத்த பானைக்கு மாற்றி கிண்டி மீண்டும் வெயிலில் வைக்க வேண்டும் .இது போல 6 மாதங்கள் செய்ய வேண்டும்.நடுவில் சோறு முழுக்க கரைந்துவிட்டால் மீண்டும் கருங்குறுவை சோறாக்கி இதில் சேர்க்க வேண்டும் .இவ்வாறு சோறு தீர்ந்து கரைந்து போகும் போதெல்லாம் சேர்க்க வேண்டும் . இவ்வாறு செய்த கருங்குருவைக் காடி 6 மாதமானால் அமாவாசை , பௌர்ணமிக்கு வீணை இசைப்பதைப் போல் டொய்ங் , டொய்ங் என்று சத்தமிடும்.இதுதான் கருங்குறுவைக் காடி என அழைக்கப்படுகிறது.
இந்த குணங்கள் குறிகள் எல்லாம் அதில் இருந்தன.அவர்கள் வர்ணித்தது போலவே எல்லாம் நடந்தது.
இந்த காடி சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அசுத்தங்கள் நீங்கும் என்று கண்ணுசாமி பிள்ளையவர்கள் எழுதிய நூலில் கூறியுள்ளது.இந்த கருங்குருவைக்காடி செய்ய நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இதுவல்ல கருங்குறுவைக்காடி என்று தெரிந்த போது நொந்து போனேன்.
சுத்த கங்கை என்பதுதான் பச்சை சிங்கத்திலிருந்து கிடைப்பது.அந்த சுத்த கங்கை இதோ கீழே!!!
சுத்த கங்கை
இதோ கீழே கருங்குறுவை
கருங்குருவையைப் போல தோற்றம் உள்ள இந்த பொருள்தான் கருங்குறுவை . இந்தக் கருங்குறுவையை சுத்த கங்கையுடன் சேர்க்கும் போதுதான் கருங் குறுவைக்காடி கிடைக்கும் . இந்தக் கருங்குருவைக் காடிதான் பல விடயங்களை சாதிக்கும் வல்லமை உடையது .இந்தக் கருங்குறுவைக்காடியை சிவப்புத் திராட்சை ரசத்தில் சாப்பிட வேண்டும் . இதுதான் பாவங்களைப் போக்கும் ஏசுவின் இரத்தம் என்றழைக்கப்படுகிறது .
கருங்குறுவைக் காடி
திராட்சை ரசம்
இன்னும் மற்ற சித்த ரகசியங்கள் மீண்டும் ஒரு பதிவு என் ஒரு சிறந்த ரசவாதி பாகம் 3 , 26 – 06 – 2012 அன்று வெளி வர இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .அதில் ஒளிப் படக் காட்சிகளும் இடம் பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அரிய தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி அய்யா….
ஆவலுடன் ….அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்
கார்த்திக் – Mumbai
அன்பு மிக்க திரு கார்த்திக் அவர்களே,
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!! இன்னும் நல்ல விடயங்கள் காத்திருக்கிறது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா! வணக்கம் .உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி . உங்கள் தகவல் ஆச்சிரியமாக உள்ளது .இந்த கருங்குறுவைக்காடி எங்களுக்கு எங்கு கிடைக்கும் ஐயா ?
அன்புள்ள சாமிஜி,
சிறியேனின் கேள்விக்கு பதில் அளித்தமைக்கு
மிக்க நன்றி.காடி முடிப்பது பற்றி தெளிவுபடுத்தியதற்கு
மிக்க நன்றி.இதனை சாப்பிடலாமா?
மேலும் அமுரி என்பது பற்றியும் விளக்க
வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!!காடியைத்தான் தற்போது திராட்சை சாற்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி,
இதனை சாப்பிடலாமா?பத்தியம் தேவையா?
வகாரத்தைலம் என்பது இதுவா அல்லது வேறா?
தெளிபுபடுத்தவும்
என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!!காடியைத்தான் தற்போது திராட்சை சாற்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பத்தியம் உண்டு .வகாரத்தைலம் என்பது இதுவல்ல. இதிலிருந்து தயாரிப்பது.நீங்கள் வகார வித்தை சம்பந்தமான( ரச வாதம் ) கேள்விகளை தவிருங்கள்.ஆசை வயப்பட்டு , ஆசையின் பின்னால் ஓடினால் இது சித்திக்காது . அந்த வகையில் யோசிக்காதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறேன்.இந்த வகையில் இந்த சாகாமூலியை சுய நலமாக ரசவாத சித்திக்கு உபயோகப்படுத்த முயற்சித்து கண் புகைந்து போனவர்களும் ,சரக்குகளை சேர்க்கும் போதும் , நீற்றும் போதும் வெடித்தும் , விஷ வேகம் தாக்கியும் உயிர் விட்டவர்கள் கோடானு கோடி என்று சொல்கிறார்கள்.எனவே இந்த வகைக்குப் போகாமல் உயிரை உறுதி செய்ய உபயோகித்தால் இதுவே கடவுள் .இது கடவுளே நேரில் வந்து கடமையாற்றும் வித்தை என்றே பல குருமார்கள் எனக்குப் போதித்தது.இத்தனைக்கும் பிறகு பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Anbulla sagotharare,
Vanakkam. Neengal kurippidum சிவப்புத் திராட்சை ரசம் என்பதும் madhu vakaihalil ondrana ‘Wine’ ivai irandum ondru thana?
Nandri
MANIKANDAN – KOVAI
வணக்கம் ஐயா! கறுங்குறுவைக்காடிக்கும் தியானத்தில் கேட்கும் வீணைஒலிக்கும் உள்ள தொடர்பை தயவு செய்து விளக்க முடியுமா? (அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உண்டு.) நன்றி!
அன்பு மிக்க திரு சித்திர சிவம் அவர்களே,
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!!கருங்குறுவைக் காடி ஒலியும் தியானத்தில் கேட்கும் ஒலியும் ஒன்றாகவே இருக்கு. கருங்குருவைக் காடியிலிருந்து கேட்கும் ஒலி ஒன்றிலிருந்து கேட்கும் ஒலி பேரண்ட மூல காரணத்தை தியானத்தின் மூலம் கேட்பது ஒன்றியிருந்து கேட்பது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
தலையாய பதிவுகளும், தலையாய விடயங்களும் பகிர்தலுக்கு நன்றி ஐயா.
அன்பு மிக்க திரு தேவன் அவர்களே,
கருத்துரைகளுக்கு மிக்க நன்றி !!!!!வெகு நாட்களுக்குப் பிறகு கருத்துரை பார்க்கிறேன் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வணக்கம். நம் இனம் தலை நிமிர்ந்து நடப்பதற்கு உங்களை போல உள்ளவ்ர்ககள் தேவைபடுகிறது. முடிந்தவரை ரகசியம் என்று சொல்லாமல், தெரிந்த வித்தை அனைத்தும், மற்றவர்களுக்கு கற்று கொடுங்கள். நூறாண்டு காலம் வாழ்க.
காடி வைப்பு
என்னவே கருங்குருவை நெல்லைக் குத்தி
இயலான புதுப்பானை தனிற்சமைத்து
…. …… ……
காடி மருத்துவம்
செலம்வார்த்துப் பின்னும் அதை ரவியில் வைத்துச்
செயிதிடுவாய் மண்டலத்துக்கு ஒரு சோறாக
நலமாக வெவ்வேறே பகுந்து காச்சி
நாட்டிலே வெயிலில் வைத்து ஆறுமாதம்
……. ……. … – அகத்தியர் பூரண சூத்திரம் 216 .
சொன்னதொரு காடிதன்னை ஆறுதிங்கள்
துப்புரவாய் ரவிதனிலே வைக்குமபோது ,
நன்னமாய் நாதாக்கள் செய்பாகந்தான்
நலமாய் பழச்சாறு என்னலாச்சு,
வின்னமது நேராது முப்புமார்க்கம்
விள்ளர்கள் சிதுமுனி ரிஷிகள்தேவர்,
பன்னவே சாத்திரத்தில் சூட்சமுப்பு
பாடவில்லை சித்தர்களும் பாடார்தானே
— போகர் ஏழாயிரம் (6213)
பாடினேன் காடியென்ற பழச்சார்சொன்னேன்
பான்மையுள்ள நாதாக்கள் மறைத்துவிட்டார்
நீடியதோர் சிவமுப்பு இந்தமுப்பு
நீடாழி உலகமெலாம் இதிலடக்கம்
கூடியதோர் கருவிகர ணாதியந்தம்
குருவான ஜெயநீர்கள் இதில் அடக்கம்
ஆடியதோர் சரக்கு அறுபத்துநான்கும்
அப்பனே சிவமுப்புபால் மடிவு கானே …!!!
– போகர் ஏழாயிரம் (6215)
எங்களுக்கு காட்டியிருக்கிறர்கள் என்னே பாக்கியம் செயிதோம் இந்த வலைப்பூவை பார்க்கும் நாங்கள் .,
புலிப்பாணி சித்தர் அடிமை ,
அன்பு மிக்க திரு சிவமயம் புலிப்பாணி சித்தர் அடிமை அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! இப்படிப்பட்ட விடயங்களைப் பார்ப்பதே பெரும் புண்ணியத்திலும் புண்ணியம்.நாம் பெரும் புண்ணியம் செய்திருக்கிறோம் . தொடர்ந்து பதிவுகளை பார்த்து வாருங்கள் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம் ///இந்த வித்தை ”வகார வித்தை” என்றும்
அழைக்கப்படுகிறது///என்று தாங்கள் குறிப்பிட்டு இருந்
ததால் இது வகார தைலமா என்று கேட்டேன்.
எனக்கு அதுபற்றியும் மற்றும் ரசவாதம் பற்றியும்
தெரியாது.மன்னிக்கவும்.நீங்கள் தெரியப்படுத்துவதில்
இருந்து இது ஒரு சிறப்பான மருந்து என அறிந்து கொண்டேன்
மேலும் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.
நன்றி என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! இது பற்றி எழுதுவது பலர் கர்ம வியாதிகளில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்களே, அந்த மனிதர்களின் துயரம் தீரட்டும் என்றே வெளியிட்டுள்ளேன்.யாரிடமும் போய் போலிகளைக் கண்டு ஏமாந்து போகக் கூடாது என்பதும் பதிவுகளின் நோக்கம். தொடர்ந்து பதிவுகளை பார்த்து வாருங்கள் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்புள்ள சாமிஜி
வணக்கம்.1 )நத்தைசூரி விதை சிறு வயது
குழந்தைகள் எந்த வயது முதல் சாப்பிடலாம்.
2)குண்டான உடம்பு கொண்டவர்களுக்கு என்ன
சாப்பிட்டால் இளைக்கும் ( 13 வயது)
நன்றி என்றும் அன்புடன் ஹரி
அன்பு மிக்க திரு ஹரி அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!! நத்தைச் சூரி விதை சிதைத்து ,கருப்பட்டி சேர்த்து தேத்தண்ணீராக சாப்பிடுவதானால் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிலிருந்தே குடிக்க கொடுக்கலாம்.குண்டான உடம்பு இளைக்க என்று தனிப்பதிவு எழுத இருக்கிறேன். தொடர்ந்து பதிவுகளை பார்த்து வாருங்கள் .
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,
எனது தாயார் மிகவும் cholesterol அதிகமாக இருப்பதாக பயப்படுகிறார் மற்றும் உடல் தளர்வுற்று பாதிக்கப்படுகிறார், ஆங்கில மருத்துவத்தை தற்சமயம் வரை எடுத்துக்கொண்டு இருக்கிறார் , இயற்கை முறையில், இதற்கு வழி சொல்லுங்கள், எதிர்பார்த்து காத்து இருகிறேன்.
நன்றியுடன் ,
இவன்,
தயாளன்
.
அன்பு மிக்க திரு தயாளன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!சாப்பிடாமல் நோய் உண்டாகி இறந்தவர்களைவிட அதிகம் சாப்பிட்டு நோய் உண்டானவர்களே அதிகம்.அளவுக்கு அதிகமாக உண்ணும் உணவைத்தான் உடல் கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது,இதற்கு ஏன் பயம்///எனது தாயார் மிகவும் cholesterol அதிகமாக இருப்பதாக பயப்படுகிறார் மற்றும் உடல் தளர்வுற்று பாதிக்கப்படுகிறார்//.உணவைக் குறைத்தால் கொழுப்பு குறைந்துவிட்டுப் போகிறது. முதலில் பயத்தை விடச் சொல்லுங்கள்.இதற்கு என் குருநாதர் திரு வெங்கடாசலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.அவர் தீர்வு தருவார்.அவரது அலைபேசி எண் +919786688300.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
sir uncal attutha pathivukkaca avalodu wait panrom seekirame kodunga sir ivvalavu nalla visayangalai ethir parpindri seyum dhangal needuli valiya endru iraivanai vendugiren nandri iya.
அன்பு மிக்க திரு ரத்னா அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
இறைவன் எல்லோருக்கும் நல்லருள் புரியட்டும்.அடுத்த பதிவு இன்று வெளியாகிவிடும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
samy ningal sapitu kondu irukum karumkuruvai enna sikurathu udampil solungal samy….
அன்பு மிக்க திரு சித்தேறி மதி பவன் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
நான் எனது அனுபவங்களை இனி சொல்லப் போவது இல்லை.அது என்னுடனே இருக்கட்டும்.தெரிந்த அற்புதமான விடயங்களை மட்டும் பகிருகிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,தஙகளுடன் இன்று பேசும் பாக்கியம் கிடைத்தது,மனம் மிக மிக மிக மகிழ்ச்சி அடைந்தது.சித்தர்களே தாங்கள் என்னுடன் பேசும்படி செய்துள்ளார்கள் என உணர்ந்து நெகிழ்ச்சி அடைந்த்தேன்.வணக்கம்
அன்பு மிக்க திரு மருத்துவர் பாஸ்கர் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
தங்களுடன் நாம் பேச இறைவன் விரும்பியதால் நடக்கிறது.இறைவன் நடத்துகிறான்.நாம் வெறும் பொம்மைகள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பு நண்பரே சித்தேறி மதி பவன் அவர்களே,சித்தரை மதிப்பவன் என்ற பெயரில் ஏன் இந்த விளையாட்டு?நீங்கள் நம்பவில்லை என்றால் இந்த தளத்தை படிப்பதை விட்டு விடுங்கள் . சித்தர்கள் உஙகளுக்கு நல்ல அனுபவம் கொடுக்கட்டும் . யார் மனதையும் நோகடிக்க வேண்டாம் .
ayya,
i am unable to read your web due to fonts problem. May i know which font i have to upload?
vanakam
sivakumar
அன்பு மிக்க திரு சிவக்குமார் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
http://software.nhm.in/products/writer/
https://www.nhm.in/downloads/NHMWriterSetup1511.exe
மேற்கண்ட இணைப்புகளில் இரண்டாவது இணைப்பு என் ஹைச் எம் தமிழ் எழுத்து எழுதியை உங்கள் கணிணியில் நிறுவிக் கொண்டு. ஆல்ட் + 2 அழுத்தினால் தமிழில் உச்சரிப்பு எழுத்து முறையில் யூனி கோட் ல் தட்டச்சு செய்யலாம்.அதாவது amma என்று தட்டச்சினால் அம்மா என்று தமிழ் எழுத்தில் வரும்.மீண்டும் ஆல்ட் + 0 அழுத்த உங்கள் விசைப்பலகை ஆங்கில முறைக்கு மாறிக் கொள்ளும்.இதை நிறுவிக் கொண்டால் எனது வலைத் தளத்தை உங்களால் நன்றாக வாசிக்க முடியும்.பதிலும் தமிழில் எழுத இயலும்.
பதிவுகளைப் பார்த்து பயன் பெறுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
காடியை “Vinegar” யென்று அழைப்பர்.
காடி சரியாக வரவில்லை நொந்து போனேன் யென்று பதிவிட்டுள்ளீர்களே, தாங்கள் வாங்கிய கருங் குருவை அரிசி சரியானதுதானா? கருங்குறுவை சாகுபடிமுற்றிலும் புழக்கத்தில் இல்லை. திருச்சியில் கிடைப்பது ஆச்சிரியம் தான்.
மேலும், தாங்கள் பின்பற்றிய முறையில் தவறும் இருக்கலாம் ஏனென்றால் உங்கள் முறையில் மண்டலம் ஒரு முறை சமைத்து பானையில் மாற்றிய முறை சொல்லப்பட வில்லை. பதிலாக ஒரே முறை சமைத்த அரிசியை பானையில் மாற்றி மாற்றி செய்ததாகவே தெரிகிறது. சொல்லபோனால் ஆறு முறை சமைத்து ரவியில் ஊற வேண்டும். மறுமுறை சூத்திர நூலை படிக்கவும் 🙂
அன்பு மிக்க திரு ராம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
முதலில் நான் சொன்ன விளக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.காடி சரியாக வரவில்லை என்று நொந்து போகவில்லை!!!காடி தயாரிப்பதற்காக உள்ள மூலப் பொருள் பல சரக்குக் கடையில் இருக்கும் கருங்குறுவை அரிசி அல்ல என்பதையும் , தயாரிக்கும் முறையும் இது அல்ல என்பதைப் புரிந்து நொந்து போனேன் என்று கூறியுள்ளேன்.உங்களிடம் இருந்து நாம் எப்படிக் கருங்குறுவைக் காடி செய்ய வேண்டும் கற்றுக் கொள்ள இதை எழுதவில்லை,உங்களைப் போல தவறாகப் புரிந்து கொண்டவர்களைச் சரியாக புரிந்து கொள்ளச் செய்யவே இதை எழுதுகிறோம்.முதலில் காடி என்பதற்கு “Vinegar” என்று பொருள் எடுப்பது தவறானது.எமது அம்மாவின் தாத்தாவிலிருந்து 8 தலை முறைக்கு வைத்தியர்கள்.கருங்குறுவை அரிசி என்பது இதுதான் என்று காண்பித்துள்ளேனே!!!மறு படி சூத்திர நூலை நாம் படிக்க வேண்டிய அவசியமே இல்லை.மீண்டும் சொல்கிறேன், அதில் சொல்லப்பட்டது நீங்கள் கூறும் முறைகளையோ அல்லது நீங்கள் குறிப்பிடும் மூலப் பொருள்களும் அல்ல.அதில் கிடைக்கும் காடி சித்தர்கள் சொல்லும் அந்த வேலைகளை செய்ய வல்லது அல்ல. கருங்குறுவைக் காடியையும் இதுதான் என்று வலைத் தளத்தில் காண்பித்துள்ளேனே .இன்னுமா புரியவில்லை????நீங்கள் குறிப்பிடுபவை எல்லாம் வைத்தியம் ஆரம்பிக்கும் போது ,அனுபவமில்லா எல்லா வைத்தியர்களும் புரியாமல் சொல்வதுதான்.இது சித்தர்களின் மேலான கலை.முப்பூ குரு.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மேலும், கருங்குறுவை காடியை மூலியுடன் பயன் படுத்த எண்ணினால் அம்மூலி கருபேற்றி இருக்க வேண்டும் .
அன்பு மிக்க திரு ராம் அவர்களே,
கருத்துரைக்கு மிக்க நன்றி !!!!!
கருங்குறுவைக்காடி என்பதே இது அல்ல, என்னும் போது மூலிகைகள் எங்கிருந்து சித்தர்கள் சொன்னபடி வேலை செய்யும்.கருப்பேற்றுவது என்பதல்ல இது.எம்முடைய பதிவுகளில் இன்னும் பல விடயங்கள் வர இருக்கின்றன.படித்து புரிந்து பின் கருத்துரை எழுதுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்